Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) 18

அதிரைநிருபர் | August 13, 2014 | , , , , ,

நமதூரில் குறிப்பாக வயதான ஆண்/பெண்களால் இன்றும் தெரிந்தும் தெரியாமலும், மறைந்தும் மறையாமலும் பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்கள் இயன்றளவு ஆங்கில மொழிபெயர்ப்புடன் கீழே தரப்பட்டுள்ளன (ஏதோ நம்மனாலெ ஏன்டது). இது போல் இன்னும் நிறைய சொற்கள் மக்களின் புழக்கத்தில் இருந்தும் இங்கு வரிசையில் விடுபட்டிருக்கலாம். அப்படி தங்களுக்கு தெரிந்த சொற்களை தாராளமாக பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம். 

ஊரில் கடைத்தெருவின் உள்நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் இரண்டு ஆச்சிகளிடம் நல்ல தேர்ன நார்த்தங்காயும், சோளக்கருவும், அவுச்சக்கடலையும், ப்லாச்சொழையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு ப்ளாஸ்டிக் பையில் (ப்ளாஸ்டிக் மேட்டரை வெளியெ சொல்லிறாதிய) வாங்கிக்கொண்டு செக்கடிபள்ளியின் கீழே உள்ள வழியாக சென்று கொண்டிருந்தேன். அங்கு அமர்ந்திருந்த சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னா மு.செ.மு. இதைப்போயி வாங்கிக்கிட்டு போரியளே? என்றார்கள். நானும் சொன்னேன் சவுதி சென்றதும் அடிக்கடி நினைவில் கொடுவாப்பிஸுக்கும், வவ்வாமீனும் வருவதில்லை. இது போன்ற கோடை கால சீசன் விலை/விளைபொருட்கள் தான் அடிக்கடி நாக்கு ஊற வைத்து விடுகிறது. எனவே இதை வாங்கி உண்ண நாம் என்றும் தயங்கியதோ, வெட்கப்பட்டதோ இல்லை என்றேன்.

ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு நல்ல தேர்ன நார்தங்காயை வாங்கி அதை முறையே புழிஞ்சி தேவையான அளவு சீனி போட்டு கலக்கி ஐஸ்பொட்டியில் கொஞ்ச நேரம் வைத்து குளிரூட்டி நல்லா உச்சிஉரும நேரத்துல குடிச்சி பாருங்க..... அப்பொறம் சொல்லுவிய....ம்மடி கலப்பு அடங்குன மாதிரி ஈக்கிதும்மாண்டு...... சுபஹானல்லாஹ்...இறைவன் பருவ கால காய்,கனிகள் மூலம் மானுடத்திற்கு எவ்வளவு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்தருளியுள்ளான் என நினைத்துப்பார்ப்பீர்கள். இந்த தடவை மாம்பழம், நொங்கு கொஞ்சம் மிஸ்ஸாயிடிச்சி.....

அதையான் கேக்குறிய....திருச்சி ஏர்ப்போர்ட்டுக்கு பயணம் புறப்பட கிழம்பும் பொழுது கூட வீட்டில் தீடீர்ண்டு ஒரு பையில் தண்ணி பாட்டிலும் இன்னொரு பார்சலில் அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்பட்டு ஒரு பொட்டலமும் தந்தார்கள். அது என்னாண்டு கேட்டா, கொஞ்சம் கொத்து மாங்கா பொடி போட்டு மடிச்சிருக்கு வழியில சாப்ட்டுக்கிடுங்க என்ற அது ஒரு பாசப்பரிமாற்றம் கொத்துமாங்காயாய் பொட்டலத்துக்குள் பதுங்கி இருந்தது. அது சரி கீழே உள்ளதை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட மறந்துடாதிய.....

அவுருவொம்                                  - Very Rare
எசவு பண்ணுதல்                            - Repairing
ஆத்தாக்கொலெ                          - Time Being
சீந்தாப்பு/மப்பு மந்தரம்         - Cloudy Weather
ஏசுவாஹ‌                                        - Scolding, Blaming 
ஏந்துக்கிட்டு                                    - Supporting favourly
பொசுக்குண்டு                                - Suddenly Reduced 
குட்டான்                                          - Basket Thatched in Palm tree's leaves
ரோதை                                            - Wheel 
ஒசக்கெ                                            - In the height
ஈசாக்காட்டுதல்                             - Talking negatively to irritate 
வசை சொல்லுதல்                        - Talking openly the timely help
கண்மாசியா                                    - Entirely Disappeared
பொட்டக்கரை                                - Entirely Empty
பொவ்மானம்                                  - Brashness
பொத்தல்                                          - Hole
ஆகாசம்                                           - Sky
மோந்து                                             - To smell
சல்லிசு                                             - Very Cheap
திடுக்கிண்டு                                    - Sudden Shock 
என்னண்டோ                                  - Nothing to explain
வல்லாணாலையிலெ                  - Unnecessarily
எசலுதல்/சலுவுதல்                       - Calling quarrel deliberately 
கசங்கொண்டு                                 - In Ugly 
எதித்தாப்ல‌                                      - Opposite
அலிமாலு                                         - Almirah/Cup-board 
ஏன்சு                                                 - Room 
லேஞ்சி                                            - Towel
லேடுபடியான‌                                 - Weakness
யாபோம்                                          - Remember
ஜெமிலாட்டு மூடி                          - The cap of the bottled soda 
ஊதாங்கொலெ                              - Blowing Pipe in the kitchen
பலவாக்கட்டெ                                - Wooden Plate for sitting
மனுசரு                                            - A man  
இந்தாவுளெ                                     - Hi Lady
இந்தாங்கங்க‌                                  - Hi Gentleman
ம்மடி                                                  - Way of Exclamation
இருட்டு கசம் / மைக்கசம்           - Too Dark
கச்சிக்கசம்                                      - Too Bitter
அழுக்கு கசம்                                  - Too Ugly
ப்லாகொண்ட‌                                 - Very Ugly and offensive smelling
தெகரடி/செரவடி                            - Way of mental distress
சடப்பு                                                 - Getting laziness 
ஓங்காரம்                                        - Vomiting
மசக்கம்                                            - Giddiness
அங்குரு                                           - See there
இங்குரு                                           - See Here
அவ்வொ                                           - That man
இவ்வொ                                           - This man
பத்தாக்கொறெ                                - Scarcity/lack of shortage
எக்கச்சக்கம்/வழுப்பம்              - Plenty/Huge
வெரசன/சுருக்கன/வெள்ளனமே - To be quick/fast/early
மாக்கு கொடுத்தல்                        - Trying without tired
ஒழப்பி போடுதல்                          - indecent behavior in eating 
எசகெட்ட‌                                          - Not in proper way
திடீர்ண்டு/திடுதூரா                    - Suddenly
தவக்கலெ                                       - Frog
வேக்கூரு                                         - Prickly Heat
வட்டி                                                 - Bowl 
தட்டுப்புளா                                       - Basket Plate
சப்பாத்து                                          - Foot wear
விறுக்குவிறுக்குண்டு              - Lonely with fear   
ஒத்தியா                                          - Lonely/Single
உச்சிஉரும நேரம்                         - Noon Time
மாலமதி நேரம்                              - Time of sunset
மெத்தை                                           - Upstairs
தொலை                                          - Too far
செரட்டை                                         - Shell of the coconut
பூக்கமளெ                                       - Spathe of coconut tree
ஆப்பை                                            - Wooden spoon
ஒஹப்பு                                            - Desired Heartily
கோவந்தாவம்                                 - Getting Angry very often 
சும்சுகை                                          - Trunk of the elephant
அக்கச்சியா                                      - Sister
வாப்ச்சா                                           - Mother of the father
சர்சராக்குழி                                    - Hole of the house to eject cleaning water
ஏலலெ                                              - Inability/Sick
சதுர வாழ்வு                                   - Healthy Life
லெக்கு தெரியாமல்                      - Hard to identify
பெரிய மனுச‌                                  - Aged man/woman
ஒதவாது                                          - Can't be suited 
ஊர் முச்சூடும்                                 - Entire Town
மொட்டையன்                                - Young man 
அரிக்களாம்பு                                  - Lamp with covered glass chimney
எரணபரக்கத்து                                - Prosperities from the Almighty
அனத்துது                                        - Too humidity
மாடாக்குழி                                     - Shelf in the wall 
உப்புசப்பு/சூடப்பு - Nothing to highlight
சஞ்ஞீவு/தர்த்திரிப்பு     - In Proper arrangement   
ஆகாது                                             - Prohibited in Islam
நாக்களாம்பூச்சி    - Earthworm
பாச்சே                     - Cockroach
கொரங்குமட்டை   - Back bone of the coconut tree leaves
பெரிம்சாகி                       -  Recently Matured Girl
பொல்லாப்பு                     -  Bad Name with remarks
குடுப்பினை/கொடப்பொசுப்பு       -  Fortune/Good Luck  
ஒமட்டல்/கொமட்டல்             -  Symptom of vomiting
ஒரமோரு                        -  Milk fermented by added bacteria
வலந்து/ஏனம்                    -  Bowl/vessel (home appliance) 
தேத்தனி                        -  Tea
தடுக்கு                          -  Mat
புள்ளைக்கு ஒரம் வுழுந்துடுச்சி    -  Sudden shock to a child by unexpected incident 
கண்ணூறு                       -  Look with jealous 
செய்த்தான்கொணம்              -  Attitude of evils/saitan 
செமியாக்கொணம்               - Symptom of undigested 
பக்கிரிச்சி                        -  Poor woman (miser attitude)
திட்டி அருவாக்கிபுட்டா   -  Adamant lady with blaming others
மொடையா ஈக்கிது               -  Empty situation
ஊட்டுக்காரவொ                 -  Husband/House owner
ஏப்பு காட்டுதல்/வலிப்பு காட்டுதல் -  Cheating to irritate
மொடை - Lack/Tightness of money
நேந்துக்கிட்டு  - Offering
வதுவாப்பேரு     - Curse   
அரீர்ப்பு                - Impropriety/Ugliness
ஏப்பசாப்பெ          - Without any interest & care
கம்சுகை சட்டை - Full hand shirt
குந்தமரி               - Doing something with happy mood
சர்வ சட்டி            - Big vessel for heating water
பூச்சிவட்டெ         - Insects
சுக்குருசான்         - Chinaware
பதூசா                  - Calmly/Silently 
அன்னாத்து          - Fallen down by unbalanced
ஊர்ப்பட்ட            - Huge amount / Plenty
கொதப்பை           - Cheek
பூசை                    - Beat / Hit
வீதல்ரோடு - A Piece of broken glass

மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு

18 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என் பதிவை இங்கு மீள் பதிவிட்ட அதிரை நிருபருக்கு நன்றிகள். இதையும் லிஸ்ட்ல சேத்துக்கிடுங்க.

இங்கிட்டு - this side
அங்கிட்டு - that side
அலங்கமலங்க - making disturb with kidding
கம்சு காசு - weekly pay to the Qura'n class
ஆண்மாரி - woman with man's characters
பொண்ணஞ்சட்டி - man with woman's characters
அதாப்பலெ - to be disturbed
மொஹரக்கட்டை - face
அஞ்சறப்பொட்டி - a small container with groceries at kitchen
மொத்தி - fat


sabeer.abushahruk said...

எம் எஸ் எம்,

நேத்து உம்மாவும் மாமியும் பேசிக்கிட்டுருந்தாஹ. அதுல ரெண்டு வார்த்தைகளுக்கு அர்த்தத்தை யூகித்தாலும் சரியா என்று சொல்லவும்:

"இப்டியே "ஒலட்டி ஓமலிச்சே" நடக்கவுடாம பண்ணிட்டா"

ஒலட்டி
ஓமலிச்சி

அர்த்தம் ப்ளீஸ்

Yasir said...

சகோ.எம்.எஸ்.எம் அவர்களை ஊரில் காணும் வாய்ப்பு வாய்த்தும் சந்திக்க முடியாமல் போய்விட்டது…..வருத்தமளிக்கின்றது
எத்தனை முறை மீள் பதிவு செய்தாலும் உங்களின் ஆக்கத்தில் சுவை அப்படியே….
கவிக்காக்கா “ஒலட்டி” எனக்கு கொஞ்சம் விளங்குகின்றது(ஒருவரைப் பற்றி பொறாமை கொண்டு பேசுவது)…ஆனால் “ஓமலிப்பு” ம்ம்ம்ஹூம்..ஒரு வேளை ரைமிங் வரணும்-என்பதற்க்காக சேர்த்திருப்பாங்கலோ 
ஒண்ணும் புரியலண்டாலும்…ஊர் பாசை கேட்க ஆசை-தான்

Unknown said...

அதிரை தமிழ் என்று அறியப்படுகின்ற இந்த 'சோனகத் தமிழ்' இன்றும் உயிருடன் இலங்கையின் மன்னார் பிரதேச மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. மன்னார் பிரதேச முஸ்லீம் மக்களை (பெரியவர்களை) இன்றும் புத்தளம் சென்றால் அவர்களுடைய அகதி முகாமில் சந்திக்கலாம், பேசும் போது கண்டிப்பாக நாம் அதிரையினுள் இருப்பதாகவே உணர்வோம், உணர்ந்தேன்.

அதுபோல் என்னுடைய மன்னார் பிரதேச நண்பர் வீட்டில் பரிமாறிய 'கௌக்கன் மீன் ஆணமும் முருங்க கீர சுண்டலும்' சாட்சாத் சத்தியமா நம்மவூடுவொல்ல சோறுதிண்ட மாதிரியே ஈந்துச்சிங்க!

என்னுடைய பால்ய பருவத்தில் நான் பேசிய 'அதிரை சோனகத் தமிழை' கிண்டலடித்து மாற்றிய ஆசிரியைகளை நினைத்து நொந்து கொள்வதை தவிர வேறு வiழியில்லை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சபீராக்கா, வீட்டில் முதியோர்கள் இல்லாமல் போனதால் இதுபோல் தினுசான சொற்களுக்கு டக்குண்டு அர்த்தம் சொல்வது கடினமாக இருக்கிறது. ஒலட்டி என்றால் ஊரை பல்லு போட்டு பேசுவது, ஓமலிச்சி என்றால் அவர்களை பொறாமையில் திட்டி கரிச்சி கொட்டுவதாக இருக்கும்.

Ebrahim Ansari said...


ஒலட்டுவது என்பது பொறாமைதான்.

ஓமலிப்பு என்பது பொறாமையால் வரும் ஏக்கம், பெருமூச்சு என எடுத்துக் கொள்ளலாம்.

எனது கருத்து தம்பி நெய்நாவின் அப்ரூவளுக்கு உட்பட்டதே.

sheikdawoodmohamedfarook said...

அஞ்சுபவுனுக்குஹஜட்டியசெஞ்சதையாருட்டையும்சொல்லாமே 'கமுக்கமா'வச்சுகிட்டா!

sheikdawoodmohamedfarook said...

மாப்புலேக்கிலோத்திரிஅடிச்சுபின்னாங்குலேந்துவந்ததும்பொண்ணுக்குஒறேபவுமானமாஈக்கிது.

sheikdawoodmohamedfarook said...

மாப்புளே செலவுக்கு கொடுத்த காசுலே சிறுவாடு சேத்து களுத்துக்கு காசுமாலை செஞ்சுட்டா! அவளுக்கென்னஅஞ்சும்சஞ்சுவமாஅமஞ்சுபோச்சு!

sheikdawoodmohamedfarook said...

மூனுநாளாஒறேஅடமலே!உடெல்லாம்ஓலுவிஊத்திதொப்புதொப்புண்டு போச்சு/

sheikdawoodmohamedfarook said...

மரைக்காஊட்டுலேகுட்டான்லேமவுளத்துசோறுகொடுத்தாங்க/ அந்தநார்ஸாவுலேகொஞ்சம்நேந்துக்கிட்டுபுள்ளேவாயிலேபோட்டேன்./ கருசமணிபெருகிடுச்சு!நூல்வாங்கிகொறுதுக்கட்டனும்/''அவதாலிதலைப்பா!அவையாசமயத்திலே'மோடே'ண்டுசொல்லிஅஞ்சேபத்தேகேட்டா இல்லேன்டு சொல்லாமே'இந்தாண்டு'கொடுப்பாமா!

sheikdawoodmohamedfarook said...

ஒருமீன்காரிசொன்னாள்''இந்தஅம்மாபத்துரூவாய்க்கிகாரப்பொடிவாங்கிகிட்டுபிஸுவி-பிஸுவி அஞ்சு ரூவாமீனை வாங்காமே போகாது! ...இதுட்டேமுதல்யாவாரம்பண்ணுனாவிடிஞ்சாப்புலேதான்.

sheikdawoodmohamedfarook said...

''கடைலேகல்லாபெட்டியிலேஅவனைவச்சேன்!தொடச்சுஎன்னை நடுத்தெருவுலேஉட்டுட்டான்./''யாண்டாஇப்புடிஅறக்கபறக்கசோத்தை உண்டுட்டுஓடுறா?அவனுக்குஎதிலேயும்ஒருதர்திரிப்புஇல்லே''

sheikdawoodmohamedfarook said...

கொஞ்சங்கூடகசடுங்கறதுஅவேன்மனசுலேஇல்லே!/அவளை லேசு மாஸா நெனச்சுபுடாதிய !புடிச்சாஉலுக்கிபுடுவா யுளுக்கி!/ பொன்னுகாரஊடுமரவையிலேகொண்டுவந்தபணியானையெல்லாம் துத்திப்புபோட்டுமூடிகொண்டுவந்தாங்க/முருங்கைகாயேஎல்லாம் தொரட்டிபோட்டுபரிச்சோம்./எதைதிண்டாலும்நாக்குசப்புண்டுஈக்கிதும்மா! ஒரேபுளிச்சஏப்பமாவருது/மூனுநாலாஏறச்சியாதிண்டுதிண்டுதெவட்டி போச்சு!/என்னமோதெரியலே!மூச்சுஉடமுடியாமேநெஞ்சுக்குள்ளே தேஹராடியாவருது.

sheikdawoodmohamedfarook said...

சபுறுபோயிமூனுவருசமாச்சு!செத்தானாபொலச்சானாண்டுஒருகடுதாசி துண்டுகூடகெடையாது!தெரியாமேஎம்மவளைகண்ணைகட்டி பாலுங்கெனத்துலே கொண்டேய் தள்ளிபுட்டேனே! அவமொகத்தைபாத்து நொந்து-நொந்துமாயிரேனே!அட!அல்லா!அவன்கல்பை கனியவைடா!

sheikdawoodmohamedfarook said...

''இப்புடி'காடுவாசாரியா'பட்டிமாடுமாதிரி'கண்வச்சதூரம்'திறியாதேடாண்டு'' நானும்என்னாலேமுடிஞ்சமட்டும்படிச்சுபடிச்சுசொல்லிபாத்துட்டேன்.காதுலேவாங்குற மாதிரி இல்லே! அதுக்குமேலேஅல்லாஉட்டவளி!நசிபைமாத்தநம்மலாலே முடியுமா?''

ZAEISA said...

75அல்லது76ல்என்று நினைக்கிறன் இரண்டு தாய்க்குலங்கள் பேசிகொண்டது
;
1;ராத்தா புள்ள ஈக்கிரானா கடெத்தெருவுல எதாச்சும் பொடிகிடி வாங்கவுட்டு ஒரு ஆனத்தண்ணி காச்சலாமுண்டுதான் வந்தே.......
2;அந்த சனியன்தொளைவான் ரேடியா....ரேடியான்டு ஆக்கினே பண்ணுனான் ரேடியா வந்து அதுலேயே ஒரெகெடயா கெடக்குறான்.இன்னெக்கித்தா எதோ இந்திரிய கோளாருண்டு சொன்னதுனாலே ரேடியா ஒஞ்சிகெடக்குது

இப்னு அப்துல் ரஜாக் said...

Brother naina's writings all are like a biriyani for me. I love it.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு