தாய்மொழியால் தனக்கென்றே இருக்கும் தனித்துவத்தால் தலை நிமிர்ந்து எவ்வகைச் சூழலையும் எதிர்கொள்ளும் பக்குவம் அதிரைநிருபருக்கு இருப்பதை அனைவரும் நன்கறிவீர்கள் !
சரி மேட்டருக்கு வருவோம், தனிமை அல்லது மல்லாக்க படுத்து யோசிக்கும் போது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் சிந்தனையில் மின்னி மறையும், சந்தோஷங்கள், பஞ்ச் டையலாக் (!!?) அல்லது வெறுப்பேற்றும் சூழல் என்று இவைகளை சந்தித்திருக்காமல் யாரும் இருந்திக்க முடியாது.
அவ்வகையில் எப்போதாவது காத்திருக்கும்போது , தூரமாக பயணம் செய்யும் போது சிந்திக்கும், நினைக்கும் கேள்விகள் உங்களுக்கும் இதுபோல் யோசிக்க தோன்றும்... கமென்ட்ஸில் கலக்கலாமே...!
- ஆத்திரம் அவசரத்துக்கு உதவும் என கிரடிட் கார்டு எடுத்தால் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள அத்தனை பொருட்களும் ஆத்திர(ம்) அவசரமாகி விடுகிறது.
- மிருகங்களை வதைக்காதீர்கள் என்று கொடி பிடித்த அதே ஆட்கள் எப்படி "லேம்ப் சாப்" பில் பெப்பர் தூவி சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
- வாரம் ஒருமுறை மட்டும் பள்ளிவாசலுக்கு வரும் ஆட்கள் எப்படி ஒரு மார்க்க விவாதம் என்றால் இப்படி அருவியாய் கொட்டுகிறார்கள்?
- முன்னேர வாய்ப்பு ஒரு முறைதான் வரும் என்றார் நண்பர்... அது எப்போதுன்னு தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன் என்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.
- எந்த ஊர்லதான் கிடைக்கிறாங்களோ இந்த அழும் பெண்கள்… சீரியலுக்கு என்றே 'பெத்து" வளர்க்கிறாங்களா?
- பெரியவங்க சொல் கேட்காட்டியும் உருப்பட முடியாது என்று சொல்லும் பெரியவர்களே... நீங்கள் உங்கள் பெரியவர்களின் சொல்லை 100% கேட்டீர்களா?... நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.?
- வாங்கும் அல்வாவில் மேற்பரப்பில் மட்டும் முந்திரி பருப்பு...அல்வாவுக்கே அல்வாவா?
- ஷேர் பன்ன அதே வீடியோவெ எத்தனை தடவை ஃபேஸ் புக்கில் அப்லோட் செய்து சாவடிக்கனும்னு ஒரு கணக்கே இல்லையா?
- பசித்த போது சாப்பிடகூட முடியாத ஓய்வில்லாத வேலை- ஓய்வு காலத்தில் விரும்பியதை சாப்பிட முடியாத நிலை.
- ஊரில் உள்ள நண்பரிடம் பேசியபோது அவர் கேட்ட கேள்வி. “இப்போது பள்ளிவாசல் எல்லாம் சர்ச் மாதிரி ஒரே நாற்காலி மயம், காலை மடக்கி தொழ முடியவில்லை என்பது அவர்களது வாதம், இருப்பினும் எந்த விருந்திலும் சகனுக்கு சம்மளம் போட்டு அவர்களால் எப்படி உட்கார முடிகிறது. ?”
- நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
- மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமி்ழ் தெரியாது!
41 Responses So Far:
வாரண்டி : வாசிக்கும்போதெல்லாம்...
கியாரன்டி: கிள்ளிவிடாத சிரிப்பு
ஐ லைக் - லைக் பிச்சை ! (இதுகெல்லாம் அரசியல் கற்பிக்க கூடாது ஆமா !)
//ஊரில் உள்ள நண்பரிடம் பேசியபோது அவர் கேட்ட கேள்வி. “இப்போது பள்ளிவாசல் எல்லாம் சர்ச் மாதிரி ஒரே நாற்காலி மயம், காலை மடக்கி தொழ முடியவில்லை என்பது அவர்களது வாதம், இருப்பினும் எந்த விருந்திலும் சகனுக்கு சம்மளம் போட்டு அவர்களால் எப்படி உட்கார முடிகிறது. ?”//
மக்களின் ஆரோக்கிய குறித்து அதிகம் பாதித்தது... இந்தச் சூழல் !
பின்னாடி வர்ர்ரேன்... கொஞ்சம் ஆஃபிஸ் வேலையும் செய்யனுமே....
எழுத மறந்தது:
" எனக்குத்தான் எல்லாம் தெரியும் , அது பற்றி உமது அறிவுரை தேவையில்லை" என்று பீத்தும் பலபேர் ஒரு சிறுவனிடமோ அல்லது அதிகம் படிக்காத ஒரு பெண்ணிடமோ தோற்றுப்போகிறார்கள் .
//படித்ததில் பிடித்தது :
நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?//
இங்கு மத்தவங்க என்று சுட்டப்படுவது , உதவி பெரும் நிலையில் உள்ளவர்களைத்தான்
காலைல எழுந்ததும் வெருங்குடல்ல:
-வயிறு முட்ட தண்ணி குடிங்க, வேற ஒண்ணும் சாப்டாதிய – ஜப்பான்ஸ் வாட்டர் தெரப்பி
-ராத்திரி ஊற வச்ச வெந்தயம் சாப்பிட்டா பித்தத்துக்கும் ஷுகருக்கும் நல்லது - டாக்டர் வழிப்போக்கர்
-ராத்திரி ஊற வச்ச வெண்டக்காய் துண்டுகள் இனிப்பு நீரை கேக்கும்(?) – டாக்டர் குமுதம் வாசகர்
-ராத்திரி ஊற வச்ச கொண்டக்கடலை சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது – டாக்டர் ஓசிஉபதேசம்
-ஒரு க்ளாஸ் தண்ணியிலே தேன் கலந்து சாப்பிட்டா சுறுசுறுப்பா இருக்கும்பா – டாக்டர் ஒப்பேத்தல்சாமி
இதுல எத செய்றது எத விட்றது? எல்லாம் செய்ய அதென்ன…
வெருங்குடலா பெருங்குடலா?
எல்லாமே உள்ளபடியே அருமை
அப்படி சொன்னால் அதுக்கு ஒரு பாய்ன்ட் நீங்க கண்டு பிடிப்பீங்க!
அதனால் ஒன்னு மட்டும் லைக்
Jahabar Sadhik Msm like your link
//வாரம் ஒருமுறை மட்டும் பள்ளிவாசலுக்கு வரும் ஆட்கள் எப்படி ஒரு மார்க்க விவாதம் என்றால் இப்படி அருவியாய் கொட்டுகிறார்கள்?//
i and 60 others like this
//அதிகம் படிக்காத ஒரு பெண்ணிடமோ தோற்றுப்போகிறார்கள் .//
எலே,
மெத்தப் படிச்ச பெண்ணிடம்தான் தோற்கக் கூடாது. வாழ்க்கை பப்பரப்பான்னு ஆயிடும். அதிகம் படிக்காத, நம்ம உம்மாமேல அன்புள்ள பெண்ணிடம்
தோற்பதே
வாழ்க்கையின்
வெற்றி!
(பாரு எல்லோரும் கையைத் தூக்குறாங்க...நீயும் தூக்குடா தோஸ்த்தே)
ஜாஹிர் காக்கா எப்படி இப்படி ........500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள கஸ்(ஷ்)டமரை சந்தித்துவிட்டு ச்ச்சும்மா தனியாக வரும்போது சிந்தித்ததா ?.....நிறைய தடவை இதே மாதிரி நினைத்ததுண்டு எழுத தொனலயே...வட போச்சே
"வட போச்சே ...."
யாசிர்...... இருக்கவே இருக்கிறது . தயிர் வடை ..எழுதுங்க . நாங்க படிக்க மாட்டோம்னு சொன்னா பஞ்சாயத்துலெ கட்டி வச்சு கேளுங்க
'மெத்தப் படிச்ச பெண்ணிடம்தான் தோற்கக் கூடாது.'
பாஸ் முதல்லெ சர்டிபிகேட் எல்லாம் கொண்டுவரமாட்டாங்க பாஸ். ஆனா நாளடைவிலெ எல்லாம் படிச்சிட்டு 'படிச்ச பாடத்துலெ" வந்த கேள்விக்கு பதில் எழுதற மாதிரி எக்ஸ்ட்ரா பேப்பர் எல்லாம் கேட்குறாங்க பாஸ்.
பூமி 71 சதவீதம்(கடல் ) நீராலும் 29 சதவீதம் நிலத்தாலும் ஆனதுன்னு அறிவியல் பூர்வமா சொல்றாங்க.
கடல் நீருக்கு கீழே நிலம் இருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லையோ!!!
//பூமி 71 சதவீதம்(கடல் ) நீராலும் 29 சதவீதம் நிலத்தாலும் ஆனதுன்னு அறிவியல் பூர்வமா சொல்றாங்க.
கடல் நீருக்கு கீழே நிலம் இருப்பதை யாரும் கண்டு கொள்வதில்லையோ//
100 சத உன்மை.
அந்த அறிவியல் பொய்யான நாள் இன்று!
விஞ்ஞானியாக்கா விஞ்ஞானம் வாழ்க வளர்க!
\\வாங்கும் அல்வாவில் மேற்பரப்பில் மட்டும் முந்திரி பருப்பு...அல்வாவுக்கே அல்வாவா?\\
சூப்பர்
பஞ்ச்;
தொட்டது
நெஞ்சு!
\\மெத்தப் படிச்ச பெண்ணிடம்தான் தோற்கக் கூடாது. வாழ்க்கை பப்பரப்பான்னு ஆயிடும். அதிகம் படிக்காத, நம்ம உம்மாமேல அன்புள்ள பெண்ணிடம்
தோற்பதே
வாழ்க்கையின்
வெற்றி! \\
கவிவேந்தரை வழிமொழிகிறேன் நூற்றுக்கு நூறு விழுக்காடு!
கவியன்பன்,
கைகுடுங்க. நாம மட்டுமல்ல, நம்மாட்கள் எல்லோருமே நம்ம கட்சிதான். நம்மளமாதிரி தெகிரியமா கையத் தூக்காம இதுக்கே பர்மிஷனுக்கு வெய்ட் பண்றாங்கோ.
தலீவா ஹமீது,
உங்க தண்ணி சதவீத கணக்கில நம்ம குடிமகன்களோட க்வாட்டர் ஹாஃப்லாம் சேர்த்தியா?
இது இளைஞ்ர்களுக்கு உரிய EXCLUSIVE பதிவு . ஆகவே நான் ஜூட்.
( நல்லாகீதுபா )
sabeer.abushahruk சொன்னது…
//உங்க தண்ணி சதவீத கணக்கில நம்ம குடிமகன்களோட க்வாட்டர் ஹாஃப்லாம் சேர்த்தியா?//
க்வாட்டர்ன்னா 250 ml இருக்கணும் ஆனா நம்ம குடியரசு விற்பது 180 ml க்வாட்டர்ன்னு விக்கிறாங்க. ஒரு வேலை கலவையையும் சேர்த்து கணக்கு சொல்றாங்களோ
sabeer.abushahruk சொன்னது…
கவியன்பன்,
//கைகுடுங்க. நாம மட்டுமல்ல, நம்மாட்கள் எல்லோருமே நம்ம கட்சிதான். நம்மளமாதிரி தெகிரியமா கையத் தூக்காம இதுக்கே பர்மிஷனுக்கு வெய்ட் பண்றாங்கோ.//
தூக்குன கையை இறக்க பர்மிஷன் கிடைத்ததான்னு மொதல்ல சொல்லுங்கோ கை கடுக்க போவுது
அப்படின்னா பத்தாம் வகுப்பு வரை படிச்சவங்க கிட்ட மு.க.வின் தோல்வியும் வெற்றியாகுமா ? மேற்சொன்ன லாகிக் படி !? (தப்பா இருந்தா அடிச்சுடுங்க... என்னையல்ல நான் எழுதினதை)
//இது இளைஞ்ர்களுக்கு உரிய EXCLUSIVE பதிவு . ஆகவே நான் ஜூட். //
அதானே இளைஞர்களுக்குன்னு சொல்லிட்டு மூத்த இளைஞரே ஜூட்டு விட்டா எப்படி காக்கா ?
ஹமீது,
கைய எறக்கி நெம்ப நாளாச்சு. ரயில்தான் வரவே மாட்டேங்குது. நீங்க சவுதில பார்த்த மாதிரி இன்னும் அடிமையாவே கெடப்போம்னலாம் கெனா கானாதீக. இப்பவ்லாம் நெம்ப தகிரியமா எதுத்துலாம் பேசுவோம். இந்த பதிவோடு ஆசிரியன் மாதிரி பம்மவெல்லாம் மாட்டோம் (கேட்டதுக்கு ஹமீதுட்ட கத்துக்கிட்டதா சொல்றான்)
சாயங்காலம் - சாயங்காலம் ஆட்டுக் கால் சூப்பு கோப்பை-கோப்பையா குடிச்சா மூட்டி வலி தீரும். [இது ஆட்டு வைத்தியம்].அதுவரைக்கும் உக்கார பெஞ்சும் உங்குறதுக்கு லஞ்சும் கொடுக்கலாமே!.
Sமுஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
ஒரு சர்வே சொல்லுது //'பிள்ளைகளை கொறச்சு பெத்த வங்களுக்கு மூட்டு வலி வருறது ரெம்ப கொறவாம்// நெசமா?
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
//நம்ம உம்மாமேல அன்புள்ள பெண்ணிடம்
தோற்பதே
வாழ்க்கையின்
வெற்றி!//
பாஸ்...இது விவாதத்துக்குறியது.
சில சமயங்களில் நேரத்தை பொறுத்து சில பேர் அன்பு செலுத்துகிறார்கள். சிலர் கல் வைக்காத நகையை உம்மா போட்டிருந்தால் அன்பு வைப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
பாஸ்...ஒன்னு மிஸ் ஆயிடுச்சி...அன்பு செலுத்தும் பெண்ணா?...பெண்களா?
//அன்பு செலுத்தும் பெண்ணா?...பெண்களா?//
பெண்ணிடம் தோற்பது வெற்றி!
பெண்களிடம் தோற்பது...தோல்வி!
(ஒனக்கு யார்டா இப்டிலாம் கேள்வி கேட்க பாடம் நடத்தறது?)
///'பிள்ளைகளை கொறச்சு பெத்த வங்களுக்கு மூட்டு வலி வருறது ரெம்ப கொறவாம்// நெசமா?//
மாமா, எட கொறச்சா எண்ணிக்க கொறச்சா?
தான் வைத்ததைக் கூடத் தெரியாமல் குருடன் போல உழல்கின்றவர்க்கு கண் போன்றவள் இல்லாள் அன்றோ! அதனால் தான் அவள் இல்லத்தரசி; வெறும் வீட்டு மனைவி அல்லது வீட்டை காபந்து செய்கின்றவள் அல்லள் (house wife/ home maker).
//கால் மடக்கி உட்காரயாலே முடியலேங்கறது அவர்கள் வாதம்// வாதம் என்றால் என்ன வாதம்? மடக்கு வாதமா? முடக்கு வாதமா?
ஆனா ஜாவியவுலே ஒரே கூட்டம்! காலை மடக்கி என்ன காலை மடிச்சே மடியிலே கட்டிக்கிட்டு காலைலேந்து உக்காந்து இருக்காங்களே! அது எப்புடியாம்?
S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
//கல் வைக்காத நகையை உம்மா போட்டிருந்தால்// ஹஹஹஹஹஹா.
நிதர்சனம்.
//மாமா! எட கொறஞ்சா எண்ணிக்கே கொறஞ்சா//
///எடகொறஞ்சாலும் எண்ணிக்கே கூடுது;//
எடே கூடுனாலும் எணிக்கை கூடுது. ரெண்டுக்கும் 'பொதுவிதி' 'கூ...ட...லே...
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
வாரம் ஒருமுறை மட்டும் பள்ளிவாசலுக்கு வரும் ஆட்கள் எப்படி ஒரு மார்க்க விவாதம் என்றால் இப்படி அருவியாய் கொட்டுகிறார்கள்?/////
"நல்ல முயற்ச்சி இதுபோல் நிறைய வரணும் வாழ்த்துக்கள்"
எங்கோ படித்தது; முட்டைய பார்த்து "இதில் முட்டை கலந்திருக்கா:என கேட்க்கும் புரட்டாசி மாச அலப்பரைகள் {புரட்டாசி மாசத்துல புலால் உண்ண மறுக்கும் சிலரை பற்றியது]
//இதில் முட்டை கலந்திருக்கா//
முட்டை வேண்டும் என கேட்கிறார்களா/ இல்லை வேண்டாம் என்று கேட்கிறார்களா?... ஏனெனில் காந்தி ஜெயந்தி அன்று சாராய வியாபாரம் அமோகம் என்று கேள்வி.
To Brother MSM Sabeer Ahamed,,
உங்கள் முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம். காதிர்முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் என நினைக்கிறேன். எந்த வருடம் நீங்கள் படித்தது?
எனது பள்ளி பருவம் 1983-1985 +2 கா.மு.கல்லூரி 1985-1987[B COM]
:))))
இப்படியெல்லாம் எழுதாமே எல்லோரும் டல்லாகி கெடக்குரியலே? மனசுக்கு என்னமோ ஒரு மாதிரியா இருக்கு.தூங்கும்அதிரைநிருபரை துயில் எழ செய்ய பூபாலராகம்பாடுங்கள்.
ஹப்பாடா ரொம்பா நாள் கழிச்சு பிளாக்குலேயும் அதிக கமெண்ட்ஸ், இதையெல்லாத்தையும் அதிரைக்கேயுரிய குசும்புனு எடுத்துகலாமா காக்கா? ஏன்னா சேடைக்கே பெயர் போன நம்மாளுங்களாலே மட்டும்தான் இப்படியெல்லாம் எழுதமுடியும்
//மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…
எனது பள்ளி பருவம் 1983-1985 +2 கா.மு.கல்லூரி 1985-1987[B COM]//
ஏய் சபீரு...!
படிச்ச வருஷம் கூட மறந்துட்டு? சித்தீக் இடம் கேள். சொல்லுவாஹ. KURIPPITTA VARUSHANGAL THAPPUPPAA SABEER!
1983-1985: 1983-1984, 1984-1985. +2 TWO YEARS OK. BUT
1985-1987: 1985-1986. 1986-1987. B.COM. ONLY TWO YEARS????
இதை படிக்கும் போது நான் எழுதியதே மறந்து விட்டது. இதுபோல் இன்னொரு ஆர்டிக்கிள் எழுதலாம் என இருக்கிறேன்.
அது வரை ...ட்ரைலர்....
# ஏன் மேடையில் பேசும்போது பேசுபரைத்தவிர்த்து இன்னும் சிலரும் கூடவே நிற்கிறார்கள். [ இது என்ன தமிழ்நாட்டு கலாச்சாரம் சம்பந்தப்பட்டதா? ] . சினிமா, அரசியல் , மதம் எந்த மீட்டிங் ஆக இருந்தாலும் கூடவே சிலர்...சிலர் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மேடையிலேயே அலைவது
தேர்தலில் கடும் தோல்வியடைந்தவர்கள் எப்படி இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்...[ பெரிய கட்சிகளை தவிர்த்து ]
ஊடகங்கள் அதிகம் இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பாகவே செயல்படுகிறது என்பது உண்மை...இது எப்படி இந்த அளவுக்கு வியூகம் அமைத்தது?
ஊரில் ஆன்ட்ராய்ட் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கெல்லாம் ஆங்கிலத்தில் டைப் செய்யத்தெரியும் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் தவறு....[ சுத்தமா எதுவும் தெரியாமல் பல பேர் சீன் போடுறானுங்க ]
Post a Comment