Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வள்ளுவ, காந்தி நாட்டு இஸ்லாமியன்... நுனிப்புல் -1 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 09, 2016 | , , , , ,

(முன்குறிப்பு ;- சந்தேகேமே வேண்டாம் இது முழுக்க நுனிப்புல் மேய்ச்சல்தான் .ஆனால் இந்த எழுத்தின்  எண்ணங்கள்  தொலை நோக்குடவை .ஆழ்ந்த திறன் பெற்றவர்கள் இதை விரிவாக்கம் அல்லது திருத்தம் செய்யலாம் )

மொழி :-

நாம் நிலைக்கொண்டிருக்கும் நம்  மண்ணின் மொழியான தமிழை மிக நாம் மிக நுட்பமாக அணுக வேண்டும் .நாம் பேசும் தமிழ் மொழியை குறித்து தெளிவு வேண்டும் .ஆராய்தல் மிக அவசியம்.

இது ஒரு பொதுவான மொழியாகும் .நமக்கும் ,சகோதர இந்துக்கள் ,,இந்துத்துவாவினர் (மனு தர்மத்தினர் ),கிறிஸ்தவர்கள் ,மற்றும் சிலருக்கும் தமிழ் பொதுவான மொழியாகும் . 

நீண்ட கால மற்றும் நிகழ் கால தமிழை திருவள்ளுவர் மற்றும் பாரதியை கடக்காமல் அறியமுடியாது .இதில் நாமறிந்த வரையில் திருவள்ளுவரின் தமிழில் மத அடையாளங்கள் இல்லை (தற்போது திருவள்ளுவரை இந்துத்துவாவில் (இந்துக்கள் அல்ல, மனு தர்மத்தினர்) அங்கமாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன). தமிழக பகுதிகளும், தமிழும் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. மனு தர்மத்தினர் தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்த உடன் தமிழை மெல்ல மெல்ல ஆக்ரமித்து கொண்டதன் பாரதூர விளைவுதான் பாரதியாரின் தமிழில் சுதந்திரம், மானுட கவிதைகளுடன் மதம் சார்ந்த தமிழும் எட்டிப்பார்த்தது .அது பாரதியாரின் தவறு அல்ல .இங்கு தான் நம்மை நாமே ஆயிரமாயிரம் கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது .அதுதான் தமிழுக்கான இஸ்லாமியரின் பங்கு என்ன ? விடை வெகு சொற்பமே !.இங்கு தான் நாம் மிக அலட்சியமாக இருந்து விட்டோம் .இருக்கிறோம் .நாம் உள்வாங்கிய அழகிய நம் மார்க்கத்தின் இலக்கியங்களை முழு அளவில் தமிழ் மயமாக்க வில்லை .

அரபி என்னும் மொழியை நாம் வெறும் மொழியாக பார்க்க தவறியதுதான் நாம் தமிழை முழுமைக்கொள்ள முடியாமல் போனது.கண்ணியமிக்க நம் நபி(ஸல் ) அவர்களின் இறுதிநாட்களில் மொழிகள் குறித்த அவர்களின் பேச்சு மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டியது .

அரபியைப்போல் தமிழும் மிக ஆழமானவை .நம் அழகிய மார்க்கத்தை அரபி மொழியின் அடிவேர் வரை எடுத்து சென்றது போல் தமிழில் இதுவரை இல்லை .தமிழில் உள்ள பல வகையான மொழியின் உட்கூறின் வடிவங்களிலும் நம் மார்க்கத்தின் மகிமைகள் வேர் விட செய்தல் மிக அவசியம் .நாம் பேசும் தமிழை பொதுவானதாக வைத்திருப்பதை நாம் உறுதி செய்தல் அவசியம் .

நாம் எழுதும் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும் போது உறுதி செய்தல் அவசியம் .எவ்வாறுஎனில் ,

1.சகோதர இந்துக்களின் இலக்கியமோ அல்லது காவியங்களோ வருமானால் அதை நம் சகோதர இந்துக்களின் (இந்துத்துவாவினர் அல்ல) தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும்.

2.இந்துத்துவாவினரின் (மனு தர்மத்தினரின்) இலக்கியங்களை  இந்துத்துவாவினரின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

3.கிறிஸ்தவர்களின் இலக்கியங்களை கிறிஸ்தவர்களின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

மேலே சொல்லப்பட்டதைபோலே நம் மார்க்கத்தின் இலக்கியங்களை இஸ்லாமியரின் தமிழ் இலக்கியம் என்றே பதிய வேண்டும்.

நம் மொழியின் மீது இந்த புரிதல் அவசியம். இந்த புரிதல்கள் இல்லையென்றால் தற்போதைய பெருபான்மை வாதம் சத்தத்தில் நம் தமிழ் மொழி நம்மை விட்டு அந்நியப்படுத்தப்படும் .

--வள்ளுவ ,காந்தி நாட்டு இஸ்லாமியன்--

-harmys-
Abdul Rahman

5 Responses So Far:

sabeer.abushahruk said...

ஹார்மிஸ்,

உங்களையும் என்னைப்போன்றவர்களெல்லாம் கட்டுரை எழுதினாலும் அது கவிதை பழக்கத்தில் ரத்திணச் சுருக்கமாகவே அமைந்து விடுகிறது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ப்ற்றிய விழிப்புணர்வு இன்னும் விரிவாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

நல்ல முன்னெடுப்பு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நண்பா! நம்ம ஜமாலுதீன் ஃபேஸ்புக்ல சமீபத்தில் எதோ எழுத போய் படாத பாடுபட்டாப்ல எப்புடி திருவள்ளுவரு உத்தர்காண்ட்ல சமீபத்துல ஹிந்தி (தமிழ் புலவராதலால்) தெரியாமல் கஸ்டப்பட்டாரோ அது போல.

Ebrahim Ansari said...

1.சகோதர இந்துக்களின் இலக்கியமோ அல்லது காவியங்களோ வருமானால் அதை நம் சகோதர இந்துக்களின் (இந்துத்துவாவினர் அல்ல) தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும்.

2.இந்துத்துவாவினரின் (மனு தர்மத்தினரின்) இலக்கியங்களை இந்துத்துவாவினரின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

3.கிறிஸ்தவர்களின் இலக்கியங்களை கிறிஸ்தவர்களின் தமிழ் இலக்கியம் என்றே நாம் பதிய வேண்டும் .

ஆம். அதுதான்.

தமிழனுடைய ஆதி மதத்தின் கருத்துக்கள் இஸ்லாமியக் கொள்கைகளைத் தாங்கியே நின்றன என்பதற்கு உதாரணம்

ஒன்றே குலம் ஒருவனே தேவன் - என்பதும்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்பதும்
யாதும் ஊரே ! யாவரும் கேளிர் - என்பதும்

வணங்கத் தகுந்த இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதுடனும்
நாம் மனித குலத்தை ஒரே ஆத்மாவில் இருந்துதான் படைத்தோம் - என்று குறிப்பிடுகிற இஸ்லாத்தின் கோட்பாடுகளுடன் ஒப்புநோக்கத் தக்கவை.

இன்னும் பலவற்றைக் குறிப்பிடலாம்.

இடையில் வந்து புகுந்த ஆரிய மதம்தான் விஷத்தைப் பரப்பி- மனிதர்களை வேறுபடுத்தி - உருவ வழிபாடுகளை அறிமுகம் செய்து குட்டையைக் குழப்பிவிட்டது.

இவற்றை எழுதினால் ரத்தினச் சுருக்கமாக அமையாது.

இன்ஷா அல்லாஹ் பலர் படிக்கிற நிலை மீண்டும் ஏற்படும்போது எழுத முயற்சிக்கலாம்.

Unknown said...

Thank you Sabeer kakka,Naina and Ibrahim Ansari Kakka for your Valuable understanding comments.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் ரத்தின சுருக்கமாக ரஹ்மானின் தமிழ்! யோசனை சிந்திக்கவைக்கிறது. வள்ளுவர் சொன்னவற்றில் மத அடையாளம் பெரும் பாலும் இல்லை என்பது உண்மை ஆனாலும் சில சில குறள் நம் நம்பிக்கையை சார்ந்தல்ல என்றாலும் நல்லதை ஏற்று அல்லதை ஒதுக்கி பார்தால் குறள் அருமையானது.தம் யோசனை அடிப்படை உரிமை சம்பந்த பட்டது. நிலத்திற்கு பட்டா போன்றது அருமையான சிந்தனையான ஆக்கம் வெகு நாட்களுக்குப்பின்.வாழ்த்துக்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு