Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! S M S 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2014 | , , , ,

சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!

சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியா மனிதரை மசிய வைப்பார்!

திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!

மடிக் கணினி வரு முன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பணி ஆணைகள் பல அச்சிட்டு,
படித்தோர்க்குப் பலன் தந்தார்.

ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்
மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!

வாசகமொன்று இவர் எழுதிடின்,
வக்கணை பேச யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
வாய்திறந்து மறுப்போர் யாருளர்?

அலுவலகங்களுக்கு ஓர் உடை,
விழாக்களுக்கு என்று ஓர்உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்!

யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!

நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.

பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முது கலையை அடைய வைத்தார்!

ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
அரவனைத்தார்; தலைமை யாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம் முயர்வு இருந்தது!

பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!

A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)
முன்னாள் மாணவர், முது கலைப்
பட்டதாரி ஆசிரியர்,
காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி
நன்றி : தென்றல்

4 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//சிந்தைகவர்ந்தகல்வித்தந்தை// அவர்ஏற்றிவைத்தவிளக்கு,கைநாட்டுபேர்வழிகளை கவிதை எழுதவைத்தது. கேள்விக்குறிகளாய் வளைந்து நின்றவர்களை ஆச்சரிய குறிகளாய் நிமிர்ந்து நிற்கவைத்தது. இந்தியவரை படத்தில் காற்புள்ளி போட்டு கூடபோட்டு அடையாளம் காட்டமுடியாத அதிராம்பட்டினத்தை முழுபுள்ளிபோட்டுஅகிலம்முழுதும்அறிமுகம்செய்து வைத்தவர். அல்லாஹ்அவர்மீதுசாந்தியும்சமாதானத்தையும்பொழிவானாக!ஆமீன்

sheikdawoodmohamedfarook said...

மற்றும் அதிராம்பட்டினத்தில் கைவிலங்கு பூட்டிவாய் விலங்கு பூட்டி சிறையில்அடைக்கப்பட்டஆங்கிலத்திற்கு நிபந்தனைஇல்லாவிடுதலை கொடுத்து அதைவீதியெங்கும்நடக்கவிட்டநீதிபதி.

Unknown said...

Assalamu Alaikkum

Respected Sir,

Nice inspirational poem about educational leader, son of the Adirampattinam soil.
The educational initiatives by this noble man have brought knowledge light particularly for Adirai brothers and sisters, and has welcome masters and students from whole India (Kerala, Andra, even remote states like Manipoor) and abroad.

Each and every stanza of the poem reflects his exemplary characters and great qualities which can be worth emulated by aspiring young leaders.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு