கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு, இந்தியாவுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.
சீனாவிடமிருந்து எழுந்த பெரும் அச்சுறுத்தலை சமாளிக்கப் போதுமான நிதி இந்திய ராணுவத்திடம் இல்லாததால் அதனை திரட்ட ஆரம்பித்தார், லால் பகதூர் சாஸ்திரி. அன்றைய இந்தியாவின் பிரதமர் அவர்.
இதற்காகவென்று தேசிய பாதுகாப்பு வைப்பு நிதி (National Defense Fund) ஒன்றை ஏற்படுத்திய இந்திய அரசு, அதன் மூலம் செல்வ செழிப்புள்ள இந்திய குறுநில மன்னர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
ஆனால், தேவையைப் பூர்த்தி செய்யும் படியான உதவிகள் எங்கிருந்தும் வரவில்லை.
ஆபத்தான நிலைமையைப் புரிந்து பதைபதைத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி உடனடியாக ஹைதராபாத்திற்கு விரைந்தார். இந்தியாவின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல மனிதர் அங்கிருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார் லால் பகதூர் சாஸ்திரி.
இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி வள்ளல் உஸ்மான் அலீயை சந்தித்தபோது...அவர் சென்று சந்தித்தவர் ஹைதராபாத் நிஜாம் மிர் உஸ்மான் அலீ கான் (Huzoor Nizam Mir Osman Ali Khan). நேரில் ஹைதராபாத் நிஜாமை சந்தித்த பிரதமர், நிலைமையை விளக்கினார்.
கூர்ந்து கேட்டுக் கொண்ட ஹைதராபாத் நிஜாம் மறுபேச்சு ஏதும் பேசாமல் எழுந்தார். தனது கருவூலத்திலிருந்து ஐந்து டன்கள் எடையுள்ள தங்கத்தை உடனடியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்காக அளிக்க உத்தரவிட்டார். (வழங்கிய நிதி இன்றைய மதிப்பீட்டின்படி 1600 கோடிகளுக்கும் மேல்)
ஹைதராபாத் நிஜாமின் இந்த உத்தரவு இந்தியாவையே உலுக்கியது. இந்திய பாதுகாப்பு நிதிக்காக உதவி கேட்டால் தனது சொத்தின் ஒரு பகுதியையே கொடுத்து விட்டாரே இந்த மனிதர் என்ற பேச்சு எங்கும் பரவியது.
இன்றைய தேதிவரை இந்தியாவில் எந்த ஒரு பிரமுகரோ ஒரு நிறுவனமோ கொடுத்திராத தொகையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, மிகப் பெரிய கொடை வள்ளலாய்த் திகழ்ந்த ஹைதராபாத் நிஜாம், கடந்த பெப்ரவரி 24, 1967 அன்று மறைந்தார்.
அன்று இந்தியாவை பலப்படுத்திய இந்த நிதி பலர் அறிந்திராத நிகழ்வு. முந்தைய ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறி புதிய ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இந்திய வரலாற்று ஆவணங்களை எரித்து விடலாம். அழித்து விடலாம். ஆனால், நடந்த காலத்திற்குச் சென்று திருத்தி விட முடியாது என்பதே உண்மை.
அபூ ஸாலிஹா
3 Responses So Far:
மோடிகள் படிக்க வேண்டிய கட்டுரை
இந்த சரித்திரப்புகழ் நிகழ்வு விஜய் டீவீ டி.டி. க்கு தெரியுமா?
அருமையான கட்டுரை வாழ்த
Post a Comment