சிந்திப்போம் !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அவசரமான உலகம்! தனிமையில் இனிமை தேடும் தலைமுறை! அறிவுரைகளை அதிகம் விரும்பாத இளைஞர்கள்! என்று உலகம் எங்கோ போய்க்கொன்டிருக்க "திரும்பிப் பார்க்கிறேன்" என்று நம் கடந்த கால களியாட்டங்களை, இன்று வாழும் குழந்தைகளுக்குக் கிடைக்காத இயற்கையின் இன்பங்களை, சுதந்திரமாய்ச் சுற்றித் திறிந்து பெற்ற மகிழ்ச்சியை நினைவு கூறும் இவ்வேலையில் இவை அனைத்தையும் இத் தலைமுறையினருக்குக் கேள்விக் குறியாக்கிய நம் செயல்களைச் சற்று சீர்தூக்கிப் பார்த்து நாம் செம்மை படுத்திக்கொள்ளாவிட்டால், நம் இளமைப் பருவத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த அந்த இயற்கையின் சுவடு கூட இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் தன்னுடைய சந்ததிகளை பெற்றெடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறான். அவர்களின் மூலம் தாய் என்றும் தந்தை என்றும் தன்னுடைய நிலை உயர்வதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறான். இவ்வுலகின் அனைத்தைவிடவும் ஏன் தன்னைவிடவும் அதிகமாக அவர்களை அவன் நேசிக்கின்றான். அவர்களுக்கு காலில் முள் குத்தினால் தன் இதயத்தில் குத்தியதாய் இன்னல்படுகிறான். தான் உண்ணாமல் உடுத்தாமல் ஒறுத்தாவது அவர்களுக்கு உண்ணவும் உடுத்தவும் கொடுக்கிறான். இரவு பகல் பாராமல் உழைத்து கஞ்சன் என்ற பட்டத்தை மாத்திரம் தனதாக்கி மீதமுள்ள அனைத்தையும் தன் பிள்ளைகளுக்காக சேமித்தும் வைக்கிறான்.
இப்படி தன் பிள்ளைகளின் நலனையே சுவாசிக்கும் அவன் சிந்திக்கத் தவறியதன் காரனமாக எந்த பூமியில் தான் வாழ்கின்றானோ, எந்த பூமியில் தன் சந்ததிகளை விட்டுச் செல்ல இருக்கின்றானோ, எந்த பூமியை தவிர்த்து வேறு ஒரு வாழுமிடத்தை இந்த மனித இணத்தால் ஏற்படுத்திக்கொள்ள இயலாதோ அந்த பூமியை வாழத் தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருப்பதை அறியாதவனாக இருக்கின்றான்!
இவ்வாறு இவ்வுலகை அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதில் வீண் விரயத்திற்கு முக்கியப் பங்குண்டு. பேராசிரியர். N A S அவர்கள் மேற்கோல் காட்டியதைப் போல தேவை இவ்வுலகை அழிவின் பக்கம் இழுத்துச் செல்லவில்லை மாறாக பேராசை தான் இவ்வுலை அழிவின் பக்கம் இழுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீன் விரயம் சம்பந்தமான நமது அனுகுமுறை வேறுபடுவதும் வீன் விரயத்திற்கு ஒரு முக்கிய காரனமாக அமைகிறது. வீன் விரயம் சம்பந்தமாக ஒரு தனிப் பதிவை இறைவன் நாடினால் விரைவில் பதிகிறேன் (சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்)
தவிர, இவ்வுலகை மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் புற்று நோய், காச நோய், ஆண்மைக் குறைவு, குடல் புண், வாய் துர்நாற்றம் போன்ற ஏராளமான நோய்களை ஏற்படுத்தி அழிவின் பக்கம் கொண்டுச் செல்வதில் புகைப் பிடித்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. முஸ்லிம்களிடத்திலேயும் இத்தீய பழக்கம் பரவலாகக் காணப்படுவதால் அதைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை இங்கே பதிகிறேன்.
இவ்வுலகில் காணப்படுகிற எந்த ஒரு தீமையை எடுத்துக் கொன்டாலும் அது முஸ்லிம்களிடத்திலே மிக மிகக் குறைவான அளவே இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறு மிகக் குறைவான குற்றப் பின்னனி கொன்ட முஸ்லிம்களிடத்தில் புகைப் பிடித்தல் பரவலாகக் காணப்படுவதற்கும், மேலும் எந்த உறுத்தலும் இல்லாமல் பொது இடங்களிலும் புகை பிடித்துத் திரிவதற்கும் முஸ்லிம்கள் இதை ஒரு தீமையாக உணராததே காரனம்.
எந்த ஒன்றையும் நாம் ஐயமற, தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நாம் சிந்தித்து உணர வேண்டும். அந்த அடிப்படையில் இத்தீய பழக்கமாகிய புகைப் பிடித்தலையும் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் அதை விட்டும் தவிர்ந்து வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அல்லாஹ் அருள் புரிவானாக!.
பொதுவாக மக்களிடத்தில் காணப்படுகிற குடி, சூதாட்டம், விபச்சாரம், என்று எதை எடுத்துக்கொன்டாலும் அது அத்தீமையில் யாரெல்லாம் நேரடியாக ஈடுபடுகிறார்களோ அவர்களையே பாதிப்பதைப் பார்க்கின்றோம். உதாரனத்திற்கு மது அருந்துவதினால் ஏற்படுகிற உடல் நலக் குறைபாடுகள் அதை அருந்துபவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஆனால் புகை பிடிப்பதனால் ஏற்படுகிற உடல் நலக் கோளாறுகள் புகை பிடிப்பவருக்கு மட்டுமல்லாது அப்புகையை சுவாசிக்க நேரிடுகிற மற்றவரையும் பாதிக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. பொது இடங்களில் புகை பிடிப்பதனால் பெண்கள், குழந்தைகள், புகைப் பழக்கமில்லாத ஆண்கள் என பொதுமக்கள் படும் இன்னல்களை வார்த்தையால் வடிக்க முடியாது. அதுவும் வீடு, அலுவலகம், உணவகம், வாகனம் போன்ற நாலா புறமும் அடைக்கப்பட்ட இடமாக இருந்தால் பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகவே இருக்கும்.
எந்த வித நன்மையும் இல்லாமல் அதே சமயம் அதிகமான அளவு தனக்கும், மற்றவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பது புகைப் பழக்கமாகும். 50 காசுக்கும், ஒரு ரூபாய்க்கும் புகையிலைப் பொருள்கள் கிடைப்பதாலோ என்னவோ ஏழைகளிடத்திலும் இப்பழக்கம் தாராளமாக இருப்பதைக் காண முடிகிறது.
புகைவண்டிகளெல்லாம் புகையில்லாமல் செல்லும்போது இம்மனிதன் மட்டும் புகையோடு செல்லவது ஏனோ? புகை உனக்குப் பகை என்றும், புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும் என்றும் எச்சரிக்கை செய்து புகைப் பிடிப்பவர்களைப் பாதுகாக்க(?) எடுத்த சிறு முயற்சியைக் கூட அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கிறது.
புகை பிடிப்பவர்கள் தாங்களுக்கு மட்டும் தீங்கு இழைத்துக் கொள்ளவில்லை. மாறாக அவர்கள் அதிகமாய் நேசிக்கும் அவர்களுடைய குழந்தைகள், மனைவி, பெற்றோர்கள், குடும்பத்தார், அவர்கள் வாழுகிற சமூகம், மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதன் மூலம் மனித இணத்திற்கு மட்டுமல்லாது இவ்வுலகிற்கும் அதில் இருக்கிற அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதை உணர்ந்தாவது இத் தீமையிலிருந்து அவர்கள் விலகி வாழ வேண்டும்.
பணம் சம்பாதிப்பதற்காக புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அவர்களிடத்தில் லஞ்சம் வாங்கிக்கொன்டு அதற்கான அனுமதி வழங்குகிற ஆட்சியாளர்கள், அதற்கு உடந்தையாய் இருக்கிற அதிகாரிகள், மேலும் அதை விற்பனை செய்கிற வியாபாரிகள் ஆகியோரின் செயலை தன்னுடைய மனைவி, தான் பெற்ற பிள்ளைகள், தனது பெற்றோர்கள், தான் ஈட்டிய செல்வம் ஆகிய அனைத்தையும் வீட்டினுல் வைத்து தானும் உள்ளே இருந்துகொன்டு வீட்டை தீயிட்டு எரிப்பவனில் செயலுக்கு ஒப்பாகவே கருத முடிகிறது.
மேலும் புகை பிடிப்பது ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று ஏராலமான உலமாக்கள் மார்க்கத் தீர்ப்பு வளங்கியுள்ளனர். ஹராம் என்ற நிலையில் இருக்கின்ற ஒன்றை வாங்குவதும், விற்பதும், அதற்காக கடைகளை வாடகைக்குக் கொடுப்பதும், அது தொடர்பான எந்த ஒரு செயலில் ஈடுபடுவதும் ஹராம்.
பல இலட்சங்களை முதலீடு செய்து நடத்துகிற வியாபாரத்தில் சில ஆயிரங்களுக்காக விற்கப்படுகிற புகையிலைப் பொருட்களால் இலாபத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை என்பதையும், ஹலாலான வியாபரத்தோடு புகையிலைப் பொருட்களையும் சேர்த்து விறபதனால் அதில் ஹராம் கலக்கின்ற ஆபத்து இருப்பதையும் வியாபரிகள் உணர வேண்டும்.
பொதுவாக சில நிலைகளிலே இருப்பவருடைய பிராத்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை, அவர்கள் பிராத்தித்தால் அல்லாஹ் அதை உடனே அங்கீகரிக்கிறான் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. அதில் பிரயானியும் ஒருவர். ஒருமுறை மக்காவை நோக்கிப் புனிதப் பயனம் மேற்கொன்டிருந்த ஒருவரின் பிராத்தனையை அல்லாஹ் நிராகரித்துவிட்டான்! காரனம் "ஒருவருடைய உணவு, உடை, வீடு ஆகிய ஏதேனும் ஒன்று ஹராமாக இருந்தாலும் அவருடைய பிராத்தனையை அல்லாஹ் ஏற்க மாட்டான்" என்று அல்லாஹ்-வின் தூதர் தனது தோழர்களுக்கு எச்சரிக்கை செய்ததை ஹதீஸ்களிலே கானமுடிகிறது.
எனவே புகை பிடிப்பது தீமை என்பதையும், அத் தீமையில் ஏதேனும் ஒரு வகையில் சம்மந்தப்பட்டவரையும் நாளை மறுமையில் அல்லாஹ் அத் தீமையில் சம்மந்தப்பட்டதற்காகவும் அதன் மூலம் பிறருக்கு தீங்கிழைத்ததற்காகவும் விசாரிப்பான் என்பதை அஞ்சி இத் தீமையிலிருந்து விலகி வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! மேலும் அனைத்தின் தீங்குகளிலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
ம'அஸ்ஸலாம்
அபு ஈஸா
5 Responses So Far:
//பொதுஇடங்களில்புகைபிடிக்ககூடாது.//என்றுபோர்டு போடும் அரசுதான் சிகரெட்தயாரிப்புநிறுவனங்களுக்குஅனுமதிகொடுக்கிறது. /மதுஅருந்திவாகனம்ஓட்டக்கூடாது/// என்றுசட்டம்போடும்அரசுதான்மதுதயாரிப்புஆலைகளுக்குஅனுமதியும் கொடுத்ததோடுகடைதிறந்தும்கல்லாகட்டுகிறது. மதுவைஅருந்தியபின்தான்''மதுஆலையேமூடு''என்றுகோஷமிட்டுபோராட்டம்நடக்கும்நாட்டில்இதுபோன்றஅறிவுரைகள்''செவிடன்காதில் ஊதியசங்கே!''
சிகரெட்
விரலிடுக்கில் சிக்கிய வாழ்க்கை
நசுக்கப்படுவது உறுதி!
சிகரெட்
உதடுகளில் வாழும் உயிர்
உமிழப்படுவது உறுதி!
சிகரெட்
புகைப்பவருக்குள் புழங்கும் பூதம்
புண்ணாக்கப் போவது உறுதி!
சிகரெட்
ஆக்ஸிஜனை அசிங்கப்படுத்தும் அருவருப்பு
அணுஅணுவாய் அரிக்கப்போவது உறுதி!
சிகரெட்
சில்லரையாகச் செலவு வைத்து
மொத்தமக மூழ்கடிக்கும் கடன்.
சிகரெட்
சுவாச உருப்புகளில் போடப்பட்ட தார்ச்சாலை
பூக்களின்மேல் போர்த்தப்பட்ட கேன்வாஷ்
சிகரெட்....
தொடர்கதைபோல நீளும் வாழ்க்கையை
சிறுகதையாக்கும் அவசரம்...
சிலசமயம் துணுக்காக முடித்துவிடும் அபாயம்!
வாரத்துக்கு நாற்பது மணி நேரம் சிகரெட் புகை உலவும் இடங்களில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் அத்தகைய ஒரு சூழலில் இருக்க நேர்ந்தால் அவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் உட்பட பல நோய்கள் தாக்குகின்றன.
புகை பிடிப்பவர்கள் வயது வரமபின்றி இந்த விஷயத்திற்கு மட்டும் நண்பனாக மறிவிடுவார்கள்
தான் புகை பிடிப்பதுமட்டும் அல்லாமல் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சிகரட்டை ஸ்டைலாக நீட்டுவார்கள்
கவுரமாக வாழுவான் சிகரட் தன்னிடம் இல்லை என்றால் பக்கத்தில் உள்ளவர்களிடம் சிகரெட் பிச்சை எடுப்பதற்குகூட தயங்க மாட்டார்கள்
எவனோ புகை பிடிப்பான் இவனோ கை நீட்டுவான்
என்ன கேவலமான விஷயம் கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை
எல்லாமே நிக்கோடின் செய்யக்கூடிய வித்தைகள்
புகை பிடித்தல் சம்பந்தமாக ஒரு பெரிய இயக்கமே நடத்தி,நம் மக்களை காப்பாற்ற வேண்டும்,இன்ஷா அல்லாஹ்.
Post a Comment