இயற்கையோடும் இயல்போடும் இருந்து வந்த மானிடன், இயலாமையை பறைசாற்ற ஆயிரம் காரணங்களை அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கிறான் ! அழகை ரசிக்க பெருங்கூட்டம் பாலினம் மட்டுமே சரி என்று மூழ்கியிருக்கும் இன்றையச் சூழலில் இறைவனின் படைப்புகளில் ஏராளமான அழகியலை ரசிக்க பொறுமையும் தெளிந்த சிந்தனையும் வேண்டும்.
மீண்டும் பேசும் படம் தொடர்கிறது....
ஒரே இடத்தில் நின்று கொண்டு மனித இனம் வாழ பிராண வாயுவை இந்த மரங்கள் அள்ளி வழங்கிக் கொண்டுள்ளது மனிதன் பல இடங்களுக்கும் நடமாடிக்கொண்டு மரங்களை அழித்துக் கொண்டு வருகின்றான்.
இதுபோன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அதிரைநிருபரின் இதமான வாசகர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒன்று கூட வேண்டும்.
வியக்க வைக்கும் மலையும், மழை மேகங்களும் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சி அல்ல உடம்புக்கும் குளிர்ச்சிதான்.
மணிப்புறா இங்கே மாடப்புறா எங்கே (யாரோ சுட்டுட்டாங்கலாம் )!
"எல்லாத்துக்கும் குளோசப் ஷாட் போடுறீங்க எங்களுக்கு ஒரு குளோசப் ஷாட் போட்டா என்னான்னு" 'காக்கை'கள் சங்கத்தில் இருந்து ஒரு கோரிக்கை வந்தது கோரிக்கையை நிவர்த்தி செய்தாச்சு.
Sஹமீது
12 Responses So Far:
அந்த
ஒருமரத்திற்கு என்ன இன்று
திருமணமா?
காத்திருப்பில்
கலைநயம் மிளிர்கிறதே!
மிக நேர்த்தியாக
சிகை அலங்காரம் செய்வித்தது யார்
காற்றா காமிராவா?
பசுமை கிராமம்:
பச்சைக் கம்பளத்தில்
பவளக் கற்களாய் வீடுகள்
கற்கால மனிதரைப் போல
தற்காலம் வாழ வாய்ப்பு
ஊரின் இன்றைய நிலையைப் பார்க்கும் போது ஒரு பெட்டிக் கடை வைத்துக் கொண்டாவது இப்படிப்பட்ட இடங்களுக்கு ஓடிவிடலாமா என்று தோன்றுகிறது.
குடிக்கத் தண்ணீரும் குளிக்க இரண்டு வாளித் தண்ணீராவது நிச்சயம் கிடைக்குமில்லையா?
காக்கைகளின் கோரிக்கை சரிதான். காக்காக்கள்தான் ஆபத்து.
இந்தப் படங்கள் எங்கிருந்தோ "இடுக்கி" க் கொண்டு வந்தவை போல தெரிகிறதே. அல்லது "கானலில்" கண்டவையா?
மென் தோகை விரித்தாடும் மயிலண்ண மரம்...
பச்சை மலை அலைக்காட்டில் மிதக்கும் இயற்பசுமை வீடுகள்...
மலைக்குன்றின் மேல் செங்கொன்றை மயில்கள் கூட்டம்...
செம்பூக்களி நடுவே மணிப்புறாவின் மவுனம்...
காக்கையின் சிந்தனை அமர்வு எதற்கோ தயார் நிலையில்...
//இந்தப் படங்கள் எங்கிருந்தோ "இடுக்கி" க் கொண்டு வந்தவை போல தெரிகிறதே. அல்லது "கானலில்" கண்டவையா? //
To Brother Ebrahim Ansari,
கானலில் கண்டவைகளை இடுக்கிக்கொண்டு வரும் தரத்தில் போட்டோ எடுப்பதுதான் சாகுலின் திறமை.
80களின் தொடக்கத்தில் எனக்குத்தெரிந்த வித்யாசமான இளைஞன் சாகுல்.
கேமராவின் வியூ ஃபைன்டரிலும் கண் இருக்கும் , துப்பாக்கியின் டார்கெட் பாயின்டரிலும் கண் இருக்கும். எதிரும் புதிருமான இந்த திறமை எனக்குத்தெரிந்து நிறைய பேருக்கு அமைந்ததில்லை.
விசா / வெளிநாடு / சென்ட் பாட்டில் / ரேபன் கண்ணாடி / ஊருக்கு வந்து இறங்கியவுடன் அங்கும் இங்கும் அம்பாசடரில் அலப்பரை கொடுக்கும் அலைச்சல் / வெள்ளைக்கைலி , டிசைன் போடாத ப்ளைன் சட்டை .....இவைகள் எல்லாம் அறிந்திராத ஏதோ ஒரு உலகத்தின் மூலையில் உள்ள சமூகத்தில் பிறந்திருந்தால் சாகுல் நேஷனல் ஜ்யாக்ரஃபியின் டைரக்டர் நிலைக்கு இதுவரை உயர்ந்திருக்கக்கூடும்.
நான் சொல்வதெல்லாம் உண்மை ...
உண்மையைத்தவிர வேறு எதுவுமில்லை.
//.....இவைகள் எல்லாம் அறிந்திராத ஏதோ ஒரு உலகத்தின் மூலையில் உள்ள சமூகத்தில் பிறந்திருந்தால் சாகுல் நேஷனல் ஜ்யாக்ரஃபியின் டைரக்டர் நிலைக்கு இதுவரை உயர்ந்திருக்கக்கூடும்.
நான் சொல்வதெல்லாம் உண்மை ...
உண்மையைத்தவிர வேறு எதுவுமில்லை.//
காக்கா, படம் எடுத்துட்டேன்னு சொன்னதும் பார்க்க நேர்ந்தது அத்தனையும் எடுப்பாக இருந்ததுதான் அதன் தனிச் சிறப்பு !
கேமராவின் வியூ ஃபைன்டரிலும் கண் இருக்கும் , துப்பாக்கியின் டார்கெட் பாயின்டரிலும் கண் இருக்கும். எதிரும் புதிருமான இந்த திறமை எனக்குத்தெரிந்து நிறைய பேருக்கு அமைந்ததில்லை.---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டுமே "ஸூட்''தானே?
ஒரே இடத்தில் நின்று கொண்டு மனித இனம் வாழ பிராண வாயுவை இந்த மரங்கள் அள்ளி வழங்கிக் கொண்டுள்ளது மனிதன் பல இடங்களுக்கும் நடமாடிக்கொண்டு மரங்களை அழித்துக் கொண்டு வருகின்றான்.
--------------------------------------------------------------------------------------------------
மனிதன் மரத்தின் பிரானையை வாங்குவதுடன்,தனக்கான சாவுக்கு தானே வழிபோடுறான்!சரியான மர மண்ட!
காக்கையை கூட இயற்கையாகவும்,அழகாகவும் எடுக்க தெரிந்த சாகுல் காக்காவுக்கு சலாம் !அஸ்ஸலாமுஅலைக்கும்.காக்கையை பார்த்துக்கொண்டே நேரம் "கரைவது" கூட தெரியவில்லை!
//!சரியான மர மண்ட//
//காக்கையை பார்த்துக்கொண்டே நேரம் "கரைவது" கூட தெரியவில்லை!//
கிரவுன்,
ஐ ரியலி எஞ்ஜாய்ட் யுர் ப்ரெசென்ஸ் ஆஃப் மைண்ட்!
Post a Comment