Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 050 13

அதிரைநிருபர் பதிப்பகம் | August 05, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

சந்திக்கும்போது கைகுலுக்குதல்

''இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து, அவ்விருவரும் கைகுலுக்கினால், அவ்விருவரும் பிரியும் முன் அவ்விருவரின் குற்றம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 887)

''நன்மையானவற்றில் எதையும் நீ குறைவாக எண்ணிவிடாதே! (அது) உன் சகோதரனை சிரித்த முகத்துடன் நீ சந்திப்பதாக இருப்பினும் சரியே! என்று என்னிடம் நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 892)

''நபி(ஸல்) அவர்கள், ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். (அப்போது அங்கிருந்த) அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்கள், எனக்கு பத்து குழந்தைகள் உண்டு. அவர்களில் எவரையும் நான் முத்தமிடமாட்டேன் என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ''இரக்கமில்லாதவன், (இறைவனால்) இரக்கம் காட்டப்படமாட்டான்'' என்று கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 893)

நோயாளியை நலம் விசாரித்தல்

"நோயாளியை விசாரித்தல், ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல், தும்மியவனுக்கு பதில் கூறுதல், நீதியைப் பேணுதல், அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு உதவுதல், விருந்திற்கு அழைத்தால் செல்லுதல், ஸலாமை பரப்புதல் ஆகியவற்றை எங்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: பராஇ இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 894)

''ஒரு முஸ்லிம் மீது மற்றொரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து : 1) ஸலாமிற்கு பதில் கூறுதல், 2) நோயாளியை விசாரித்தல், 3) ஜனாஸாவில் கலந்து கொள்தல், 4) விருந்தை ஏற்றுக் கொள்ளல், 5) தும்மியவருக்கு பதில் கூறுதல் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 895)

''நிச்சயமாக அல்லாஹ், மறுமை நாளில், ''ஆதமின் மகனே! நான் நோயாளியாக இருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?'' என்று கேட்பான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். நான் எப்படி உன்னை நோய் விசாரிப்பது?'' என்று மனிதன் பதில் அளிப்பான். ''என் அடியான் இன்னவன் நோயாளியாக இருந்தான். அவனை நீ விசாரிக்கவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனின் நோய் பற்றி விசாரித்திருந்தால், அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று அல்லாஹ் கூறிவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்தேன். எனக்கு நீ உணவு தரவில்லையே!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு எப்படி உணவளிப்பேன்?'' என்று மனிதன் கேட்பான்.

''என் அடியான் இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டு வந்து, அவனுக்கு நீ உணவு தரவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனுக்கு உணவு தந்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று இறைவன் கேட்டுவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். எனக்கு நீ குடிக்கத் தரவில்லை!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு நான் எப்படி குடிக்கத் தருவேன்'' என்று மனிதன் கேட்பான். ''என் இன்ன அடியான் உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ குடிக்கத் தரவில்லை. நீ அவனுக்கு குடிக்கத் தந்திருந்தால், அதை என்னிடம் (இன்று) நீ பெற்றிருப்பாய் என்பதை அறியவில்லையா? என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 896)

''நோயாளியை நலன் விசாரியுங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். அடிமையை விடுவியுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 897)

''ஒரு முஸ்லிம், தன் முஸ்லிமான சகோதரனை நலன் விசாரித்தால், அவனிடமிருந்து அவன் பிரியும் வரை சொர்க்கத்தின் 'குர்ஃபத்'ல் இருந்து கொண்டிருப்பான்'' என நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தின் ''குர்ஃபத்'' என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது ''சொர்க்கத்தின் பழம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 898)

நோயாளிக்காக பிரார்த்திக்க வேண்டியவை:

''நான் என் உடலில் ஏற்பட்ட வலி குறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது என்னிடம், உன் உடலில் வலி உள்ள இடத்தில் உன் கையை வைத்து, பிஸ்மில்லா என மூன்று முறை கூறு! பின்பு, ''அஊது பி இஸ்ஸத்தில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாஃதிர்'' என்று ஏழு முறை கூறு! என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

துஆவின் பொருள்:

அல்லாஹ்வின் கண்ணியம் அவனது சக்தி மூலம் நான் அடைந்துள்ள மற்றும் பயப்படுகின்ற தீமையை விட்டுப் பாதுகாவல் தேடுகிறேன். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லா என்ற உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 905)

''நபி(ஸல்) அவர்கள், ஒரு கிராமவாசியை நோய் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர்கள் எவரையேனும் நோய் நலம் விசாரிக்கச் சென்றால், ''லா பஹ்ஸ தஹுருன் இன்ஷா அல்லாஹ்'' என்று கூறுவார்கள்.

துஆவின் பொருள்:

பரவாயில்லை! அல்லாஹ் நாடினால் குணமாகும்''.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 907)

மரண வேளையில் ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' வை சொல்லித் தருதல்:

''ஒருவரின் இறுதிச் சொல்லாக ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' ஆகிவிடுமானால், அவர் சொர்க்கத்தில் நுழைவார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆத் (ரலி)  அவர்கள் (அபூதாவூது, ஹாகிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 917)

''உங்களில் இறந்து விடும் நிலையில் உள்ளவர்களுக்கு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்பதைக் சொல்லிக் கொடுங்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 918)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. (102-1,2)

அவ்வாறில்லை! அறிவீர்கள்.  பின்னரும் அவ்வாறில்லை மீண்டும் அறிவீர்கள். (102-3,4)

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். (102-5,6)

பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். (102-7)

பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (102-8)
(அல்குர்ஆன்: 102 – அத்தகாஸுர் - அதிகம் தேடுதல்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

13 Responses So Far:

Ebrahim Ansari said...

Assalaamu alaikkum.

Jasak Allah Hairan for the spiritual medicine on a fine fresh Friday morning.

Ebrahim Ansari.

Aboobakkar, Can. said...

'என் அடியான் இன்ன நபர் உன்னிடம் உணவு கேட்டு வந்து, அவனுக்கு நீ உணவு தரவில்லை என்பதை அறியவில்லையா? நீ அவனுக்கு உணவு தந்திருந்தால், அங்கே என்னைக் கண்டிருப்பாய் என்பதை நீ அறியவில்லையா?'' என்று இறைவன் கேட்டுவிட்டு, ''ஆதமின் மகனே! உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன். எனக்கு நீ குடிக்கத் தரவில்லை!'' என்று கூறுவான். ''இறைவா! நீயோ உலக மக்களின் இறைவன். உனக்கு நான் எப்படி குடிக்கத் தருவேன்'' என்று மனிதன் கேட்பான். ''என் இன்ன அடியான் உன்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ குடிக்கத் தரவில்லை. நீ அவனுக்கு குடிக்கத் தந்திருந்தால், அதை என்னிடம் (இன்று) நீ பெற்றிருப்பாய் என்பதை அறியவில்லையா? என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 896)

'நமதூரில் சமீபத்தில் நடந்த பல திருமண வைபவங்களில் பசித்த ஏழைகளை தவிர்த்து கெவ்ரவத்தின் பெயரில் வசதி படைத்த ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களுக்கு மட்டுமே சுமார் ஒருவாரகாலம் இரவு பகல் என தொடர் விருந்து கொடுக்கப்பட்டது'.

sabeer.abushahruk said...

நல்லுபதேசங்களை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி, அலாவுதீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பதிவில் பல மடங்கும் வயதில் இன்னொரு மடங்கும் பெற்று ஆரோக்கியம் மிளிர வாழ்த்தும் துஆவும்.

//1) ஸலாமிற்கு பதில் கூறுதல், 2) நோயாளியை விசாரித்தல், 3) ஜனாஸாவில் கலந்து கொள்தல், 4) விருந்தை ஏற்றுக் கொள்ளல், 5) தும்மியவருக்கு பதில் கூறுதல்//

இதில் நெருக்கம், உறவில் கட்டாயம் தவிர்க்க(புறக்கணிக்க) வேண்டிய விருந்து என எதுவும் இருக்கா காக்கா?

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

பதிவின் தனது அரை சதம் கடந்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

மிக அற்புதமான பதிவு, நான் தொடர்ந்து இந்த பதிவை காணத்தவரியதில்லை. உங்களுக்கு மேலும் அல்லாஹ் நல்சுகத்தை நல்கி அதன்படி நேரத்தை ஒதுக்கி மேன்மேலும் வளர்ந்து இப்பதிவு முழு சதத்தை எட்டி அ.நி பதிப்பகம் நூலாக அரங்கேற்றிட என்னுடைய வாழ்த்துக்கள் கலந்த துஆ.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாரம் ஒருமுறை வைரம் பதிக்கும் அமைதி பதிவு !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !

Shameed said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா !

50 வது பதிவிற்கு வாழ்த்துகள்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும்:ஜஸாக்கல்லாஹ் ஹைர்! அன்புச்சகோதரர் இர்பானின் துஆவுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது… இதில் நெருக்கம், உறவில் கட்டாயம் தவிர்க்க (புறக்கணிக்க) வேண்டிய விருந்து என எதுவும் இருக்கா காக்கா?

அன்புச்சகோதரருக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)!

நமது குடும்பங்களில், நண்பர்கள் வட்டங்களில் திருமணம், வேறு எதுவும் நிகழ்ச்சிகளில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை நடத்தி விருந்து வைத்தால் இந்த விருந்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

விருந்தை தவிர்க்க பலவித போராட்டம் ஏற்படும். உறுதியான ஈமான் உள்ளவர்களால் மட்டும்தான் தவிர்க்க முடியும்.

சொந்தம் போய்விடும், நட்பு போய்விடும் என்று ஆதரித்தால் மறுமையில் வல்ல அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் உறுதியான ஈமானைத் தரட்டும்.

அதிரைக்காரன் said...

பெருமானார் நோயுற்ற கிராமவாசியை நலன்விசாரித்தது குறித்த ஹதீஸில்لا بأس طهور (லா பஃஅஸ தஹூர்) என்பதன் சரியான மொழியாக்கம் முழுமையாக இல்லையோ என்று நினைக்கிறேன் காக்கா. Don't worry it is for Purification inshallah என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது.

தகவலுக்காகவே இதைக்குறிப்பிட்டேன்.ஜஷாக்கல்லாஹ். தொடர்ந்து எழுதுங்கள்.

அதிரைக்காரன் said...

பரவாயில்லை என்ற,சொல்லின் அர்த்தம் தேடியபோது இணையத்தில் கண்டது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வ அலைக்கு முஸ்ஸலாம்.
மேலான பதிலுக்கு நன்றி காக்கா.
ஈமானுடைய உள்ளத்துடன் தவிர்க்க வேண்டிய விருந்தை தவிர்த்து அல்லாஹ்வின் அரவணைப்போடு வாழ்வோமாக!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு