அடுக்குத் தொடர்… ஒடுக்கு இடர்!

திடீர்திடீர் என வரும் மனக்கஷ்டம்
தினந்தினம் செய்யும் திக்ரே குணம்
சும்மா சும்மா உண்ணும் தப்பான பழக்கம்
காலங்காலமாய்த் தொடர்வது உடலின் பலஹீனம்

பளிச்பளிச்சென்று மின்னினாலும்
மின்னமின்ன மதிப்பில் குறையாத்தங்கம்
என்றென்றும் சிரித்த முகத்திற்கு
பற்பலரிடம் நன்மதிப்பு உண்டு என்றும்

சிறுசிறு சேமிப்புகள்
பெருகப்பெருக பெருமதிப்பு
குளிரகுளிர நேசிக்கும் உறவுக்கு
காலங்காலமாய் நன்மதிப்புண்டு

வருகவருக என அழைக்கும் பாங்கொலி
நெருங்க நெருங்க தழைக்கும் நன்மை
வாவா என் அழைக்கும் மண்ணறை
போபோ எனத் தள்ளும் இளமை

யார்யார் பேசினாலும்
மிகமிக எடுபடுவது கனிவே
திடீர்திடீர் என்ற வளர்ச்சி
செல்லச்செல்ல சில வீழ்ச்சி

அடிக்கடி செய்யும் திக்ர்
தினந்தினம் கேட்கும் பாங்கொலி
 வாராவாரம் வரும் குத்பா
வருடாவருடம் ரமலான் நம் வழக்கங்கள்

நான் நான் என்ற ஆசை ஒழித்து
காலங்காலமாய் சொல்லபட்ட ஒற்றுமையை
அலைஅலையாய் ஒன்றாய் சங்கமத்தில்
வாழ்க வாழ்க என ஒன்றிய அதிரை எப்போது?

M.H.ஜஹபர் சாதிக்

7 கருத்துகள்

sabeer.abushahruk சொன்னது…

அடுக்குத் தொடர் அமர்க்கலம்!

இதஇத இதத்தான் எதிர்பார்த்தோம். மீண்டும்மீண்டும் எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்த்துகள் எம் ஹெச் ஜே.

sabeer.abushahruk சொன்னது…

//யார்யார் பேசினாலும்
மிகமிக எடுபடுவது கனிவே//

நிதர்சனம்!

Ebrahim Ansari சொன்னது…

புதிய முயற்சி! புதிய வடிவம்! புதிய சிந்தனை!

எழுத எழுத எண்ணங்கள் - ஏற்றமான எண்ணங்கள். வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள். !

Yasir சொன்னது…

அடுக்கடுக்காக வரும் இடர்களை....எவ்வாறு களைவது என்பதை மிடுக்கான நடையில் சொன்ன சகோ.எம் ஹெச் ஜே. வாழ்த்துக்களும் துவாவும்

//திடீர்திடீர் என வரும் மனக்கஷ்டம்
தினந்தினம் செய்யும் திக்ரே குணம்//

//யார்யார் பேசினாலும்
மிகமிக எடுபடுவது கனிவே
திடீர்திடீர் என்ற வளர்ச்சி
செல்லச்செல்ல சில வீழ்ச்சி//
சூப்ப்ர் உண்மையும் கூட

ZAKIR HUSSAIN சொன்னது…

//நான் நான் என்ற ஆசை ஒழித்து
காலங்காலமாய் சொல்லபட்ட ஒற்றுமையை
அலைஅலையாய் ஒன்றாய் சங்கமத்தில்
வாழ்க வாழ்க என ஒன்றிய அதிரை எப்போது?//

டியர் எம் ஹெச் ஜே.....ஊரில் இப்போதைய ட்ரன்ட் அப்படியில்லை.

ஊரில் பதனி / நாவப்பழம் / பனங்கா சீசன் மாதிரி இப்போது விவாத சீசன். [ முடிந்தால் நேரடி ஒலி/ஒளிபரப்பும் தயாராக இருக்கும் என நம்புவோம். ]

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னை மீண்டெடுத்த அதிரை நிருபருக்கும், கருத்திட்ட இதயங்களுக்கும் மிக்க நன்றி,

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,
அடுக்குத் தொடர் அமர்க்கலம்!

இதஇத இதத்தான் எதிர்பார்த்தோம். மீண்டும்மீண்டும் எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

வாழ்த்துகள் எம் ஹெச் ஜே.
நன்றி! சபீர்காக்கா!