நலமில்லா நவீனமும்..
உழைப்பில்லா உடல்களும்!!

(*) மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..

(*) அறவை மில்களின்
ஆற்றலின் உதவியால்
உரலும் உலக்கையும்
உதவாக் கரைகளாம்..

(*) ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..

(*) குடங்கள் சுமந்து
கொண்டு வந்திட்டார்
குடிநீர் ஒருகாலம்!!
குழாய்கள் இப்போது.

(*) அறிவீர் ஓருண்மை..
ஆதியில் சொன்ன
கருவிகள் மாறின
கடைசியில் பலனென்ன?

(*) மறைந்த அம்மியில்
கரங்களின் வலிமையும்
உரலின் மறைவினில்
உரமான தேகமும்

(*) குடைகல்லின் மறைதலில்
விரல்களின் வீரியம்
குடங்களின் மறைதலில்
கொடியிடை மேனியும்

(*) கூடவே மறைந்ததை
குறையல்ல! வரமென்றோம்
மாடர்ன் உலகுக்கு
மாறுதல் பலமென்றோம்..

(*) அறிவியல் வளர்ச்சியில்
யாவுமே நடந்திடும்
துரிதமாய்..அங்ஙணம்
மரணமும் வரின்?

(*) குறைவாய் உழைப்பும்
கூடுதல் உணவும்
நிறைவாய் சேர்க்கும்
நீள்பிணி நம்மில்..

(*) உண்ணுதலொத்த உடலுழைப்பும்
உழைப்பிற்கேற்ற உணவுகளுமே
முன்னவர் சொல்லிய
முறை ஆகும்..

(*) விகிதம் மாறா
விதம், உடல்பேணிடும்
சகிதம்வாழ, நம் அகவை
சதமென்றாதல் சாத்தியமே!! (இன்ஷா அல்லாஹ்)

அதிரை என்.ஷஃபாத்

இது ஒரு மீள்பதிவு

5 கருத்துகள்

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Short and succinct nice poem on health awareness.

Please go through the follwing article I had posted on similar subject.
http://adirainirubar.blogspot.ae/2013/10/easy-life-leads-to-lazy-life.html?m=1

Jazakkallah khairan

B.Ahamed Ameen

sheikdawoodmohamedfarook சொன்னது…

கூரபுடவ கட்டிகுங்குமமும் நெத்தியிட்டு கூண்டு வண்டி தானும் கட்டி ,கட்டியபுருசனோடுஒருத்திபிறந்த வீடுவிட்டுவாழும்வீடுபோகும்போது மாட்டுவண்டிமணியோசைகலகலத்த காலம்ஒன்றுண்டு!இன்றில்லை!

crown சொன்னது…

மின்னிலே சுழன்றிடும்
மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..
---------------------------------------
அம்மா!ஆட்சியில் இலவச மிக்சி!மண்ணில் புதைந்தன "குறைகளும், நிர்வாக திறமையின்மையும்.

crown சொன்னது…

ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..
---------------------------------------------------------
நகரங்களில் இந்த ஆயத்த மாவுதான் அலுவலுக்கு செல்வோருக்கு வரபிரசாதம்!

crown சொன்னது…

தம்பியின் எழுத்தில் மொழியின் ஆட்சியும்!கருத்து கம்பீரமாய் திடகாத்திரமாய் இருந்து ஆரோக்கியம் சொல்வது!அழகிய மருந்து! வாழ்த்துக்கள்!