அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
புறம் பேசுதல்:
''என்னை
(மிஹ்ராஜ் பயணத்திற்கு) உயர்த்தப்பட்ட போது நான் ஒரு கூட்டத்தார் அருகில்
சென்றேன். அவர்களுக்குப் பித்தளை நகங்கள் இருந்தது. தங்களின் முகங்களையும்
தங்களின் நெஞ்சுகளையும் அவர்கள் பிறாண்டிக் கொள்கிறார்கள். ''ஜிப்ரிலே இவர்கள்
யார்?'' என்று கேட்டேன். ''இவர்கள் மனிதர்களின் இறைச்சியை சாப்பிட்டார்கள் (புறம்
பேசியவர்கள்). அவர்களின் கண்ணியத்தை இவர்கள் குலைத்தார்கள்'' என்று ஜிப்ரீல்
கூறினார் என, நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1526 )
''ஒவ்வொரு முஸ்லிமின் ரத்தம், அவரின் கண்ணியம்,
அவரின் பொருள் அனைத்தும் (சீர்குலைக்க) இன்னொரு முஸ்லிமின் மீது தடையாகும்'' என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்
(முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:
1527)
கோள் சொல்வது:
''கோள்
சொல்பவன், சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹூதைஃபா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1536 )
''நபி(ஸல்)
அவர்கள் இரண்டு கப்ருகள் அருகே நடந்து சென்றார்கள். அப்போது ''இவ்விருவரும் வேதனை
செய்யப்படுகின்றனர். மிகப் பெரும்பாவம் காரணமாக இருவரும் வேதனை செய்யப்படவில்லை.
எனினும் அது பாவம்தான். அவ்விருவரில் ஒருவர், கோள் சொல்பவராக இருந்தார்,
மற்றொருவர் சிறுநீரைக் கழித்தபின் சுத்தம் செய்யாதவராக இருந்தார்.'' (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
(புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1537)
''என்
தோழர்களில் ஒருவர், மற்றொருவர் பற்றி எதையும் என்னிடம் கூற வேண்டாம். நிச்சயமாக
நான் அமைதியான இதயத்துடன் உங்களிடம் வரவே விரும்புகிறேன்'' என்று நபி (ஸல்)
கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1539)
பொய் பேசுவது கூடாது !
''நான்கு
செயல், ஒருவனிடம் இருந்தால், அவன் தெளிவான நயவஞ்சகன் ஆவான். இவற்றில் ஒரு குணம்
ஒருவனிடம் இருந்தால், அதை அவன் விடும் வரை நயவஞ்சகத்தின் குணம் அவனிடம் இருக்கும்.
அவை 1) அவன் நம்பினால், மோசம் செய்வான். 2) பேசினால் பொய் பேசுவான் 3) ஒப்பந்தம்
செய்தால், மீறுவான் 4) வழக்குரைத்தால்
வரம்பு மீறுவான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு
அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1543 )
''தான்
பார்த்திராத கனவைக் கண்டதாகக் கூறுபவர், இரண்டு மணிக் கோதுமைகளுக்கிடையே
முடிச்சுப் போடும்படி நிர்பந்திக்கப்படுவார். அவரால் (இதற்கு) இயலாது. ஒரு
கூட்டத்தாரின் பேச்சை, அவரை அவர்கள் வெறுக்கும் நிலையில் ஒருவர் கேட்க
முயற்சித்தால், மறுமை நாளில் அவரின் காதுகளில் ஈயத்தை ஊற்றப்படும். உருவத்தை
ஒருவர் வரைந்தால், அவர் வேதனை செய்யப்படுவார். மேலும் அதில் உயிரை ஊதிட
வற்புறுத்தப்படுவார். (ஆனால்) அவரால் அது முடியாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
(புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1544 )
''தன்
இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவதே, மிகப்பெரும் அவதூறாகும்''
என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1545)
ஒரு பேச்சைக் கேட்டு, அதை உறுதிபடுத்துதல்:
அல்லாஹ்
கூறுகிறான் :
உமக்கு
அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! (அல்குர்ஆன் : 17 :36)
அவன்
எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் (வானவர்) இல்லாமல்
இருப்பதில்லை. (அல்குர்ஆன் : 50:18)
''தான்
கேட்ட அனைத்தையும் (நம்பி பிறரிடம்) கூறுவது, ஒருவன் பொய்யன் என்பதற்கு
போதுமானதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1547)
''பொய்
என்று தெரிந்தே ஒரு செய்தியை (நான் கூறியதாக) என்னைப் பற்றி ஒருவன் கூறினால், அவன்
பொய்யர்களில் ஒருவனாவான்'' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1548)
''பெரிய
பாவங்கள் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
''இறைத்தூதர் அவர்களே! சரி'' என்று நாங்கள் கூறினோம். ''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை நோவினை செய்தல்'' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, ''அறிந்து கொள்ளுங்கள். பொய்
சாட்சி கூறுவதும் தான்'' என்று கூறினார்கள். ''அவர்கள் மவுனமாகி விட
மாட்டார்களா?'' என்று நாங்கள் கூறும் அளவுக்கு திரும்ப திரும்ப அதைக் கூறிக்
கொண்டே இருந்தார்கள். (அறிவிப்பவர்: அபூபக்கர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1550)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன்
S.
2 Responses So Far:
கொஞ்சம்கூட சங்கோஜமின்றி புறம் பேசுவதும் கோள் மூட்டுவதும் அன்றாட வியாதியாகிவிட்ட நிலையில் இந்த அருமருந்து மிக அவசியம்!
நன்றி அலாவுதீன்!
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !
Post a Comment