நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தோழியர்... 15

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014 | , , , ,

சத்தியமார்க்கம்.com 'தோழியர்' நூல் வெளியீடு நிகழ்வில் அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் அவர்களால் எழுதி வாசிக்கப்பட்ட கவிதை.

தோழியர் !

புதினத்தின் சுவையில்
போதனைகள்;
புனைவுகளற்ற
புனிதவதிகளின்
வரலாற்றுப் பக்கங்கள்!

சோதனை காலத்தின்
சுவடுகள்;
வலி நிறைந்த
வழித் தடத்தின்
பயணக் குறிப்புகள்!

உயிர்த் தியாகம்
உடல் வருத்தம்
உளத் தூய்மை என
உன்னதத் தோழியரின்
மொத்த அர்ப்பணிப்பைச் சொல்லும்
புத்தகம்!

போர்முனைக்கும்
புலம்பெயர்ந்து போதிக்கவும்
தோழர்கள்;
பின்புலமாய்
பெரும் துணையாய்
ஊழியராய்
தோழியர்!

ஆண் எழுத்தாளரின்
ஆதிக்கத்தில்
பெண்களுக்கான வக்காலத்து!

சஹாபியப் பெண்களின்
இறையச்சம் மெச்சி
சமகாலப் பெண்டிருக்கு
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்!

தோழர்களுக்குச்
சளைத்தவர்கள் அல்லர்
தோழியர் -
நூலிலும் நூருத்தீனிலும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
நன்றி : சத்தியமார்க்கம்.com

15 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

ஓ... ஆவணப் படுத்துகிறீர்களா?

மிக்க நன்றி அ.நி.

(வரலாறு முக்கியம் அமைச்சரே)

sabeer.abushahruk சொன்னது…

இங்கு,

"நீ எழுதியதை நீயே வாசித்துவிடு" என்று கவிதையில் திருத்தங்கள் செய்து என்னை மேடையேற்றி அழகு பார்த்த ஜமீல் காக்காவுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

அல்லாஹ் போதுமானவன்!

Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,

Congratulations... A passionate poet's praising on occasion of the publication "Thozhiyer".

Thanks and regards

B.Ahamed Ameen

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

பெண்மைக்கும் அதன் வலிமைக்கும் உரம் சேர்க்கும் தோழியர் நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிக் காக்கா அவர்களின் வாசிப்பு வாசம் மிகுந்த பூ !

அன்றிலிருந்து தோழியர்க்கான இலக்கணம் சொன்ன மார்க்கம் அப்படியே வழிநடக்க பாதுகாப்பையும் அளிக்கிறது...!

சலைத்தவர்கல் அல்லர்
நூலிலும் 'நூர்' தீனிலும்

அருமை !

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Ebrahim Ansari சொன்னது…

நேரில் சென்று காண வாய்ப்பில்லாமல் போனதே என்று வருத்தப்பட வைத்த நிகழ்ச்சி.

வாழ்த்துக்கள்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

//உன்னததோழியரின்மொத்தஅர்ப்பணிப்பைசொல்லும்புத்தகம்//உண்மை!அதுதொட்டிலாட்டும்கைகள்மட்டுமல்ல;உலகையும்ஆட்டும் கைகளைஉருவாக்கிஅர்ப்பணித்த கைகள்அல்லவா!வாழ்த்துக்கள்.

adiraimansoor சொன்னது…

தோழியற்கு தோழ் கொடுக்கும்
சரித்திர சித்திரத்தை தந்த
நூலாசிரியருக்கு தோழ் கொடுத்து
வாழ்த்துப்பா பாடிய
சபீர் அஹ்மது சாருக்கிற்கு
வாழ்த்துக்கள்

தாஜுதீன் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும், சபீர் காக்கா,

இந்த வாழ்த்துக் கவியின் ஒவ்வொரு வரியில் உள்ள வரலாற்று சம்பவங்களை சற்றே நினைத்துப் பார்த்தேன், கண் கலங்கிவிட்டது.

//தோழர்களுக்குச்
சளைத்தவர்கள் அல்லர்
தோழியர் //

ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களின் முன்மாதிரி அன்னை ஹதீஜா(ரலி), அன்னை ஆயிசா (ரலி) போன்ற உம்முல் முஃமினீன்களின் வரலாறுகள் ஒவ்வெரு முஸ்லீம்களும் அவசியம் வாசிக்க வேண்டும்..

கோழைகளாக இருக்கும் இன்றைய பெண்கள் படிக்கவேண்டிய உயிர் தியாகத்தின் முன்மாதிரி சுமைய்யா(ரலி) அவர்களின் வரலாறு.

தற்காலத்தில் சைத்தானிய சூழ்ச்சிகளில் ஈமானை பாதுகாக்க வேண்டுமா? உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வரலாற்றை வாசிக்க வேண்டும்.

தன் பிள்ளை வீரம்நிறைந்தவனாக வளரவேண்டுமா? அஸ்மா(ரலி) அவர்களின் வரலாற்றை நாம் அவசியம் வாசிக்க வேண்டும்.

தோழியர்களின் வரலாறு ஒவ்வொரு வீட்டில் இருக்க வேண்டிய பொக்கிஸம்.

இந்த புத்தகம் நம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த அல்லாஹ் துனை புரிவானாக. சத்தியமார்க்கம்.காம் தளம் மற்றும் ஆசிரியர் நூருத்தீன் அவர்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

Yasir சொன்னது…

கவிக்காக்காவின் கவி வரிகளின் தாக்கம் இந்த “ தோழியர்” புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை உண்டாக்கி இருக்கின்றது..அல்லாஹ் இப் புத்தகத்தை வெளியிட்டு மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களுக்கு அருள் செய்வானாக

adiraimansoor சொன்னது…

சபீர் மாஷா அல்லாஹ்
உன் இளமையின் ரகசியம் என்ன?

adiraimansoor சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

உயிர்த் தியாகம்
உடல் வருத்தம்
உளத் தூய்மை என
உன்னதத் தோழியரின்
மொத்த அர்ப்பணிப்பைச் சொல்லும்
புத்தகம்!
-----------------------------------------------------
மதி"பெண் மிக்கது!இப்புத்தகம்!

crown சொன்னது…

ஆண் எழுத்தாளரின்
ஆதிக்கத்தில்
பெண்களுக்கான வக்காலத்து!
------------------------------------------------------------------
அதுவும் இக்காலத்து?!!!!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+