நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எத்தகைய பாரம்பரியமானது என்பதற்குக் கீழ்க் காணும் தகவல் ஓர் எடுத்துக்காட்டாகும்:
நமது அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது. நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த நேரத்தில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள்:
தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)
செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)
பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்
இளைஞரும் ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு சிந்தனை முகிழ்த்தது. 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம். அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?'
அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள்.
இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து வந்த அந்தத் தீர்மானம், நம் தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது.
இந்தியச் சுதந்திரத்தில் நம் அதிரைக்கும் பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில் நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.
17 Responses So Far:
//இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து வந்த அந்தத் தீர்மானம், நம் தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது.///
அசரவைக்கு ஆச்சர்யங்கள் செய்தவர்கள் இன்று அரசிய்ல் வாழ்வில் அசந்து இருக்கிறோமே !
மாமா : ஜஜாக்கால்லாஹ்
அன்றைக்கே நம் நாட்டுக்காக இங்லாந்துக்கே குரல் கொடுத்த நமது பாராம்பரிய அவை இன்றைக்கு குறைந்தது மினி சட்டமன்றமாகவாவது வளர்ந்திருக்க வேண்டாமா?
படித்ததும் பதம் பார்த்துவிட்டது என் மனதை.. சங்கத்தின் செயல்பாடும் சரி, நம்மவர்கள் செயல்பாடும் சரி 'அன்று போல் இன்றில்லையே என்று'.
இந்த ஆக்கத்தை படித்ததும் இ(எ)ம்மண்ணில் பிறந்தமைக்கு மிக்க பெருமை பட்டேன். மிக அருமையான இந்த ஆக்கத்தை தந்த அதிரை அஹமத், அதிரை வரலாறு விற்கு ஜஜாகல்லாஹ் ஹைர் .
msm(mr)
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஒரு காலத்தில் ஆங்கில அறிவு பெற்றிருந்தவர்களில் முன்னனியில் இருந்தவர்கள் நம்மவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஆனால் இன்றைய நிலை அன்றுபோல் இல்லையே.. இது வேதனை..
வெட்டிவேலைகள் செய்து தன் நேரத்தையும், மற்றவர்களின் நேரத்தையும் வீணடிக்காமல், நம் திறமைகளை பயன்படுத்தி இவ்வுலகில் சாதிக்கபிறந்தவர்கள் நாம் என்பதை உணரவேண்டும் என்பதற்கு மேல் சொன்னவைகள் ஓர் எடுத்துக்காட்டு.
ஆச்சரியமான விசயம்..ஆனால் இன்றுவரை நம் நிலமை இந்த பழைய படம் போல்தான் உள்ளது...ஈஸ்ட் மென் கலராவது கொடுத்து...சமுதாயத்தை உசுப்பி எடுக்க வேண்டும்
பொக்கிஷமான பதிவு.. அதிரைக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. ரவுண்ட் நெக் டீ சர்ட் போட்டிருப்பதால் காலர் இல்லை.. சட்டை போட்டவுடன் தூக்கிக் கொள்ளலாம் என்றெண்ணம்..
//ரவுண்ட் நெக் டீ சர்ட் போட்டிருப்பதால் காலர் இல்லை.. சட்டை போட்டவுடன் தூக்கிக் கொள்ளலாம் என்றெண்ணம்..//
இது தான் இர்ஷாத் அருமை!
காலரைச் சுண்டுவதற்கு பதில் காதைச் சுண்டிக் கொண்டேன்... :)
காலரைச் சுண்டுவதற்கு பதில் காதைச் சுண்டிக் கொண்டேன்... :)//
சிரிச்சேன் காக்கா.. இது நம்ம ஊர் ஆட்களுக்கேத்த சிறப்பு..
//சிரிச்சேன் காக்கா.. //
தம்பி இர்ஷாத்... மேலே உள்ள படத்தில் பார்த்தால் என்னா தெரியுது தெரியுமா ?
நான் அவதானித்தது... யார் அந்த அதிரைக் காரர்கள் என்று திரும்பிப் பார்க்கிறார்கள் (அப்படித்தானே)
இருக்கலாம் தான்.. கடுமையான யோசனை காக்கா.. :))
ஊர் சம்பந்தமான சில கட்டுரைகள் எழுத எண்ணமிருக்கிறது.. நான் இப்போது கொஞ்ச நாள் (இரண்டு வாரம்) முன்பு ஊரில் தான் இருந்தேன்.. இன்ஷா அல்லாஹ் டைம், மனநிலை, சரியாக அமையும்போது எழுதுவேன்..
அதச் செய்திடு தம்பி காத்திருகோம் - இன்ஷா அல்லாஹ்..
உன் எழுத்து நடையில் கண்பதித்து வாக்கிங்க் போகலாம்...
உன்னுடைய சென்ஸ் ஹூமரை நிறைய கண்களால் உருட்டியிருக்கிறேன்... வலைமேய்ச்சலில் வரப்பு தாண்டி எட்டிப் பார்க்கும்போதும்...
பாராட்டுக்கு நன்றி காக்கா.. தலையில் ஏத்தாமல் மனதில் ஏத்திக்கொள்கிறேன்.. இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக.. ஆமீன்.
நல்லதொரு வரலாற்று நிகழ்வை எங்களுடன் பகிர்ந்துகொண்ட அஹ்மது காக்காவுக்கு நன்றியும் துஆவும்.
ரொம்ப பெருமைய்ய்ய்ய்ய்ய்யா இருகுய்யா பெருமையா இருக்கு
இந்த படத்துலே காந்திமட்டும் ரொம்ப சோகமா இருக்காரே ஏன், அதிரையிலிருந்து தந்தி அனுப்பிட்டாய்ங்கனா?
நல்லதொரு வரலாற்று நிகழ்வை எங்களுடன் பகிர்ந்துகொண்ட அஹ்மது காக்காவுக்கு நன்றியும் துஆவும்.
Post a Comment