Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.. 44

தாஜுதீன் (THAJUDEEN ) | September 09, 2010 | , ,

அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் உதவியால்  இபாதத்துக்கள்  நிறைந்த  புனித ரமழான் மாதம் 30 நோன்புகளுடன்  நிறைவுற்று பெருநாளும் வந்துவிட்டது. வளைகுடா நாடுகளில் நேற்று ஷவ்வால் முதல் பிறை தென்படாததால் நாளை 10.09.2010 அன்று நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப்பட்டது.

அதிரைநிருபர் குழு சார்பாக அதிரைவாசிகள் அனைவருக்கும்,  உலகில்  பல பகுதிகளில் வாழ்ந்துவரும்  உங்களுக்கும், உங்கள்  குடும்பத்தில் உள்ள  அனைவருக்கும், உற்றார், உறவினர்கள்,  நண்பர்கள் மற்றும் இவ்வுலக  முஸ்லீம்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்...



எல்லோரும் சந்தோசமாக பெருநாளை கொண்டாடுங்கள்.  இந்த சந்தோசத்தை தந்த அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி   நம் எல்லோருடைய உடல் ஆரோக்கியத்துக்காகவும்,  அனைத்து  முஸ்லீம்களின்   பாதுகாப்புக்காகவும்   நம்மை   படைத்த  அல்லாஹ்விடம்  துஆ செய்யுங்கள். நாமும்  துஆ  செய்கிறோம்.

சமீப காலமாக பல இயற்கை மற்றும் செயற்கை சீற்றங்களால் இந்த வருட நோன்புப் பெருநாளை மிக சந்தோசமாக கொண்டாட முடியாமல் இருக்கும்  பல்லாயிரக்கணக்கான  உலக முஸ்லீம்கள் அனைவருக்காகவும் இத்தருணத்தில் அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ்.

இந்த வருடம்  நோன்பில் நமக்கு ஏற்பட்ட நினைவுகளை இங்கு பகிர்ந்துக்  கொள்ளுங்கள்.


முக்கியமான விசையம் ஆறு நோன்பு வைப்பது.

ரமழான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றால் அவர் அவ்வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர்; போன்றவர் ஆவார். (ஆறிவிப்பவர் அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) ஆதாரம்: முஸ்லிம்.)



ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது, அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி), நூல்: தாரிமி.
 
நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்தவாரு சுன்னத்தான இந்த ஆறு நோன்பையும் நோற்று முழு வருடத்திலும் நோன்பு நோற்ற நன்மையை பெற நாம் முயற்சி செய்யலாமே. இன்ஷா அல்லாஹ்.
 
மீண்டும் ஒரு முறை இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
 
நீங்கள் யாருக்கும் நோன்புப் பெருநாள்  வாழ்த்துக்கள் சொல்ல விரும்பினால்  நம் அதிரைநிருபரில் பின்னூட்டமிட்டு தெரியப்படுத்தலாம்.
 
-- அதிரைநிருபர் குழு

44 Responses So Far:

Ahamed irshad said...

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்..ஈத் முபாரக்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எம்மக்கள் யாவருக்கும் "ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்"

M.Naina Thambi
JAFZ, Dubai
nainathambi@gmail.com

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர ,சகோதரிகளுக்கு என் மற்றும் என் குடும்பத்தினரின் இன்ப வாழ்துக்கள்.

Yasir said...

அனைவருக்கும் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்....
Yasir & Family

dear bro.Naina thambi...r u working in JAFZ ?? me also working in JAFZ

அப்துல்மாலிக் said...

நண்பர்கள், உறவினர்கள், சகோ/சகோதரிகள் மற்றும் நம்மூர்வாசிகள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்..

இன் நன்னாளில் ஒற்றுமையுடன், சந்தோஷமாகவும் பெருநாளை கொண்டாட வாழ்த்துக்கள்

Abdul Malick, 050-6453464

ZAKIR HUSSAIN said...

May Allah bless you & your Family with full of prosperity with good health in this Eid & always. Eid mubarak. SELAMAT HARI RAYA AIDIL FITRI.

Zakir Hussain
Malaysia.

sabeer.abushahruk said...

KulluAam WaAnthum BiKhair.
-sabeer, sharjah.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Yasir says
Thursday, September 09, 2010 12:54:00 PM
dear bro.Naina thambi...r u working in JAFZ ?? me also working in JAFZ ///
அட வாங்க யாசிர் சந்திச்சுக்கலாம் இன்ஷா அல்லாஹ்... call பன்றேன் !

எம்மக்களில் நீங்களும் உங்கள் குடும்படும் அடங்கும் :)

Ahamed irshad said...

அதென்னங்க இன்னிக்கு எல்லோரும் அட்ரஸோட வாழ்த்துச் சொல்றாங்க.. பக்கத்து'ல இருந்தா பிரியாணி கொடுக்க/வாங்கவா..

Shameed said...

எம்மக்கள் அனைவருக்கும் என் உலபூர்வமான நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நண்பர்கள், உறவினர்கள், சகோ/சகோதரிகள்,நம்மூர்வாசிகள், உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் "ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்"

Thajudeen & Family
+97150 8858480

Dubai - UAE

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதென்னங்க இன்னிக்கு எல்லோரும் அட்ரஸோட வாழ்த்துச் சொல்றாங்க.. பக்கத்து'ல இருந்தா பிரியாணி கொடுக்க/வாங்கவா..//

தம்பி இர்ஷாத் வாழ்த்துக்களை கொடுத்து வாங்க மட்டும் தான்
பிரியானியை இல்லை. :)

சந்தோசமான இந்த நேரத்தில் புதிய நட்புகளை ஏற்படுத்தவும், பழைய நட்புகளை புதுபித்துக்கொள்ளவும் நல்ல சந்தர்ப்பம்.

Unknown said...

உலகில் வாழும் அனைத்து அதிரை மக்களுக்கும் நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.எங்கே நைனா பெருனாள் பற்றி ஏதும் எழுதவில்லை.லேபிள் கிழிக்காத வேட்டி,சோலப்புரி செருப்பு சர்க்,சர்க்னு சத்ததோட நடை துரத்தி வந்து யாசகம் கேட்கும் குறவன்,குறத்தி(மாமா,மாமா காசு கொடு)இப்படி ஏதாவது எழுவார்.....கலர் ,கலராய் குழந்தைகள் கையில் மிண்ணும் வண்ண பலூன் கண்டு ரசிததுண்டா?கப் ஐச்,பாலைஸ் வாங்கி சுவைத்ததுண்டா??இப்படி கேட்டு கேட்டு கவி வரிதரும் சகோ.ஜஹீர் ஏதும் எழுதலையே??அதர்க்கு மிகவும் நுனுக்கமாய் கருத்திடும் சகோ.அபு இபுறாகிம் மடல் பார்களையே,விகடகவி சகோ.சாகுலின் நையாண்டி தர்பார் கேட்காமலும் இந்த பெருனாள் இப்படியே கரைந்திடுமோ???

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வருட விடுமுறை, சகோதரர் நெய்னா அதிரையில் உள்ளார். அதான் எந்த பதிவும் இல்லை. நெய்னா இருந்தா இன்னும் நல்லாத்தான் இருக்கும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அப்ப சகோ.ஜாஹிர் எழுதலாம்ல???????

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Assalaamu alaikum. My dear brothers and sisters. I am sorry because I am on vacation. Due to domestic works, I was unable to post my comments for your all valuable articles about holy Ramadan and others. Dear Brother Thasthageer, thanks for your expectation about my posts/articles. Insha-allah, We will post useful article soon as usual. I take this opportunity to convey my hearty and happy moment of the holy Ramadan's EID-UL-FITR greetings and wishes with my deep dua to all of you. May Allah accept our all good deeds and ibathaths during Ramadan and out of Ramadan. Ameen Yarabbal Alameen.

Once again my hearty and happy EID-UL-FITR greetings to all of you.

Massalaama.

Brother in Islam.

M.S.M. Naina Mohamed.

Zakir Hussain said...

To Bro: CROWN,

இங்கு [மலேசியாவில்] உள்ள பெருநாளைப்பற்றி எழுதினால் கொஞ்சம் புதிதாக இருக்கும். ஊரில் உள்ள பெருநாளைபற்றி நான் எழுதினால் பல விசயங்கள் ரொம்ப பழசாக இருக்கும். ஊரில் பெருநாள் கொண்டாடி அட்லீஸ்ட் கால் நூற்றாண்டை தாண்டியிருக்கும்

ZAKIR HUSSAIN

அதிரைநிருபர் said...

சகோதரர் தஸ்தகீர் வேண்டுகோள் பின்னூட்டம் சகோதரர் நெய்னாவுக்கு missed callஆக பேயிடுருச்சு போல தெரியுது. சகோதரர் நெய்னா உடனே பதில் பின்னூட்டம் பதிந்துள்ளார்கள். உங்களுடைய மற்றும் அனைத்து சகோதரர்களுடைய வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி.

அதிரைநிருபர் said...

//இங்கு [மலேசியாவில்] உள்ள பெருநாளைப்பற்றி எழுதினால் கொஞ்சம் புதிதாக இருக்கும்.//

மலேசியாவுல உள்ள பெருநாள் அனுபவங்களைப் பற்றி எழுதினால் நாங்களும் தெரிஞ்சுக்கிடலாம்லே. நீங்க வேற புதிதாக இருக்கும்டு செல்லிக்கிட்டீங்க. நேரம் கிடைத்தால் சில வரிகள் எழுதுங்க சகோதரர் ஜாஹிர் ஹுசைன். எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்கிறோம்.

Shameed said...

HUSSAIN said...
இங்கு [மலேசியாவில்] உள்ள பெருநாளைப்பற்றி எழுதினால் கொஞ்சம் புதிதாக இருக்கும். ஊரில் உள்ள பெருநாளைபற்றி நான் எழுதினால் பல விசயங்கள் ரொம்ப பழசாக இருக்கும். ஊரில் பெருநாள் கொண்டாடி அட்லீஸ்ட் கால் நூற்றாண்டை தாண்டியிருக்கும்////////

மலேசியா பெருநாளும் சேர்ந்து இந்த பெருநாள் ரொம்ப கலகல இருக்கும் ,crown கைலி லபேல் கிழிச்சா இல்லே !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட MSM இப்படி சொல்லாம ஊருக்கு போயிட்டியே(மா) ! அது சரி, மலர்ந்த நினைவுகளில் எதாவது இந்த ரமளானில் அசைபோட முடிந்ததா ? இல்லே எல்லாத்தையும் இங்கே வந்துதான் ஒரு கை பார்ப்பதாக உத்தேசமா ?

சந்தோஷமாக குடும்பம் கோத்திரமாக பெருநாள் கொண்டாடுங்கள் இன்ஷா அல்லாஹ்... "ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஹமது இர்ஷாத் said...
அதென்னங்க இன்னிக்கு எல்லோரும் அட்ரஸோட வாழ்த்துச் சொல்றாங்க.. //

ஒன்னுமில்ல தம்பி, give and take policy அதான் - போட்டு வாங்கிறது..

புது வேட்டி, புது சாட்டை, புது செருப்பு, புது தொப்பி இதெல்லாம் போட்டுகிட்டு வாப்பிச்சா வீட்டுக்கு மற்றும் சுற்றத்தார் வீட்டுக்கும் சென்றால் கிடைக்குமே ஒரு வசூல்(வேட்டை) அந்த அலாதியே சுகம்தான்.. அந்த ஞாபகத்திலே அட்ரஸைப் போட்டுட்டோம்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Zakir Hussain said...
To Bro: CROWN,
இங்கு [மலேசியாவில்] உள்ள பெருநாளைப்பற்றி எழுதினால் கொஞ்சம் புதிதாக இருக்கும்.//

பார்தீங்களா "கமிட்" ஆகிட்டீங்க ! ஆக,கண்டிப்பாக எழுதிவீங்கன்னு தெரியும் (சாஹுல் : என்னோட டூட்டிய செய்துட்டேன்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown said...
சகோ.அபு இபுறாகிம் மடல் பார்களையே,விகடகவி சகோ.சாகுலின் நையாண்டி தர்பார் கேட்காமலும் இந்த பெருனாள் இப்படியே கரைந்திடுமோ??? ///

கிரவ்ன்(னு), பெருநாள் காசு அதிகமா சேர்ந்தது எப்போ ? (எவ்ளோ சேர்ந்துச்சுன்னு எனக்கு தனி மடல் போடு) இப்போ அசைபோடு பார்க்கலாம் !

Shameed said...

அபுஇபுறாஹிம் said...
கிரவ்ன்(னு), பெருநாள் காசு அதிகமா சேர்ந்தது எப்போ ? (எவ்ளோ சேர்ந்துச்சுன்னு எனக்கு தனி மடல் போடு) இப்போ அசைபோடு பார்க்கலாம் !

உங்களுக்கு தனி மடல் (அப்போ எங்களுக்கு என்ன cc யா?)
எதுவா இருந்தாலும் நம் அனைவருக்கும் தெறியும் படி செய்யவும் .இல்லாட்டி நான் ரொம்ப கோவக்காரன் கடபசி வட்டுலப்பதை உட்டு வீசிபுடுவேன் ஜாக்கரதை!!!!

Shameed said...

தாஜுதீன் said...
வருட விடுமுறை, சகோதரர் நெய்னா அதிரையில் உள்ளார். அதான் எந்த பதிவும் இல்லை. நெய்னா இருந்தா இன்னும் நல்லாத்தான் இருக்கும்///////

அடுத்த பெருநாளுக்கு எங்களுக்கு வாடகை சைக்கிள் புக் பணிடுங்க M .S .M .

பெருநாள் வாழ்த்துக்கள்

crown said...

அபுஇபுறாஹிம் says
Thursday, September 09, 2010 9:02:00 PM

Zakir Hussain said...
To Bro: CROWN,
இங்கு [மலேசியாவில்] உள்ள பெருநாளைப்பற்றி எழுதினால் கொஞ்சம் புதிதாக இருக்கும்.//

பார்தீங்களா "கமிட்" ஆகிட்டீங்க ! ஆக,கண்டிப்பாக எழுதிவீங்கன்னு தெரியும் (சாஹுல் : என்னோட டூட்டிய செய்துட்டேன்.
----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அட்ரா சக்கை பத்தவச்சிட்டாரு...

crown said...

Blogger அபுஇபுறாஹிம் said...

crown said...
சகோ.அபு இபுறாகிம் மடல் பார்களையே,விகடகவி சகோ.சாகுலின் நையாண்டி தர்பார் கேட்காமலும் இந்த பெருனாள் இப்படியே கரைந்திடுமோ??? ///

கிரவ்ன்(னு), பெருநாள் காசு அதிகமா சேர்ந்தது எப்போ ? (எவ்ளோ சேர்ந்துச்சுன்னு எனக்கு தனி மடல் போடு) இப்போ அசைபோடு பார்க்கலாம் !
----------------------------------
காக்கா உங்களுக்குத்தான் தெரியுமே நானும்,என் சகோதரர்களும் எந்த வேட்டைக்கும் போகத வெட்க சாதின்னு.வீட்ல உம்மாட்ட ஒரு கனிசமா வாங்றதோட சரி.
அப்புறம் ராத்தா ஒரு பெருசு(அந்த காலத்துல ஐன்னூரு)தருவாங்க ஆகையால் கலக்சன் லிஸ்ட் ஓவர்.

crown said...

Blogger Shahulhameed said...

அபுஇபுறாஹிம் said...
கிரவ்ன்(னு), பெருநாள் காசு அதிகமா சேர்ந்தது எப்போ ? (எவ்ளோ சேர்ந்துச்சுன்னு எனக்கு தனி மடல் போடு) இப்போ அசைபோடு பார்க்கலாம் !

உங்களுக்கு தனி மடல் (அப்போ எங்களுக்கு என்ன cc யா?)
எதுவா இருந்தாலும் நம் அனைவருக்கும் தெறியும் படி செய்யவும் .இல்லாட்டி நான் ரொம்ப கோவக்காரன் கடபசி வட்டுலப்பதை உட்டு வீசிபுடுவேன் ஜாக்கரதை!!!!
---------------------------------
வீசும் பொருளும் இனிமையென்றால் அந்த வீசும் பொருளை என்மேலும்(மூச்சில) வீசுங்களே!செந்தமிழ் நாடென்னும் போதுனிலே இன்ப பண்டங்கள் வந்து விழுமோ மூஞ்சினிலே????

crown said...

அனைவருக்கும் ஒரு சீரியஸ் மேட்டர் இதுபற்றி இங்கே மடலிடவோ கருதிடவோ வேண்டுகிறேன் .அதாவது சில சமுதாய பிரட்சனைகளை அலோசனையை பொத்தாம் பொதுவில் விவாதித்து முடிவு எடுக்க முடியாதாது அதனால் இங்கே உள்ள வாசகர்களின் லிங்க் அவசியம் என்னுடன் என் ஈமெயில் மற்றும் ச்சாட்டில் இணைய விரும்புபவர்களுக்கு என் இணைய விலாசம் இங்கே பதிகிறேன்.இதன் மூலம் நம் அனைவரின் இணைப்பும் மிக எளிதாக அமைய ஏதுவாகும்.
இதோ என் இணைய விலாசம்.
crowngeer@yahoo.com

Yasir said...

ஜாஹிர் நானா....ஊர் பெருநாளை பார்த்து பழகிய எங்களுக்கு வித்தியாசமாக..மலேசியா பெருநாளைப்பற்றி கொஞ்சம் அறிய தாருங்கள்..அங்கேயும் வட்லப்பம் கடப்பாசிதானா ?அல்லது வேறு எதுவுமா ? நம்மூருக்கும் -அங்கேயும் கொண்டாட படும் முறைகளை ஒரு comparison போல உங்கள் ஸ்டையிலில் எழுதுங்கள்...உங்களுக்கு நேரம் இருந்தால்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.என்னுடைய யோசனையுடன் கூடிய கருதின் படி சகோ.சாகுல் அவரின் தொடர்பிற்கான இனைய முகவரியை உடனே எனக்கு அனுப்பிவிட்டார்.அல்ஹம்துலிலாஹ்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே.சமுதாயதிற்காக கூட வேண்டும் என்ற யோசனைக்கு உடன் பதில் அனுப்பியதால் அவரை மனமாற பாரட்டுகிறேன்.இன்னும் நாம் இனைவோம் .

Zakir Hussain said...

சகோதரர்கள் யாசிர் , சாகுல், தாஜுதீன், அபு இப்ராகிம், கிரௌன்.எல்லோருக்கும் நலம் நலமறிய ஆவல். இப்பவும் இங்கு அனைவரும் சுகம், அங்கு உள்ள சமாச்சாரங்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிக்கொள்ள வேண்டியது. இன்று 10/09/2010 [ வெள்ளிக்கிழமை] பெருநாள் தொழுதுவிட்டு எழுதுகிறேன். பிரியானிக்கு வெங்காயம் வெட்ட சொல்லி என் மனைவி சொல்லிவிட்டதால் பின்பிறகு நீங்கள் சொன்ன "மலேசியா பெருநாள்' பற்றி எழுதுகிறேன்.

நாம் சின்ன வயதில் அதிராம்பட்டினத்தில் பெருநாள் கொண்டாடும்போது கடல்கரைக்கு போவதும் 5 1/2 மணிக்கு வரும் ரயிலை வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக இருந்தது. இப்போதைய நவீனம் அந்த வசந்தங்களை தொலைத்துவிட்டாலும் யாரோ ஒரு புண்ணியவான் இந்த வீடியோவை யூட்யூபில் அப்லோட் செய்திருக்கிறாப்லெ.

பார்த்து ரசிக்கவும் . போட்டாகிராபி ....தாராளமாக அவார்ட் தரலாம்.


http://www.youtube.com/watch?v=ShA8_uVAVdI



ZAKIR HUSSAIN

அதிரைநிருபர் said...

சகோதரர் ஜாஹிர், காலைல நம்மூர் ரயிலடிக்கு போய்வந்த உணர்வு, நீங்கள் அனுப்பிய யூடியூப் பார்த்ததும். நிச்சயம் போட்டாகிராபிக்கு அவார்ட் தரலாம். பகிர்ந்துக்கொண்டதுக்கு நன்றி.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரர்கள் அவர்களின் தொடர்புக்குறிய ஈமெயில் விலாசம் அனுப்பியவண்ணம் உள்ளனர் என்கிற சந்தோஷ செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நன்றிகள் பல!அல்லாஹ் அக்பர்.

Adirai khalid said...

Eid Mubarak, may Allah accept all our Ibada and this wil continue until rest of life, im sure unity of Ummah of Prophet(Sal) will get peace, happiness and faith everlast.

Bro, Zakir im thirsty of to have your article about Eid in tne Malay., (Blanchan !!)

really i so much enjoyed your previous article, im one of the victim, i couldn't comments on that due to busy schedule in Ramadan

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஹாலித் & Family: "eid mubarak"

இடையிடையே தலைய காட்டிக்க இந்தப் பக்கம்...

Zakir Hussain said...

நன்றி சகோதரர். "உன்னைப்போல் ஒருவன்". உங்கள் எதிர்பார்ப்பை பிளாச்சான் இல்லாமல் எழுதுகிறேன். கொஞ்சம் அய்ஸ்கச்சான் போட்டு எழுதலாம்.

ZAKIR HUSSAIN

Shameed said...

Zakir Hussain said...
அய்ஸ்கச்சான் போட்டு எழுதலாம்///////////

ஐஸ்கச்சான் போட்டா ரொம்ப கூலா இருக்குமே

இங்கு எல்லோரும் கண்ணை( நாக்கை) தொங்க போட்டு கிட்டு இருக்கின்றோம் படிப்பதற்காக !!!!!!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ஐஸ்கச்சான் போட்டா ரொம்ப கூலா இருக்குமே//

பிளாச்சான் என்றால் மலேசியாவில் ஈத் என்று சகோதரர் ஹாலித் சொல்லிவிட்டார்கள், அது என்னா சாஹுல் காக்கா ஐஸ்கச்சான்? சகோதரர் ஜாஹிர் சொல்றதுக்கு முன்னாடி நீங்க சொல்லுங்க சாஹுல் காக்கா.

Shameed said...

ஐஸ் என்றால் எல்லோருக்கும் தெரிந்ததுதான் ,கச்சான் என்றால் நம்மூர் நிலக்கடை ஐஸ் கூட நிலக்கடலையை கலந்து கொடுபதுதான் ஐஸ் கச்சான் என்பது இது அங்கு ரொம்ப பேமஸ் ( ஓ கடலை போடுறதுன்னு சொல்வங்கலே அது இது தானோ)

அதிரைநிருபர் said...

நம் அதிரைநிருபர் வலைப்பூவுக்கு வருகை தந்து பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அதிரைநிருபர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நல்ல செய்திகள் காத்திருக்கிறது.

வழக்கம் போல் நம்ம டயலாக், தொடர்ந்து இணைந்திருங்கள். :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு