மீன்கள்
வண்ணவண்ண மீன்கூட்டம் கண்ணா டிக்குள்
வாலாட்டி நீந்துகின்ற அழகைக் கண்டே
எண்ணமெலாம் பறிகொடுத்து மகிழ்ந்து நின்றே
இறையோன்தன் படைப்புகளின் அற்பு தத்தைக்
கண்ணெதிரே காண்பவர்கள் வியந்து போற்றிக்
காரிருளில் விளக்கொளியாய் இருக்கும் அந்தத்
திண்ணமுடை அத்தாட்சிக் கிணங்கி வந்து
திகைப்புடனே ‘படைத்தவனே!’ என்பா ரன்றோ!
அதிரை அஹ்மத்




0 Responses So Far:
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.