இயற்கை இன்பம் – 19

எழுஞாயிறு 

உலகமக்கள்   யாவருக்கும்   மற்று   முள்ள
                உயிர்களுக்கும்   உணவளிக்கப்   பொதுமை   யாக்கி
அலகிலாத   அருட்கொடைகள்   அள்ளித்   தந்தே
                அதிகாலை   ஆதவனை   வல்ல   இறைவன்
ஒலியிலாமல்   ஒளியுடனே   கிழக்கில்  அந்த
                ஓரிறைவன்   வகுத்திட்ட   திட்டத்  தோடும்
பொலிவுடனும்   உலகியங்கத்   தூது  ரைக்கும்  
                பொன்மகனாய்    எழிலுடனே   உதிக்கின்  றானே.

அதிரை அஹ்மத்

கருத்துகள் இல்லை