Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமீரகம் 43...! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 02, 2014 | , , , ,



மற்றுமொரு தேசிய தினத்திற்காக
மணநாள் காணும் 
மாந்தர் போல்
அலங்கரித்த அமீரகம்...
உலகமே வியக்கும் 
உச்சத்தில்!

காற்றுவெளி கூடி
கை தட்டுவதுபோல்
பட்டொளி வீசி
படபடவென 
பறக்கின்றன கொடிகள்

நாற்பத்தி மூன்றாம் வருட
நன்னாளில்
நான்கு வர்ண
நகை அணிந்து
நகர்கின்றன ஊர்திகள்
புன்னகை பூத்து
பூரிக்கின்றனர் சனங்கள்

விழாக்காணும் அமீரகத்தில்
விடுமுறை நாள்
விடாமுயற்சி வெல்லுமெனும்
விடையறியும் நாள்

உலகமே
ஊழலில் திளைக்க
உண்மையான உழைப்பில்
உயர்ந்த அமீரகம்
உலகையே ஒன்றிணைத்து
உவகை கொண்டது
க்ளோபல் வில்லேஜில்

சிகரமென உயரம்
சிறப்பானத் தோற்றம்
படைத்தவன் பேரருளால்
நிமிர்ந்து நிற்கிறது
புர்ஜ் கலீஃபா

கடற் கரை அழகை
கண்டு நின்ற உலகிற்கு
கடலின் உள்ளே அலங்கரிக்கக்
காட்டித் தந்த முன்மாதிரி
ப்பாம் ஜுமைரா

பனிப் பொழிவு நாடுகளின்
பனிச்சருக்கு விளையாட்டை
பின்னுக்குத் தள்ளும்
பாலை மணலில் சருக்கும்
டெஸர்ட் சஃபாரி

இன்னுமுண்டு ஏராளம்
எடுத்துச்சொன்னால்
எதிர்க்க முடியாது யாராலும்

வாழ்க்கையை நடத்த்
வழியற்றோர்க்கு
வேலை வாய்ப்பு

திறமையக் காட்ட
திக்கற்றோர்க்கு
திசைகளுக்கான திறவுகோல்

ஒரே ஒரு
பணிக்கான விசாவில்
ஒட்டு மொத்த குடும்பத்திற்கும்
ஓரிறையின் அருளை
எத்தி வைக்கிறது அமீரகம்

முத்தாய்ப்பாய்

இல்லாதவற்றைக் கொண்டே
இருப்பை நிலைநிறுத்திய
அமீரகம்
சுயநல் அரசியலால்
இருப்பவற்றையெல்லாம்
இழந்து நிற்கும்
இன்றைய நாடுகளுக்கு
ஒரு
சமகாலத்தில் வாழும்
சவுக்கடி படிப்பினை!

ஈஸி பிலாதி எமரேட்ஸ்!!!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

21 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

Assalamu alaikkum

Amirakaththai kankalal Alla kavithaikalal kandukonden kalakkal kakavin kaaviya vadivil

crown said...

மற்றுமொரு தேசிய தினத்திற்காக
மணநாள் காணும்
மாந்தர் போல்
அலங்கரித்த அமீரகம்...
உலகமே வியக்கும்
உச்சத்தில்!
------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.உழைக்கும் நாட்டிற்கும் நன்றி செலுத்தும் பண்பு போற்றக்கூடியதே! ஆமாம் அமீரகம்! உயர்ரகம்!

crown said...

காற்றுவெளி கூடி
கை தட்டுவதுபோல்
பட்டொளி வீசி
படபடவென
பறக்கின்றன கொடிகள்

---------------------------------------------------------
வருமை வெப்பத்துக்கு ஊதிய நிழல் இந்த கொடிகள்!

crown said...


உலகமே
ஊழலில் திளைக்க
உண்மையான உழைப்பில்
உயர்ந்த அமீரகம்
உலகையே ஒன்றிணைத்து
உவகை கொண்டது
க்ளோபல் வில்லேஜில்
---------------------------------------------------------
இந்த வில்லேஜ் ஜில்,ஜில் ! நாலேஜ்ட் உள்ளவங்களுக்கும்!காலேஜ் முடிச்சவங்களுக்கும்! படிக்காமல் மேரேஜ் செய்தவங்களுக்கும்!டீன் ஏஜ்,ஓல்ட் ஏஜ் என பல வயதுகாரர்களுக்கு அவங்க ஸ்டேஜ்க்கு தகுந்த வாறு டேமேஜ் செய்யாத, அவர்,அவர் இமேஜை உயர்த்தும் இந்த க்ளோபல் வில்லேஜில் நவீன உதாரணம்!

crown said...

நாலேஜ்ட் உள்ளவங்களுக்கும்
-----------------------------------------------------
மேற்கண்ட வார்த்தையில் ட்"அது நான் இட்ட"திலிருந்து மாறி விட்டது!இட்ட இடத்தில் விட்டதை நிருவி படிக்கவும்!

crown said...

சிகரமென உயரம்
சிறப்பானத் தோற்றம்
படைத்தவன் பேரருளால்
நிமிர்ந்து நிற்கிறது
புர்ஜ் கலீஃபா
-----------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்!பார்க்கவே பிரமிப்பா!(புர்ஜ் கலீஃபா) களிப்பா இருக்குமே!

crown said...

கடற் கரை அழகை
கண்டு நின்ற உலகிற்கு
கடலின் உள்ளே அலங்கரிக்கக்
காட்டித் தந்த முன்மாதிரி
ப்பாம் ஜுமைரா
--------------------------------------------
இதைக்கானவே மகிழ்சி அலைஅடிக்குமே! கலை நயம் ,அரேபியர்க்களின் கலை திறமை கடல் போல பெரியது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இந்த ப்பாம் ஜுமைரா!

crown said...
This comment has been removed by the author.
crown said...

இல்லாதவற்றைக் கொண்டே
இருப்பை நிலைநிறுத்திய
அமீரகம்
சுயநல் அரசியலால்
இருப்பவற்றையெல்லாம்
இழந்து நிற்கும்
இன்றைய நாடுகளுக்கு
ஒரு
சமகாலத்தில் வாழும்
சவுக்கடி படிப்பினை!
----------------------------------------------
வருமை சூரியன் வாட்டி எடுக்காமல்! வாழ வழிக்காட்டி சோலையாய் இருக்கும் நாடு இந்த அமீரகம்!சோலைவனத்தை சுரன்டி பாலையாய் மாற்றும் இதர நாடுகளுக்கு மத்தியில் இந்த நீரூற்று பலரின் தாகத்தையும்,சோகத்தையும் போக்குகிறது! அல்லாஹ் மேலும் ரஹ்மத் செய்வானாக!அதே வேளை அனாச்சாரம் அழிந்து நல்லதுக்கு அச்சாரம் போடும் நாள் வெகுவிரவில் வரும் !வரனும் என்று நம்பியவனாக!கவிஞருக்கு வாழ்த்து சொல்லி வழிமொழிகிறேன்!

crown said...

பனிப் பொழிவு நாடுகளின்
பனிச்சருக்கு விளையாட்டை
பின்னுக்குத் தள்ளும்
பாலை மணலில் சருக்கும்
டெஸர்ட் சஃபாரி
--------------------------------------------------------------
வீர விளையாட்டில் சருக்காத மிடுக்கு இவர்களிடம்! முறுக்கு அதிகம்!ஆனாலும் எதிர்களின் போட்டியை நொருக்கும் பாங்கு!இந்த து"பாய்" காரங்க கெட்டி!

crown said...

பனிப் பொழிவு நாடுகளின்
பனிச்சருக்கு விளையாட்டை
பின்னுக்குத் தள்ளும்
பாலை மணலில் சருக்கும்
டெஸர்ட் சஃபாரி
---------------------------------------------------
இன்னும் சொல்லப்போனால் எதிரிகள் மண்ணை கவ்வுவார்கள்!

Ebrahim Ansari said...

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறது.
இமைகளிலே உறக்கம் வர கண்கள் தவிக்கிறது. ( உபயம் : ஒரு பழைய பாடல்) .

அன்பான அமீரகத்துக்கும் அதன் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பணியாற்ற வந்துள்ள பன்னாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

UAE ! I feel that I miss you a lot.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வழக்கம் போல் சபீர் காக்காவின் நல்ல கவிநயமான கவிதை இது அமீரகம் பற்றி.

அரபு நாடு என்று உலகம் சொல்லிக்கொண்டாலும் மாற்றுமத நண்பர்கள் பெரும்பாலும் அங்கு நல்ல நிலையில் தாய்நாட்டைக்காட்டிலும் சந்தோசமாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு அங்கு அவர்களின் வழிபாட்டுஸ்தளங்கள் கூட கட்டிகொடுக்கப்பட்டுள்ளது ஏக இறைவனை வழிபடும் அரபுகளால்.

ஆனால் இந்தியா ஒரு உலகின் மிகப்பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு இந்து அல்லாத பிற இன/மத மக்களை அடக்கி ஒடுக்கி அவர்களை ஆட்சி செய்து அவர்களை எல்லாம் இந்துக்களின் புராணக்கடவுள் ராமரின் பிள்ளைகள் என்ற ஒரு வட்டத்திற்குள் கொண்டு வந்து அவர்களுக்கு புரியாத வழக்கொழிந்த சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியை கட்டாயத்தின் பேரில் புகட்ட நினைப்பது வெட்கக்கேடானதும், வேதனையானதுமேயன்றி வேறில்லை.

அமீரகத்தில் புரஜ் அல் கலீஃபா கட்டிடம் மட்டும் விண்ணை தொட்டு நிற்கவில்லை. அவர்களின் பிற மதத்தினரை மதிக்கும் குணத்தாலும் விண்ணை முட்டியே நிற்கின்றனர். இந்துத்துவா என்ற கொள்கையை மட்டும் கொண்டவர்கள் அவர்களிடம் நன்கு பாடம் படியுங்கள். என்றாவது ஒரு நாள் அது உங்களின் உண்மை பரிச்சைக்கு உதவும்.......

இதில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் ராமரின் பிள்ளைகளே என்று பாராளுமன்றத்தில் ஒரு அமைச்சரின் அறிவுகெட்ட‌ சவடால் வேறு. பாவம்! அவரே கட்டுன பொண்டாட்டியை இலங்கை ராவணனிடம் பறிகொடுத்து விட்டு கன்ஃபூஸ் ஆகி நிக்கிறாரு..........போய் உருப்படியான வேலையை பாரும்...நம் நாடும் மிளரட்டும்...

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல் எம் எஸ்,

தங்களைத் தளத்தில் மீண்டும் காண்பது மகிழ்வளிக்கிறது. உற்சாகமூட்டும் தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி. உடல் நலத்தைப் பேணிக்கொள்ளுங்கள்.

sabeer.abushahruk said...

//அதே வேளை அனாச்சாரம் அழிந்து நல்லதுக்கு அச்சாரம் போடும் நாள் வெகுவிரைவில் வரும் !வரனும்!//

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

க்ரவுனுரைக்கு நன்றி.

நாடு நல்லநல்ல திட்டங்களைத்தான் போடுகிறது. அதில் ஓட்டைகளை உருவாக்கி உதவாக்கறையாகப் போவது மக்கள்.

அனாச்சாரங்களை மொத்தமாக நிறுத்தவேண்டுமெனில் மக்களிடம் மாற்றம் வரவேண்டும். சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டும்.

வளைகுடா சோகங்களும் அனாச்சாரங்களும் அதிகம் பேசப்படுகிற நிலையில் தேசிய தினத்தில் நல்லதை மட்டும் பாராட்டவே இந்தப் பதிவு.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Abushahruk,
Very good effort to express the greatness of UAE and achievements.

Words are not enough to express the continuous achievements of UAE. We need to be here to exprience thr greatness of this fortunate land.

Thanks for the visionary leaders of UAE. Long live UAE!!!!

My heartfelt congratulations on the occation of 43rd National Day.

Jazakkallah khair.

B.Ahamed Ameen at Jumaiera Lake Tower now, Dubai

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இனா ஆனா காக்கா,

அமீரகத்தில் கணிசமானக் காலம் வாழ்ந்த யாரும் இதை விட்டுப் போன பிறகு இந்நாட்டை மிஸ் பண்ணவே செய்வார்கள்.

பிக்கல் பிடுங்கல் இல்லாத, ஊழல் அற்ற சூழல் எந்த நாட்டில் இருக்கிறது!

அதிரை.மெய்சா said...

அமீரகத்தில் குடியரசு தினம்
நீ பணிபுரியும் நிறுவனத்திலும்
கொடிபறக்க கொண்டாடிய விதம்

சபீரின் கவிதையுடன் களம்
ஷார்ஜவையும் கலக்கியதோ
இத்தினம்

பிழைப்புக் கொடுத்து
களைப்பு நீக்கிய அமீரகம்
இன்னும்
பெரும் புகழை
பெற்றிடணும் அனுதினம்

sabeer.abushahruk said...

//அமீரகத்தில் புரஜ் அல் கலீஃபா கட்டிடம் மட்டும் விண்ணை தொட்டு நிற்கவில்லை. அவர்களின் பிற மதத்தினரை மதிக்கும் குணத்தாலும் விண்ணை முட்டியே நிற்கின்றனர்.//

எம் எஸ் எம்,

அஸ்ஸலாமு அலைக்கும்

சரியாகச் சொன்னீர்கள். இறைவன் நமக்கான ரிஸ்கை எந்த நாட்டில் வைத்திருக்கிறானோ அந்த நாட்டிற்கு நன்றி பாராட்டுவது அவசியம். தங்களின் கருத்திற்கு நன்றி.

brother B. Ahamed Ameen,

wa alaikkumuSSalaam.

//Thanks for the visionary leaders of UAE. Long live UAE!!!!//

long live UAE!!!

மெய்சா,

அஸ்ஸலாமு அலைக்கும்.

உன் கருத்திற்கு மிக்க நன்றி.

aa said...

சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

இது போன்ற தேசிய தினம் என்றெல்லாம் கொண்டாடுவது இஸ்லாமிய வழிமுறை அல்ல. இது முஸ்லிம்கள் மாற்று மதத்தவரிடமிருந்து கற்றுக்கொண்ட நவீன அனாச்சாரம்.(பித்அத்). எதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வாழ்வியல் நெறியாக நமக்கு கற்றுக்கொடுத்தார்களோ, எதை ஸஹாபாக்களும் பின் வந்த நல்ல தலைமுறையினரும் தங்கள் மார்க்கமாக கொண்டார்களோ அதைக் கொண்டு போதுமாக்குவோம்.

இது சம்பந்தமாக சௌதி அரபிய்யாவின் உயர்மட்ட ஃபத்வாக் குழு அளித்த தீர்ப்பைக் காண-

http://www.alifta.com/Fatawa/FatawaChapters.aspx?View=Page&BookID=7&PageID=801&back=true&languagename=en

அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையிலும், அவனுடைய தூதருடைய ஸுன்னாவின் அடிப்படையிலும் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள நாடுவோர்க்கு இது ஒரு அழகிய நினைவூட்டல்.

அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும், முஸ்லிம்களின் ஆட்சியாளர்களுக்கும் தவ்ஹீதின் மீதும், சுன்னாவின் மீதும் பினைப்பை ஏற்படுத்துவானாக. எல்லா வகையான ஷிர்க், குஃப்ர், பித்அத்களை விட்டும் நம்மை தூரமாக்குவானாக. அல்லாஹ் அமீரகத்திற்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் மற்றுமுள்ள முஸ்லிம்களின் நாடுகள், நகரங்களுக்கும் ரஹ்மத் செய்வானாக.

-அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி, ஷார்ஜா (UAE)

Yasir said...

அமீரகம் இது ஒரு ரகம்...புரிந்து/கட்டுப்பாட்டுடன் நடந்தால் எல்லாம் சுகம் இங்கு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு