Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

”கல்வி விழிப்புணர்வும் முஸ்லிம்களும்” 13

தாஜுதீன் (THAJUDEEN ) | July 30, 2010 | , ,

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். S.ஆபிதீன் தனது பேராசிரியர் பணியுடன்                                              தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்   இஸ்லாமிய பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி விழிப்பு உணர்வு, மேற்படிப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். மாணவர்களுக்காக பல ஊர்களுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

கல்வி வழிகாட்டும் முகாம், மேற்படிப்பு குறித்த ஆலோசனை முகாம், பெண் கல்வியின் அவசியம், வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் என்ற தலைப்புகளில் தமிழகத்தின் நகரங்களில் மட்டுமன்றி பல்வேறு சிற்றூர்களிலும் முஸ்லிம் அமைப்புகளின் முயற்சியில் கல்விக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்படுவது உண்மையிலேயே ஓர் உற்சாகமான விஷயம் தான்.

அதிக பண செலவு, உடல் உழைப்புடன் சமுதாயத்தில் கல்வி விழிப்பு உணர்வை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் கல்வி கருத்தரங்குகளில் பாதிக்கும் மேல் போதுமான மாணவர்கள் வருகையின்றி ஓரு சடங்காகவே முடிந்து வருகிறது.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் சில ஊர்களில் தோல்வியடைவதும் அல்லது அவைகள் வெறும் சடங்குகளாகவே நடந்து முடிந்து விடுவதன் காரணத்தை ஆராயும் போது சில உண்மைகள் நாம் அறிய வந்தது. அந்த வகையில் …

கல்வி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்கின்ற அமைப்புகள், தங்களின் அமைப்பு சார்ந்த விளம்பரங்களில் காட்டுகின்ற ஆர்வத்தினை மாணவர்களை அழைத்து வருவதில் காட்டுவதில் மிகுந்த குறைபாடு தெரிகிறது. இதுபோன்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எங்கு நடைபெறுகிறது என்பதனைத் தேடி அலைந்து கலந்து கொள்கின்ற மாற்று சமுதாய மாணவர்களுக்கு மத்தியில் தங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வந்து அழைப்பிதழ் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து முடங்கிக் கிடக்கிறது நமது இஸ்லாமிய மாணவச் சமுதாயம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமுதாய விழிப்புணர்விற்காக இதையும் செய்யத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தானே …! தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற அறியாமையில் ஒதுங்கி நிற்கும் பெற்றோர்களிடம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு சரி நிகராக பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை ஏற்பாட்டாளர்கள் பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும்.

அடுத்த கொடுமை. இன்றும் சில ஊர்களில் மிக அதிக பொருள் செலவில் ஏற்பாடு செய்து அதீத முயற்சியின் காரணமாக “கல்வி விழிப்பு உணர்வு மற்றும் மேற்படிப்பு வழிகாட்டும் முகாம்” என்ற பெயரில் மாணவர்களை அழைத்து வந்து முகாம்கள் நடத்துகின்றனர். மூன்று மணிநேர நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்களின் முகஸ்துதி வார்த்தைகள், வாழ்த்துரைகள், ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்திக்கொள்ளுதல் என்று இரண்டே முக்கால் மணிநேரத்தை விரயம் செய்துவிட்டு இறுதியாக சிறப்பு அழைப்பாளர்களிடம் பளீஸ் 10 -15 நிமிடத்திற்குள் முடித்துக் கொள்ளுங்கள், லுகருக்கு நேரமாச்சு…! என்று அன்புக் கட்டளையிடும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் 21/2 மணி நேரம் மாணவர்களுக்கு கூற வேண்டிய அறிவுரைகள் வெறும் 15 நிமிடங்களில் எந்த வகையிலும் எடுத்துக் கூற முடியவே முடியாது என்பதை புரிந்து கொண்டு நிகழ்ச்சி நிரலை சரி வர அமைத்துக் கொள்ள முயற்சி செய்யலாமே !

இதுபோன்று மாற்றிக் கொள்ளவேண்டிய, ஆதங்கப்பட வைக்கின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்தாலும் பல ஊர்களில் மிகவும் போற்றத்தக்க வகையில் கல்வி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. உதாரணமாக, கடந்த 09.05.2010 அன்று கள்ளக்குறிச்சியில் இஸ்லாமிய கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் சிதறிக்கிடக்கும் சுமார் 1500 இஸ்லாமிய மாணவர்கள், கள்ளக்குறிச்சியின் மிகப்பெரிய மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் 2.30 மணிவரை நடத்திய கருத்தரங்கில் (இஸ்லாமிய மாணவர்கள் மட்டும்) மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது. இது போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்களின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றி. அதற்கு அல்லாஹ்விற்கு நன்றி கூறிக் கொள்வோமாக !

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.

இன்னும், உயர் கல்விக்கு முஸ்லிம் மாணவர்களை வழி காட்டுகின்ற அதே வேளையில் உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியோடு சேர்வதற்கான அதிக மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என்ற சூட்சுமத்தையும் கற்றுத்தர வேண்டும். மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிந்து அவர்களின் உயர் கல்வி இலக்கை இலகுவாக அடையும் “தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

ஆக, கல்வியின் மாண்பை உணராமல் பலகாலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இந்த சமுதாயம் தூக்கம் கலைந்து புரண்டு படுத்து இப்பொழுதுதான் எழுந்து உட்கார முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இனி உட்கார்ந்து எழுந்து நின்று மற்றவர்களுக்கு நிகராக ஓட ஆரம்பிப்பதற்கு சில காலங்கள் கண்டிப்பாக அவசியம். அதற்காக சமுதாயத்தின் கல்வி விழிப்புணர்வு முயற்சிகளில் வல்ல இறைவன் நம்மை சோர்ந்து விடவோ அல்லது பின்வாங்கச் செய்துவிடவோ மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
 
பேராசிரியர் ஆபிதீனைத் தொடர்பு கொள்ள : +91 99658 92706

Thanks : Samarasam Tamil Fortnightly ,May 16-31,2010

13 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//“தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சியையும் ஒவ்வொரு கல்வியாண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் இஸ்லாமிய அமைப்புகள் அந்தந்த ஊர்களில் நடத்த முற்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கண்டிப்பாக இஸ்லாமிய மாணவ சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.//

சரியாக சொல்லப்பட்ட செய்தி.
விளம்பரங்கள் தேடிக்கொள்வதை விட்டு விட்டு மேலே குறிப்பிட்டது போல் "தன்னம்பிக்கை மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள்" அதிரையில் ஏற்பாடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முன்வர வேண்டும்.

கல்வி விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட விசயங்களில் கவணம் செலுத்த "பழைய மாணவர்கள் அமைப்பு" (STUDENT ALUMNI) தேவை என்ற கருத்து இன்னும் பலம் பெறுகிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் – மே மாதங்களில் தான் இது போன்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இனிவரும் ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடவேண்டும். காரணம், பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதத்திலேயே மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. +2 மற்றும் பட்டப்படிப்பு மாணவர்களின் மேற்படிப்பிற்கான இலக்கினை மார்ச் மாத இறுதியிலேயே அவர்களின் மனதில் விதைத்து விடவேண்டும்.//

முக்கியமான கருத்தை பதிந்துள்ளார்கள் கட்டுரையாளர் பேராசிரியர் ஆபீதீன் அவர்கள்.

தேர்வுகள் முடிந்த பிறகு நடத்தப்படும் கல்வி விழிப்புணர்வு முகாம்களால் மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் ஏற்படுத்த முடியாது என்பதும் என் தனிப்பட்ட கருத்து. டிசம்பர் மாதம் முதல் கல்வி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவேண்டும்.

நல்ல சிந்தனைய தூண்டும் கட்டுரையை தந்த பேராசிரியர் ஆபீதீன் அவர்களுக்கு மிக்க நன்றி

Shameed said...

இது போன்று நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் பேராசிரியர் ஆபீதீன் போன்றோரின் திறமைகளை நமது ஊரிலும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Shameed said...

நமது ஊரில் நடக்கும் அநேக கருத்தரங்கில் எதற்காக கருத்தரங்கு நடகின்றதோ அதற்கு முக்கியத்துவம் கொடுபதில்லை கருத்தரங்கிற்காக ஏற்பாடு செய்யப்படும் விருந்து மற்றும் ஏக தடபுடலாக நடக்கும் ,மொத்தத்தில் அங்கு கருத்து கம்மியாக இருக்கும் விருந்து கூடுதலாக இருக்கும் என்பது மற்றும் உண்மை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

என்றாவது அனைத்து பள்ளி மாணவர்களுக்காக கருத்தரங்கம், மேல் கல்வி விழிப்புணர்வு முகாம்கள் இதுவரை பெரிய அளவில் நடைப்பெறவில்லை.

இக்கட்டுரையில் உள்ளது போல் அழைப்பிதழ்கள் அனுப்பி வரவழைக்கலாமே. இன்னும் நிறைய புதிய யுக்திகளை கையளாதாவரை, சகோதரர் சாஹுல் சொன்னது போல் கருத்தரகங்கள் வெரும் விருந்தரங்கங்களாகத் தான் போய் முடியும்.

Shameed said...

சகோதரர் தாஜுதீன் சொல்வதுபோல் இன்னும் நிறைய புதிய யுக்திகளை நாம் கையாள வேண்டும் நம்மிடம் நிறைய திறமைகள் ஒளிந்து கிடக்கின்றது அதை திறந்து விட தகுந்த யுக்திகளை நாம் கையாள வேண்டும்

Anonymous said...

சமுதாய அக்கறையுள்ள கட்டுரையாளருக்கு நன்றி, மற்றும் வாழ்த்துக்கள்

வாருங்களேன் இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம். அடுத்த கல்வியாண்டின் நுழைவுத்தேர்வில் நமது மக்களை சிறந்த போட்டியாளர்களாக உருவாக்குவோம். நல்ல யோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

இது விஷயமாக என்னை தொடர்பு கொள்ளவிரும்பினால் என் கைபேசியிலும் , என் அஞ்சல் முகவரியிலும் sharfunm@gmail.com தொடர்பு கொள்ளலாம் .

என் அறிமுகம் :

ஊர் : அதிராம்பட்டினம்

தெரு : நெசவுத் தெரு

வாப்பா : மர்ஹூம் கா. அ. முஹம்மது நூஹு

தற்போதைய இருப்பிடம் : கலிபோர்னியா


ஷரபுத்தீன் நூஹு
1 925 548 3696

Adirai khalid said...

///வாருங்களேன் இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம். அடுத்த கல்வியாண்டின் நுழைவுத்தேர்வில் நமது மக்களை சிறந்த போட்டியாளர்களாக உருவாக்குவோம். நல்ல யோசனைகளை எதிர்பார்க்கிறேன்.///

masaallah Good news
sharfudeen kaka
insha allah i wil joint together
my email id: halidh@gmail.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///வாருங்களேன் இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து ///

Sharfudeen Khakka : Hereunder I share my identity with you.
Name : M. Naina Thambi
Street : Middile Street
Now : Dubai, U.A.E.
email: nainathambi@gmail.com

அதிரைநிருபர் said...

//வாருங்களேன் இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம். அடுத்த கல்வியாண்டின் நுழைவுத்தேர்வில் நமது மக்களை சிறந்த போட்டியாளர்களாக உருவாக்குவோம். நல்ல யோசனைகளை எதிர்பார்க்கிறேன்.//

அல்ஹம்துலில்லாஹ், சகோதரர் சரபுதீன் நூஹு அவர்களின் இந்த யோசனையுடன் நாமும் உடன்படுகிறோம். உண்மையில் இது போன்ற கருத்து உருவாகும் என்ற நம்பிக்கை எமக்குள் இருந்து வந்துள்ளது. இது ஒரு நல்ல தொடக்கமாக கருதுகிறோம். அதிரைநிருபர் நிச்சயம் இதில் நல்ல பங்களிப்பை மேற்கொள்ளும் என்று உறுதியுடன் பதிவு செய்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

இந்த கல்வி விழிப்புணர்வு பணியில் ஒன்று சேர்ந்து செயல்பட நம் அதிரை நிருபர் வாசகர்களும், நம் அதிரைவாசிகளும் நம் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் முன் வரவேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இது விபரமாக எப்படி அனுகுவது என்பது பற்றிய கருத்துப்பரிமாற்றம் நிச்சயம் அவசியம்.

இது சம்பந்தமாக இதில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் கருத்துப்பரிமாற்றம் செய்ய அதிரைநிருபரில் கல்வி விழிப்புணர்வுக்கு என்று ஒரு நிரந்தர பகுதி ஒதிக்கினால் நல்லது என்று கருதுகிறோம். இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறோம்.

கருத்துப்பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல் எப்படி அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது என்பதில் நாம் ஆர்வம் செலுத்த வேண்டும்.

இந்த நல்ல யோசனையை வலுப்படுத்த நம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துப்பரிமாற்றத்திற்கு முன்வரவேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த கல்வி விழிப்புணர்வுக்காக முன்வருவார்கள் என்று நம்புகிறோம்.

தொடர்புக்கு adirainirubar@gmail.com

Unknown said...

அருமையான சேவை! பேரா. ஆபிதீன் போன்ற தன்னார்வலர்களைச் சமுதாயம் பயன்படுத்திக் கொள்வது, காலத்தின் கட்டாயமாகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் நமதூர் ஏ.எல்.எம். பள்ளியில் எஸ்.ஐ.ஓ. சார்பாகக் உயர்கல்வி வழிகாட்டுப் பயிலரங்கம் ஒன்றை நடத்தினோம். ஓரளவு எங்களால் முடிந்த வரையில் அறிவிப்புகள் கொடுத்திருந்தும், ஒரேயொருவர் மட்டுமே வந்து கலந்து பயன் பெற்றார். அவர் இப்போது சென்னை சதக் பொறியியல் கல்லூரியில் பதிவு பெற்று, தன் எதிர்கால நல்வாழ்விற்கு வித்திட்டுள்ளார். அவரை நாம் வாழ்த்துவோம்!

Shameed said...

//வாருங்களேன் இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம்.

நான் எப்படி வருவது இயக்கங்களை தவிர்த்து விட்டு ஏன் என்றால் நான் எந்த இயக்கத்திலும் இல்லை
NAME;SHAHULHAMEED
STREET;BEACH STREET & CMP LANE
ADIRAMPATTINAM,
NOW;DAMMAM
E MAIL shameed134@gmail.com

irfanudeen1234 said...

insha allah we do have an hope that allah will give good knowledge and bright Feature for our new generation and so lets all join together to bring our comunity as a bright and chearfull comunity in this world
irfanudeen(UAE)
irfanudeen@yahoo.co.in

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு