நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம் – 20 2

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, ஆகஸ்ட் 20, 2016 | , , , ,

விழுஞாயிறு


நாள்முழுதும் உழைத்துழைத்து நாடி தளர்ந்து
  நலிவுற்ற உயிர்களுக்கு நல்ல ஓய்வைக்
கேள்வியின்றி இரவதனைப் போர்வை யாகக்
  கிழக்குமேற்கும் மங்கிடவே ஆக்கித் தந்தே
நாள்முடித்து நற்கடமை செய்யும் ஆதவன்
  நாமுறங்கிப் புத்துணர்வை இன்ப மாக
மீள்வருகை நாளைஎன்ற எதிர்பார்ப் போடு
  மேற்றிசையில் மறைகின்றான் இறைநாட் டத்தால்.

அதிரை அஹ்மத்

2 Responses So Far:

crown சொன்னது…

மேற்றிசையில் மறைகின்றான் இறைநாட் டத்தால்.
--------------------------------------------
இருக்கும் நாம் இறப்பின் பின் உயிர் வாராது ஆனாலும் சூரியனோ சந்திரனோ மறைந்தபின் வரும் மறுபடியும் . அந்த அஃரிணைக்கு அல்லாஹ் கொடுத்த வாழ்வு தினம் இறப்பதும், மறுனாள் பிறப்பதும்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு