Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2016 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

27 Responses So Far:

Ebrahim Ansari said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு அசல் முகத்துடன் ஆஜராகி இருக்கும் மருமகன் சாகுலுக்கு வாழ்த்துக்கள்.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.

புகைப்படங்களும் அதன் கருத்துக்களும் அருமை.

அந்த இரண்டாவது புகைப்படம் கோயில் யானைக்கு கொடுக்கப்பட்ட கருத்தை மாற்றி அமைத்தால் மாற்று மத சகோதரர்களின் மனம் புண் படாமல் இருக்கும் என்பது என் கருத்து.

//மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து [[பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல்]] அதற்கு [[சமய சாயமும் பூசி]] விட்டார்கள்.//

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

Unknown said...

அழகிய காட்சிகளின் உலா

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

வயல்:
 
அம்மாவின்
அதிர்ஷ்ட நிறத்தில்
விளைந்திருக்கு நெற்கதிர்,
அப்பாவின்
அதிர்ஷ்ட நிறமானதும்
அருவடைதான்;
இடையில்
அய்யாவின்
பூச்சிகள்
அறிக்காமல் இருந்தால்!
 
பி.கு.:
இங்கு யாரும்
அரசியல் பேச வேண்டாம்
இது
அரிசியில் பேசும் படம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

படம் 1 : தன்னை வளர்த்து ஆளாக்கிய அந்த பசுமையான புல்லையே பாயாய் விரித்து உறங்கும் அந்த இளம் நெல்மணிகள்.

படம் 2 : நாங்கள் மாமிசம் உண்ணும் விலங்காய் இருந்தால் இப்படியெல்லாம் எங்களை ஈஸியாக தெருவில் மக்கள் கூட்டத்தின் நடுவே சாதாரன சங்கிலி மூலம் கட்டி இழுத்துச்செல்ல இயலுமா? என கேக்கிறதோ என்னவ்வோ இந்த யானை?

படம் 3 : உடல் முழுவதும் சிட்டுக்குருவி போல் இருந்தாலும் முகச்சாடை வேறொரு சாயலில் இருக்கிறதே? என்ன காரணம்?

படம் 4 : யாங்காக்கா, இவ்ளோவ் பாரத்தை தன் மேல் தூக்கி இழுத்துச்செல்லும் பொழுது இந்த பாலத்தின் நடுவே ட்ர‌யின் அந்துராது???? என்ற‌ ப‌ய‌ம் இந்த‌ ப‌ட‌த்தை பார்க்கும் எவ‌ர்க்கும் வ‌ர‌த்தான் செய்யும்.

ப‌ட‌ம் 5 : இவ்வ‌ள‌வு இட‌ம் க‌ட‌லில் ப‌ர‌ந்து கிட‌ந்தும் வேணும்டே இப்ப‌டி சிறு க‌ப்ப‌ல்க‌ளை ந‌ங்கூர‌ம் ச‌ரிவ‌ர‌ போடாம‌ல் அடிக்க‌டி இந்த‌பால‌த்தின் மேல் மோத‌ விடுவ‌து காற்றின் ப‌ல‌மா? க‌ப்ப‌ல் மாலுமியின் ப‌ல‌வீன‌மா?

ப‌ட‌ம் 6 : எல்லையின்றி இறைவ‌ன் க‌ட‌லைப்ப‌டைத்தான். இவ‌னோ அதில் க‌ண்ணுக்குத்தெரியாத‌ எல்லைக்கோடு போட்டு த‌ன் க‌ட‌ல்கொள்ளையை ஆர‌ம்பித்தான்.

ப‌ட‌ம் 7 : இட‌த்தில் ப‌சுமையின்றி ம‌ல‌ர்க‌ள் ம‌ல‌ர்ச்சியின்றி போனாலும் அங்கு செல்லும் ம‌ன‌ம் ம‌ல‌ர்ந்தே இருக்கும் எந்த‌ ர‌ம்மிய‌மான‌ இட‌த்திலும்.

ப‌ட‌ம் 8 : ப‌சுமைக‌ள் நிழ‌ற் ப‌ட‌ங்க‌ளில் த‌ஞ்ச‌ம‌டைந்து விட்ட‌தால் நிஜ‌ப்ப‌ட‌ங்க‌ளில் ச‌ரிவ‌ர‌ காண‌ இய‌ல‌வில்லை.

ப‌ட‌ம் 9 : இரு இலை அர‌வ‌ணைப்பில் வெளிவ‌ரும் பிஞ்சுப்ப‌லா. இனி தேனீக்க‌ள் அதை கொஞ்சும்.

ப‌ட‌ம் 10 : நாங்க‌ள் ஏறி விளையாண்ட ப‌லாப்ப‌ந்தைத்தான் நீங்க‌ள் இறுதியில் கிழித்து அத‌னுள் இருக்கும் சுளையை வெளியே எடுத்து சுவைக்க‌ முடியும் என‌ ம‌னித‌னைப்பார்த்து சொல்லாம‌ல் சொல்லும் சிற்றெறும்புக‌ள்.

ஆக‌ மொத்த‌ம் நீங்க‌ள் கிட்ட‌ன்ஸ்ல‌ எடுத்த‌ அத்துனை ப‌ட‌ங்க‌ளும் சோக்கா இருக்கு ஹ‌மீத் காக்கா......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பி.கு.:
இங்கு யாரும்
அரசியல் பேச வேண்டாம்
இது
அரிசியில் பேசும் படம்.//

அரசியை அழைத்துக் கொண்டு
தாத்தா வீட்டுக்குள் நுழைந்திட ஆசையோ !?

அங்கேயும் உண்டு மொழி'யாள் !

பச்சை பேச்சும்
இச்சை மூச்சும்
கொச்சை கொச்சை...

என்று அறிக்கை வரும் ஆமா !

பச்சையுடன் மஞ்சள் சேர்ந்தால் என்ன நிகழும் !?

வண்ணங்களின் எண்ணங்களைக் கேட்டேன் !

Ebrahim Ansari said...

//பச்சையுடன் மஞ்சள் சேர்ந்தால் என்ன நிகழும் !?//

பொங்கலோ பொங்கல்தான்.

நான் பொங்கலுக்கு வாங்கப்படும் பச்சை மஞ்சளைத் தான் சொன்னேன்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//பி.கு.:
இங்கு யாரும்
அரசியல் பேச வேண்டாம்
இது
அரிசியில் பேசும் படம்.//

அரிசியில் அரசியல கலந்து விட்டுடுயளே

Shameed said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

//படம் 3 : உடல் முழுவதும் சிட்டுக்குருவி போல் இருந்தாலும் முகச்சாடை வேறொரு சாயலில் இருக்கிறதே? என்ன காரணம்?//


ஊரு முழுக்க செல்ப் போன் டவர் வந்ததால் சிட்டுக்குருவி சிலிப்பிக்கிட்டு முடியை கெளப்பிகிட்டு இருக்கு

sabeer.abushahruk said...

யானை:
 
மனிதன் போட்டால் பட்டை  
யானை போட்டால் விட்டை
 
யானையும் கவிஞனும் ஒண்ணு
கம்பீரத்திலும்
கவிதையிலும்
தன் தலையில் தானே…விலும்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

மேலே பார்த்துக்கிட்டுருந்த என்னை தங்களின் புகைப்படங்கள் கொஞ்சம் கீழே பார்க்க வைச்சிடுச்சு..

அனைத்து புகைப்படங்களும், பின் தொடரும் வரிகளும் அருமை.

sabeer.abushahruk said...

சிட்டுக்குருவி:
 
 
தெருவில் சுற்ற அலைபேசிகள்
பெருகி விட்டன
அருகில் வாழ்ந்த சிட்டுக்குருவிகள்
அருகி விட்டன
 
ஏகாந்தக் குரலின்
கீச்கீச்சுகள்
மின்காந்த அலையால்
மெளனித்தப் போயின
 
இந்த
எடைகுறைந்தப் பறவையின்
அழிவைத் தடுக்க
விடையேதும் உண்டா?
 

sabeer.abushahruk said...

கடற்பாலம்:

தண்ணீரைப் பிரிக்க
மனமின்றி
தன்னையேப் பிரிக்கிறது
தமிழ்நாட்டுப் பாலம்

சொன்னீரா இதை அவர்க்கு
கண்ணீரை வரவைக்கும்
கர்நாடக காவிரியை

பிரிக்காதே பிடிக்காதே
என்று?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…


//யானையும் கவிஞனும் ஒண்ணு
கம்பீரத்திலும்
கவிதையிலும்
தன் தலையில் தானே…விலும்!//


அப்போ கவிஞன் விட்டை போடுவானா என்று குதர்க்கம கேட்கலாமா?

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. S.Hameed,

Thanks a lot for sharing the high definition pictures.

The concept, colors and contrast of pictures simply amazing.

Could you please let us know which camera brand and model you use?

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

sabeer.abushahruk said...

பலா:

எறும்பூரும் பலாப் பார்த்து
எச்சிலூறுது

இது
வேர்ப்பலாவா - நம்ம
ஊர்ப்பலாவா?

ஹமீது,
கண்டதும் எழுதச் சொல்லும் கலைநயம் மிக்க புகைப்படங்கள். வாழ்த்துகள்

Shameed said...

Ahamed Ameen சொன்னது…

//Could you please let us know which camera brand and model you use?//

Valaikkum Mussalaam

Dear Brother Ahamed Ameen:

Thanks for your comment !

YES I use Nikon Cool Pix P500

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…


//இது
வேர்ப்பலாவா - நம்ம
ஊர்ப்பலாவா?//


நம்ம ஊர் பலா எப்போதும் வேர்பலாதான்

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. S.Hameed,

Thanks a lot brother for sharing camera brand and model.
Great quality pictures ofcourse with your unique angles in shots.

Best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

Shameed said...

Ahamed Ameen சொன்னது…

//Thanks a lot brother for sharing camera brand and model.//

Valaikkummussalaam

Dear brother Mr Ahamed Ameen

More Details For Nikon Cool Pix

Nikon Coolpix P500 Camera Features:
36x zoom NIKKOR lens covers an incredible range of focal lengths from 22.5mm to 810mm
Backside illumination CMOS sensor
New EXPEED C2 dual image processors
Image sensor shift + electronic vibration reduction (VR) function
1080p movie recording function with support for the capture of still pictures during recording
Bright and clear 3-inch, approximately 921k-dot tilting TFT LCD monitor
User friendly operational controls
Nikon P500 Digital Camera Specifications:
Effective Pixels : 12.1 million pixels
Lens: f=4.0-144mm / F3.4-5.7
Digital Zoom: Up to 4x
Focus Range: Normal mode – 50cm, Macro -10cm
Internal memory (approx. 102MB)
SD memory cards (SDHC and SDXC compliant;)
Shooting Modes: Auto mode, Scene modes, Movie mode, P, S, A, and M exposure modes, Night Landscape, Night Portrait, Backlit Scene HDR, Smart Portrait, User Setting Preset
Scene Modes: Scene Auto Selector, Portrait, Landscape, Sports, Party/indoor, Beach, Snow, Sunset, Dusk/dawn, Close-up, Food, Museum, Fireworks show, Black and White Copy, Panorama, Pet portrait
Capture Modes: Single, Continuous H
Exposure Metering System: 256-segment matrix metering, Center-weighted metering, Spot metering, Spot AF area
Sensitivity: Auto (auto gain ISO 160-800), Manual selection: ISO 160, 200, 400, 800, 1600, 3200
White Balance Auto, Preset manual, Daylight, Incandescent, Fluorescent, Cloudy, Flash
Self-Timer: 2 and 10 sec. duration
Rechargeable Li-ion Battery EN-EL5
AC Adapter EH-62A
Battery Life: Approx. 220 shots
Dimensions: 115.5x 83.7×102.5 mm
Weight: 494gm

Ebrahim Ansari said...

//இது
வேர்ப்பலாவா - நம்ம
ஊர்ப்பலாவா?//


நம்ம ஊர் பலா எப்போதும் வேர்பலாதான்- அதிலும் இது வீட்டின் வேர்ப் பலாவோ?

N. Fath huddeen said...

//அய்யாவின்
பூச்சிகள்
அறிக்காமல் இருந்தால்!//

உண்மை தான்!

//அரசியை அழைத்துக் கொண்டு
தாத்தா வீட்டுக்குள் நுழைந்திட ஆசையோ !?//

Jo! When did you become தாத்தா ?

அப்துல்மாலிக் said...

//மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )// அந்த நாள் என்ன நடக்குது என்று மனது பதைபதைக்காமல் இருந்தா சரிதான்...

படங்கள் அருமை காக்கா

ZAKIR HUSSAIN said...

Beautiful Photos.....சாகுல் எடுத்ததால் ஆச்சர்யமில்லை.

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா,
புகைப்படங்கள் அனைத்தும் அருமை. ஆனால் சிட்டுக் குருவி என்று சொல்லி விட்டு கொண்டலாத்தியைப் போட்டு இருக்கிறாயே?
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

Shameed said...

N.A.Shahul Hameed சொன்னது…

//அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா,
புகைப்படங்கள் அனைத்தும் அருமை. ஆனால் சிட்டுக் குருவி என்று சொல்லி விட்டு கொண்டலாத்தியைப் போட்டு இருக்கிறாயே?
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed//

வலைக்கும் முஸ்ஸலாம்
சிட்டுக்குருவிக்கு வயசாயிடுச்சுன்னா இப்படித்தான் இருக்கும் கொண்டலாத்தி மண்டலாத்தின்னு சொல்லி லத்தியை சொலட்ட கூடாது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு