Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனசு மயங்கும்..... 45

அதிரைநிருபர் | September 06, 2010 | , ,

தொடர்ந்து துரத்தும் வேலைகள், தினம் தினம் வெறுப்பேத்தும் ட்ராபிக் ஜாம். கஸ்டமரின் மெடிக்கல்ரிப்போர்ட்,                     கார் ஓட்டிக்கொன்டிருக்கும்போதே அலைபேசியில் பாடம் நடத்த சொல்லும் ஜுனியர்கள், மொட்டை வெயிலில் பார்கிங் தேடும் கொடுமை, மாதக்கடைசிக்கு அடிமையாகிப்போன நடுத்தரவாழ்க்கை இதை எல்லாம் மூட்டை கட்டிவைக்க சொன்னது அந்த காலைச்சாரளில் கூவிய அந்தமுகம் தெரியாத குயில்... காலை நேரத்தில் சலவைக்கு போட்ட மாதிரி பளிச்வான மும்குறையற்ற ஆக்சிஜன் நிரம்பிய காற்றும் காலம் காலமாய் நம் இழந்த வசந்தங்களை மறுபடியும் நமக்கு அறிமுகம் செய்கிறது.

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நம் ஆத்மாவின் விருப்பத்துக்கு செலவளிக்கும் நேரம் குறைந்து பரந்து விசாலமான பூமியை நாம் சிறை மாதிரி பாவிக்க ஆரம்பித்துவிட்டோம்.

இயற்கையை ரசிப்பவன் பொருளுக்கு அழையும் பொருளற்ற வாழ்க்கை வாழ்பவனின் பார்வையில் பைத்தியக்காரன்.

சமயத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைத்து ஏங்குவது என் உள்மனம் மட்டுமல்ல... உங்களுக்கும் ஏக்கம் இருக்களாம்.. இயற்கையை விரும்பும் என் சாதியாக இருந்தால். ஒரு நாள் விடுமுறையானாலும் புலன்களுக்கு விடுமுறை கொடுக்காதீர்கள்.

எப்போதாவது ஒரு சிட்டு குருவி தாகம் தீர்த்துக்கொள்ளும் நேர்த்திகண்டிருக்கிறீர்களா?

இடி இடித்து ஓய்ந்த் மழையில் கடைசி சொட்டு மழைத்துளிவிழும் இலையின் பச்சை கண்டுவியந்திருக்கிறீர்களா?

ஓய்ந்த மழை விட்டுச்சென்ற தண்ணீரிலும் / வயல் வரப்புகளிலும் செருப்பு விலங்கு இல்லாமல் நடந்து கால் குளிர்ந்து இருக்கிறீர்களா?

எப்போதாவது ஒரு முறை கடும் பசியிலும் உங்கள் உணவுப் பொட்டலம் பிரிக்கப்படும்போது இன்னும் 5 மணித்தியாலத்துக்கு உணவுகிடைக்காது எனதெரிந்தும் உங்களிடம் கையேந்தும் ஏழையின் கையில் உங்கள் உணவை கொடுத்து அவன் முகத்தில் உள்ள மகிழ்ச்சியில் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?

தூரத்துரயில் சத்தத்தின் சங்கீதத்தில் தூங்கியிருக்கிறீர்களா?

இலங்கை வானொலியில் 'இரவின் மடியில் நிகழ்ச்சியை" மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவில் ட்ரான்சிஸ்டரில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறீர்களா?

வெட்டப்பட்ட வேப்பமரத்துக்காக துக்கமாகி மனம் புழுங்கியிருக்கிறீர்களா?

பாலமரக்காய்களில் வெள்ளைப்பருப்பின் பால்சுவையில் படிக்க வந்த பாடம் மறந்த்துஇருக்கிறீர்களா?

நீண்ட கடல் ஓரத்தில் காற்றாட நடந்து கால் ஓய்ந்து மெளனம் அடைந்த்து இருக்கிறீர்களா?

அறிமுகம் இல்லாத ஊரில் மார்கழி குளிரில் சாலை ஓரத்துடீக்கடையில் தேநீர் அருந்தி சொர்க்கம் கண்டிருக்கிறீர்களா?

நிலவின் வெள்ளை வெளிச்சத்தில் தனியாக நடந்த்து இருக்கிறீர்களா?

பச்சை வயல் வெளியில் பம்ப்செட்டின் சத்தத்தை தாண்டி பேசும் உழவுப் பெண்களின் வார்த்தைக்கு காது கொடுத்து இருக்கிறீர்களா?

இதையெல்லாம் ரசிக்காத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கைதானா என்று நினைத்தது உண்டா?

--ZAKIR HUSSAIN

45 Responses So Far:

Yasir said...

படிக்கும் போதே உள்ளம் பசுமை உணர்வுடன் படபடக்கிறது...கட்டுரையின் படங்கள் அதற்க்கு மேலும் வலு சேர்க்கிறது..இங்கு சொல்லப்பட்ட 90% விசயங்களை நான் அனுபவித்து இருக்கிறேன்...பசுமையான பக்கவான ஆக்கம் பிரதர்

Unknown said...

கட்டுரையின் தொடக்க வரிகளைப் படித்தபோதும், தளத்தின் உள்ளே நுழைந்து வாசிக்கத் தொடங்கியபோதும், இக்கட்டுரை - இல்லையில்லை - இவ்வுரை வீச்சு யாருடைய கைவண்ணமாக இருக்கும் என்று நினைத்தேனோ, அவருடையதுதான், சகோ. ஜாகிருடையதுதான் என்பது தெளிவாயிற்று. வாழ்க! வளர்க அவருடைய எழுத்துப் பணி!

Unknown said...

நிஜமாக மனசு மயங்குது ......அருமை ஜாகிர்

crown said...

அதிரை அஹ்மது says
Monday, September 06, 2010 12:41:00 PM

கட்டுரையின் தொடக்க வரிகளைப் படித்தபோதும், தளத்தின் உள்ளே நுழைந்து வாசிக்கத் தொடங்கியபோதும், இக்கட்டுரை - இல்லையில்லை - இவ்வுரை வீச்சு யாருடைய கைவண்ணமாக இருக்கும் என்று நினைத்தேனோ, அவருடையதுதான், சகோ. ஜாகிருடையதுதான் என்பது தெளிவாயிற்று. வாழ்க! வளர்க அவருடைய எழுத்துப் பணி!
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.ஜாஹிர் அருமை!மோதிர கையால் குட்டுவாங்கிட்டிங்க வாழ்துகள்.மேலும் பூச்செண்டுகளுடன் பிறகு வருகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹ ஈத் பரிசா !? மேலதிகமான கேள்விகளுக்கு என் அனுபவங்களும் சாட்சி. வழக்கமான தெளிவான படங்களுடன் ஜாஹிர்(காக்காவின்) ஆக்கம் ஓர் ஏக்கமே (மீளுமா மற்றுமொரு சந்த்ர்ப்பமென்று) !

Shameed said...

இதையெல்லாம் அனுபவிக்காதவர்கள் இதை படித்ததும் அதை எல்லாம் அனுபவித்த ஒரு சுகம் கிடைத்திருக்கும் ,

யான் கண்ட சுகத்தை வையகமும் காண வேண்டும் என்ற பரந்த மனசு உள்ள நீங்கள் அதிரை மண(சு) த்தில் எழுதி அனைத்து மனங்களையும் கவர்ந்து விட்டீர்கள் என்பது உண்மை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//எப்போதாவது ஒரு சிட்டு குருவி தாகம் தீர்த்துக்கொள்ளும் நேர்த்திகண்டிருக்கிறீர்களா?//

ஓட்டு வீட்டில் குடியிருக்கும் போது சிட்டு குருவி தாகம் தீர்த்துக்கொள்ளும் நேர்த்தியான காட்சியை பார்த்திருக்கிரறேன்.

செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகளே இப்போது அதிகம் பார்ப்பதில்லை.

//இடி இடித்து ஓய்ந்த மழையில் கடைசி சொட்டு மழைத்துளிவிழும் இலையின் பச்சை கண்டு வியந்திருக்கிறீர்களா?

ஓய்ந்த மழை விட்டுச்சென்ற தண்ணீரிலும் / வயல் வரப்புகளிலும் செருப்பு விலங்கு இல்லாமல் நடந்து கால் குளிர்ந்து இருக்கிறீர்களா?//

ஒரு காலத்தில் அனுபவித்து ஞாபகத்தில் உள்ளது. போது இருக்கும் நாட்டில், கார் கன்னாடியில் மழைத்துளி விழுவதை பார்த்து வியப்படைவதுண்டு.

//தூரத்துரயில் சத்தத்தின் சங்கீதத்தில் தூங்கியிருக்கிறீர்களா?//

எனக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்க, யாசிர், சாஹுல் காக்க பேன்றவர்கள் இவ்விசயத்தில் கொடுத்துவச்சவர்கள் (சாஹுல் காக்கா கொவசிக்க போராங்க, கொடுத்துவச்சவர் என்ற வார்த்தை உபயோகித்துக்காக)

//அறிமுகம் இல்லாத ஊரில் மார்கழி குளிரில் சாலை ஓரத்துடீக்கடையில் தேநீர் அருந்தி சொர்க்கம் கண்டிருக்கிறீர்களா?//

//பச்சை வயல் வெளியில் பம்ப்செட்டின் சத்தத்தை தாண்டி பேசும் உழவுப் பெண்களின் வார்த்தைக்கு காது கொடுத்து இருக்கிறீர்களா?//

விவசாய செத்து உள்ள நம்மூர்வாசிகளுக்கு இது சத்தியமே.

மற்றவைகளை இனி வாய்ப்பு கிடைத்தால் யோசித்து பார்க்கலாம்.

Zakir Hussain said...

நன்றி சகோதரர் யாசிர் / சகோதரர்
கிரவுன் / சகோதரர்
அபு இபுறாகிம் / சகோதரர்
ஹார்மி ...உங்களின் விமர்சனங்கள் இன்னும் ஏதாவது புதிதாக எழுத சிந்திக்க தூண்டுகிறது.

சகோதரர் யாசிர் // இங்கு சொல்லப்பட்ட 90% விசயங்களை நான் அனுபவித்து இருக்கிறேன்...//

வாழ்க்கையை சரியாக வாழ்ந்து இருக்கிறீர்கள்.


நன்றி சகோதரர் அதிரை அஹமது அவர்களுக்கு..உங்களைப்போல் எழுத்திலும் , வாழ்விலும் முன்னோடியாக இருப்பவர்களின் விமர்சனமும் ஊக்கமும் நான் எழுத மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் எப்போதும்...உங்கள் விமர்சனத்தின் நிறைவான மனதுடன்...


ZAKIR HUSSAIN

Zakir Hussain said...

இதை அழகாக வடிவமைத்து வெளியிட்ட சகோதரர் தாஜுதீன் என் மனதில் எப்போது நன்றியுடன் நினைக்கிறேன்.

நான் எழுதிய டிராப்ட் காப்பியை Microsoft office 2010 [ word ]எழுதிய programmer பார்த்தால் ஒரு நல்ல தூக்குகயிரை தேடலாம்...அவ்வளவு கேவலமாக டிராப்ட் செய்திருந்தேன்.

நன்றி சகோதரர் தாஜுதீன் ...


ZAKIR HUSSASIN

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் மொத்தமும் பி(ப)டித்ததில் மெத்த பிடித்த இந்த முத்துகள் மூன்றும் வாழ்வின் பல் பரிமாணத்தை சொல்லாமல் சொல்லி மனதை அ(கி)ள்ளிவிட்டது.1).ஓய்ந்த மழை விட்டுச்சென்ற தண்ணீரிலும் / வயல் வரப்புகளிலும் செருப்பு விலங்கு இல்லாமல் நடந்து கால் குளிர்ந்து இருக்கிறீர்களா?
(செருப்புகூட விலங்காய்!!!! விளக்கிய விதம் அந்த சுகத்தை அனுபிவிக்க தடையாய் இருக்கக்கூடாது என்கிற சிந்தனை என் சிந்தை கவர்ந்தது.(கால் கட்டு போட்டாலே அதுவே விலங்காய் விடுகிறது-?????)
2.எப்போதாவது ஒரு முறை கடும் பசியிலும் உங்கள் உணவுப் பொட்டலம் பிரிக்கப்படும்போது இன்னும் 5 மணித்தியாலத்துக்கு உணவுகிடைக்காது எனதெரிந்தும் உங்களிடம் கையேந்தும் ஏழையின் கையில் உங்கள் உணவை கொடுத்து அவன் முகத்தில் உள்ள மகிழ்ச்சியில் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?
(இருப்பதில் பிட்டுக்கொடுப்பது தருமம் என்றால் விட்டுக்கொடுப்பது தியாகம் அருமை சகோதரரே! அசத்திவிட்டீர் சரியான விருந்தோம்பல்.. நன்று,என்றும் நன்று அது நன்றாய் இருக்கும் வரை...(
3.நீண்ட கடல் ஓரத்தில் காற்றாட நடந்து கால் ஓய்ந்து மெளனம் அடைந்தது இருக்கிறீர்களா?
(ஆர்பரிக்கும் கடலின் முன்னே மொவுனம் தரித்திருப்பது ,சனமுள்ள மன ஓட்டத்தில் நேரம் இறைவனை தொழ ,தியானிக்கையில் ஏற்படும் அமைதியை நினைவுருத்துகிறது.இது மன் கட்டுப்பாடின் அடையாளம் ,இரசிக்கத்தெரிந்தவனின் சந்தோசம்....)
போகப்போக எழுதுவதில் உங்கள் மேல் பொறாமை கொள்ளச் செய்துவிடுவீரோ??இப்படியெல்லாம் எம்மால் எழுத முடிவதில்லை யென்று.கலக்குங்க...தொடரட்டும் உங்கள் எழுத்து அட்டகாசம்.

Shameed said...

ஜாகிர்,

ஏனைய சகோதரர்களுக்கு நல்லதொரு ஆக்கம்

எனில், எனக்கோ உன் வழக்கமான கடிதங்களில் ஒன்று.



கைய்யெழுத்துப் பத்திரிக்கை நடத்திய காலம் தொட்டு

பரிச்சயமான உன் எழுத்து, சகோ.அதிரை அஹமது அவர்கள்

யூகித்ததுபோல் எளிதில் உணரத் தக்கது.



நீ சிலாகித்து குறிப்பெடுத்திருக்கும் அழகே அழகு!

இயற்கை எழிலை ரசிக்க நீ நடந்த வழியெல்லாம்

உடன் நடந்த மூன்றாவது நான்காவது கால்களுக்குச்

சொந்தக்காரன் என்ற தகுதியில் சொல்கிறேன், "அழகுக் குறிப்புகள் அற்புதம்".



//5 மணித்தியாலத்துக்கு உணவுகிடைக்காது எனதெரிந்தும் உங்களிடம் கையேந்தும் ஏழையின் கையில் உங்கள் உணவை கொடுத்து அவன் முகத்தில் உள்ள மகிழ்ச்சியில் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?//



உண்டு நண்பா, கல்லூரி விடுமுறையில் எழும்பூர்

நிருத்தத்தில் வாங்கிய தயிர் சாதத்தோடு

கம்பனில் (ம்ஹ்ம்ம்) ஏறிய நாம் மாம்பலத்தில்

சாப்பிட எத்தனிக்க அப்போது கையேந்திய ஏழைக்கு உன் உணவை

நீ கொடுத்த அழகே அழகு! (பின் என் பொட்டலத்தில் கை வைத்ததும்

அழகுதான்)



சமீபத்தில் ஊர் சென்ற நான் பொருக்கி வந்தவவை:

(உன் குறிப்புகளோடு ஒத்துப் போகின்றனவா என்று பார்)



சட்டென ஒரு மழையிரவு:

இடி மின்னல் நடத்திய

ஒளியும் ஒலியும்

முடிவதற்குள்

திரை இறங்கியது...

மழை!



கூறையில் நடத்திய

தாளக் கச்சேறி முடிந்து

மூட்டை முடிச்சுகளோடு

ஊருக்குப் போனது...

ஓடை!



பள்ளம் நோக்கிப்

பாய்ந்த வெள்ளத்தில்

படிப் படியாய்

மூழ்கிப் போனது

பக்கத்து வீட்டு

பாப்பாவின்...

கத்திக் கப்பல்!



கட்சி பேரம் பாராமல்

மழை நீர் சேகரித்தன

கூறை வீட்டின்...

தட்டு முட்டு சாமான்கள்!



மின்னல் வெட்டுக்குப் போன மின்சாரமும்

ஜன்னல் சாத்தி வந்த சம்சாரமும்

இன்வெர்ட்டரின் இயலாமையால்

வேகம் குறைந்த மின் விசிறியும்

என மழை வகுத்தது...

கோட்பாடுகள்!



விடிகாலையில்-

உப்பளங்களில்

உணவு கொத்தின...

உல்லான்கள்!

சபீருக்காக
சவானா

Yasir said...

//மின்னல் வெட்டுக்குப் போன மின்சாரமும்
ஜன்னல் சாத்தி வந்த சம்சாரமும்
இன்வெர்ட்டரின் இயலாமையால்
வேகம் குறைந்த மின் விசிறியும்
என மழை வகுத்தது...
கோட்பாடுகள்!// wow...super kakka....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed said...
ஜாகிர்,
கைய்யெழுத்துப் பத்திரிக்கை நடத்திய காலம் தொட்டு ///

நானும் அந்தக் கையெழுத்துப் பத்த்ரிக்கையை வாசித்து இருக்கிறேன்..

அருமையான பின்னூட்டமும் கூட...

Shameed said...

அபுஇபுறாஹிம் said...
நானும் அந்தக் கையெழுத்துப் பத்த்ரிக்கையை வாசித்து இருக்கிறேன்..


அப்போ நீங்களும் அந்த செட் (குருப்) தனா ,சொல்லவே இல்லே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed said...
அப்போ நீங்களும் அந்த செட் (குருப்) தனா ,சொல்லவே இல்லே ///

நான் மெய்யாலுமே ஜூ(வ்வ்வ்வ்)னியருங்கோ.................. கண்டிருக்கேன் நம்ம சீனியரோட ஆக்கங்களை அன்றே..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//உண்டு நண்பா, கல்லூரி விடுமுறையில் எழும்பூர்

நிருத்தத்தில் வாங்கிய தயிர் சாதத்தோடு

கம்பனில் (ம்ஹ்ம்ம்) ஏறிய நாம் மாம்பலத்தில்

சாப்பிட எத்தனிக்க அப்போது கையேந்திய ஏழைக்கு உன் உணவை

நீ கொடுத்த அழகே அழகு! (பின் என் பொட்டலத்தில் கை வைத்ததும்

அழகுதான்)//

ஆகா அற்புதமான மலரும் நினைவுகள்.

ஷாகுல் காக்கா, சகோ. ஷபீர் அவர்களின் ஆக்கங்களை தனி பதிவாக பதிவு செய்யலாமே. நம் அனனவரின் சார்பாக சகோ. ஷபீர் அவர்களிடம் கோரிக்கை வைய்யுங்கள், பிறகு பதில் சொல்லுங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஆகா நம்ம அதிரை நிருபரில் சகோதரர் ஜாஹிர் அவர்களின் கட்டுரையால் பழைய ஜூனியர், சீனியர் கதையேல்லாம் கலை கட்டுது. தொடரட்டும் கையேழுத்து பத்திரிக்கை நினைவுகள்.

அன்பரசன் said...

மிக சரி வரிகள்.
வயட்கு ஏற ஏற நாம் வாழ்வை அனுபவிக்க மறந்து விடுகிறோம்..

££Plus££ said...

ஆஹா.. என்ன வயலும் வாழ்வும்

Shameed said...

தாஜுதீன் says
Tuesday, September 07, 2010 8:44:00 PM
ஷாகுல் காக்கா, சகோ. ஷபீர் அவர்களின் ஆக்கங்களை தனி பதிவாக பதிவு செய்யலாமே. நம் அனனவரின் சார்பாக சகோ. ஷபீர் அவர்களிடம் கோரிக்கை வைய்யுங்கள், பிறகு பதில் சொல்லுங்கள்

சபீர் அவர்களிடம் வேண்டு(கோல்)வைத்தாகிவிட்டது நமது (கோலை)கோரிக்கையை என்றும் அவர் நிராகரித்தது கிடையாது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed said...
சபீர் அவர்களிடம் வேண்டு(கோல்)வைத்தாகிவிட்டது நமது (கோலை)கோரிக்கையை என்றும் அவர் நிராகரித்தது கிடையாது //

(கோல்)மூட்டியாச்சா ! சரி சரி நடக்கட்டும்.

///மின்னல் வெட்டுக்குப் போன மின்சாரமும்
ஜன்னல் சாத்தி வந்த சம்சாரமும்
இன்வெர்ட்டரின் இயலாமையால்
வேகம் குறைந்த மின் விசிறியும்
என மழை வகுத்தது...
கோட்பாடுகள்!///

இவங்களையெல்லா சீக்கிரம் வரச் சொல்லுங்க சாஹுல்...

Shameed said...

அபுஇபுறாஹிம் says
(கோல்)மூட்டியாச்சா ! சரி சரி நடக்கட்டும்

இனி புகை(வண்டி வண்டியா)யா ஆரபிக்கும் செய்திகளும் மலரும் நினைவுகளும்

crown said...

சட்டென ஒரு மழையிரவு:

இடி மின்னல் நடத்திய

ஒளியும் ஒலியும்

முடிவதற்குள்

திரை இறங்கியது...

மழை!



கூறையில் நடத்திய

தாளக் கச்சேறி முடிந்து

மூட்டை முடிச்சுகளோடு

ஊருக்குப் போனது...

ஓடை!



பள்ளம் நோக்கிப்

பாய்ந்த வெள்ளத்தில்

படிப் படியாய்

மூழ்கிப் போனது

பக்கத்து வீட்டு

பாப்பாவின்...

கத்திக் கப்பல்!



கட்சி பேரம் பாராமல்

மழை நீர் சேகரித்தன

கூறை வீட்டின்...

தட்டு முட்டு சாமான்கள்!
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சத்துக்கள் நிறைந்த வார்தைகள்.இதுவரை சொன்னவை கவிதை வர்ண(ன்)னை!
-----------------------------------
மின்னல் வெட்டுக்குப் போன மின்சாரமும்

ஜன்னல் சாத்தி வந்த சம்சாரமும்

இன்வெர்ட்டரின் இயலாமையால்

வேகம் குறைந்த மின் விசிறியும்

என மழை வகுத்தது...

கோட்பாடுகள்!



விடிகாலையில்-

உப்பளங்களில்

உணவு கொத்தின...

உல்லான்கள்!
-----------------------------------
இப்பொழுது சொன்னவை,பார்த்த அனுபிவித்த அனுபவம்.

Shameed said...

சட்டென ஒரு மழையிரவு:

(திடீர் புடீர்னு மழை)

இடி மின்னல் நடத்திய

(தடார் புடார்னு இடி இடிச்சது)

ஒளியும் ஒலியும்

(வெளிச்சமும் சத்தமும் )

முடிவதற்குள்

(நிக்கிறதுகுள்ள)

திரை இறங்கியது... மழை!

(மழை கொட்டிரிச்சி)

கூறையில் நடத்திய

(கொட்டாய் மேலே)

தாளக் கச்சேறி முடிந்து

(பாட்டும் கூத்தும் முடிஞ்சது )

மூட்டை முடிச்சுகளோடு

ஊருக்குப் போனது...

ஓடை!
(மூட்டை முடிச்சு

எல்லாதைவும் வாய்கா அள்ளிக்கிட்டு போச்சி )

சும்மா மொழி ஆக்கம். பாக்கிய யாராவது தொடருங்க !!!!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed says
Wednesday, September 08, 2010 4:01:00 AM
சும்மா மொழி ஆக்கம். பாக்கிய யாராவது தொடருங்க !!!!!!

சும்மா-மொழியா ? நான் என்னமோ செம்மொழின்னுலா நெனச்சுபுட்டேன்...

coalமூட்டி புகை(ய)போட்டு வளர்ந்த கதைதான் - ஆனா மயங்கிய மனசு, பின்னூடங்க்ளால் கிறங்குதுங்க !

Shameed said...

அபுஇபுறாஹிம் said...
நான் என்னமோ செம்மொழின்னுலா நெனச்சுபுட்டேன்...



எம்மொழி எப்பொதும் செம்மொழி தான் இபோதும் எப்பொதும் (நம் அதிரை தமிழை சொன்னனுங்கோ)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed says
Wednesday, September 08, 2010 4:01:00 AM
சும்மா மொழி ஆக்கம். பாக்கிய யாராவது தொடருங்க !!!!!!!///

தொடர்ந்திட்டா போச்சு...

சட்டென ஒரு மழையிரவு:

** சட்டு புட்டுன்னு மளை

இடி மின்னல் நடத்திய

** கொல நடுங்கிய சத்தம்

ஒளியும் ஒலியும்

** இரச்சலும் இம்சையும்

முடிவதற்குள்

** நிப்பதுக்கு முன்னாடி

திரை இறங்கியது... மழை!

** மறப்பு மாறி மள வந்திச்சு

கூறையில் நடத்திய

** ஒசக்க என்னமோ

தாளக் கச்சேறி முடிந்து

** தம்மு கும்முன்னு சத்தம்

மூட்டை முடிச்சுகளோடு

ஊருக்குப் போனது...

ஓடை!

** குறவன் அள்ளாத குப்பைகளையும் கூட்டிக் கொண்டு(தான்) போச்சுன்னு சொல்லிக்காங்க இந்த கவிதைக் காக்கா...

என்ன சாஹுல் எப்படி "ச்ச்செம்ம்மொ(ழி)லீ" வளர்ச்சி !

Zakir Hussain said...

என்ன அபுஇபுறாகிம்...இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இவ்வளவு நாள் இந்த "பதிவர்"[ Blogger க்கு இப்படித்தான் எழுதுராய்ங்க] உலகத்தில் அமைதியாக இருக்கிறீர்கள்.

நிறைய எழுதுங்கள்..

உங்கள் எழுத்தை படித்தவுடன் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் ஒருவரான கி.ராஜநாராயனின் எழுத்தையும் அவரின் அழகான எழுத்து நடையில் வெளியான "காதல் படிக்கட்டுகள்" [ ஆனந்த விகடனில்] ஆர்டிக்கிள் ஞாபகத்துக்கு வந்தது.

Shameed said...

என்ன சபீரின் கவிதை (யை) தொடர்ந்து அனைவரின் மனதில் உள்ள கவிதைகளை வெளியோ அள்ளிகிட்டு வருது

குறவன் அள்ளாத குப்பைகளையும் கூட்டிக் கொண்டு(தான்) போச்சுன்னு சொல்லிக்காங்க இந்த கவிதைக் காக்கா...

அருமை

crown said...
This comment has been removed by a blog administrator.
அதிரைநிருபர் said...

Brother Crown, we have temperorly removed your last comment, because it changes the discussion to different thoughts. This is Ramadhan time We hope you will understand our decision. Keep posting your regular comments.

crown said...

1.
அதிரைநிருபர் குழு says
Thursday, September 09, 2010 6:35:00 AM

Brother Crown, we have temperorly removed your last comment, because it changes the discussion to different thoughts. This is Ramadhan time We hope you will understand our decision. Keep posting your regular comments.
----------------------------------
Assalamualikum yes i understood.Thanks for informed me.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபர் குழு says
Thursday, September 09, 2010 6:35:00 AM
Brother Crown, we have temperorly removed your last comment, because it changes the discussion to different thoughts. This is Ramadhan time We hope you will understand our decision. Keep posting your regular comments.

crown says
Thursday, September 09, 2010 8:02:00 AM

Assalamualikum yes i understood.Thanks for informed me.///

Well done both of you ! very good understanding and right decision. Allah keep us away from "fithna"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Zakir Hussain said...
நிறைய எழுதுங்கள்.. //

ஜாஹிர்(காக்கா): நீங்க வேற வாசிக்கத்தான் பழகியிருந்தோம், உங்கள மாதிரி (அந்தக் காலத்தில்) சீனியருங்க இருக்கும் போது ஜுனியருங்க படி(த்து) படி(த்து)யாதான் மேல வரனும்... உசுப்பேத்தாத்தான் நாங்க இருக்கோமே.. :))

நம்வூர் வழக்கப்படி சஹன்ல சாப்பிட்டே பழகியாச்சா அதான்.. யாரவது கைவைக்கட்டும் காத்துகிட்டு இருந்து கடைசியா எந்திருக்க பழக்கமா போச்சு காக்கா !

அதிரைநிருபர் said...

நம்முடைய முடிவை பெருமனதுடன் புரிந்து ஏற்றுக்கொண்ட அன்பு சகோதரர் CROWN அவர்களுக்கு மிக்க நன்றி.

தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதிரைநிருபர் said...

சகோதரர் Yasir பின்னூட்டத்துடன் ஆரம்பித்து தற்போது சகோதரர் அபூ இபுறாஹிம் வரை கொஞ்சம் கூட சலிப்படையாமல் பின்னூட்டங்கள் சென்றுக்கொண்டே இருப்பதற்கு சகோதரர் ஜாஹிர் அவர்களின் அற்புதமான எழுத்துத் திறமையே முழுக்க முழுக்க காரணம்.

சர்ச்சையில்லாத செய்திகளை ஏதாற்தமாக செல்லுவது என்பது ஒரு தனி கலைதான். சகோதரர் ஜாஹிர் அவர்களுக்கு நம் அதிரைநிருபரின் சார்பாக வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

The understanding between Adirainirubar and bro.crown shows a great maturity. In this behaviour you both over took even the 'seniors'

-Keep pumping little genius.
-Sabeer,sharjah.

Shameed said...

நம்வூர் வழக்கப்படி சஹன்ல சாப்பிட்டே பழகியாச்சா அதான்.. யாரவது கைவைக்கட்டும் காத்துகிட்டு இருந்து கடைசியா எந்திருக்க பழக்கமா போச்சு காக்கா !

கடைசியா சஹன்ல இருந்து எந்திரிக்க முடிந்ததா அல்லது யாரும் தூக்கிவிட்டங்களா ?

Zakir Hussain said...

நன்றி Bro.Thajudeen நீங்கள் வாழ்த்தியதற்க்கு, எனக்கு எழுத திறமை இருந்ததாக நான் எப்போதும் நினைத்தது இல்லை. சின்ன வயதில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தும் போது [தேன் துளி] என் நண்பர்கள் சபீர், ரியாஸ், ஹாஜா இஸ்மாயில் , இவர்கள் எல்லாரும் கொடுத்த ஊக்கமும் , உசுப்பேத்தலும்தான்.மற்றும் என் தம்பி நஸீர் ஹுசேன் [நியு இந்தியா] ,நண்பன் இக்பால் [தேடல்] இவர்களும் பாராட்டும்போது பாராட்டி , "சகிக்கலெ'ங்ற போது 'சகிக்கலே'என சொல்லி வழிநடத்தியிருக்கிறார்கள். இதில் ஹாஜா இஸ்மாயில் மட்டும் பெரிய பெரிய கப்பல் / விமானம் மட்டும்தான் உடைப்பான்...நான் சொல்வதை நம்பவில்லையா., அப்படியே இங்கு இருக்கும் "ஹாஜாவின் கைவண்ணம்" காமிக்ஸ் வெப்லின்கில் பார்க்கவும். அவனுக்கு மட்டும் சரியான தளம் கிடைத்து இருந்தால் அவனது பெயர் உலகளவில் பேசப்படும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed said...
கடைசியா சஹன்ல இருந்து எந்திரிக்க முடிந்ததா அல்லது யாரும் தூக்கிவிட்டங்களா ?
Thursday, September 09, 2010 3:50:00 PM ///

இது வரை தூங்கியதில்லை சஹன் வைத்த இடத்தில் :))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Zakir Hussain said...
நன்றி Bro.Thajudeen நீங்கள் வாழ்த்தியதற்க்கு,
Thursday, September 09, 2010 4:12:00 PM///

அதிரை நிருபரின் வாழ்த்து என்றால் அங்கே நாங்களும் சேர்த்துதான் *வழ்த்துறோம்*

Zakir Hussain said...

Sorry Bro.ABU IBRAHIM, Thank you too and all. i might have over looked when in type it.Thanx for the correction.

ZAKIR HUSSAIN

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Zakir Hussain said...
Thanx for the correction.///

I too want to share my sincere wish (always) to you :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு