Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேசும் படம் - தொடர்கிறது... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2014 | , ,

நிழற்படங்கள் நிஜத்தை பிரதிபலிக்கும் பிம்பங்களாக தெரிவது அதன் தத்ரூபமான காட்சியமைப்பை அப்படியே கொண்டு வரும்போது, அதனை அப்படியே காட்சிப் படுத்தி காட்டும் மூன்றாம் கண் நிமிர்ந்து நிற்கிறது.


கருவுற்றிருக்கும்  பல்லி இதுகளெல்லாம் கரு கலைப்பு செய்து கொள்வது கிடையாது.


இந்த பூக்களெல்லாம் ஒற்றை காலில் நிற்பது ஏன் தெரியுமா பெண்கள் தலையில் சூடச் சொல்லித்தான்.


ஊட்டி கொடைக்கானல் செல்பவர்கள் இதை சுவைக்காமல் ஊர் திரும்புவதில்லை.


இயற்கையான இடங்களை காண்பதில் மனதுக்கு ஒரு இதமே 


வழுக்கும் பாறையில் வழுக்கிக்கொண்டு ஓடும் நீர்.

Sஹமீது

12 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//கருவுற்றிக்கும்பல்லிகருகளைப்புசெய்வதுகிடையாதுன்னு'சொன்னது !உம்மேதான்.அப்போபல்லியும்'கிச்சுகிச்சு'ன்னுஅடிச்சுச்சு!

Ebrahim Ansari said...

பல்லியின் வயிற்றில் இருக்கும் குட்டி கூட தெரிகிறது.

மலர்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் துல்லியம் .

பெருவிரலைக் கண்டு பிடி என்று நாலாங்கிளாசில் விளையாடி பிளிப்வ் சாரிடம் அடிவாங்கியது நினைவுக்கு வருகிறது காரட்டுகளைப் பார்க்கும்போது

ஆஹா அந்த கிராமம். வார்த்தைகளில்லை வர்ணிக்க.

எந்த ரூபத்தில் பார்த்தாலும் தண்ணீர் அழகுதான்.

Aboobakkar, Can. said...

Ebrahim Ansari சொன்னது…

//பல்லியின் வயிற்றில் இருக்கும் குட்டி கூட தெரிகிறது. //

எனது அன்பின் காக்கா நமதூரின் முத்த சமூக விழிப்புணர்வு எழுத்தாளர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களே பள்ளி முட்டை தானே விடும் அது குட்டியும் போடுமா ?????

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே ?????

Shameed said...

முட்டையில் இருந்து வரும் அனைத்தும் குஞ்சுதான் ஆனால் நாம் பாம்பு குஞ்சு என்றோ பள்ளி குஞ்சி என்றோ ஓணான் குஞ்சு என்றோ சொல்வது கிடையாது அனைத்தையும் குட்டி என்றே வழக்கில் அழைக்கின்றோம்
அந்தவகையில் மாமா அவர்கள் பல்லியின் வைய்றின் உள்ளே முட்டைக்குள் இருக்கும் குஞ்சை குட்டி என்று சொல்லி இருக்கலாம்
இதற்க்கு போய் நெற்றிக்கண் பொறடிக்கண்ணெல்லாம் திறப்பது கொஞ்சம் ஓவர் தான்

Ebrahim Ansari said...

தம்பி அபூபக்கர் அவர்கள் சொல்வது சரிதான்.

குற்றம் இருந்தால் குற்றம்தான். ஏற்கிறேன். திருத்தியமைக்கு நன்றி.

sabeer.abushahruk said...

பள்ளிக் காலங்களில்
பல்லிக்குச் சுறுக்கு வைத்து
பிடித்து இழுக்கும்போது -உயிர்
வாழ்ந்தால் போதுமென்று
வால் துறந்து ஓடும்

இதென்ன
சொல்லி வைத்தாற்போல்
பல்லி நிற்கிறதே
புகைப்படத்திற்காகவா?

sabeer.abushahruk said...

பூக்கள்
புன்னகைத்தாலே
கொள்ளை அழகு
இங்கோ
பூக்கொல்லையில்
இதழ்பிரித்து
கோரசாகச் சிரிக்க
உள்ளம் கொள்ளை போகுதே!

sabeer.abushahruk said...

கேரட்
கட்டுகட்டாக
கலரோ
திட்டுதிட்டாக

இது
ரசித்துப் பார்க்கவா
ருசித்துப் பார்க்கவா?

Unknown said...

நெற்றியில் கண் இருக்கும் என்பதை அபூபக்கர் நம்புகிறாரா?
வெறி குட்.

sabeer.abushahruk said...

கல்லைக்
கழுவிச் சரிகிறது
அருவி

காற்றில்
கலைந்து நிமிர்கிறது
தாவரம்

இங்கு
பிராண வாயுவில்
பிரசவித்தபோதான
தூய்மை விஞ்சும்

சுவாசத்தின்
சகவாசத்தில்
சுக வாசம் தங்கும் -அது
விசுவாச மனிதர்களை உருவாக்கும்!

sabeer.abushahruk said...

ஹமீதின் விரல்களுக்கு கண் முளைத்து அதில் பதிந்தவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

Yasir said...

பேசு(சாத)ம் படங்கள் தென்றலை மனதில்
வீசி செல்கின்றன....
படம் எடுப்பது உங்களுக்கு கேமரா வந்த கலை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு