இந்த எதிர்க் கேள்வியின் மூலமாக எனது நிலைபாட்டை 50% (ஐம்பது விழுக்காடு) விளங்கியிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
இந்திய முஸ்லிம்கள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் படுகின்றார்கள். உண்மை!
நமக்குக் கிடைக்கவேண்டிய பங்கு, யாருக்கோ போய்ச் சேருகின்றது. இதுவும் உண்மை!
இந்திய அரசின் மறைமுக உதவியுடன் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இதைத்தான் செய்கின்றன. இது உண்மையிலும் உண்மை!
இதனால் எல்லாம் நாம் கொண்டாடக் கூடாது என்று ‘ஃபத்வா’ கொடுக்க முடியுமா? முடியாது!
இதற்குச் சரியான, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் முடிவுக்கு வருவது எப்படி?
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்ணின் மைந்தர்களாக முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர். எத்தனை அரசியல் மற்றும் இன மாற்றங்கள் இம்மண்ணில் ஏற்பட்டிருந்தாலும், முஸ்லிம்கள் தமது தனித் தன்மையை (identity) இழக்காமல் இதில் வாழ்ந்து மறைந்துள்ளனர் என்பது உலகறிந்த உண்மை.
இந்த நாட்டிற்காக, இதன் சுதந்திர எழுச்சிக்காக, அச்சமற்ற வாழ்க்கைக்காக, தம் உயிரைப் பணயம் வைத்தவர்கள், போரிட்டு மாண்டவர்களின் பெயர்கள் எண்ணிக்கையில் அடங்கா.
ஏன், நாடு பிடிக்கும் நரித் தந்திரத்தால் வணிகப் போர்வையில் தமது ஆளுகைக்கு அடித்தளமிட்ட ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சுதந்திரத்துக்கான போரின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் நம் மார்க்க அறிஞர்களும் சமுதாயத் தலைவர்களும் பொது மக்களுமாவர்.
அந்நியர்களின் மொழி, மதம், பண்பாடு இவற்றுக்கெல்லாம் எதிர்ப்புக் காட்டி, மூடு விழா நடத்தியவர்கள் நமது மார்க்க அறிஞர்கள் என்பது உலகறிந்த உண்மை. இதனால் நாம் - இன்றைய இஸ்லாமியச் சமுதாயம் வாய்ப்பிழந்து நிற்கும் அவலம் யாருக்குத் தெரியாது? இந்நிலையில்தான், “சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் முஸ்லிம்களாகிய நாம் கொண்டாடுவது கூடுமா?” என்ற கேள்வி கேட்கப்படுகின்றது!
‘கொண்டாட்டம்’ எனும்போது, அவர்களின் மனக் கண் முன் நிழலாடுபவை, ஆடல், பாடல், கேளிக்கை, கூத்து போன்றவைதாம். இவையின்றி, அமைதியாக, உரிமையுடன், முஸ்லிம்கள் தமது நாட்டுச் சுதந்திரப் பங்களிப்பை நினைவு கூர்ந்து, பசுமை நினைவுகளைப் பதிவு செய்து, மகிழ்ச்சியுடன் நாம் ஏன் கொண்டாடக் கூடாது? ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற ‘அஜென்டா’வை வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் வக்கிரப் புத்திக்காரர்களுக்கு எழுத்தால், பேச்சால் ஏன் நாம் எடுத்துக் கூறக் கூடாது?
“இந்த நிகழ்வுகளில் முஸ்லிம்கள் பங்கெடுப்பது ஹராம்” என்று ‘ஹராம் ஃபத்வா’ கொடுப்பதற்கும் சிலர், சில முஸ்லிம் அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு பொதுமக்களை மூளைச் சலவை செய்துவரும் அரை வேக்காட்டுத் தன்மை கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவுகின்றது!
“ஆகுமானதும் விலக்கப்பட்டதும் தெளிவானவை. இவற்றுக்கிடையில் இருக்கும் ஐயத்துக்கிடமான – தெளிவில்லாதவையும் உள. அவற்றைப் பெரிதாக்கி ஐயத்தில் வீழ்ந்துவிடாதீர்” என்பது நபிமொழியாகும். இந்த இடைப் பகுதியில் பட்டவைதான், அவர்களால் ‘ஹராம் ஃபத்வா’ கொடுக்கப்பட்ட நாட்டு நிகழ்வுகள்!
முஸ்லிம் கல்வி நிலையங்கள், சேவையகங்கள், கட்சிகள், அமைப்புகள், அறக்கட்டளைகள் அனைத்தும் இந்நிகழ்வுகளை – விழாக்களை நடத்துவதன் மூலம், பிறருக்கில்லாவிட்டாலும், தம்முடைய நினைவைப் பசுமையாக்க, இது போன்ற நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும்.
இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தில் ஐயத்தைப் புகுத்துபவர்கள், இந்தியப் பெருங்கண்டத்தில் நாம் – முஸ்லிம்கள் பெருவாரியாக இருந்தபோது, முஸ்லிம்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று கூக்குரலிட்டுப் பிரிந்து போனவர்கள், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாட்டவர்கள் ஆவர். அவர்கள் நம் காதுகளில் ஓதிய ‘சாத்தானிய வசனங்கள்’தாம் இவை.
சுதந்திரத்துக்கு முன்னால் நாம் பெருவாரியாக இருந்தபோது, கவிஞர் இக்பால் பாடிய –
“சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” (உலக நாடுகள் அனைத்தையும்விட எங்கள் இந்தியத் திரு நாடுதான் சிறந்தது) என்ற சுதந்திர கீதம், நம்மை விரட்ட நினைக்கும் எதிரிகளின் காதுகளில் வீழட்டும்! நம்மைப் பார்த்து, “முஸ்லிம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்குப் போகட்டும்” என்று கொக்கரிக்கும் ‘கோட்சே’ கூட்டத்தினர் அடங்கி ஒடுங்கிப் போகட்டும்! அல்லது, உண்மை நிலையை உணரட்டும்!
எனவே, ‘உமூரும் மினல் முஷ்தபிஹாத்’ எனும் பிரிவில் அடங்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு, இந்திய நாட்டுக்காக இரத்தம் சிந்திய நமது தியாகச் செம்மல்களை நினைவுகூர்ந்து, ‘கூடும்’ என்ற நிலைபாட்டில் நிற்போம்.
அதிரை அஹ்மது
17 Responses So Far:
இந்தக் கேள்வி சிலரால் எழுப்பபடுவதே வேடிக்கையாகத் தோன்றுகிறது. இவர்களுக்கு ஏன் இப்படியெல்லாம் புத்தி வேலை செய்கிறது என்பது புரிய வில்லை.
ரூம் போட்டு யோசிப்பார்களோ?
நாம் இந்த நாட்டில் பிறந்தோம். இந்த நாட்டின் காற்றையும் இங்கு விளையும் பொருள்களையும் உண்ணுகிறோம். இங்கேதான் மடிந்து இந்த மண்ணில்தான் அடக்கப்படுகிறோம்.
இந்த நாட்டின் அரசியல் சட்டப்படி எல்லோருக்கும் இருக்கும் உரிமைகளும் கடமைகளும் நமக்கும் இருக்கின்றன.
இந்த நாட்டின் குடியரசுத்தலைவர்களாக டாக்டர் ஜாகிர் ஹுசேன், பக்ருதீன் அலி அகமது, டாக்டர் அப்துல் கலாம், ஆகியோர் பதவி வகித்து இருக்கிறார்கள்.
இன்னொரு சிறுபான்மையினராக சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஜெயில்சிங் குடியரசுத்தலைவராக இருந்து இருக்கிறார்.
தலித் மக்களின் சார்பாக கே. ஆர். நாராயணன் பதவி வகித்து இருக்கிறார்.
இந்த நாளில் அனைவருக்கும் சமஉரிமை என்ற கருத்தை நிலைநாட்டும் அரசியல் சட்டம் நமது கரங்களில் தரப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தேர்ந்தெடுப்போர் நாட்டை ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
யாருக்கோ சொந்தமான ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு கூட்டம் போட்டுக் குடித்துவிட்டு கூத்தடிக்கிறார்கள். நமக்கு சொந்தமான குடியரசு தினத்தை கொடியேற்றிக் கொண்டாடக் கசக்கிறதா?
நாடே ஒன்றாக இணைந்து கொண்டாட வேண்டிய குடியரசு தினத்தைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீதுதேசதுரோக வழக்குத் தொடரப்படவேண்டும்.
அஹமது காக்கா அவர்களைப் போன்ற அறிஞர்கள் இந்த விஷயத்தில் பொங்கி எழுந்திருப்பது பாராட்டுக்குரியது.
நேற்று முத்துப் பேட்டை வர்த்தக கழகத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டேன்.
இந்து மத சகோதரர்கள் தீபாவளியையும் பொங்கல் முதலிய பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.
எங்களைப் போல முஸ்லிம்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம்.
கிருத்தவ சகோதரர்கள் கிருஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.
நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய நாட்கள் இந்தியாவின் சுதந்திர தினமும் குடியரசு தினமும் ஆகும்.
ஆனால் நமக்குத் தொடர்பே இல்லாத ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட அனைவரும் இரவு முழுதும் கூத்தடிக்கிறோம். இதில் அர்த்தமுமில்லை ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட நமக்கு உரிமையுமில்லை.
நாம் லண்டனின் பிறக்கவில்லை; பெல்ஜியத்திலோ பல்கேரியாவிலோ, சுவிட்சர்லாந்திலோ ஆஸ்திரியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ பிறக்கவில்லை.
ஒரு முஸ்லிம் என்ற முறையில் அவனது புத்தாண்டு மொஹரம் மாதத்தில் பிறக்கிறது. அதைக்கூட அவன் கொண்டாட அனுமதி இல்லை. அந்த மாதத்தில் நோன்பு வைக்கவே அனுமதிக்கப்படுகிறான்.
தமிழன் என்ற முறையில் ஜனவரி பதினான்கு திருவள்ளுவர் தினமோ, சித்திரை முதல்நாளோதான் புத்தாண்டு என்று கூறப்படுகிறது.
இந்துக்கள் என்ற முறையில் வேதங்களிலோ, இதிகாசங்களிலோ, உபநிஷத் போன்றவைகளிலோ புத்தாண்டு என்று குறிப்பிட்டு இருந்தால் அதைத்தான் அவர்கள் கொண்டாட வேண்டும்.
இவை எந்த ரகத்திலும் சேராத ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட இந்திய மக்கள் ஏன் இப்படி கிறுக்குப் பிடித்துப் போய் இருக்கிறார்கள் என்பது புதிர். புரியாத புதிர்.
உலகில் எல்லா நாடுகளிலும் அவர்களது தேசிய தினங்கள்தான் கோலாகலாமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆனால் டில்லி மற்றும் மாநிலத் தலைநகர்கள் தவிர மற்ற ஊர்களில் வெறும் சடங்காக நடத்தப்படுகின்றன. நாட்டுப் பற்று அனைவரின் ஊனோடும் உதிரத்தோடும் ஓடவேண்டிய ஒன்று. அவற்றை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாட வேண்டும்.
Assalamu Alaikkum
India is my mother land and Islam is my way of life...
No one can define and dictate my identity.
People full of hatred in their mind can kick out even their mothers out of the land and out of the life.
Hatred replaces love from their being. Then they belong to hell.
May God almighty save us from hatred and evils.
B. Ahamed Ameen from Dubai
'எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களின் பின்னூட்டப் பதிவுகள், எனது கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன. சாருக்குச் சரமாரியான நன்றி.
கொடியேற்றி மிட்டாய் கொடுத்து விடுமுறை அளித்து கொண்டாடுகிறார்கள். சட்டைப்பையில் கொடி குத்தி பட்டிமன்றம் நடத்தி கொண்டாடுகிறார்கள்.
இப்படியாகக் கொண்டாடுவதில் இஸ்லாமியனுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.
நாட்டையோ கொடியையோ தலைவர்களையோ வணங்கக் கூடாது அவ்வளவுதான்.
சட்டதிட்டங்களை வகுக்கும்போதே மதச்சார்பின்பின்மையை மையமாகக் கொண்டு வகுத்து குடியரசாக வலுவாக்கிய நினைவு தினம் கொண்டாடத் தகுந்ததே.
அருமையான முழக்கம்.
அல்லாஹ் ஆத் அஹமது காக்கா ஆஃபியா!
//இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் பின்னூட்டப் பதிவுகள், கட்டுரைக்கு வலு சேர்க்கின்றன//
வல்லாஹி... என் இரண்டாவது கருத்தாக இதைத்தான் பதிய இருந்தேன். அஹ்மது காக்கா சொல்லி விட்டார்கள்.
வரவர நானும் அறிஞர்களைப்போல் சிந்திக்கிறேனோ என்னவோ!:-)
இந்தியாசுதந்திரம்அடைவதற்குமுன்பு நம் ஊரில் தற்பொழுது M.M.S.வாளகம் இருக்கும் இடம் வெறும் பொட்டல் வெளியாக கிடந்தது. அதன்நடுவில்கம்பத்தின்உச்சியில்காங்கிரஸ்கொடிபறந்துகொண்டிருக்கும்.அதைகாங்கரஸ் ''மைதானம்என்றேஅழைக்கப்பட்டது.சுதந்திரத்துக்குமுன்பு அதில் காங்கரஸ் பொதுக்கூட்டம் நடந்தது .கூட்ட ஆரம்பத்தில் பேச்சை தொடங்கியவர் ''வந்தேமாதரம்! அல்லாஹுஅக்பர்!'' என்றார். ஒருமுஸ்லிம் எழுந்தார். ''அல்லாஹு அக்பர் என்றால் என்னஅர்த்தம்?'' என்றார் .''நீங்கள்உட்காருங்கள்பிறகுசொல்கிறேன்''என்றார்.''சொல்லுடா!உம்மாலே.......''.கற்கள்பறந்தது.மேடைவீற்றிருந்தமெல்லியப்பூங்காற்றுகளுக்கு நெற்றியில்அடிமூக்கில்அடி.கலவரம்தொடங்கியது.நான்என்வீட்டுவாசலில்நின்றுகொண்டிருந்தேன்.மெயின்ரோட்டிலிருந்துஓடிவந்தஒருவர்''அடேய்! இந்து-முஸ்லிம் கலவரம்டா! தடியெடுத்து ஓடிவாங்கடா!'' என்று கூவிக் கொண்டேஓடிவந்தார்.வீட்டுவேலிகளில்இருந்தகம்புகள்கத்திகள் அரிவால்களோடுவீறுகொண்டவீரர்கள்போர்க்களம்நோக்கிஓடினார்கள். கலவரம்ஓரளவு நடந்து முடிந்தது. இருசாரரும்அடிபட்டார்கள்.பாக்கிஸ்தான்கிடைத்ததும் போரில் விழுப்புண் பட்ட அதிராம்பட்டின தியாகிகளுக்கு ஜின்னாஅஞ்சு ஏக்கர் நிலம் கொடுக்கவில்லை .இந்திய முஸ்லிம்களில்சிலர் பாகிஸ்தான் பிரச்சனையே இஸ்லாத்தோடு போட்டு குழப்பி இந்திய முஸ்லிகளுக்கு கெட்டபேர்வாங்கிகொடுத்தார்கள்.அதையேநம்எதிரிகள்நமக்குஎதிரான ஆயுதமாகபயன்படுத்துகிறார்கள்.அந்தப்இந்தியாவுக்குஆதரவாகபேசிய என்னையும்என்நண்பர்களையும்''காபீர்!ஹராத்தில்பிறந்தவன்கள்''என்று ஒருகடல்தெருலைபைதிட்டினார்.நாங்கள்ஏழுஎட்டுபேர்ஒன்றுகூடி'மூஞ்சி-மூஞ்சி'என்றுகுத்திமஞ்சள்வாங்கவைத்தோம்.அடுத்தநாள்பஞ்சாயத்துக்கு மஞ்சள்முகத்தோடுவந்தார்.
இந்தியமக்களின்மரபுஅணுக்கள்பற்றியவிஞானஆய்வுகட்டுரைஒன்று செப்டம்பர்23.2009தேதியிட்டஇந்தியாடுடேஇதழியில்''முதல்இந்தியர்கள்யார்?'என்ற'தலைப்பில்வெளியாகிஇருக்கிறது.மனிதனின்முதல்தோற்றமே தென்ஆப்பிரிக்காஎன்றும்அவர்கள்படகுகளில்சென்றுஉலகெங்கும் பரவினார்கள்என்றும்அவர்கள்சென்றநாடுகளின்தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறுஉடல்வாகுநிறம்மாறியதுஎன்றும்அந்தகட்டுரைகூறுகிறது. இந்தியாவில்அவர்கள்வந்துஇறங்கியஇடம்தென்இந்தியா.இவர்கள்கறுப்பு நிறம்கொண்டவர்கள்.திராவிடர்கள்என்றுஅழைக்கப்பட்டார்கள். வந்தவர்களில்அந்தமான்நிக்கோபார்தீவுகளில்வசிக்கும்பூர்வகுடியினர்எந்தமாற்றமும்இல்லாமல்வந்ததுபோல்இருக்கிறார்கள்.மதம்மொழிநிறம்ஆகியவற்றில்வேற்றுமைபேசிஎந்நாடுஉன்நாடுஎன்றுபேதங்கள்பேசித்திரியும் பைத்தியகாரப்பயல்களுக்குஇந்தக்கட்டுரைநல்லமருந்துகொடுக்கும். கட்டுரைமுழுதையும்எழுதஎன்னால்முடியாது.அ.நி.வாசகர்களுக்குஇது பயன்தரும்கட்டுரை.எழுதவிரும்பினால்கொடுக்கதயார்.எழுதிமுடித்ததும் மறந்துவிடாமல்திரும்பதந்துவிடவேண்டும்.
//வரவர நானும் அறிஞர்களைப்போல் சிந்திக்கிறேனோ என்னவோ!:-)//
அதே...! அது தன்னே ..!
இன்னும்மாறாமல்இருப்பவர்களில்மலேசியாவிலும்ஆஸ்திரேலியாவிலும் பலர் இருக்கிறார்கள்.
அஹ்மத் காகாவின் கொடி அசைப்பு பாராட்டுக்குரியது.
//அதே...! அது தன்னே ..!-//
இந்த மொழியை வைத்துப் பார்த்தால் சொந்தக் கருத்தாகத் தெரியவில்லையே...?
அமரிக்காவிலிருந்துஅணுஆய்தம்விற்கவந்தஓபாமாநம்நாட்டுகுடியரசு பண்டிகையில்இந்நாட்டின்மரபுஅணுக்களைகொண்டநாம்ஏன்கலந்து கொள்ளக்கூடாது?நமதுஉரிமையை நாமேபறிகொடுக்கும் சிந்தனையிலிருந்துமாறவழிகாணவேண்டும்.குளத்தோடு கோபித்துகொண்டுகுளிக்காமல்இருந்தால்முதுகுஅரிக்கும். சொறிந்துவிடயார்வருவார்?
//அதே அது தன்னே //
இது இது எனது சொந்தக் கருத்தே..
காக்கா அவர்கள் கேட்டுச் சொல்லிருக்கலாம்.
இன்ஷா அல்லாஹ் நாளை அவர்களிடமே கேட்டுச் சொல்கிறேனே.
நிற்க !
//வரவர நானும் அறிஞர்களைப்போல் சிந்திக்கிறேனோ என்னவோ!:-)//
தெரியாதா?
//அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்//
என்ற கவிதை அரங்கேறியபோதே அது ஆரம்பமாகிவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.
//இந்த மொழியை வைத்துப் பார்த்தால் சொந்தக் கருத்தாகத் தெரியவில்லையே...?//
ஏம்பா இவ்வளவு பெரிய சந்தேகம்? போகட்டும். My better-half is a Malayali. Don't you know this?
//My better-half is a Malayali. Don't you know this?//
Knowing that only is the reason behind my doubt.
இன்னும் கொடிப்பிடி இருக்கமாக வேண்டும் .போலி தேசியவாதிகளை வெட்கப்பட செய்ய வேண்டும் .1000 வருச இருப்பை just like that உதாசீனப்படுத்தும் கயவர்களை கூனி கூறுக செய்ய வேண்டும் .எப்படி ? விரைவில் நுனிப்புல் -2.
அருமையான அவசியமான பதிவு
Post a Comment