Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுதந்திரமான சுதந்திரம் ! (இன்று ஆகஸ்ட் - 15) 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2011 | ,

இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தை கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக பள்ளியிலும் அரசு அலுவலகங்களிலும் கொடியேற்றியும் அன்றைய தினம் விடுமுறை என்பதால் சினிமாக்களுக்குச் செல்வதிலும், விடுமுறையை விரும்பிய விதத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடி அத்தினத்தை கழித்து வருகின்றனர்.

நம் இஸ்லாமிய முன்னோர்கள் மற்றவர்கள் செய்யத் துணியாத தியாகங்களை துச்செமென செய்தும், தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாவும் இருந்து மிகவும் அவதிக்குள்ளாகி எப்படியெல்லாம் சிரமப்பட்டு நம் இந்தியா சுதந்திரம் அடைய பின்னால் காரணிகளாக இருந்தார்கள், என்பதை நினவில் கொள்ளாமல் அப்படிப் பெற்ற இந்த சுதந்திரத்தினை பேணிக் காப்பதை தவிர்த்து விட்டு இவர்கள் இப்படியும் (தவறாக) பயன் படுத்தலாமோ !? என்று இன்றைய சூழலில் மண்ணின் மைந்தர்கள் சொல்லாமல் செய்வதை கிழே பார்ப்போம்

எதற்காக பெற்றோம் இச்சுதந்திரத்தை என்பதும் தெரியாது, ஏன் இந்தச் சுதந்திரம் என்றும் தெரியாது, அப்படின்னா சுதந்திரம்னா என்னங்க ?

சமீபத்தில் கண்ணில் பட்ட இவர்களின் சுகாதார சுத்தம் கெட்ட சுதந்திரம் (சு.சு.சு. மாத்தியெல்லாம் யோசிக்கலைங்க !).

குற்றாலத்தில் இயற்கை கொடுத்த அருமையான சூழலில் பருவகால குளியலுக்கு வருபவர்கள் உடம்பு முழுக்க அருவருக்கத்தக்க (கோழி பொறித்த) எண்ணையை தேய்த்துக்கொண்டு  ஒருவித காட்டுக்கத்து (காடுகளை கண்டு கொண்டதை உறுதிப்படுத்திக் கொள்ள) கத்திக்கொண்டு காட்டு மாடுகள் போல் குளிக்குமிடத்திற்குள் நுழைவது.

பொது இடம் என்று கூட பார்க்காமல்  உச்சா (சிறுநீர்) போவதும் அதற்கு அடுத்த கட்ட செயலுக்கு முயற்சித்து அதிலும் வெற்றிகொடி கட்டி  திருப்தி அடைவது.

நிலக்கரி எஞ்சின் புகை (இன்னும் மறக்க முடியலையே கம்பன் படுத்தி எடுக்கிறானே) இடுவது போல் அடுத்தவர் முகத்துக்கு நேராக பீடியை / சிகரெட்டை பத்தவைத்து புகைப்பது புகையிட்டு  முடித்தவுடன் காற்று அடிக்கும் திசையை எதிர்த்து காரி துப்புவது. அடுத்தவர் யார் அருகில் இருக்கிறார்கள் என்ற சொரனையற்று இருப்பது.

வயத்து வலிக்கு டாக்டரிடம்  காட்ட பஸ்ஸில் போனால் வயத்துவலி போய் தலைவலி வந்து விடுகின்றது அந்த அளவுக்கு பஸ்ஸில் ஓட்டுநரின் சுதந்திரம் வைத்திடும் பாட்டு காட்டுச் சத்தம்

பாயிண்ட் டு பாயிண்ட் (PP) பஸ்ஸில் ஏறிக்கொண்டு நிற்காத இடத்தில் நிறுத்த சொல்லி வம்பு பண்ணுவது. பஸ்ஸில் இடம் இருந்தும்   தூக்கனைங் குருவி கூடு போல படிக்கட்டில் தொங்கி வருவது.

பஸ்ஸின் உள்ளே உட்கார்ந்து கொண்டு வாய் நிறைய வெத்திலையை போட்டுக்கொண்டு பஸ் வேகமாக போகும்போது வெத்திலை-பாக்கு போட்டு அறைத்த எச்சிலை அனைவருக்கும் மழைத் தூறலின் சாரலாய் ஸ்ப்ரே செய்வது.

துப்பாக்கி தோட்டாவிற்கு வெடி மருந்து நிரப்புவதுபோல் மூக்கிற்குள் மூக்கு பொடியை நிரப்பிவிட்டு  கையில் ஒட்டி இருக்கும் மீதிப் பொடியை  அகம்பக்கத்தவருக்கு இலவசமாக காற்றில் பரவ விடுவது.

இடுப்பில் கட்டவேண்டிய வேஷ்டியை சாராயத்தை குடித்துவிட்டு போதையில் தலையில் கட்டிக்கொண்டு மதுக்கடை வாசலில் குப்புற / மல்லாக்க கிடப்பது. தமிழக அரசின் டாஸ்மார்க் கடைகளுக்கு இலவசமாக விளம்பரம் தேடிக் கொடுப்பது, இதனையே ஒரு சிறந்த விளம்பரமாக அரசாங்கமே சர்டிபிகேட் கொடுக்கலாம் (இதனைத்தானே எதிர்பார்த்து திறந்து வைத்திருக்கிறார்கள்).

இரவில் குடித்து விட்டு நடுரோட்டில் அலம்பல் செய்யும் பார்ட்டிகளை வாகனங்கள் உராய்ந்து கொண்டு போவதை  பொதுமக்கள் உற்சகமாக ரசித்து கண்டுகழிப்பதும்.

சாராயம் குடித்தவன் தான் நடுரோட்டில் அப்படி நடந்து போகின்றான் என்று நாம் அலுத்துக் கொண்டே சென்றாலும் மெய்யாலுமே குடிக்காத நற்குடிமகன்கள் அதை மிஞ்சும் விதமாக நடுரோட்டில்தான் சுதந்திரமாக நடந்து செல்கின்றானர்.

இரவு நேரத்தில் வாகன ஓட்டுனர்கள் படுத்தும் அல்லல் இருக்கே ஹெட்லைட்டை போட்டு அமத்துவதும் அப்படி படுத்தும்பாடு இருக்கே அவ்வகையான செயல்கள் அவர்களின் சுதந்திரமென்றும் நம் போன்ற ஸெல்ஃப் டிரைவிங் பார்ட்டி கண்களின் பார்வையை சுதந்திரமாக பறிப்பார்கள்.

அதி(ரையில்)காலை பத்து மணிக்கு (தூங்கி வழிந்து கொண்டு) கல்லூரிக்கு போகும் கோஎஜுகேசன் பார்ட்டிகள் ரோட்டை (ECR) அடைத்துக்கொண்டு நாங்கள் செம்மறி ஆட்டுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிப்பதுபோல் சலசலத்துப் போவது.

இவர்கள் சிங்கப்பூர் / துபாய் அல்லது வேறு நாடுகளுக்கு  போனால்  அங்கு உள்ள சட்டதிட்டங்களை மதித்து நடந்து கொள்கின்றனர் ஆனால் நம் நாடென்று வந்திட்டால் நாட்டிலிருக்கும் சட்ட திட்டங்களை நாமே மீறி நடந்து கொண்டால் நம்மை பொது மக்கள் / நம் செயலைப் பார்ப்பவர்கள் ஒரு ஹீரோவாக (hero) பார்ப்பதாக எண்ணிக்கொண்டு ஜீரோ (zero) தனமான வேலைகளை செய்வதில் முன்னோடியாக இருக்கின்றனர்.

சமீபத்தில் நான், சகோ ஜாகிர், மற்றும் அவரது மகனும் மனோராவுக்கு சென்று இருந்தோம் அங்கே மனோராவில் எங்களை  ஏறிப்பார்க்க அனுமதிக்கவில்லை காரணம் வலுவிழந்து விட்டது(!?) என்று கூறிவிட்டனர்.  இது மட்டும் காரணமல்ல அங்கு வருகின்றவர்கள் ஆண்/பெண் இருவரும் அவரவர்களின் பெயர்களை அல்லது விரும்பிய செயலை அந்தச் சுவற்றில் கிறுக்கி அதன் புராதன தன்மையை நாசம் செய்து விடுகின்றனர். இப்படியான கிறுக்கல் சிற்பிகள் !? ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சரபோஜி மன்னர் அந்த காலத்தில் எவ்வித நவீன வசதிகள் இல்லாத நிலையில் அழகிய இந்த கோபுரத்தை கம்பீரமாக கட்டி அவர் பெயரை அதில் கல்வெட்டில் பதிந்துள்ளார் அதை பார்க்க வரும் இந்த சுதந்திர இந்தியாவின் சுற்றுலா பார்ட்டிகள் ஒரு செங்கல் எப்படி செய்வது என்று கூட  தெரியாத இவர்களால் தன் பெயரை சுதந்திரமாக கிறுக்கி வைப்பதுதான் இந்த சுதந்திரம் கொடுத்த உத்திரவாதம் இவர்களுக்கு !!??


மேலே கண்ட அனைத்தையும்  பாமரன் தான் / பட்டிக்காட்டான் தான் செய்கிறார்கள் என்றில்லை படித்த நன்கு விபரம் அறிந்த அறிவீளிகளும் தங்களுடைய சுதந்திரத்திற்காக எதனையும் கட்டுப் பாடற்று செய்கிறான் / சொல்கிறான் தாய் மண்ணே வணக்கம் என்கின்றான் !

இந்த மண்ணையும் மனிதனையும் அகில உலகையும் படைத்த இறைவனை வணங்க வேண்டும் என்பது ஏன் இன்னும் இவர்களுக்கு  விளங்கவில்லை ???

- Sஹமீத்

15 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சுதந்திரதின வாழ்த்துக்கள்!அல்ஹம்துலில்லாஹ்.

நாட்டின் சுதந்திரத்திற்கு பெருங்காரணியாய் இருந்த இஸ்லாமியர்களை பெரிதும் நினைவு கூர்வோம்.

இந்திய வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அவர்களின் தியாகங்களை மீண்டும் வரலாற்றில் கொண்டுவர அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்ட வேண்டும்.

இஸ்லாத்திற்கு எதிரான சுப்ரமணியசாமி போன்ற கறுப்பு ஆடுகளை வேரறுக்க சூழுரைப்போம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

ஊரில் தங்களை ஒரு 5 மணிநேரம் சந்திருந்திருந்தால் என்னையும் சுந்ததிரமாக ஊர் சுற்ற அழைத்து சென்றிருப்பீர்கள் தானே.

//
குற்றாலத்தில் இயற்கை கொடுத்த அருமையான சூழலில் பருவகால குளியலுக்கு வருபவர்கள் உடம்பு முழுக்க அருவருக்கத்தக்க (கோழி பொறித்த) எண்ணையை தேய்த்துக்கொண்டு ஒருவித காட்டுக்கத்து (காடுகளை கண்டு கொண்டதை உறுதிப்படுத்திக் கொள்ள) கத்திக்கொண்டு காட்டு மாடுகள் போல் குளிக்குமிடத்திற்குள் நுழைவது//

கோழி பொறிந்த எண்ணை... காட்டு மாடு என்று நகலாக எழுது ரசிக்க வைச்சுட்டியே வழக்கம்போல்.

யாசிரே ஊர்ல ஹமித் காக்காவுடன் சுந்ததிரமா சுத்திட்டு வாங்க.. கொஞ்சம் நல்ல இடமா பார்த்து புகைப்படம் எடுங்க நம் ஜாஹிர் காக்காவுடன் போட்டிபோட..

ZAKIR HUSSAIN said...

சாகுல் ...இதுபோன்ற நல்ல சிந்தனைகள் இல்லாததால்தான் ஒரு நல்ல நாடு இப்படி குப்பைத்தொட்டியாகவும், நோய்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

சுற்றுலாத்தலங்கள் இப்போது "பலான" வேலைகளுக்கு பயன்படுத்த காரணம்.,."படிச்சவிங்க"

ரோட்டில் ஒருவரும் இல்லாவிட்டாலும் 'வெறுமனே' ஹாரன் அடித்துக்கொண்டு டிரைவர்கள் ஓட்டுவதால் உண்மையில் தேவைப்படும்போது ஹாரன் அடித்தாலும் யாரும் நகர்வதில்லை [ இது வழக்கமான ஹாரன் என்று நினைத்து விடுகிறார்கள் ]

எப்போது மாறும் இந்த இத்துப்போன சூழ்நிலைகள்.???

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

எஸ்.ஹமீது காக்கா தாங்கள் சுதந்திரத்தைப் பற்றி ரொம்ப சுதந்திரமா எழுதிய விதம் அருமை.

//அதி(ரையில்)காலை பத்து மணிக்கு (தூங்கி வழிந்து கொண்டு) கல்லூரிக்கு போகும் கோஎஜுகேசன் பார்ட்டிகள் ரோட்டை (ECR) அடைத்துக்கொண்டு நாங்கள் செம்மறி ஆட்டுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிப்பதுபோல் சலசலத்துப் போவது//.

ஆடுகளாவது வாகனங்களின் சப்தத்தைக் கேட்டு ஒன்றோடு ஓன்று முட்டி மோதி ஒதுன்குகிறதது.இந்த பார்ட்டிகளோ நாங்கள் சளைத்தவர்களுமட்டுமல்ல.அதைவிடவும் மோசமானவர்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் சொல்லிக் காட்டுவதை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் ECR.ல் சுதந்திரமாக வாகனங்கள் விடவில்லை.விட்டததர்க்குப் பிறகு தெரியும் இவர்களில் எத்தனை பேர் சுதந்திரமாக போய் சேர போகிறார்கள் என்று .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'சு'னாவில் ஆரம்பித்தாலே ஏடாகூடமாகத்தான் இருக்குமோ ?

நேற்றைய தினம் மக்கா மஸ்தில் (சென்னை) சஹர் நேரம் வரை நடந்த "சுதந்திரப் போட்டத்தைல் உலமாக்களின் பங்கு என்ற கருத்தரங்கமும் அதனைத் தொடர்ந்து "சுப்ரமணிசுமாக்கு" கண்டனக் கூட்டமும் நடந்தது"

அருமையான வரலாறு சொல்லப்பட்டது அங்கே ! இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துதுபோல் அமைந்தது.

அதில் தலைமையுரை ஆற்றிய உலமா அவர்களின் சொல்லாற்றலும் அதனைக் கையாண்ட தெளிவான பேச்சும் உடணுக்குடன் கேட்டுப் பெறும் உறுதி மொழியும் மிகவும் பிடித்திருந்தது எனக்கு ! மாஷா அல்லாஹ் !

----------------------------------------------

அது சரி சுதந்திரம் எதுக்கு வாங்கினோம் / ஏன் கொடுத்தாய்ங்க !?

அது நமக்கா? / இல்லை கிடைத்தபின் அவய்ங்களுக்கா ?

Muhammad abubacker ( LMS ) said...

//அது சரி சுதந்திரம் எதுக்கு வாங்கினோம் / ஏன் கொடுத்தாய்ங்க !?

அது நமக்கா? / இல்லை கிடைத்தபின் அவய்ங்களுக்கா ? //

இதன் விளக்கம் அரசியல்,ஆட்சி வட்டாரத்தில் உள்ள அண்ணன்மார்களுக்கு சரியாக புரிந்து இருந்தால்.அரசு துறையில் பணி புரியும் சில கல்நெஞ்சம் உள்ளவகளால் லஞ்சம்.கொள்ளை,நில அபகரிப்பு, ஊழல் போன்ற ஈன செயல்கள் சுதந்திரமாக ஆகி இருக்காதே!

பாவம் சுதந்திரம் கிடைத்து அறை நூற்றாண்டுகள் கழிந்துவிட்டது என பெருமை படும் அதே வேலையில்.எப்போது நமக்கெல்லாம்.சுதந்திரம் கிடைத்து முதல் ஆண்டு கொண்டாடுவோம் என வொவ்வொரு குடிமகனும்.கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.என்பதை யாராலும் மறுக்க மடியாது.

Meerashah Rafia said...

இலவசம் கிடைத்தது, ஆனால்
இன்னும் சுதந்திரம் கிடைத்ததாக தெரியவில்லை..


கிடைத்திருந்தால்,
லட்ச கோடியை சொச்ச மக்கள் அபகரித்தும்
மிச்ச மக்கள் தெருக்கோடியில் அயர்ந்தும்

அகதியாய் அயல்நாட்டில் வாழ்ந்து
காலம் காலமாக காலாவதியாய் ஆகின்ற நிலை ஏனோ!


ஏன் கிடைத்தது இந்த சுதந்திரம் என்று
எந்திர உலகின் பலர் எண்ணங்களில்.


வெண்ணிற வேட்டியின் கரை படிந்த அரசியலை விட
வெள்ளையர்களின் உறையவைக்கும் அடிமைத்தனமே சிறந்ததாக
நம் மனம் எண்ணுவது ஏனோ!!


வளம் கண்டு நம்மை சுற்றி வளைத்தார்கள்
சினம் கொண்டு நாம் வெற்றி அடைந்தோம்
நிலை அறிந்து அரசியல் சாசனம் அமைத்தோம்
இன்(றைய)நிலையோ! அரசியல் ஓர் சாக்கடையாய்

மாசுற்ற சுதந்திர காற்றை சுவாசம் செய்யும் ஓர் வாசகனானது ஏனோ!!!


-தாய் நாட்டை விட்டு தந்தை ஈட்ட நாட்டில்
சுற்றித்திரியும் ஓர் (சு)தந்திரப்பறவை..


மு.செ.மு.மீராஷா ரஃபியா

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் .விஞ்ஞான எழுத்தாளரின் மற்றொரு சமூக கோணம்.இந்தியாவின் கோணல் சுதந்திரத்தைப்பற்றி.இந்தியாவில் பற்றி எறியும் அவலம் பற்றி.(Not) நாட்டு பற்று காற்றில் சுதந்திரமாய் பறக்க இந்தியாவின் மானம் காற்றில் உலகுகெல்லாம் பறக்கிறது. ஆனால் இந்தையாவின் கொடி வெட்கத்தில் பறக்காமல் தன்னையே சுருக்கிக்கொண்டு கூனிகுறுகினிற்கிறது.ஒருபக்கம் ஒருகவளம் சோறு கிடைக்காத அவலம். அதே வேளை மறு பக்கம் சோற்றை சேற்றில் கொட்டும் கூட்டம் இரண்டும் சொல்கிறது இந்தியா சுதந்திரம் பெற்று விட்டதென்று! என்னே முரன்பாடு? இதுதான் நம் பண்பாடு. பெரும் பாடு ,திண்டாட்டம் இதில் போலியாய் சுதந்திர கொண்டாட்டம். எல்லாம் போலி வாழ்கை. மிக நேர்தியாக எழுதப்பட்ட நகைச்சுவையுடன் கூடிய நல்ல ஆக்கம்.
தம்பி மீராசா(ராசா!!!!!!!!!!!!!!) தகப்பனாரின் அட்சில் எழுத்தும் நீரும் வாழ்துக்கள்.

sabeer.abushahruk said...

மேலே சொல்லப்பட்ட அத்தனை அவலங்களும் சரியான சட்டங்களும் தண்டனைகளும் அமலில் இல்லாததால்தான் அரங்கேறுகின்றன.

நீங்களும் நானும் அப்படியெல்லாம் அநாகரீகமாக நடந்துகொள்வதில்லையல்லவா. நம்மைப்போல நரிமன் பாயிண்ட் இந்தியனும் மலபார் ஹில்ஸ் இந்தியனும் அண்ணாசாலை இந்தியனும் பிருந்தாவன் இந்தியனும் அநாகரிகமாக நடந்துகொள்வதில்லை ஹமீது. 

குறை சுதந்திரத்தில் இல்லை. சுதந்திரம் பெற்றபின் அமைந்த நம் அரசாங்கத்தில் இருக்கிறது. 

பொது இடங்களில் புகை - தண்டிக்கனும்
மது உடம்புக்கு பகை - தடை செய்யனும்

இந்தரெண்டையும் சரி செய்தால் பாதி அவலங்கள் தீர்ந்து விடும்.

நியாயமான கோபங்கள் ஹமீது! நல்லா சொல்லியிருக்கிய.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இரவில் கிடைத்த சுதந்திரம் இன்னும் இருளில்தான் இருக்கிறது.

பகலில் கொடுத்தாலாவது சுதந்திரம் பிரகாசம் அடைந்திருக்கும்.

இரவில் கொடுத்ததால் இன்னும் சுதந்திரத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் நன்மக்கள்.

சகோ. ஹமீத் நல்ல ஆதங்கம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு): கொஞ்சம் ஸைலண்டா உன்னோட கருத்தில் ஒரு கரு கண்டேன்(டா)ப்பா !

அந்த //Not-பற்று//

ஆம்
அப்படி சிலர் இருக்கின்றனர் !
ஆங்கிலத்தில் NOTம் (அவனிடம்) தமிழில் பற்றும் (இந்தியனிடம்) என்று சொல்லிக் கொண்டு இரட்டை வேடுமிடும் காவிக் கசடுகள் !

சுதந்திரத்திற்காக உழைத்த, வித்திட்ட, பொருளுதவிட்ட, உயிர்விட்ட எம் சமுதாயத்தை நாட்டை விட்டு அகற்று என்று இந்த போலி பற்றுப் பேர்வழிகள் கூக்குரலிடுகின்றனர்...

இவர்கள் விரைவில் இதுவரை நேசித்திராத இந்த மண்ணைக் கவ்வத்தான் போகிறார்கள் அது நாம் நேசிக்கும் மண்ணாகத்தான் இருக்கும் !

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

கிரவ்ன்(னு): கொஞ்சம் ஸைலண்டா உன்னோட கருத்தில் ஒரு கரு கண்டேன்(டா)ப்பா !

அந்த //Not-பற்று//

ஆம்
அப்படி சிலர் இருக்கின்றனர் !
ஆங்கிலத்தில் NOTம் (அவனிடம்) தமிழில் பற்றும் (இந்தியனிடம்) என்று சொல்லிக் கொண்டு இரட்டை வேடுமிடும் காவிக் கசடுகள் !

சுதந்திரத்திற்காக உழைத்த, வித்திட்ட, பொருளுதவிட்ட, உயிர்விட்ட எம் சமுதாயத்தை நாட்டை விட்டு அகற்று என்று இந்த போலி பற்றுப் பேர்வழிகள் கூக்குரலிடுகின்றனர்...

இவர்கள் விரைவில் இதுவரை நேசித்திராத இந்த மண்ணைக் கவ்வத்தான் போகிறார்கள் அது நாம் நேசிக்கும் மண்ணாகத்தான் இருக்கும் !
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சரியா சொன்னீங்க காக்கா.எப்படி இப்படியெல்லாம் ? சரியான வார்தை விளையாட்டு மாசா அல்லாஹ். சபீர்காக்கா கொஞ்சம் கவனிங்க தம்பி காக்கா எப்படியெல்லாம் வார்தையை வைத்து மதவங்கள மண்ணுகவ்வ வைக்கிறார்னு. அமீரகத்துல எல்லாரும் சொல்லிவச்சி கலக்குரீங்க இங்கே சுயைட்சையாக நான் பட்ற அவஸ்த சொல்லி மாளாது. எங்கே உங்க ஊர் யாசிர் ஊர் போய் வாயதெறக்க முடியாத கவனிப்பா?

அப்துல்மாலிக் said...

நல்ல ஆதங்கம், சுதந்திரம் என்ற வார்த்தைக்கூட சுதந்திரமா சொல்லமுடியவில்லை..

Shameed said...

சுதந்திரமாக கருத்து சொன்ன அனைவருக்கும் என் நன்றி

Shameed said...

குறிப்பு
குறிப்பா அந்த சுயோட்சை பார்ட்டி பின்னுட்டம் எபோதும் கலக்கலகவே இருக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு