Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை ! 51

அதிரைநிருபர் | August 27, 2016 | , , , ,

(2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்இயற்றியளித்த ஆய்வுக் கட்டுரை. வலைத்தள வாசகர்களின் வசதியைக் கருதி, சில தகவல்களை விடுத்தும், சில தகவல்களை எடுத்தும் உருவாக்கப்பட்டது, இத்தொடர்.)

உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக!” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள்.

உண்மையும் அழகுணர்வும் நிறைந்த சொற்களால் வாழ்க்கையைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுவதே கவிதைஎன்று கூறுகின்றார் இலக்கிய மேதை ஒருவர். (இலக்கியக் கலை பக்கம் 46) “ஊடுருவி நிற்கும் உண்மைப் பொருளை உணர்த்த வல்லது கவிதைஎன்பர் ஆய்வாளர்கள்.

ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியில் கவிதைக்கென்று ஒரு கட்டுப்பாடான இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ‘கவிதைகளெல்லாம் பொய்என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும், கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.

என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலிய்யாஎனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,

உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா கலாமுல் பஷர்என்று கூற வைத்தது அல்குர்ஆன்!

மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள்! சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள்! கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்! ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்! நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.

மாநபியவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றபோது, மதீனாவில் அவர்களை எதிர்கொண்டு அன்பாதரவுடன் சிறுவர் சிறுமியர் கூடிப் பாடிய இசைப் பாடல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றல்லவா? அது இதோ:

தலஅல் பத்று அலைனா, மின் தனிய்யாத்தில் வதாஇ
வஜபஷ் ஷுக்று அலைனா, மா தஆ லில்லாஹி தாஇ
அய்யுஹல் மபுஊது ஃபீனா, ஜுர்த்த மன் இலைஹி தாஇ

* சான்றுகள்: பைஹகீ, அபூதாவூத்

இந்த வாழ்த்துக் கவிதை வரிகளைக் கீழ்க் கண்டவாறு தமிழ்க் கவிதை வடிவில் ஆக்கலாம்:

எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.

அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.

இறை உவப்பையும் நபி நேசத்தையும் இதயத்தில் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற கவிதை வரிகளில் இன்பத்தைக் காண்பார்கள் என்பதில் ஐயமுண்டோ?

தாரகுத்னிஎன்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிப் பகுதியொன்று நற்கவிதைகளுக்குக் கட்டியம் கூறுவதைப் பாருங்கள்:

கலாமுன் ஃப ஹசனுஹு ஹசனுன்; வ கபீஹுஹு கபீஹுன்.

(நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.)

*** இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்

அதிரை அஹமது

51 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைக் கவிகளுக்கு ! ஆராவராமின்றி அமைதியாக ஆளுமை செய்திட விடுத்திருக்கும் அழைப்பே இந்த ஆய்வுக் கட்டுரை...

இதைத் தொடர்ந்து கவிதைத் தொடர் நடை பயில வாருங்கள் என்று விரைவில் அதிரைநிருபரில் எதிர்பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்... !

//“எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.

அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.”//

நபிகளரை மதீனத்து சிறுவர்கள் வரவேற்று பாடிய கவிதையினை மொழியாக்கம் செய்து எங்களுக்கு தந்த அஹ்மது மாமா அவர்களுக்கு நன்றி...

"வென்னிலவை" கவிதையில் இணைத்துக் கொள்ளாத கவிஞர்களே இல்லை ! :)

Shameed said...

கவிதை பற்றி தவறான புரிதலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு இந்த தொடர்

KALAM SHAICK ABDUL KADER said...

ஆசான் அஹ்மத் காக்கா அவர்களின் ஆய்வு:
//என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,

உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா இல்லா கலாமுல் பஷர்” என்று கூற வைத்தது அல்குர்ஆன்!

மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.//

மாணவன் அடியேனின் மதிப்பீடு:
”கவிதைகள் என்பது” என்ற என் கவிதையில்...
//கவிதைகள் யாவும்
பொய்மைகள் அல்ல;
ஈற்றெதுகையில் மிளிரும்
இறைமறையும்
இலக்கிய நடையால்
இதயத்துக்குள் உறையும்
பெருமானார் முஹம்மத்(ஸல்)
அருள்மொழிகள் யாவும்
புதுநடையில் போதிக்கும்
புரட்சிகளாய் சாதிக்கும்//

ஆசான் அவர்களின் ஆய்வும் மாணவன் அடியேனும் கவிதை அடிகளும் ஒத்துப்போவது கண்டு, அல்லாஹ்வுக்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ்!

sabeer.abushahruk said...

வாங்க காக்கா. வந்திங்கு எங்களை பலப்படுத்துங்கள்.

இந்தத் தொடர் தவறான இருள் நீக்கும் சுடர் என வளரட்டும்.

நன்றியும் வாழ்த்துகளும் காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவியாளர்களை வரவேற்கும் சமிக்ஞை
தமிழில் 'தல-அல் பதுரு'...மொழியாக்கம் நல்ல கருத்தாக்கம்.
'திக்ரின்' போது உற்சாகப்படுத்த அரபுக்கவிதை படிக்கப்படுவதும் நல்ல சான்று.

அதிரை என்.ஷஃபாத் said...

கவிதை-இஸ்லாமிய பார்வை என்னும் இத்தொடர் நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக அமையும் (இன்ஷா அல்லாஹ்) என்பதில் துளியும் ஐயமில்லை.

சேக்கனா M. நிஜாம் said...

சகோ. அதிரை அஹமது அவர்களின் “ கவிதை – இஸ்லாத்தில் ஓர் பார்வை “ விளக்கங்கள் கூடிய தொடரை எதிர்பார்க்கும் வாசர்களில் நானும் ஒருவன்.

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இந்த மூதறிங்கரின் ஆக்கம் நம் சந்தேகத்திற்கு நல்லதொரு முடிவாகவும். பல நல்ல கவிதையும், கவிஞர்களும் உருவாகவும் தூண்டுகோளாகவும் இருக்கும் என்பது திண்ணம்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

//ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா இல்லா கலாமுல் பஷர்” என்று கூற வைத்தது அல்குர்ஆன்!//

இச்சொற்றொடரில் இல்லா எனும் சொல் நீக்கப்படவேண்டும். நீக்கப்படாவிடில், "இது மனிதக் கூற்றேயன்றி வேறில்லை" எனும் எதிர்மறைப் பொருள் தரும். பார்க்க: அல்குர்ஆன் 74:21-25.

N. Fath huddeen said...

"ma huwa be qawli bashar" FROM THAFSEER FOR AYAH "INNALLAHA WA'AMURU BIL ADLI WAL IHSANI WA EETHA....

Unknown said...

தம்பி ஜமீலுக்கு நன்றி.
எனது ஆய்வுக் கட்டுரையை 'அதிரை நிருபர்' வாசகர்களுக்காகச் சுருக்கியத்தில் ஏற்பட்ட பொருள் மயக்கமே காரணம். நானறிந்தவரை, இது பற்றி இரு வேறு தகவல்கள் உள்ளன.

அழகிய ஓசை நயத்துடன் அமைந்த சிறு சிறு குர்ஆன் அத்தியாயங்களைக் கண்டவுடன், மக்கத்துக் காபிர்கள் அவற்றைப் போன்று சில வரிகளைப் புனைந்து, அவற்றைக் கஅபாவின் வாசலில் தொங்கவிட்டனர். அதைப் பரிகசிக்கும் விதத்தில்,"என்ன இது?! இது மனிதனின் கூற்றன்றி வேறில்லை" என்று அதை வாசித்தவர்கள் எழுதிவிட்டுச் சென்றனர்.

இன்னொன்று. இறைவசனம்தான் என்பதை உறுதி செய்யும் விதத்தில், "இது மனித வாக்கன்று" (மா ஹாதா கலாமுல் பஷர்) என்ற வாசகர்களின் கூற்று.

இதைச் சுருக்கியதால் ஏற்பட்ட பொருள் மயக்கம்தான்.
மொத்தத்தில், குர்ஆனிய வசனங்களில் கவிதை நயம் மறைபொருளாய் இருப்பதை அன்றைய மொழி வல்லார் உறுதி செய்தனர்.

மிக்க அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

KALAM SHAICK ABDUL KADER said...

//குர்ஆனிய வசனங்களில் கவிதை நயம் மறைபொருளாய் இருப்பதை அன்றைய மொழி வல்லார் உறுதி செய்தனர்.//

மறையருளும் வசனங்களில் கவிநயம் மறைபொருளாய் இருப்பதை அறிவித்து மகத்தானத் தீர்ப்புக் கூறிய அஹ்மத் காக்காவின் அறிவும் ஆயுளும் வளர்க (ஆமீன்)

அதிரை தாருத் தவ்ஹீத் said...

இன்னா அஃத்தைனாக்க(அ)ல் கவ்ஸர்
فصل لربك وانحر
ஃப ஸல்லி லி ரப்பிக வன்ஹர்
إن شانئك هو الأبتر
இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்

எனும் 108ஆவது அத்தியாயம் அருளப் பெற்று, அது கஅபாவில் எழுதித் தொங்கவிடப்பட்டது.

ஒரு பெரும் புலவன் அதற்குக் கீழே "மா ஹாதா கவ்லுல் பஷர்" (இது மனிதக் கூற்றன்று) என எழுதிச் சென்றான் எனும் தகவல் ஒன்றுண்டு.

இறைவனின் சொல்லும் மனிதனின் சொல்லும் எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றன என்பதற்கு அந்நிகழ்வே சான்றாக அமைந்து போனது.

கவ்ஸர், வன்ஹர், அப்தர் என முடியும் மூன்று வசனங்களின் சந்தங்கள் முறையே
வ்+ஸர் வன்+ஹர் அப்+தர் என்று ஒன்றேபோல் அமைந்துள்ளன.

ஆனால், மனிதன் எழுதிய ஈற்றுச் சொல்லான "பஷர்"இன் இரண்டாம் எழுத்தில் அந்த ஒற்றுச் சந்தம் இல்லாமல் இருந்ததையும் கருத்தில் எடுத்தனர் அரபுக் கவிஞர்கள்.

நிற்க,
இறைமறை குர்ஆனை மனிதக் கவிதைகளோடு ஒப்பிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். காரணம் அல்லாஹ்வே கூறுகிறான்:
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُونَ இது ஒரு கவிஞனின் கூற்றன்று
(69:41).

அல்குர்ஆன் எனும் பேரிலக்கியம், ஒருக்காலும் வெறுங் கவிதைகளோடு ஒப்பிடப்படலாகாது.

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும். தேவை இல்லாத இந்த கட்டுரையை நீக்குங்கள்.“கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224)என்ற குரான் வசனம் என்றும் அழியாத அல்லாஹ்வின் வார்த்தை.கவிதைக்கு ஊக்கம் தரும் அனைவரும் கவிஞர்களை ஆதரித்தால்,வழி கேடுதான் என்பதை குரான் எச்சரிப்பதை சுட்டிக்காட்டுகிறேன்.அல்லாஹ்வின் வார்த்தைகளை - வழிகேட்டு கவிஞர்களுடன் ஒப்பிடுவதை கடுமையாக கண்டிக்கிறேன்.

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அப்துல் லத்தீப்,

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..

இஸ்லாத்தில் கவிதை சரியா தவறா என்பதை தெளிவு பெறுவதற்காகவே இந்த பதிவு, கண்ணியமாக கருத்துக்கள் எடுத்துறைக்கப்படுகிறது. இங்கு எந்த ஒரு தனிமனிதனையோ அல்லது எந்த ஒரு இயக்கத்தையோ குறைகூறவில்லை என்பதை நினைவுறுத்துகிறோம்.. தேவையற்றது என்று சொல்லுவதை தவிர்க்கவும்.

மின்னஞ்சல் குழுமத்திலும், எண்ணமும் எழுத்தும் என்ற பதிவின் பின்னூட்டங்களிலும் விளக்கங்கள் ஹதீஸின் படிப்படையில் தெளிவு படுத்தப்பட்டது.

சகோதரர் அப்துல் லத்தீப் “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224)

இந்த குர்ஆன் வசனம் இறை நிராகரிப்பு கருத்துடையவர்களை குறிப்பிடுகிறது என்று புரிந்துக்கொண்டால் குழப்பமில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்..

அதிரைநிருபர் said...

சகோதரர் அப்துல் லத்தீப்...

எண்ணமும் எழுத்தும் என்ற பதிவில் சகோதரர் அஹம்து ஆரிப் அவர்களின் பின்னூட்டத்தை உங்கள் அனைவரின் பார்வைக்காக மீண்டும் இங்கு பதிகிறோம்..

----------

இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். (224) நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (225) இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள். (226) ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கிடையில் (நியாயத்திற்காக) உதவிக் கொள்வார்களே அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்) அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (227)
(அல்குர்ஆன் / 26:224-227)

சபீர்காக்கா அவர்களிடம் அதிரை சகோதரர் ஒருவர் கவிதை வேண்டாம் எனக் கூறியது கவிஞர்களைப் பற்றிக் கூறும் மேற்கண்ட குர்ஆனின் வசனத்தை இதுபோன்று சில – அல்ல – பல சகோதரர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் அல்லது தவறாகப் புரிய வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது. அது என்னவெனில், 224, 225, 226 ஆகிய வசனங்கள் கவிஞர்களிடம் காணப்படும் தவறான ஒரு குணத்தைக் கண்டித்தாலும், அதன் பின் 227ஆம் வசனத்தில் / ஆனால், ஈமான் கொண்டு ஸாலிஹான நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாகத் தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர என்ற வசனத்தையும் சேர்த்துப் படிக்காததன் காரணம் தான்.

‘இது நிராகரிப்பவர்களைக் குறிக்கின்றது, அதாவது இறைநிகாரிப்பைச் செய்யும் கவிஞர்களைக் குறிக்கின்றது. அவர்களையே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள வழிகெட்டோர் பின்பற்றுகின்றார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்கள். எனவே, இந்த வசனம் மார்க்க விதிகளுக்குட்பட்டுக் கவிதைகள் பாடும் கவிஞர்களைக் குறிக்காது என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
---------

sabeer.abushahruk said...

//நிற்க,
இறைமறை குர்ஆனை மனிதக் கவிதைகளோடு ஒப்பிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்//

காக்கா,

இறைமறை குர் ஆனை மனிதக் கவிதைகளோடோ, மனிதக் கட்டுரைகளோடோ, மனிதக் கதைகளோடோ, மனித வசனங்களோடோ, ஏன் நபி மொழியோடோ, சஹாபாக்கள் கூற்றுகளோடோக்கூட ஒப்பிடுவதை நான்கூட கண்டிக்கிறேன்.

அஹ்மது காக்கா மற்றும் தங்களைப் போன்ற அறிஞர்களோடு விவாதிக்கும் தகுதி எனக்கில்லை. ஆயினும், தங்களின் மேற்குறிப்பிட்ட வாசகம், தவறான புரிதலுக்கு வகை செய்வதைக் கீழே கவனியுங்கள்:

//கவிதைக்கு ஊக்கம் தரும் அனைவரும் கவிஞர்களை ஆதரித்தால்,வழி கேடுதான் என்பதை குரான் எச்சரிப்பதை சுட்டிக்காட்டுகிறேன்//

ஆகவே, இறைமறை அல்லாஹ்வின் வசனங்களாகும். அதை மனிதன் உருவாக்கிய மொழியின் எந்த வடிவத்தோடும் ஒப்பிடுதல் மகா தவறு என்பது என் நிலைப்பாடு. கவிதையோடு மட்டுமல்ல.

நன்றி காக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

//இறைமறை அல்லாஹ்வின் வசனங்களாகும். அதை மனிதன் உருவாக்கிய மொழியின் எந்த வடிவத்தோடும் ஒப்பிடுதல் மகா தவறு//

’’அல்-குர்-ஆனைப் போல எங்களின் கவிதைகள் உள’’ என்று எங்கும் எவ்விடத்திலும் சொல்லவே இல்லையே!! அல்-குர்-ஆனும் “கவிதை” மற்றும் “இலக்கிய-இலக்கண” நடையில் (சந்தங்களில் ஓசையுடன் ஈற்றெதுகையில்) அமையப் பெற்றிருக்கும் போது, நாங்களும் “கவிதை நடையில்” எழுதுவதில் தடையில்லை என்று தானே புரிந்து கொள்ள முடிகின்றது. படிப்பவரின் உள்ளத்தில் பதிவதற்கும்; ஓர் ஈர்ப்புச் சக்தியாகத் தானே “ஈற்றெதுகை”-சந்தம் -ஓசை நயம் தேவைப்படுகின்றது என்பதால், உரை நடையாகச் சொல்லும் ஒரு விடயத்தை இவ்வண்ணம் ஓசை நயம்- கவிநயம் மிக்க நடையில் அதே விடயம் சொல்லப்படும் பொழுது- படிக்கப்படும் பொழுது- மனதிற்கு இதமாகவும்- எளிதில் ஞாபகத்தில் பதிவதாகவும் தானே அமையும் என்பதற்க்கு அல்-குர்-ஆனின் நடையினைச் சான்றாகச் சொல்கின்றோமேத் தவிர, அல்=குர்-ஆனும் மற்ற கவிதைகளும் ஒன்று என்ற எண்ணமும் எழுத்தும் கிடையாது. அப்படி ஓர் எண்ணம், எழுத்து உண்டானால், “குஃப்ர்’ என்ற நிலைதான் என்று கூட அறியாதவர்கள் அல்லர், நாங்கள்!

அல்-குர்-ஆன் கவிதை-ஓசை நடையிலும்
தஃப்ஸீர்கள் உரை நடையிலும் இருப்பதும்

வேறுபாடுகளை அதன் மூலச்சொல்லின் மூலமே அறியாலாம்; “இக்ர அ” என்ற மூலச்சொல் ஓதுதல் என்பதிலிருந்த்து “குர்-ஆன்” என்ற பெயரும்; அதனை ஓசை நயத்துடன் ஓதுவோரை “காரி” என்றும் சொல்லப்படுவதும், “தஃப்ஸீர்” என்பதே விளக்கவுரை என்பதும்; செய்யுள் வடிவமான ஒன்றுக்குத் தான் விளக்கவுரை அளிக்கப்படுகின்றது என்பதும் ஒப்பிட்டு நோக்கினால்

அல்-குர்-ஆன் கவிதை நடையில் உள்ள- செய்யுள் இலக்கண இலக்கியம் என்பதால், நாமும் செய்யுள், இலக்கியம் எழுதுவதில் தவறில்லை என்று தான் புரிந்து கொள்கின்றோம். அதனால், அல்லாஹ்வின் அறிவோடு, அவன் அளித்த நமது சிற்றறிவை ஒப்பிடவும் இல்லை; அவனது இலக்கண இலக்கிய கவிதை நடையுடன் எங்களின் யாப்புகளை ஒப்பிடவும் இல்லை. அல்லாஹ் பாதுகாப்பான் அப்படிப்பட்ட எண்ணம் கிஞ்சிற்றும் வராமல். எங்கள் வாதத்திற்கு வலு சேர்க்க “மேற்கோளாக”வே மேற்காணும் கட்டுரையினை மேதகு புலவர் பெருமகனார் அஹ்மத் காக்கா அவர்கள் இங்குப் பதிவு செய்துள்ளார்கள்.

//நல்லதைச் சொல்லுவோம்; அல்லதைச் சாடுவோம்// என்று கவிதை நடையில் தன்னை அறியாமல் சொன்ன-
//உங்களைப் போல் கவிதை எழுதினால் தவறு இல்லை// என்று எனது வலைத்தளத்தில் “கலாமின் கவிதைகளை”க் கண்ணுற்றப் பின்னர் சொன்ன , அதே அ.ர. அப்துல்லத்தீஃப் அவர்கள் இப்பொழுது மறுபடியும் பிடிவாதம் பிடிப்பது முரண்பாடாகவே எனக்குத் தென்படுகின்றது


அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி சபீர்,

இங்கு இரு வேறுபட்ட கருத்தாடல்கள் நடைபெறுகின்றன என்பது எனது துணிபு.

1. கவிதைகள் கூடா - தம்பி அப்துல் லத்தீஃப்
2. குர்ஆனும் கவிதையே - தம்பி அபுல் கலாம்.

இவை இரண்டும் பிழையான கருத்துகள் என்பது எனது தெரிவு.

அதில், முதலாவதாக கவிதைகளே கூடாதவை என்பதில், எடுத்துவைக்கப்பட்ட சான்றில் விதிவிலக்கு வசனமான 26:227 விடுபட்டு நிற்கிறது. அந்த வசனத்தின் பின்னணியில் சிறு குறையுடைய அறிவிப்பு இருப்பினும் நல்ல கவிதைகளுக்கு, குறிப்பாக - இஸ்லாமிய விழுமியங்களை எடுத்தோதும் கவிதைகளுக்குத் தடையிடவில்லை என்பது நானறிந்த வரையில் தெளிவாக இருக்கின்றது. 26:227இன் விரிவுரை:

The Exception of the Poets of Islam


إِلاَّ الَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ الصَّـلِحَـتِ

(Except those who believe and do righteous deeds,) Muhammad bin Ishaq narrated from Yazid bin `Abdullah bin Qusayt, that Abu Al-Hasan Salim Al-Barrad, the freed servant of Tamim Ad-Dari said: "When the Ayah --

وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
(As for the poets, the erring ones follow them.) was revealed, Hassan bin Thabit, `Abdullah bin Rawahah and Ka`b bin Malik came to the Messenger of Allah , weeping, and said: "Allah knew when He revealed this Ayah that we are poets. The Prophet recited to them the Ayah,

إِلاَّ الَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ الصَّـلِحَـتِ
(Except those who believe and do righteous deeds,) and said:

«أَنْتُم»
((This means) you.)

وَذَكَرُواْ اللَّهَ كَثِيراً
(and remember Allah much). He said:

«أَنْتُم»
((This means) you.)

கூடுதல் விளக்கம் பெற : http://ibnkathir.atspace.com/ibnkathir/ibnkathir_web/26.38041.html

இரண்டாவதாக, "குர்ஆனும் கவிதையே" என நேரடியாகச் சொல்லாவிடினும் தம்பி அபுல் கலாம் அடிக்கடி, "குர்ஆனின் ஈற்றெதுகை ..." என்று அடிக்கடி என்னைப் போன்றோருக்குத் தெளிவாகப் புரியாத வகையில் கருத்திட்டுக் கொண்டிருந்தார். அவரது கருத்தும் தவறு என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியது எனது கடமையானது.

எனவேதான், "இறைமறை குர்ஆனை மனிதக் கவிதைகளோடு ஒப்பிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனும் கருத்துத் தெறிப்பு.

sabeer.abushahruk said...

Got it kaakkaah.
jazaakallahu haira!

(எனக்குத் தெரியும் காக்கா. மார்க்கம் தொடர்பான தங்களின் போதனைகளை மிகச் சரியாக புரிந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். ஆயினும், சகோதரர் அப்துல் லத்தீஃபுக்கு
//இவை இரண்டும் பிழையான கருத்துகள் என்பது எனது தெரிவு.// என்று தாங்கள் தங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றுதான் சற்றேச் சீண்டினேன்.)

நான்/நாங்கள் சொன்னால் கேட்க மறுக்கும் பலர் தாங்கள் சொன்னால் மறுக்கமாட்டார்கள் என்பதும் என் கணிப்பு.

((அப்புறம், தங்களிடமிருந்து என்ன பதில் வரப்போகிறதோ என்று கணினியும் கையுமாகவேக் காத்திருந்தேன் தெரியுமா?))

sabeer.abushahruk said...

அன்பிற்குரிய கவியன்பன் கலாம்,

கவிதை எனும் மொழி வடிவம் எதுகை, மோனை, அசை, சீர், தளை, தொடை, வெண்பா போன்ற மனிதன் வரையறுத்த இலக்கண சட்டங்களுக்கோ; "உள்ளத்துள் உள்ளது கவிதை" எனும் மனிதன் மேற்கோள் கட்டிய வரையறைக்குட்பட்டோ; உவமானங்களைக் கொண்டோ, கற்பனை செய்தோ புனையப்படுவதால், குர் ஆனை கவிதை எனும் கட்டுக்குள் கொண்டு வருதல் தவறு. Words of God is Unique as you know; and therefore no any comparision should be attended whatsoever the topic of the concept.

இங்கு நம் வழக்கும் அதுவல்ல.

இஸ்லாத்தில் கவிதை எழுதுதல் கூடாதா என்ற கேள்விக்கு விடை காண்பது மட்டுமே நம் நோக்கம். எனக்குத் தெரிந்து நாம் மதிக்கும் அஹ்மது காக்கா மற்றும் ஜமீல் காக்கா ஆகியோர் "கூடும்" என்று அறிவித்துவிட்ட படியாலும், சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்களின் கருத்துக்கு சகோதரர் அஹ்மது ஆரிஃப் விளக்கமாக பதில் தந்துவிட்டபடியாலும் மேற்கொண்டு விவாதத்திற்கான ஆதாரங்களை யாரும் வைக்காத வரையில் நாம் அமைதியாக இக்கட்டுரையை வாசிப்பதே நலம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அல்லாஹ் அழகானவன்; நானும் அழகாக இருக்க விழைகின்றேன்
அல்லாஹ் அன்பானவன்; நானும் அன்பாக இருக்க விழைகின்றேன்
அல்லாஹ்வின் திருமறையின் பெயரில் "கலாமுல்லாஹ்" என்பதில் "கலாம்" என்ற பதம் இருக்கின்றது
எனது பெயர் "அபுல்கலாம்" என்பதிலும் "கலாம்" என்ற பதம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேன் என்றால்

அல்லாஹ்வின் அழகு,அன்பு,வசனம் ஆகியனவற்றுடன் எனது அழகு,அன்பு, பேச்சு ஆகியனவற்றை ஒப்பிடுகின்றேன் என்று புரிந்து கொள்ள மாட்டீர்கள் அல்லவா?

அதுவேப்போல,

அல்லாஹ்வும் "கவிதை நடையில்' சொல்லுகின்றான்,
நானும் "கவிதை நடையில்' சொல்லுகின்றேன் என்று சொல்லுகின்றேன் என்றால்,

அல்லஹ்வின் வசனத்தின் "கவிதை நடை"யும் எனது வார்தைகளின் "கவிதை நடையும்" ஒன்றல்ல என்று புரிந்து கொள்வீர்கள் அல்லவா?

//கவ்ஸர், வன்ஹர், அப்தர் என முடியும் மூன்று வசனங்களின் சந்தங்கள் முறையே
கவ்+ஸர் வன்+ஹர் அப்+தர் என்று ஒன்றேபோல் அமைந்துள்ளன.//

சந்தம் ஒன்றி ஈற்றில் அமைவது கவிதை நடை என்று கருதலாம் அல்லவா?

அல்லாஹ்வின் வசன நடையழகும், மனிதர்களின் வசன நடையழகும் "ஒன்று" என்பதல்ல என் கருத்து.

அல்லாஹ்வும் சந்த அழகுடன் சொல்லும்பொழுது, நாமும் சந்த அழகுடன் சொல்லலாம் என்பதே என் கருத்து.

இரண்டிலும் சந்த அழகு "உண்டு" என்பது வேறு;
இரண்டிலுமுள்ள சந்த அழகு "ஒன்று" என்பது .வேறு

அல்-குர்-ஆன் கவிதை என்று யானும் சொல்லவில்லை; ஆசான் அஹ்மத் காக்கா அவர்களும் சொல்லவில்லை
//இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது//
அதன் ஓசை நயம் ஈற்றில் முடியும் RYTHM

KALAM SHAICK ABDUL KADER said...

குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம்//

//மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. //

/அடைப்புக்குள் அடைபட்டிருக்கும் இக்கட்டுரையாளர் அஹ்மத் காக்கா அவர்களின் கருத்துக்களில் "கவிதை" "கவிதை நயம்" "கவிதை நடை" என்ற பதங்களில் அவர்கள் என்ன அர்த்தம் கொண்டிருக்கின்றார்களோ அதே விதமாகவே அடியேனும் "கவிதை நடை" "கவிதை நயம்" என்று அர்த்தம் கொண்டிருக்கின்றேன் என்பதை அறிந்தால், மனிதன் வகுத்துக்கொண்ட யாப்பிலக்கண வழியில் அல்லாஹ்வின் வசன நடை என்று ஆசான் அஹ்மத் காக்க அவர்களும் கருதவில்லை; அடியேனும் கருதவில்லை.

மாறாக அல்-குர்-ஆன் கவிதை தான் என்று அடியேன் சொல்லத் துணிந்ததாகத் தவறான புரிதலுடன் பின்னோட்டமிட்டு என்னை பாவியாகக் கருதிட வேண்டா.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

//எனக்குத் தெரிந்து நாம் மதிக்கும் அஹ்மது காக்கா மற்றும் ஜமீல் காக்கா ஆகியோர் "கூடும்" என்று அறிவித்துவிட்ட படியாலும், சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்களின் கருத்துக்கு சகோதரர் அஹ்மது ஆரிஃப் விளக்கமாக பதில் தந்துவிட்டபடியாலும் மேற்கொண்டு விவாதத்திற்கான ஆதாரங்களை யாரும் வைக்காத வரையில் நாம் அமைதியாக இக்கட்டுரையை வாசிப்பதே நலம்.//

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ் ரப்பில் அஃலமீன் அல் குர் ஆனில்


36:69 وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....

இப்னு அப்துல் ரஜாக் said...

மீண்டும் சொல்லுகிறேன்.நாம் விவாதிப்பது குரான் பற்றி.எனவே கவிதைகளை வைத்து,போற்றி,தலையில் வைத்துக் கொண்டாட நினைக்கும் சிலர்,ஏன் இன்னும் வக்காலத்து வாங்குகிறீர்கள் என தெரியவில்லை.கவிதைக்கு என சிந்திக்கும் நீங்கள்,ஏன் குரானின் ஒரு வசனத்தை வைத்து ஆராயக் கூடாது.நன்மை கிடைக்குமே ! கவிதையால் அல்லாஹ்விடம் கூலி கிடைக்குமா?

என் மதிப்புக்குரிய ஆசான் ஜமீல் காக்காவின் கருத்தை ஆமோதிக்கும் (ஹதீஸ் ஆதாரம் உள்ளதால்)அதேசமயம் மற்றவர்களுக்கு ஒரு கேள்வி ?நீங்கள் ஒன்றுக்கும் உதவாத கவிதையை பிடித்து கொண்டிருப்பது ஏன்?குரானை பிடிப்போம்,சிந்திப்போம்,அதன் படி நடப்போம்,பரப்புவோம் இன்ஷா அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்பு சகோதரர் சபீர் காக்கா,அப்துல் கலாம் காக்கா,அபூ இபுறாஹீம் காக்கா மற்றும் அனைத்து சகோதரகளுக்கும் என் அன்பான வேண்டுகோள்>கவிதை பற்றி இனி சிந்திக்காமல்,இனி குர் ஆன் பற்றி ஹதீஸ் பற்றி சிந்திக்கலாமே?

நம் கைகள் எழுதும் கவிதைக்காக,தமிழுக்காக நாம் நேரம் ஒதுக்கி விவாதிக்கிறோம்,அது கூடும் என்று.

ஆனால்,நம்மை படைத்த ரப்பு நமக்கு தந்த குரான் சொல்லுகிறது,"இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்"என்று.

நல்ல கவிதைகள்தானே - அது கூடும் என ஒரு வாதத்துக்கு வைத்துகொண்டாலும்,நம் கரங்கள் எழுதிய கவிதை சிறந்ததா?அல்லது குரானா?அல்லாஹ்வின் அருள்மறைக்கு முதலிடம் கொடுப்போம்.

கவிதைகளை குப்பையில் தள்ளுவோம் இன்ஷா அல்லாஹ்.


அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி சொன்னது…

36:69 وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُّبِينٌ
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புத் தம்பி அப்துல் லத்தீஃப்,

இரு திருத்தங்கள்:
1. நான் எப்போதும்போல் உங்கள் அண்ணனாகவே இருக்க விரும்புகிறேன்; ஆசானாக அல்ல (நான் எப்போது ஆசான் ஆனேன்?)

2. எதையும் முழுக்க அறிந்துகொள்ளாமல், அதைப் பற்றிய முடிவுக்கு வருதல் பிழையானது என்பது (இறைமறையின் அடிப்படையில்) எனது கருத்து. "(நபியே! அனைத்தையும்) செவியுற்று, அவற்றுள் அழகானவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அவர்கள் அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்கள்; அவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" (அல்குர்ஆன் 39:18) என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்தத் தொடரை எழுதும் காக்கா அபூபிலால், தொடர் இறுதியில் "கவிதைகளில் காலத்தை வீணாக்க வேண்டாம்" என்றுகூட முடிக்கக் கூடும் :-)

படித்துப் பார்ப்போமே!

இப்னு அப்துல் ரஜாக் said...

அப்படியே ஆகட்டும் ஜமீல் காக்கா.

//இந்தத் தொடரை எழுதும் காக்கா அபூபிலால், தொடர் இறுதியில் "கவிதைகளில் காலத்தை வீணாக்க வேண்டாம்" என்றுகூட முடிக்கக் கூடும் :-)//

நல்லதாகவே ஆரம்பித்து,நல்லதாகவே முடியட்டும்,இன்ஷா அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோ. அப்துல் லத்தீப்,

முதலில் அல்லாஹ் நல்ல ஞானத்தையும், புரிந்துக்கொள்ளும் தன்மையையும் நம் எல்லோருக்கும் அதிகப்படுத்துவானாக.

குர்ஆன் ஹதீஸுடன் இங்கு கருத்திடும் சகோதரர்கள் முரண்பட்டு விவாதிப்பது போன்று உங்கள் கருத்தை பதிந்துள்ளது வேதனையே. கவிதைக்கு தான் முதலில் முக்கியத்துவம், குர்ஆன் ஹதீஸுக்கு முக்கியத்துவம் பிறகு தான் என்று யாராவது நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறியுள்ளார்களா? சுட்டிக்காட்டுங்கள்...

இஸ்லாம் ஒன்றும் கடினமான மார்க்கம் கிடையாது, இனிய மார்க்கம்.. எளிமைய மார்க்கம்... எல்லா காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம். நாம் மற்றவர்களுக்கு நம் மார்க்கத்தை எடுத்துச்சொல்லும் விதத்தில் இனிமை, எளிமை,பொருத்தம், கடினம் உணர்த்தப்படும்.

நம்மில் பலர் செய்யும் தவறு, குர்ஆன் வசனங்களை ஆராயமல் உடனுக்குடன் மார்க்க தீர்ப்பாக எடுத்துரைக்க முயல்கிறோம். குர்ஆன் வசனங்களை விளங்கும் போது அவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு விளங்குவது அறிவுடமை. ஒரு குர்ஆன் வசனத்தை படிக்கும் போது முன்பும் பின்பும் உள்ள வசனங்களையும் சேர்ந்து படிப்பது இன்னும் அந்த வசனத்தை புரிந்துக்கொள்வதற்கு மிக்க ஏற்புடையதாக இருக்கும். மேலும் புரிந்துக்கொள்ள அந்த வசனம் தொடர்பான வரலாற்று பின்னனிகளை ஆராய்வது மிக மிக அவசியம். ஒரு மார்க்க அறிஞரோ, ஒரு ஆசிரியரோ, ஒரு மனிதனோ எந்த விளக்கம் சொன்னாலும் அப்படியே கண்மூடித்தனமாக நம்புவது என்பது எக்காலத்திலும் அறிவுடமையல்ல.. தெளிவடைவதற்காக மேலும் பல மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

நவ்துபில்லாஹ்... குர்ஆன் வசனங்களையும், மனித எழுத்துக்களையும் இந்த பதிவில் யாரும் ஒன்றிணைத்து சொல்லவில்லை.. இனி யாரும் கவிதை, கட்டுரை வேறு எந்த விடைவில் அப்படி குர் ஆன் வசனங்களுடம் ஒப்பிட்டு சொல்ல முன்வந்தாலும் அவைகளை வன்மையாக ஒன்றிணைந்து கண்டிப்போம்..

இங்கு கவிதை, கட்டுரை மட்டுமல்ல வேறு எந்த ஒரு விடையமாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸ் இவைகளுக்கே முதலிடம் கொடுப்பவனே உண்மை முஸ்லீமாக இருக்க வேண்டும்.

மக்களை நேர்வழி படுத்த மக்களுக்கு எளிதில் புரியும் கவிதை, கட்டுரை வடிவில் ஒரு நல்ல இஸ்லாமிய நல்ல செய்தியை (ஷிர்க் கலக்காத) பரப்புவதை ஏன் ஒரு ஊடகமாக கருதக்கூடாது?

அறிவில் மிகைத்தவன் அல்லாஹ் ஒருவனே.. அவனே மிக்க அறிந்தவன்.

கவிஞர்களை பின் பற்றுபவர்களை ஏன் அல்லாஹ் வழிகேடர்கள் என்று சொல்லுகிறான் மேலும் கவிதைக்கும் கவிஞனுக்கு என்ன வரையரைகள் என்பதை சகோ. அப்துல் லத்தீப் போன்றவர்கள் குர் ஆன் ஹதீஸுடன் விபரமாக விளக்கினால் மேலும் தெளிவுர ஒரு வாய்ப்பாக இருக்கும்.. செய்வீர்களா...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி அப்துல் லத்தீஃப்:

முதலில் தாங்கள் புரிந்து கொண்ட அல்லது "கவிதை" என்பதன் பதம் அல்லது அப்ப்டின்னா என்னா ? என்று எவ்வாறு விளங்கியிருக்கிறீகள் சொல்லுங்க(தம்பி) !

முதலில் அதனைத் தெளிவாக நாம புரிந்துக் கொள்வோம்...

Yasir said...

நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..

இங்கு காட்டப்படும் குர்ஆன் / ஹதீஸ் படி நடக்கும் ”வேகம்”..அல்லாஹ்வால் ”ஹாரம்” என்று சொல்லப்பட்ட விசயங்களில் காட்டப்பட்டு இருக்குமேயானால் அட்டீஸ்ட் சமுதாயம் உருப்பட்டு இருக்கும்
முதிர்கன்னிகளும் / முதிர்ந்த கன்னிகள் ஜினா செய்வது குறைக்கபட்டு/தடுக்கப்பட்டு இருக்கும் / குடித்துவிட்டு கும்மாளமிடும் கயவர்களின் எண்ணிக்கை குறைக்கபட்டு இருக்கும்/வரதட்சணை ஒழிக்கபட்டு இருக்கும் / வீடு கொடுத்து முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட தகப்பன்களின்/சகோதர்களின் ஆயுள் கூட்டப்பட்டிருக்கும்/விதவைகளை ஒரு கண்ணாகவே பார்க்கும் கண்ராவி ஒழிக்கப்பட்டு இருக்கும் / பேங்கில் பணம்போட்டு அதற்க்கு கொடுக்கும் வட்டியை லாபமாக கருதி வரும் மூடர்களின் மூளை முடப்பட்டு இருக்கும்/பக்கத்துவீட்டில் பசியுடன் வாடும் கொடுமை ஒழிக்கபட்டு இருக்கும்/பள்ளிகளெல்லாம் நிறைந்து வழிந்து பக்தி பரவசமாக காணப்படும் /நிலத்தை வாங்கிபோட்டு தலைகனம் ஏறி தான் தோன்றிதனமாக திரிவது குறைக்கபட்டு இருக்கும்.....

இதையெல்லாம் அல்லாஹ் சொல்லவில்லையா ?நபி(ஸல்) அவர்கள் கடைப்பிடிக்கவில்லையா ??அல்லது உங்கள் சுயநலங்களுக்காக பொதுவில் விவாதிக்க தயக்குகின்றீர்களா ?

hassaan said...

ஷிர்க் அல்லாத தமிழ் இலக்கியங்களில் அல்லாஹுவை புகழ்த்து எதனையோ கவிதைகள் உண்டு எடுத்துகாட்டாக பேராசிரியர், இறையருட்கவிமணி, அப்துல் கபூர் அவர்கள் இயற்றிய சூரத்துல் ஃபாத்திஹாவின் தமிழ்க் கவியாக்கம் ஒரு சான்று

அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ்
திருப்பெயர் போற்றித் திறப்பு.

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி
உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும்
புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையே! இனியபேர் இறையே!
முடிவுநாள் அதனின் முழுமுதல் அரசே!
அடியேம் யாமுன் அடியினைத் தொழுதேம்
உன்னையே நாங்கள் உவந்தேத்து கின்றோம்
உன்பால் அன்றோ உதவியை நாடுவோம்
நன்னெறி மீதெமை நடத்துவா யாக!
நின்னருள் பொழிந்த நேயர்தம் நெறியில்
நின்சினம் கொண்டோர் நெறிவிட் டகன்றோர்
செல்நெறி அன்றது செம்நெறி யன்றே!

இதில் யாராவது குறை கூற முடியுமா????

நல்லதை மட்டும் எடுப்போம் தீயதை தவிர்ப்போம்

sabeer.abushahruk said...

சகோதரர்களே, எனக்கு விளங்கியதை நான் இங்கு பதிந்து விடுகிறேன்:
 
01)   ஆர்வக்கோலாறோ தவறானப் புரிதலோ மார்க்கத்தில் சொல்லப்படாத எந்தக் கருத்தையும் நிலை நிறுத்திவிடாது
 
02) //“கவிதை சிறந்ததா?அல்லது குரானா?அல்லாஹ்வின் அருள்மறைக்கு முதலிடம் கொடுப்போம்.”// என்பது போன்ற வாசகத்தைக் கனவிலும்கூட பிரயோகிக்காதீர்கள்.  காரணம், கவிதை என்பது மனிதன் கற்ற மொழியின் ஒரு வடிவம் மட்டுமே.  ஆனால், குர் ஆன் இறைவேதம். முதலிடம் இரண்டாமிடம் என்றெல்லாம் பேசி ஈமானை பலகீனப்படுத்திக்கொள்ளாதீர்கள்.  குர் ஆன் ஓர் இறை வேதம் ஆதலால் தனித்தன்மை வாய்ந்தது (உனிஃஉஎ) அதற்கு ஒப்பீடு ஏதுமில்லை, அதன் இலக்கியத் தரத்திலும், வாழ்வியல், மறுமை, உளவியல், அண்டம், ஆகாயம் என்று குர் ஆனில் சொல்லப்படாதவை ஒன்றுமில்லை.  அவற்றை இறைவனைத்தவிர வேறு யாராலும் தந்திருக்கமுடியாது. எனவே, இனியாவது குர் ஆனை நம்மைப் போன்ற அரைகுரைகள் சம்மந்தமில்லாமல் இழுக்காதீருத்தால் நலம்.  விவாதம், கவிதை கூடுமா கூடாத என்பது மட்டுமே.
 
 
03) //(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....//
 
இப்படி விவாதிப்பதுதான் ஆரோக்கியமானது. நன்று சகோதரரே. ஆயத் பற்றி விளங்கிக்கொள்வதற்கு முன் அதிலுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் விளங்கிக்கொள்ளுதலும், நாம் இருவரும் ஒரு வார்த்தைக்கு சரியான பொருளை விளங்கிக்கொண்டோமா என்று உறுதி செய்தபின்னர்தான் ஆயத்தின் மொத்த விளக்கம்பற்றி சிந்திக்க முடியும். எனவே, முதலில், இந்த விவாதத்தைத் தொடர, “கவிதை” என்றால் என்ன என்று தாங்கள் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று இங்கே பதியவும்.  

உடனே நீங்கள் முதலில் சொல்லுங்கள் என்று சொல்லத்தோன்றும். 

ஆகவே, எனது புரிதல் என்னவெனில் “:கவிதை என்பது மொழியின் ஒரு வடிவம் மட்டுமே.  அந்த வடிவம் காலச்சூழலுக்கேற்ப மனிதர்களால் மாற்றி அமைக்கப்பட்டே வந்திருக்கிறது. கவிதைக்கென்று பிரத்தியேக அர்த்தம் கிடையாது. அதில் பொதிந்துள்ள் அர்த்தம் (அ) கருவைக்கொண்டே நல்லதா கெட்டதா அன்பதை தீர்மாணிக்க வேண்டும்” .
 
இப்ப நீங்க சொல்லுங்க. கவிதை என்றால் என்ன? மேற்கொண்டு பேசி தீர்வை எட்டுவோம்.
 
மேலும், தம்பி அப்துல் லதிஃப்,
 
                //இனி குர் ஆன் பற்றி ஹதீஸ் பற்றி சிந்திக்கலாமே?//
                குர் ஆனைப் பற்றி, ஹதீஸைப் பற்றி சிந்திக்க வேண்டுமெனில் பெரிய இயக்கம் வேண்டும், தலைவர் வேண்டும், விவாத மேடைகள் வேண்டும், கவிதையாகவல்ல உரைநடையாகவும் வசனமாகவும் கட்டுரைகளாகவும் ஒரு மூமீனை மற்றொரு மூமீன் திட்டித் தீர்க்க வேண்டும். நமது மார்க்கத்தில் ஓட்டைகளை உருவாக்கி அதைப் பேசிப்பேசியே பெரிதாக்கி உலகத்தோர் முன்னிலையில் அவமானப்பட வேண்டும்.  இதற்கெல்லாம் மேலாக, வேலையை ராஜினாமா செய்துவிட்டு முயன்றால்கூட நேரப்பற்றாக்குறையால் அரைகுறையாகவே தீர்மாணங்களை எட்ட வேண்டி வரும்.  நானோ,
குர் ஆனையும் ஹதீஸ்களையும் இயன்றவரை பின்பற்றும், வாய்க்கும்போதெல்லாம் மார்க்கத்தின் அழகிய கோட்பாடுகளை எத்திவைக்கும் ஒரு சாமான்யன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

sabeer.abushahruk said...

//அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ்
திருப்பெயர் போற்றித் திறப்பு.

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி
உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும்
புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையே! இனியபேர் இறையே!
முடிவுநாள் அதனின் முழுமுதல் அரசே!
அடியேம் யாமுன் அடியினைத் தொழுதேம்
உன்னையே நாங்கள் உவந்தேத்து கின்றோம்
உன்பால் அன்றோ உதவியை நாடுவோம்
நன்னெறி மீதெமை நடத்துவா யாக!
நின்னருள் பொழிந்த நேயர்தம் நெறியில்
நின்சினம் கொண்டோர் நெறிவிட் டகன்றோர்
செல்நெறி அன்றது செம்நெறி யன்றே//

-இது கூடாது. காரணம் இது கவிதை வடிவம்.
அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ் திருப்பெயர் போற்றித் திறப்பு.

அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி. உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும் புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய. அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோர் இறையே! இனியபேர் இறையே! முடிவுநாள் அதனின் முழுமுதல் அரசே,அடியேம் யாமுன் அடியினைத் தொழுதேம். உன்னையே நாங்கள் உவந்தேத்து கின்றோம் உன்பால் அன்றோ உதவியை நாடுவோம். நன்னெறி மீதெமை நடத்துவா யாக! ன்னருள்பொழிந்த நேயர்தம் நெறியில் நின்சினம் கொண்டோர் நெறிவிட் டகன்றோர் செல்நெறி அன்றது செம்நெறி யன்றே!

-இது கட்டுரை வடிவம். எனவே கூடும்.

sabeer.abushahruk said...

//இந்த கட்டுரையை நீக்குங்கள்.“கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்”//

தம்பி அப்துல் லதீஃப், இது கட்டுரையாயிற்றே இதை ஏன் நீக்க வேண்டும்? கவிதையைத்தானே நீக்க வேண்டும். கட்டுரையை அல்லவே?!!!

வட்டிதானே ஹராம், வட்டியைப்பற்றிய கட்டுரையோ உரைநடையோ ஆராய்ச்சியோ ஹராமா? உங்களுக்கு கவிதைதானே வேண்டாம்.கவிதையைப்பற்றிய ஆராய்ச்சியே வேண்டாம் இன்பது என்ன நிலைப்பாடு?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கு மட்டுமன்று, எங்குக் கருத்தைப் பதிவதாக இருந்தாலும் பதிவதற்கு முன்னர் ஆக்கத்தின் தலைப்பை ஒருமுறை படித்துவிட்டுப் பதிவது நல்லது. இது தம்பி யாஸிருக்கு மட்டுமன்று.

ஹஸ்ஸான்,
ஷிர்க் கலவாத கவிதைகளுக்கு இறைமறை விலக்கு அளித்திருக்கிறது. அதை எவரும் மீறமுடியாது என்பது முடிவாகிவிட்டது. அதை மீண்டும் கிளறாதே!

இப்போது, கவிதையில் நாம் காலத்தை வீணாக்கலாமா? என்பது மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதற்கான விடை, இந்தத் தொடர் முடிவுறும்போதுதான் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.

sabeer.abushahruk said...

வ அலைக்குமுஸ்ஸலாம் காக்கா,

//ஷிர்க் கலவாத கவிதைகளுக்கு இறைமறை விலக்கு அளித்திருக்கிறது. அதை எவரும் மீறமுடியாது என்பது முடிவாகிவிட்டது//

இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். வாதிட்ட தம்பி அப்துல் லத்தீஃபும் ஏற்றுக்கொண்டதாக இங்கு பதிந்தால்தானே மேற்கொண்டு நகர முடியும்? அல்லது விவாதமும் ஒரு பட்டிமன்ற தன்மையதாக ஆகிவிடும் அபாயம் உண்டே?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்பான தம்பி சபீர் & அ.நி.,

நேரம் போக்கும் நெடிய விவாதத்துக்கு நானில்லை.

நான் இங்கு வந்த
நோக்கம்
இன்னும் நிறைவேறவில்லை:
http://adirainirubar.blogspot.com/2012/01/blog-post.html?showComment=1325492796699#c661324858930904909

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

sabeer.abushahruk சொன்னது…
//(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.(அல் குர் ஆன் 36:69)

இந்த குர் ஆன் ஆயத் பற்றி கொஞ்சம் எனக்கு விளக்கம் தாருங்கள்....//

இப்படி விவாதிப்பதுதான் ஆரோக்கியமானது. நன்று சகோதரரே. ஆயத் பற்றி விளங்கிக்கொள்வதற்கு முன் அதிலுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் விளங்கிக்கொள்ளுதலும், நாம் இருவரும் ஒரு வார்த்தைக்கு சரியான பொருளை விளங்கிக்கொண்டோமா என்று உறுதி செய்தபின்னர்தான் ஆயத்தின் மொத்த விளக்கம்பற்றி சிந்திக்க முடியும். எனவே, முதலில், இந்த விவாதத்தைத் தொடர, “கவிதை” என்றால் என்ன என்று தாங்கள் புரிந்து வைத்துள்ளீர்கள் என்று இங்கே பதியவும்.

உடனே நீங்கள் முதலில் சொல்லுங்கள் என்று சொல்லத்தோன்றும்.

ஆகவே, எனது புரிதல் என்னவெனில் “:கவிதை என்பது மொழியின் ஒரு வடிவம் மட்டுமே. அந்த வடிவம் காலச்சூழலுக்கேற்ப மனிதர்களால் மாற்றி அமைக்கப்பட்டே வந்திருக்கிறது. கவிதைக்கென்று பிரத்தியேக அர்த்தம் கிடையாது. அதில் பொதிந்துள்ள் அர்த்தம் (அ) கருவைக்கொண்டே நல்லதா கெட்டதா அன்பதை தீர்மாணிக்க வேண்டும்”

இப்ப நீங்க சொல்லுங்க. கவிதை என்றால் என்ன? மேற்கொண்டு பேசி தீர்வை எட்டுவோம்.//

அன்பு சகோதரரே...
அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக... அல்லாஹ்வின் கலாமாகிய அல் குர் ஆனில் எம்முடைய விளக்கம் கொடுப்பதை தவிந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஆயாத்திற்க்கு என்ன விளக்கம் கொடுத்தார்கள் என்று பார்ப்பதுதான் சிறந்தது, அல்லது அருமை சகாப்பாக்கள் இந்த ஆயத் பற்றிய விளக்கம் எப்படி கொடுத்தார்கள் என்று பார்பதுதான்... குர் ஆன் சுன்னாவை விளங்கி கொள்ளும் வழிமுறை.

எனவே நம்முடைய சொந்த விளக்கத்தை தவிர்ந்து குர் ஆன் சுன்னா மற்றும் சகாப்பாக்கள் விளக்கத்தின் அடிப்படையில் இதை எவ்வாறு விளங்குவது என்பதில் நாம் முயற்ச்சி செய்வோம்..இன்ஷா அல்லாஹ்..

அபூ பிலால் காக்கா...
இந்த பற்றிய விளக்கதை தாங்கள் மூத்த அறிஞ்ர்களிடம் கேட்டு அல்லது அவர்களது கிதாபுகளை படித்து எங்களுக்கு விளக்கம் கொடுத்தாள் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன்... இன்ஷா அல்லாஹ்.

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்...

(ஒரு முறை) நாங்கள் அல்லாவின் தூதர் (ஸல்)அவர்களுடன் “அல் அர்ஜ்” அனுமிடத்தில் பயனம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞ்ர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியிங்கள்” ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீல் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று என கூரினார்கள். அறிவிபாலர்: அபூ செய்து அல்குத்ரி (ரலி) ஆதராம்: முஸ்லிம் 4548.

Unknown said...

ஆமாம்...!
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) போன்றவர்களைக் கவி பாடத் தூண்டிய நபி (ஸல்) அவர்கள், இந்தக் கவிஞனைச் சாடியுள்ளார்கள் என்றால், இவன் பாடியது முரணான கவிதை என்று விளங்கிக் கொள்வதுதான் அறிவுடைமை.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அன்புச் சகோதரர் அபூ அப்துல்லாஹ்,

நீங்கள் கேட்டிருந்த 36:69 எண்ணிட்ட இறைவசனத்துக்கு இமாம் இபுனு கஸீர் அவர்களின் நெடிய விளக்கம் உள்ளது. இங்கு முழுமையாக இடமுடியாது. சுருக்கம்:
{69} وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ

. وَقَالَ الْإِمَام أَحْمَد حَدَّثَنَا قَزَعَة بْن سُوَيْد الْبَاهِلِيّ عَنْ عَاصِم بْن مَخْلَد عَنْ أَبِي الْأَشْعَث الصَّنْعَانِيّ ح وَحَدَّثَنَا الْأَشْيَب فَقَالَ عَنْ أَبِي عَاصِم عَنْ أَبِي الْأَشْعَث عَنْ شَدَّاد بْن أَوْس رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " مَنْ قَرَضَ بَيْت شِعْر بَعْد الْعِشَاء الْآخِرَة لَمْ تُقْبَل لَهُ صَلَاة تِلْكَ اللَّيْلَة " وَهَذَا حَدِيث غَرِيب مِنْ هَذَا الْوَجْه وَلَمْ يُخَرِّجهُ أَحَد مِنْ أَصْحَاب الْكُتُب السِّتَّة وَالْمُرَاد بِذَلِكَ نَظْمه لَا إِنْشَاده وَاَللَّه أَعْلَم عَلَى أَنَّ الشِّعْر فِيهِ مَا هُوَ مَشْرُوع وَهُوَ هِجَاء الْمُشْرِكِينَ الَّذِي كَانَ يَتَعَاطَاهُ شُعَرَاء الْإِسْلَام كَحَسَّانِ بْن ثَابِت رَضِيَ اللَّه عَنْهُ وَكَعْب بْن مَالِك وَعَبْد اللَّه بْن رَوَاحَة وَأَمْثَالهمْ وَأَضْرَابهمْ رَضِيَ اللَّه عَنْهُمْ أَجْمَعِينَ وَمِنْهُ مَا فِيهِ حِكَم وَمَوَاعِظ وَآدَاب كَمَا يُوجَد فِي شِعْر جَمَاعَة مِنْ الْجَاهِلِيَّة وَمِنْهُمْ أُمَيَّة بْن أَبِي الصَّلْت الَّذِي قَالَ فِيهِ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " آمَنَ شِعْره وَكَفَرَ قَلْبه " وَقَدْ أَنْشَدَ بَعْض الصَّحَابَة رَضِيَ اللَّه عَنْهُمْ لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِائَة بَيْت يَقُول صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَقِب كُلّ بَيْت " هِيهِ " يَعْنِي يَسْتَطْعِمهُ فَيَزِيدهُ مِنْ ذَلِكَ وَقَدْ رَوَى أَبُو دَاوُد مِنْ حَدِيث أُبَيّ بْن كَعْب وَبُرَيْدَة بْن الْحُصَيْب وَعَبْد اللَّه بْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمْ أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنَّ مِنْ الْبَيَان سِحْرًا وَإِنَّ مِنْ الشِّعْر حِكَمًا " وَلِهَذَا قَالَ " وَمَا عَلَّمْنَاهُ الشِّعْر " يَعْنِي مُحَمَّدًا صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلَّمَهُ اللَّه الشِّعْر " وَمَا يَنْبَغِي لَهُ " أَيْ وَمَا يَصْلُح لَهُ " إِنْ هُوَ إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ مَا هَذَا الَّذِي عَلَّمْنَاهُ " إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ بَيِّن وَاضِح جَلِيّ لِمَنْ تَأَمَّلَهُ وَتَدَبَّرَهُ .

http://quran.al-islam.com/Page.aspx?pageid=221&BookID=11&Page=1

Anonymous said...

அஹமது காக்கா அவர்கள், கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை! என்ற பதிப்பை 01/01/2012 பதிய, இன்று 05/01/2012 வரை வந்து கொண்டிருக்கும் பின்னூட்டங்கள் குழப்புவதும் குழம்புவதுமாக உள. தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

எனக்கு தெரிந்த ஒன்றை இங்கு கூற விரும்புகிறேன்.

கவிதை என்ற தமிழ் சொல்லின் உருவம் செய்யுள் வடிவமே.

தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கண இலக்கியங்கள் இவைகளையெல்லாம் நமக்கு தரும் மூல நூல்கள்:

முதற்சங்கம் தந்த அகத்தியம்

இடைச்சங்கம் தந்த தொல்காப்பியம்

கடைச்சங்கம் தந்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு

மேலும் தொல்காப்பியத்திற்கு விளக்கம் தரும் நன்னூல், வீரசோழியம்

அதுவன்றி காப்பியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை அத்துனையும் செய்யுள் வடிவமே.

ஆனால்! அல்லாஹ்வின் அருள்மறை-அல்குரான், ரசூல்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய ஹதீஸ், மேலும் குரான் ஹதீஸ் இவைகளுக்கு விளக்கம் தரும் நூல்கள், இமாம்களின் சட்டங்கள், அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் இவைகள் ஏதும் செய்யுள் வடிவமல்ல.

எனவே, தமிழ் மொழியில் நம் கவிஞர்கள் கவிதை புனைகிரார்கலெனில், அவை தமிழ் மூல நூல்களை அடிப்படையாகக் கொண்ட தமிழ்க் கவிதைகளேயன்றி வேறெதுவுமில்லை.

அதே நேரத்தில் இந்த கவிதைகளை இஸ்லாமிய முறையில் ஒப்பீடு செய்து இது சரியா? தவறா? என்று தயவு செய்து தவறான முடிவுக்கு வந்து விடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

மக்கா இருந்த மக்களை மதி-நாவால் திருத்தினார்கள் என் பெருமானார் ரசூல்(ஸல்) அவர்கள்.

நூர் முஹம்மது / கதீப்-தம்மாம் / சவூதி அரேபியா.

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மொழிப்புலமை மிக்க ஜெமீல் காக்கா :

//கவ்ஸர், வன்ஹர், அப்தர் என முடியும் மூன்று வசனங்களின் சந்தங்கள் முறையே
கவ்+ஸர் வன்+ஹர் அப்+தர் என்று ஒன்றேபோல் அமைந்துள்ளன.//

சந்தங்கள் ஓசை நயத்துடன் ஒன்றி வருவதை -இறுதியில் அவ்வாறு அமைவதை "ஈற்றெதுகை" என்று நாம் விளங்கியுள்ளோம். ஆங்கிலத்தில் RHYTHM என்றும் சொல்வதை , அரபு மொழியில் , என்ன அரபுப் பதம் என்பதை அடியேன் அறியாத காரணத்தால் குழப்பம் உண்டானது போல் தெரிகின்றது. , இறை வசனங்கள் வாக்கியத்தின் முடிவில்-இறுதியில் ஓசை நயத்துடன் இருப்பதை அவதானிக்கின்றேன்; அவ்வோசை நயம் என்னை ஈர்ப்பது நாம் கூறும் "ஈற்றெதுகை" யின் ஈர்ப்பினைப்போல் உள்ளது என்பதால் மனிதன் வகுத்த இலக்கண வார்த்தையான "ஈற்றெதுகை" என்று குறிப்பிட்டேன். அதனால், இறைவன் வசனம் நாம் விளங்கியுள்ள மனிதன் வகுத்த இலக்கண வார்த்தைக்குச் சமம் என்று கருதிவிட்டேன் என்றும்; அல் குர் ஆனும் கவிதை தான் என்று நான் கருத்திடுவாதாக நீங்கள் கருதி விட வேண்டா. அல்லாஹ் அப்படிப்பட்ட பாவத்தை விட்டும் என்னைக் காப்பற்றுவனாக; நீங்களும் நான் கருதாத ஒன்றை "இப்படித்தான்" கருதியிருப்பேன் என்றும்
யூகத்தின் அடிப்படையில் கருத வேண்டா. அரபி மொழிப்புலமை மிக்க நீங்கள் மேலேச் சுட்டிக்காட்டிய "ஒன்றுபோல்"அமையும் வார்த்தைகளின் கோர்வைக்கு அரபு மொழியில் "என்ன" பதம் உண்டென்று கருதுவீர்களோ, அவ்வண்ணம் தான் என் எண்ணம் என்று மட்டும் உணர்க. குர் ஆன் வசனங்களில் உள்ள அதே மாதிரியான இறுதிச் சொற்களின் அணிவகுப்பு, குத்பா பயான்களிலும் கேட்கும் பொழுது அவ்வகையான ஈற்றுச்சந்தங்களின் ஓசை தேனாய்ப் பாய்வதால், குர் ஆனும் , குத்பா பயானும் ஒன்றல்ல என்பது எப்படி நமது பகுத்தறிவு உணருமோ, அதுவேப்போல, குர் ஆனும் , மனிதக் கவிதைகளும் ஒன்றல்ல என்றும் சத்யமிட்டுச் சொல்கின்றது எங்கள் உணர்வு.


ஆசான் அஹ்மத் காக்கா:

இக்கட்டுரையில் நீங்கள் சொல்லும் "கவிதை போன்ற" "ஓசை நயம்" என்பதன் விளக்கம் நான் புரிந்து கொண்ட - மேற்காணும் வண்ணம் தானா? அல்லது, அப்பதங்களின் விளக்கம் தான் என்ன ? ஒருவேளை, எல்லாரும் கருத்திட்டப் பின்னர் உங்களின் முடிவுரையில் விளக்கம் தருவீர்களா?

Anonymous said...

//மக்கா இருந்த மக்களை மதி-நாவால்//

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு நண்பரும் பேச்சாளருமான நூர் முஹம்மது அவர்கட்கு,

"மக்கா இருந்த
மக்களை
மதி நாவால்
திருத்திய
மதினா நாதர் "

இதனைச் சொன்னவர் இறையருட் கவிமணி பேராசிரியர் அப்துல் கஃபூர் அவர்களும் ஓர் இஸ்லாமியக் கவிஞரே!!

உங்களை அறியாமலே (அப்துல் லத்தீப் சொன்னதுபோல் "உள்ளதைச் சொல்வோம்;அல்லதைச் சாடுவோம்" என்று கவிநயமாய்ச் சொன்னது போல் ) புகழப் பெற்ற இறைமறையின் தோற்றுவாய் அத்யாயத்திற்கு கவிநடையில் - செய்யுள் வடிவில் பாடல் எழுதிய அக்கவிஞரின் கவிநயமான வார்த்தைகளையே இங்கு பதிவு செய்ததன் மூலம் ஓசை நயம் - கவி நயம் கொண்ட வார்த்தைகள் உங்களையும் ஈர்த்துவிட்டது என்பதே "நற்கவிதைக்கு"க் கிட்டிய நற்சான்று. நாடறிந்த நாவலரான நீங்களும் உங்கள் பேச்சுக்களில் நிரம்பக் கவிதைகளை மேற்கோள் காட்டியுள்ளீர்கள்.

அபுல் கலாம் (த/பெ.ஷைக் அப்துல் காதிர்)

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

பாரக்கல்லாஹூ ஃபீக்...
அபூ பிலால் காக்கா ஜசாக்கல்லாஹூ ஹைர்.

காக்காவின் விளக்கத்தின் அடிப்படையில்...

நபி(ஸல்) சில இடங்களில் பாட சொல்லி ஏவி இருக்கிரார்கள் என்பதனாலும், மேலும் குர் ஆன் சுன்னாவிற்க்கு எதிரான எந்த கருத்தும் இடம் பெராமல் இருந்தால் அது போன்ற கவிதைகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்...
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிற்ந்தது(கவிஞ்ர்) லபீத் சொன்ன
”அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே”

எனும் சொல்தான்.
இதை அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம் முஸ்லிம் 4541.

//நீங்கள் கேட்டிருந்த 36:69 எண்ணிட்ட இறைவசனத்துக்கு இமாம் இபுனு கஸீர் அவர்களின் நெடிய விளக்கம் உள்ளது. இங்கு முழுமையாக இடமுடியாது. சுருக்கம்:
{69} وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ

. وَقَالَ الْإِمَام أَحْمَد حَدَّثَنَا قَزَعَة بْن سُوَيْد الْبَاهِلِيّ عَنْ عَاصِم بْن مَخْلَد عَنْ أَبِي الْأَشْعَث الصَّنْعَانِيّ ح وَحَدَّثَنَا الْأَشْيَب فَقَالَ عَنْ أَبِي عَاصِم عَنْ أَبِي الْأَشْعَث عَنْ شَدَّاد بْن أَوْس رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " مَنْ قَرَضَ بَيْت شِعْر بَعْد الْعِشَاء الْآخِرَة لَمْ تُقْبَل لَهُ صَلَاة تِلْكَ اللَّيْلَة " وَهَذَا حَدِيث غَرِيب مِنْ هَذَا الْوَجْه وَلَمْ يُخَرِّجهُ أَحَد مِنْ أَصْحَاب الْكُتُب السِّتَّة وَالْمُرَاد بِذَلِكَ نَظْمه لَا إِنْشَاده وَاَللَّه أَعْلَم عَلَى أَنَّ الشِّعْر فِيهِ مَا هُوَ مَشْرُوع وَهُوَ هِجَاء الْمُشْرِكِينَ الَّذِي كَانَ يَتَعَاطَاهُ شُعَرَاء الْإِسْلَام كَحَسَّانِ بْن ثَابِت رَضِيَ اللَّه عَنْهُ وَكَعْب بْن مَالِك وَعَبْد اللَّه بْن رَوَاحَة وَأَمْثَالهمْ وَأَضْرَابهمْ رَضِيَ اللَّه عَنْهُمْ أَجْمَعِينَ وَمِنْهُ مَا فِيهِ حِكَم وَمَوَاعِظ وَآدَاب كَمَا يُوجَد فِي شِعْر جَمَاعَة مِنْ الْجَاهِلِيَّة وَمِنْهُمْ أُمَيَّة بْن أَبِي الصَّلْت الَّذِي قَالَ فِيهِ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " آمَنَ شِعْره وَكَفَرَ قَلْبه " وَقَدْ أَنْشَدَ بَعْض الصَّحَابَة رَضِيَ اللَّه عَنْهُمْ لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِائَة بَيْت يَقُول صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَقِب كُلّ بَيْت " هِيهِ " يَعْنِي يَسْتَطْعِمهُ فَيَزِيدهُ مِنْ ذَلِكَ وَقَدْ رَوَى أَبُو دَاوُد مِنْ حَدِيث أُبَيّ بْن كَعْب وَبُرَيْدَة بْن الْحُصَيْب وَعَبْد اللَّه بْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمْ أَنَّ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ " إِنَّ مِنْ الْبَيَان سِحْرًا وَإِنَّ مِنْ الشِّعْر حِكَمًا " وَلِهَذَا قَالَ " وَمَا عَلَّمْنَاهُ الشِّعْر " يَعْنِي مُحَمَّدًا صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا عَلَّمَهُ اللَّه الشِّعْر " وَمَا يَنْبَغِي لَهُ " أَيْ وَمَا يَصْلُح لَهُ " إِنْ هُوَ إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ مَا هَذَا الَّذِي عَلَّمْنَاهُ " إِلَّا ذِكْر وَقُرْآن مُبِين " أَيْ بَيِّن وَاضِح جَلِيّ لِمَنْ تَأَمَّلَهُ وَتَدَبَّرَهُ .
//
இதற்க்கான தமிழ் விளக்கம் தந்தால் நலமாக இருக்கும்...

KALAM SHAICK ABDUL KADER said...

//நபி(ஸல்) சில இடங்களில் பாட சொல்லி ஏவி இருக்கிரார்கள் என்பதனாலும், மேலும் குர் ஆன் சுன்னாவிற்க்கு எதிரான எந்த கருத்தும் இடம் பெராமல் இருந்தால் அது போன்ற கவிதைகளை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்...
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிற்ந்தது(கவிஞ்ர்) லபீத் சொன்ன
”அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே”

எனும் சொல்தான்.
இதை அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம் முஸ்லிம் 4541.//
அல்-ஹம்துலில்லாஹ். தீர்ப்பு நெருங்கி விட்டது. விரைவில் ஆசான் அஹ்மத் காக்கா அவர்களின் முடிவுரையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

கவிவேந்தர் சபீர் அவர்களின் “பிஞ்சுத் தூரிகை” கவிதை ஜெமீல் காக்கா அவர்களின் உள்ளத்தை ஈர்த்ததும், அவர்களின் இல்லத்துச் சுவரை அலங்கரித்ததும்;

கவிவேந்தர் சபீர் அவர்களின் “தோழர்கள்” கவிதையினை அஹ்மத் காக்கா நூல் வெளியீட்டு விழாவில் நேசித்ததும்- வாசித்ததும்;

கவிவேந்தர் சபீர் அவர்களின் “யாதும் தெருவே யாவரும் கேளிர்” கவிதையினை ஜெமீல் காக்காவும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் புகழ்ந்து பாடியதும்

கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதை இஸ்லாத்திற்கு முரண்பட்டவைகளாக இல்லாமல் உடன்பட்டவைகளாக அமைந்தன என்பதே போதுமானச் சான்றுகள்.

“தெருக்கள் ஊரின்
கருக்கள்” என்ற வரிகளும்;
“மாற்றுக்கருத்து இல்லாத
மார்க்கம் போதிக்கணும்” என்ற வரிகளும் AAMF ன் “கரு”வாக அமையப் பெற்ற கவிதை அன்றோ?

“தோழர்கள்” பற்றிக் குறிப்பிடும் பொழுது:
“நட்சத்திரங்கள்; ஆனால்
நடிக்கத் தெரியாதவர்கள்”

இவ்வரிகள் இஸ்லாத்திற்கு முரண்பட்டவைகளா? உடன்பட்டவைகளா?

அதனால், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கல்வி விழிப்புணர்வு மாநாட்டிலும் கவிவேந்தர் சபீர் அவர்களின் கவிதை தான் முத்திரைப் பதிக்கும் என்பது எனது அவாவும் துஆ வும்.

Anonymous said...

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிரையில் ஓர் அதிசயம் நடந்தது! ஆம். சலாஹிய்யா மதரசா விழாவில் மர்ஹூம் AMS அவர்களின் ஆதரவில் "ஆலிம்கள் பங்குபெறும் கவியரங்கம்" முன்பு நடந்தேறியது. அப்பொழுது சகோதரர் அப்துல் லத்தீஃப் அவர்கள் பக்கத்து வீட்டீல் இருந்த AMS ஹாஜியார் அவர்களிடம் சொல்லி அக்கவியரங்கைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். இப்பொழுது, AIM நடாத்தும் கவியரங்கினைத் தடைச் செய்யும் முனைப்பு , குர் ஆன் ஹதீஸ் கற்று, கற்றுக் கொடுக்கும் ஆலிம்களைப் புலவர்களாய் பாட வைத்த நிகழ்வைத் தடுக்கவும் இயலவில்லையே . ஒருவேளை அத்தருணம் அப்துல் லத்தீஃப் அவர்கள் சிறுவனாக இருந்திருக்கலாம் அல்லது அயல்நாட்டில் அமர்ந்திருந்து இருக்கலாம். அந்தக் கவியரங்கில் ஓர் ஆலிம் பாடிய வரிகள் இன்னும் என்றன் உள்ளத்தில் பசுமையாய்ப் பதிவாகி உள்ளது.

"உலகில் எல்லா நீரும் துருவை
உண்டாக்கும் ; எனினும்
ஒளுச் செய்தால்
உள்ளத்தின் துரு அகலும் !"
இந்தக் கவி வரிகள் வழிகேடா?
அக்கவியரங்கின் தலைவராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடாத்திக் கொடுத்தத் தேங்கை ஷரஃபுத்தீன் ஓர் ஆலிம் புலவர் தானே? அவர்கள் வழிகேட்டில் உள்ளவர்களா? அல்லது, முதன் முதலாக மதரசாவில் அதுவும் ஆலிம்கள் நிரம்பிய அதிரைப்பட்டினத்தில்-ஆலிம்களின் புரவலராகவேப் புகழப் பெற்ற மர்ஹும் AMS அவர்களை எந்த ஓர் ஆலிம் தடுத்தார்கள்? அன்று நடந்தது முதற் கவியரங்கம் ஆலிம்களை உருவாக்கும் மதரசாவில் ஆலிம்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது போலவே, இன்ஷா அல்லாஹ், எதிர் வரும் மே மாதம் அதிரைத் தமிழறிஞர் புலவர் மர்ஹூம் பஷீர் ஹாஜியார் நினைவரங்கில் நடாத்தப்படவுள்ள கவியரங்கினைக் காணுங்கள்; ஓசை நயத்துடன் ஓரிறைக் கொள்கை ஓங்கி ஒலிப்பதைக் கேளுங்கள். சந்தங்கட்குச் சொந்தங்களான எங்களின்
பந்தங்களை விட்டும் பிரிந்து விடாதீர்கள் .

பாங்கின் வரிகள் ஈற்றுச் சொல் ஒன்றி வருவதால் கேட்பதற்குத் தேனாய்ச் செவிகளில் பாய்வது போலவே, எங்களின் கவிதைகளின் "ஓசை நயம்" உங்களின் செவிக்குணவாக அமையும், இன்ஷா அல்லாஹ் !!

அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

Anonymous said...

சகோ. அப்துல் லத்தீப் அவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது.

இங்கு கருத்து பதியும் சகோதர்கள் தாஜுதீன்,நெய்னா தம்பி காக்கா,சபீர் காக்கா,ஜமீல் காக்கா இன்னும் மற்ற சகோதரர்கள் எல்லாரும் கவிதை பற்றி இஸ்லாம் சொல்வதென்ன என விளக்க முயற்சி செய்கிறார்கள்.அதன் அடிப்படையில் ஷிர்க் இல்லாத கவிதைகளை ஆதரிக்கலாம்,தவறில்லை என்ற அளவில் வந்திருக்கிறோம்.இதில் எனக்கும் உடன்பாடு உண்டு,ஆனால் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். காரணம்,கவிதையை வைத்து மார்க்க விஷயத்தில் உள் நுழைந்து,குழப்பம் விளை விக்க முடியும்.சிறு உதாரணம்,அப்போ உமறு புலவர்,இப்போ நாகூர் ஹனிபா.அந்த கவிதை,பாடல்,இசை நயத்தில் உள்ளே நுழைந்துள்ள ஷிர்க்கை,பித் அத்தை கண்டு கொள்ள முடியாது.பேச்சு,உரை நடையில் கண்டுகொள்ள இயலும்.எனவே கவிதையை புறந்தள்ள வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

--அப்துல் லத்தீப்

-----

எல்லோரும் தெளிவு பெறவேண்டும் என்ற நல்லொண்ணத்தில் இங்கு கருத்துப்பரிமாற்றம் நடைப்பெறுகிறது என்பதை கருத்திடும் சகோதரர்கள் அனைவருக்கும் நினைவுபடுத்துகிறோம்..

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே..


-- நெறியாளர்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

//அக்கவியரங்கின் தலைவராகப் பொறுப்பேற்றுத் திறம்பட நடாத்திக் கொடுத்தத் தேங்கை ஷரஃபுத்தீன் ஓர் ஆலிம் புலவர் தானே? அவர்கள் வழிகேட்டில் உள்ளவர்களா?//

அன்புத் தம்பி கலாம்,

தேங்கை ஷரஃபுத்தீன் மிஸ்பாஹி வழிகேட்டில் இருக்கிறாரா? என்பதைத் தீர்மானமாக சொல்லமுடியாது. ஆனால், அவர் தூக்கிப் பிடிக்கும் மவ்லிதுக் குப்பைகளும் ராத்திபு ஜலாலியாவும் வழிகேட்டுக்கு இட்டுச் செல்லக்கூடியவை என்பதை அழுத்தமாகச் சொல்லமுடியும்.

விபரமாக வேண்டுமெனில் கேளுங்கள். தருவேன், இன்ஷா அல்லாஹ்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//"உலகில் எல்லா நீரும் துருவை
உண்டாக்கும் ; எனினும்
ஒளுச் செய்தால்
உள்ளத்தின் துரு அகலும் !"
இந்தக் கவி வரிகள் வழிகேடா?//

அன்புள்ள சகோதரர்அபுல்கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)அவர்களுக்கு,மேற்சொன்ன கவிதை மார்க்கம் பற்றி வருகிறது.மார்க்கம் என்றால் அல்லாஹ்வும்,ரசூல் ஸல் அவர்கள் மட்டுமே அத்தாரிட்டி.
உள்ளத்தின் துரு மறையும் என குரான் ஹதீஸ் சொன்னால் அது மார்க்கம்,எனவே இது இந்தக் கவிதை ஒரு வழிகேடு.அல்லாஹ்வும் ரசூலும் சொல்லாததை சொன்னதால்.

அடுத்து,இல்லை,இல்லை இங்கே உவமையுடன் ஆளப்பட்டுள்ளது என்றால்,அதுதான் கவிதையின் வேலையே என புரிந்து கொள்ளுங்கள்.(துரு-பாவம் என சமாளிப்பீர்கள்).இந்தக் கவிதைகள் முன்னுக்கு பின் முரண் மற்றும் இல்லாததை சொல்லி,இதுதான் அர்த்தம் என சொல்லும்.

ஆனால் நம் உயிரினும் மேலான குரான் என்ன சொல்கிறது.

சொல்வதை,நேரடியாக,தெளிவாக சொல்லுங்கள்.அல்லாஹு அக்பர்.இங்கும் கவிதைக்கு சம்மட்டி அடி.

மர்ஹூம் சம்சுதீன் ஹாஜியார் அவர்கள் செய்தது மார்க்கம் அல்ல.எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் கபுரை வெளிச்சமாக்கி வைப்பானாக.ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு