பிஸ்மில்லாஹ்...
கடந்த ஆண்டு விடுமுறையில், இதே ஆகஸ்டு மாதம்!
தினமும் ஃபஜ்ர் தொழுதுவிட்டு ஓதவேண்டிய தஸ்பீஹ், திக்ர் மற்றும் துஆ
யாவும் முடித்துவிட்டு நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம்.
தினமும் ஒவ்வொரு பகுதி, ஒவ்வொரு திசை.
ஒருநாள் முத்துப்பேட்டை சாலையில் நசுவினி ஆற்றுப்பலம் வரை. மறுநாள் ராஜாமடம் ஏரி வரை. அடுத்த நாள் மதுக்கூர் சாலை. இப்படியாக பல பகுதிகள், பல திசைகளில் நடை.
அன்று ஒரு நாள் C M P லைன் வழியாக பக்கத்து கிராமத்தை அடைந்து திரும்பி வரும் வேலையில் ஃபாரூக் மாமாவை சந்தித்து என்னை நானே அறிமுகம் செய்துகொண்டு (காரணம் பல ஆண்டுகள் கழித்து சந்திதோம்) தெருவில் நடந்த நிகழ்வுகள், குடும்ப செய்திகள் யாவற்றையும் நின்று கொண்டே சுமார் ஒரு மணி நேரம் பேசி, நடைப் பயிற்சியை மறந்தோம். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். எனக்கும் பிரிந்த சொந்த மொன்று வந்து சேர்ந்த சந்தோஷம். இழந்த ஒன்றை பெற்ற மகிழ்ச்சியை அவர்கள் அடைந்தது போன்ற ஓர் உணர்வை அவர்களின் முகத்திலிருந்து நான் அறிந்துகொண்டேன்.
சவூதிக்குப் புறப்படுவதற்கு முன் ஒரு நாள்! கால்கள் நடந்தது ஊரின் பெரிய ஜுமுஆ பள்ளி எனப் போற்றப்படும் மேலத் தெரு ஜுமுஆ பள்ளியைத் தாண்டி நடந்தேன். சானாவயல் வந்தது. அதனையடுத்து ரயில்வே கேட் வரைச் சென்று திரும்பினேன். திரும்பி வரும்போது ஓர் ஆழ்ந்த கவலை மேலிட்டது. மாஷா அல்லாஹ் ஊர் பல்கிப் பெருகிவிட்டது. குறிப்பாக மேலத் தெருவின் பெருக்கம் பக்கத்து கிராமம் வரை சென்றுவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்! ஆனால், "ஜுமுஆ பள்ளியைத் தவிர வேறு எந்த பள்ளிவாசலும் இங்கே இல்லையே. தொழுவதற்கு சுமார் 1 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளதே" என்பது தான் அந்தக் கவலை !
இந்தக் கவலையை யாரிடம் சொல்வது என்ற நினைப்பிலேயே திரும்பி வந்துகொண்டிருந்தேன். இதற்குச் சரியான ஆள் சகோ. ஹலீம் தான் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். தூரத்தில் ஒருவர் நடைப்பயிற்சிக்கு ஏற்றாற்போல் ஷூ அணிந்து வருவது தெரிந்தது. நெருங்கி வந்த போதுதான் ஆச்சர்யம், நான் நினைத்து வந்த அதே சகோ. ஹலீம். வழக்கமாக நான் அவரை செயலாளர் என அழைப்பேன். காரணம் ABM தமாம் கிளையின் சிறந்த செயலாளராகப் பல ஆண்டுகள் பொறுப்பேற்று செயல்பட்டார் என்பதற்காக! கிட்டே வந்ததும் சலாம் கூறி நலம் விசாரித்து என்னுடைய கவலையைச் சொன்னேன். அதற்கு அவர்கள்: அதோ சுடுகாடு தாண்டி ஓர் இடம் பள்ளிக்காக ஒதுக்கி இருக்கிறார்கள். கூடிய விரைவில் கட்டுமானப் பணி தொடரும் எனக் கூறினார். மகிழ்ச்சி! அவசரகமாக தொடங்குங்கள் எனக் கூறிவிட்டு விடைபெற்றுத் திரும்பினேன்.
அடுத்த நாள் பயணம், சவூதி வந்து சில மாதங்கள் கழிந்தது. நமதூர் வலைத்தளத்தில் ஒரு செய்தி: "சானாவயல் பகுதியில் ஒரு சகோதரர் தனது சொந்த இடத்தில் பள்ளிவாசல் நிர்மானித்துள்ளார்" என்பது தான் அது! மிக்க மகிழ்ச்சியடைந்து அந்தச் செய்தியில் எனது கமென்ஸ்ஸும் போட்டேன். அந்தச் சகோதரருக்கு எனது துஆவும் பாராட்டும்.
அதேபோல், இந்த வருட விடுமுறையில் ஷாதுலிய்யா புதுப்பள்ளியில் லுஹர் தொழுது கொண்டிருக்கும் போது ஆட்டோவில் ஒரு விளம்பரம்: சானாவயலில் அன்னை ஃபாத்திமா (ரழி) மஸ்ஜிது என்ற செய்தி மிகவும் ஆச்சரியமான மகிழ்வைத் தந்தது. கடந்த ஆண்டு நாம் கவலைப்பட்டோம். அல்ஹம்துலில்லாஹ்! இந்த வடரும் அந்தப் பகுதியில் இரண்டு இறையில்லங்கள்.
சரியாக, போனவருடம் போல் புறப்படுவதற்கு முன் ஒரு நாள் அதே பகுதிக்குச் சென்று இரண்டு இறையில்லங்களையும் பார்வையிட்டு வந்தேன். அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கிடையில் ஒரு சகோதரர் சொன்னர் "அடுத்த வருடம் வரும்போது இன்ஷாஅல்லாஹ் இன்னுமோர் மஸ்ஜிது கூடுதலாக இருக்கும் என்று!
ஆம்! மஸ்ஜிது தேவையான பகுதிதான் அது. கூடிய விரைவில் திறப்பு விழா அழைப்பிதழ் வரும்.
பள்ளிவாசல்கள் பல்கிப் பெருகுவது சந்தோஷமே! அவற்றில் பித்அத்கள் இல்லாதவையாகத் திகழ வைப்பது அந்தந்த நிர்வாகிகளின் பொறுப்பாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது எண்ணங்களைத் தூய்மையாக்கி, இஹ்லாஸுடன் பணிகளாற்ற அருள்புரிவானாக. ஆமீன்.
அபூஹாமித்
அல்லாஹ் நாடினால் மீண்டும் சந்திப்போம்…
12 Responses So Far:
மேற்கொண்டு 2 அல்லது 3 பள்ளிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளதென நினைக்கிறேன். (கரிசல்மணி குளம் பகுதியில் ஒன்று, த.அ கொல்லையில் ஒன்று).
தொழுமிடங்கள் இல்லாத பகுதிகளில் புதிதாக ஏற்பாடு செய்வது அவசியமே. ஏற்கனவே இருக்கும் பகுதிகளில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அருகருகே உண்டாக்காமல், இல்லாத பகுதிகளில் உண்டாக்கலாம்.
அழகான நடை!
எழுத்து நடையையும் பயிற்சி நடையையும் சொல்கிறேன்.
நல்ல நடை ..நல்ல செய்தி ..
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள தம்பி பத்ஹுத்தீன்
எளிமையான எழுத்து நடை. இனிமையான செய்திகள். பயன்பாடான விளைவுகள்.
மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்ஷா அல்லாஹ்.
கருத்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை, கூடிய விரைவில் சந்திப்போம்
நடைப்பயணத்தில் வீசிய நறுமணமும், நற்குணமும்..
Waaw! CONGRATS MY DEAR! I asked yr brother
மகனும் தந்தையும் இட்ட கருத்திற்கு நன்றி என்றால் மதிப்பாகாது. ஏனெனில் முதலில் மகனுடைய கருத்து வந்திருக்கு, ஜசாக்கல்லாஹ்!
ஆனால், இதை கொஞ்சம் மதிப்பாக சொல்ல நாடி திருத்தி இல்லை, இல்லை திருப்பிப் போட்டுச் சொல்கிறேன்.
தந்தையும் மகனும் இட்ட கருத்திற்கு மிக்க நன்றி. ஜசாகுமுல்லாஹு ஹைரா.
அஸ்ஸலாமுலைக்கும். நினைத்தது நடைமுறைக்கு வந்ததுதான் மிக,மிக சந்தோசம்!
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
மிக்க நன்றி சகோ.கிரௌன் அவர்களே.
மாஷா அல்லாஹ், உங்களுடைய இந்த கட்டுறை மிகவும் அருமை, உங்களோடு நாமும் நடை பயிற்சியில் கலந்துகொண்டது போல் இருந்தது. மேலும் எழுதுங்கள், இங்கு மட்டும் அல்ல மற்ற நாழிதல்களிலும் உங்களுடைய இப்படிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
நம்முடைய சமுதாயத்தில் இப்படிப்பட்ட பொருள் தியாகம் செய்வதற்கு மக்கள் இருக்கிறார்கள், அல்லாஹ் அவர்களுக்கு மேன்மேலும் பரக்கத் செய்வானாக.
மிக்க நன்றி WELL WISHER .
அடிக்கடி தமிழ் ஹிந்துவில் எனது கமெண்ட்ஸ் வரும் பாருங்கள். இப்போது கூட "புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்" கட்டுரையில் வந்திருக்கிறது.
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8990798.ece?utm_source=vuukle&utm_campaign=vuukle_referral#vuukle_டிவி
380 abuhaamid
//சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது// என்பது உண்மையே. மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதும் இதன் அடுத்த பக்கம். நாட்டில் பல நூறு மொழிகள் இருக்கும் போது ஒரே கல்விக் கொள்கை வேலைக்கு ஆகாது.
2 days ago (7) · (4) reply (0)
Sureshkumar · SENTHIL · Sathiamoorthi · JR · ahmad · Shanmugam · Beniton Up Voted
raj · Balasreenivasan · sridharan · vetrivel Down வோட்டெட்
Post a Comment