Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விருந்தோம்பலும் மின்னஞ்சலில் வந்த துஆவும் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2014 | , , ,

விருந்தோம்பல் நம்முடைய கலாச்சாரத்தினூடே ஊன்றிய பண்புகளில் ஒன்று. இதனை யாரும் மறுக்க முடியாது, ஒதுக்கவும் இயலாது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நெருங்கிய சொந்தமும் சொந்தங்களால் உண்டான பந்தமும் எங்களின் இருப்பிடம் தேடி காண வந்தார்கள்.

அந்த நெருங்கிய சொந்தமான எங்களைத் தேடி வந்த இளைஞரை சந்தித்து 17 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்றே நினைக்கிறேன் அவரை சிறுவனாகக் கண்டது அதுவும் ஒரே தெரு ஒரே சந்து, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

நேரில் சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல மனம் திறந்த அந்த இளம் ஆலிம், அவர்களோடு உரையாடும் சந்தர்ப்பமும் தெளிவாக மார்க்கம் பேசும் தன்மையும் என்னை ரசிக்க மட்டும் வைக்கவில்லை சிந்திக்கவும் வைத்தன நிறையவே…

அவரோடு நீண்ட நேரம் அளவலாவியதும் அதன் பின்னர் இரவுச் சாப்பாட்டினை எங்களோடு ஒன்றாக இருந்து முடித்துக் கொண்டு கிளம்பினர்.

அவர் எங்களிடமிருந்து விடைபெற்று சென்றதும் அதே பிரம்மை அவர் பேசிக் கொண்டிருப்பது போன்றே! ஆனால் அவராக அல்ல, அவரின் தந்தையின் சாயலாக அவரின் அசைவுகளை அப்படியே அசைபோட்டேன். அவரின் தந்தையின் உடல்மொழியைப் போன்றே இருந்தது.

சரி இதை ஏன் இங்கே இதைச் சொல்றான்னு எந்திரிக்காதிய கொஞ்சம் இருங்க இருங்க…. அவர் இருப்பிடம் திரும்பிச் சென்றதும் எனக்கு ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினார் அதுதாங்க மேட்டரே, ஆனால் இது வழமையாக நண்பர்கள் அல்லது விருந்தினர் வந்து விட்டுச் சென்றதும் அனுப்பும் நன்றி மடலாகவோ அல்லது சம்பிரதாய மின்னஞ்சலாகவோ அல்லாமல் வேறு விதமாக இருந்தது !

எல்லோரும் அனுப்புவது போன்ற மின்னஞ்சலின் துவக்கம் இருந்தாலும் அதன் உள்ளடக்கம் (உள்ளக் கிடைக்கைக்குள் அடைந்தது)

"And I really appreciated for the hospitality you have shown to me during my visit to Dubai, and may Allah shower his rahmath and blessings upon you in abundance (lot) .

கீழ் கண்ட துஆக்களை பொதுவாக நபி அவர்கள் விருந்து உபசரிப்பவர்களுக்காக வேண்டி அல்லாஹ்விடம் கேட்பார்கள்  

اللهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنَا وَاسْقِ مَنْ سَقَنَا

யா அல்லாஹ் யார் எங்களுக்கு உணவு கொடுத்தார்களோ அவர்களுக்கு நீ உணவு கொடுப்பாயாக இன்னும் எங்களுக்கு யார் பானம் புகட்டினார்களோ அவர்களுக்கு நீ பானம் புகட்டுவாயாக.

اللهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ  

யா அல்லாஹ் நீ அவர்களுக்கு வாழ்க்கையின் தேவையாக எதை கொடுத்து இருகின்றாயோ அதில் பரகத் செய்வாயாக, இன்னும் அவர்களை நீ மன்னிப்பாயாக மேலும் அவர்கள் மீது நீ கருணை காட்டுவாயாக.

اَفْطَر عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَاَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلائِكَةُ

உங்களிடத்தில் நோன்பாளிகளை அல்லாஹ் நோன்பு திறக்க செய்வானாக மேலும் உங்களது உணவை நல்லவர்கள் சாப்பிடட்டுமாக, மேலும் உங்கள் மீது மலக்குகள் ரஹ்மத்தை பொழியும் படி அல்லாஹ்விடம் துஆ செய்யட்டுமாக .

Kind Regards"

இப்போ சொல்லுங்க எங்களைத் தேடி வந்த விருந்தாளியை அடிக்கடி வரவேண்டும் என்று அழைக்கத் தானே சொல்லும் நம் உள்ளம் !

இன்ஷா அல்லாஹ், இவர்கள் மட்டுமல்ல அனைத்து உறவுகளையும் நட்புகளையும் என்றுமே… !

அபூஇப்ராஹீம்

13 Responses So Far:

sabeer.abushahruk said...

அபு இபு,

நான்கூடத்தான் அடிக்கடி அங்கு உங்களோடு உண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

மனத்தளவில் உபசரித்தவர்களுக்காக துஆ கேட்டதுண்டு; கேட்பதுவும் உண்டு.

மெயில் அனுப்பியதில்லை என்பதற்காகத்தான் 'அடிக்கடி வாங்க' னு கூப்பிடலயா? :-)

இருப்பினும் தங்கள் நண்பரின் பண்பு பாராட்டத்தக்கது; முன்னுதாரணமாக கொள்ளத் தக்கது!

நச் போஸ்ட்

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

/இதுபோன்றபண்பாடுகளும்பழக்கவழக்கங்களும் நம்மிடையைபோகப்போககுறைந்துவருகிறது. நான்மலேசியாவில்இருக்கும்போதுமுன்பின் சொல்லிக்கொள்ளாமல்ஊரிலிருந்துஒருநண்பர்வந்தார். கிட்டத்தட்டஒருமாதம்என்ரூமிலேயேதங்கிஇருந்தார். சகலபணிவிடையும்செய்துசிலநல்லஆங்கிலபுத்தகங்களும் கொடுத்துஅவர்வந்தகாரியத்தையும்முடித்துஊருக்குஅனுப்பிவைத்தேன். அதுஒருஉயிருக்கேஆபத்தானகாரியம்.ஊர்வந்துசேர்ந்ததற்குஒருநன்றிகடித மில்லை. ஒருநாள்வீட்டில்நான்ஒருஆங்கிலபுத்தகத்தை படித்துக்கொண்டிருந்தபோதுவீட்டிற்குதிடிரென்றுவந்தார். அவர்வந்தநோக்கம்வேறு!சோழியன்குடுமிசும்மாஆடாது. அவர்திட்டத்திற்கு நான்ஒத்துபோகவில்லை. என்புத்தகத்தைகண்டஅவர் ‘’இதுதமிழில்வந்திருக்கிறது. நான்வைத்துஇருக்கிறேன்’’என்றார். அப்படிஎன்றால் அதைஎன்னிடம்கொடுங்கள்படித்துவிட்டுதருகிறேன்’’என்றேன். ’’ஓசிகொடுப்பதில்லை!வேண்டுமானால்என்வீட்டிற்கு வந்துபடித்துவிட்டு திரும்பகொடுத்துவிட்டுப்போங்கள்’’ என்றார்.மூஞ்சியில்அடித்ததுபோல்இருந்தது 300பக்கபுத்தகத்தைஒருஅந்நியர்வீட்டில்எப்படிபோய்படிக்கமுடியும்.? கொடுக்கமனமில்லாதவர்சினைஆட்டைகாட்டியகதைதான். //‘’நல்லார்ஒருவருக்குசெய்தஉபகாரம்கல்மேல்எழுத்துப்போல்காணுமே- அல்லாதஈரமில்லாநெஞ்சத்தார்க்குஈந்தஉபகாரம்நீர்மேல்எழுத்துக்குநேர்’’//என்ற இளமைக்கால பள்ளிப்பாடம்நெஞ்சைசுட்டது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

விருந்தளித்து அதன் பின் நன்றியுடன் இறைஞ்சும் இதுமாதிரி நேசர்கள் தேவைதான்.

ZAKIR HUSSAIN said...

புதுக்கல்லூரியில் படித்த போது நானும் சபீரும் எக்மோரிலும் , சென்ட்ரலிலும் , ஏர்போர்ட்டிலும் மெனக்கெட்டு கால் கடுக்க நின்று அழைத்து வந்து ரூமில் தங்க வைத்து , ரூம் பாய் மாதிரி சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுத்து மறுபடியும் அவர்கள் திரும்பி போக அதே எக்மோர் / சென்ட்ரல் / ஏர்போர்ட் / கென்னட் லேன் பஸ் ஸ்டான்ட் / திருவள்ளுவர் பஸ் ஸ்டான்ட் [ சமயங்களில் பெட்டியை பஸ் கூரை மீது ஏற்றி கட்டி அனுப்பி வைத்த ஆட்களை கணக்கெடுத்தால் ஒரு "மினி கொத்துவா' சனம் தேரும். இதில் கொடுமை என்னவென்றால் நாங்கள் அப்போது சம்பாதிக்க வில்லை. பணப்புழக்கமும் சொல்லிக்கொள்வது மாதிரி இருக்காது. ஆனால் இத்தனை வசதிகள் கிடைத்தவர்கள் ஊரில் சந்தித்தால் ஒரு ஜாகையாக நடப்பார்கள்.

இதில் ஒருவரை மட்டும் குறிப்பிட வேண்டும். கடற்கரைத்தெருவை சார்ந்த சகோதரர் ஹாஜா முஹைதீன் அவர்கள் மட்டும் எனக்கு மலேசியாவுக்கு போய் தபால் எழுதினார். உங்களுக்கு மலேசியாவிலிருந்து என்ன வேண்டுமென்றாலும் எனக்கு எழுதுங்கள் ...நான் அனுப்பி வைக்கிறேன் என எழுதியிருந்தார்

ZAKIR HUSSAIN said...

சமயங்களில் நாம் நமது நேரத்தையும் , பணத்தையும் செலவளித்து மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது திரும்ப நன்றியை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் நன்றியுடன் நடந்துகொண்டால் அது அவர்களின் தரத்தை உயர்த்துகிறது. அப்படி இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கையின் சில நல்ல விசயங்களை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை / அல்லது கற்றுக்கொள்ளாதது போல் நடிக்கிறார்கள் ....தட்ஸ் ஆல்.

ZAKIR HUSSAIN said...

உதவியை பெற்றுக்கொண்டு 'கண்டுக்காமலும் / சதி செய்தலும் ' செய்யும் மனிதர்களை பற்றி எழுதினால் சில எபிசோட் தாண்டும்.

இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும். யாரும் தப்பித்து இருக்க முடியாது.

ZAKIR HUSSAIN said...

நான் பொதுவாக ஏமாற்றங்களை அசைபோடுவதை எப்போதும் சப்போர்ட் செய்வதில்லை.

அது உங்களுடைய கிரியேட்டிவ் எனர்ஜியை ஸ்ட்ரா போட்டு "உறிஞ்சி" எடுத்துவிடும்.

Ebrahim Ansari said...

//இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும். யாரும் தப்பித்து இருக்க முடியாது. //

//ஏமாற்றங்களை அசைபோடுவதை எப்போதும் சப்போர்ட் செய்வதில்லை. //

அசத்தலான கருத்து அனைவரும் ஏற்கவேண்டிய கருத்து.

முதல் ஆள் நான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகுக !

கவிக் காக்கா...

நன்றி எதிர்பார்த்த நெருக்கமல்ல நம்மோடது ! :)

//ZAKIR HUSSAIN சொன்னது…
நான் பொதுவாக ஏமாற்றங்களை அசைபோடுவதை எப்போதும் சப்போர்ட் செய்வதில்லை.

அது உங்களுடைய கிரியேட்டிவ் எனர்ஜியை ஸ்ட்ரா போட்டு "உறிஞ்சி" எடுத்துவிடும்.//

மனதோடு உரசும் வரிகள் ! - மிகச் சரியே...

sheikdawoodmohamedfarook said...

/என்நன்றிகொன்றார்க்கும்வுய்வுண்டாம்; உய்வில்லைசெய்நன்றிகொன்றமகற்கு./என்றவள்ளுவரின்குறளைமனதில்கொண்டு எழுதியது அந்தக்கட்டுரை. .ஒருஉதவியே ஒருமனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்யும் போது எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. அதுமனிதாபிமான அடிப்படையில் செய்வதாகும். ஆனால்உதவிசெய்தவர்உதவிபெற்றவரிடம்ஒருஉதவிநாடும்போதுஅதைசெய்யமுடியும்போதும்'முடியாது'என்றுசொன்னால்ஏற்க்கனவேஉதவிய வரின்மனம்வருந்தவேசெய்யும்.மனிதன்மண்கொண்டுபடைக்கப்பட்டவன்.இன்னும்இதுபற்றிநிறையவேபேசமுடியும்.அதைஇங்கேபேசுவது உசித மல்ல.அஸ்ஸலாமுஅலைக்கும்.

sheikdawoodmohamedfarook said...

நான்அவரிடம்பெற்றதுஏமாற்றம்அல்ல.பாடம்.வாழ்க்கைபுத்தகத்தில்ஒரு முற்றுப்புள்ளிபெறாதசிறுவரி.தூங்கும்போதுகூடகனவில்பாடம்படிக்கிறேன்கண்மூடிமண்மூடும்வரைவொவ்வொருமனிதனும்பாடம்படிக்கிறான். இதில்உணர்ந்தவர்சிலர்;உணராதவர்பலர்.இதற்காகநாம்சீனாவுக்குகப்பல் ஏறவேண்டியதில்லை.மனிதனைபார்த்தேமனிதன்பாடம்படிக்கலாம். என்னை நன்றாகபடித்தவர் மருமகன் ஜாகீர். அதற்க்கு அடுத்த இடம் சகோதரி ஜாகிரின்தாயாரே.

அப்துல்மாலிக் said...

அருமை, விருந்து உபசரிப்பு என்பது ஒரு தனி கலை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு