Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிராம்பட்டினம்2011 [2] 20

ZAKIR HUSSAIN | August 06, 2011 | ,

அதிராம்பட்டினம் 2011 [ 2 ]

இதில் உடன் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. பிரிதொரு பதிவில் தனியாக பெயர் சொல்லி நன்றி சொல்ல வேண்டும்.


அதிராம்பட்டினத்துக்குள் நுழையும் அந்த தருணங்களை ஒரு பதிவாக யூ -ட்யூபில் வெளியிட்டு இருக்கிறேன். [டெக்னிக்கல் உபயம் - அபூஇபுராஹீம் & தாஜுதீன்]






அமைதியான அழகான கிராமம் [சூரக்கோட்டை பக்கம்] கிராமத்தில் படிக்காதவர்கள் அதிகம்...



அசிங்கமாய்ப்போன அதிராம்பட்டினம் , இங்கு எல்லோரும் படித்ததுபோல் ஒரு தோற்றம் தெரிகிறது.


ஒரு காலத்தில் இங்குதான் லாங்ஜம்ப், கால்பந்து, வாலிபால் என்று ஒரே ப்ராக்டிஸ் மயமாக இருக்கும். மொத்த ஊரும் ப்ளாஸ்டிக் பையில் சுருங்கப்போகும் காலம் வெகுதூரமில்லை. நம் ஊரில் 33 பள்ளிவாசல் இருக்கிறதாம்..கொசு 33 பில்லியன் இருக்கலாம்...இது நைட் விசிட் அடிக்கும் கொசுவின் கணக்கு மட்டும்.

சில ஞாயமான கேள்விகள்!!!

ஏன் இப்படி ஒரு உருப்படாத மாற்றம் இந்த ஊருக்கு..சி எம் பி லேன் வாய்க்கால் "அதிரையின் குப்பைத்தொட்டி" என்ற பெயர் வைக்கும் வைபவத்துக்கு இன்றைக்கே எல்லோரும் flight ticket ஆன்லைனில் பதிவு செய்க.

யாரைக்கேட்டாலும் படித்ததாக சொல்கிறார்கள் எப்படி இதை பொறுத்துப்போகிறார்கள்.

அரசாங்கத்து ஊழியர்கள் சுத்தம் செய்தாலும் ஆட்கள் போதாத நிலை...[ இதை எத்தனை வருடம் சொல்வார்கள்??:]

- ZAKIR HUSSAIN

20 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆஹா.....வந்துட்டாஹெ...வந்துட்டாஹெ...வலச்சி வலச்சி எடுக்குறதுக்கு........

மு.செ.மு. நெய்னா முஹம்மது..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இங்கு படம் பேசுகிறது
எங்கோ இருக்கும் என உள்ளம் ஏசுகிறது
ந‌சீபு இல்லாம‌ல் போன‌தை எண்ணி ந‌சுக்குகிற‌து
க‌ண்ணுக்கு விருந்த‌ளித்து உள்ள‌த்துக்கு ம‌ருந்த‌ளிக்கும் ம‌கிமை.

ஒவ்வொன்றும் ஓராயிர‌ம் க‌விதைக‌ளை வ‌ரையும். நோன்பு நேர‌மாத‌லால் கொஞ்ச‌ம் அட‌க்கி வாசிக்க‌ வேண்டியுள்ள‌து.

இங்கு ஜாஹிர் காக்காவின் கேம‌ராவை ந‌ம்மூர் இய‌ற்கை மேய்ந்த‌தா? இல்லை இய‌ற்கையை கேம‌ரா மேய்ந்த‌தா என‌ ஒரு ப‌ட்டிம‌ன்ற‌மிட்டு தீர்க்க‌ வேண்டிய‌ பெரும் பிர‌ச்சினையை கொண்டு வந்துவிட்டீர்க‌ள்.

ந‌ம்மூரில் மக்களின் பழக்க,வழக்கங்களில் ஆயிர‌ம் தான் குறைக‌ள் இருந்தாலும் இறைவ‌ன் அருட்கொடையாய் அளித்த‌
இயற்கைக்கு எல்லாமே பஸ்பமாகிவிடும்.

காக்கா, பேச‌ட்டும் உங்க‌ளின் இயற்கைப்ப‌ட‌ங்க‌ள்.......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா:

ஒருபக்கம் ஊரின் பெருமைகளையும் சிறுபிராய நினைவுகளையும் அசைபோட்டு சிலாகித்துக் கொண்டிருக்கும் நாம் அதன் மறுபக்கத்தை கொஞ்சம் லேட்டாகத்தான் பார்க்கிறோம்... இன்றைய அதிரையின் மறுபக்கத்தினை நிஜங்களோடு சொல்லும் ஒவ்வொரு படமும் நூறு எச்சரிக்கை கட்டுரைகளுக்கு சமம்..

//ஒரு காலத்தில் இங்குதான் லாங்ஜம்ப், கால்பந்து, வாலிபால் என்று ஒரே ப்ராக்டிஸ் மயமாக இருக்கும். மொத்த ஊரும் ப்ளாஸ்டிக் பையில் சுருங்கப்போகும் காலம் வெகுதூரமில்லை. நம் ஊரில் 33 பள்ளிவாசல் இருக்கிறதாம்..கொசு 33 பில்லியன் இருக்கலாம்...இது நைட் விசிட் அடிக்கும் கொசுவின் கணக்கு மட்டும்.//

மறக்க முடியுமா அந்த திடலை !? மாதியம் 2:00 மணிக்கு மேல் மஃக்ரிப் நேரம் வரை தொடருமே அந்த பயிற்சிகள் !? எங்கே சென்றது வசந்த காலம் !? ஏன் பள்ளிகள் உறங்கச் சென்று விட்டன ?

//ஏன் இப்படி ஒரு உருப்படாத மாற்றம் இந்த ஊருக்கு..சி எம் பி லேன் வாய்க்கால் "அதிரையின் குப்பைத்தொட்டி" என்ற பெயர் வைக்கும் வைபவத்துக்கு இன்றைக்கே எல்லோரும் flight ticket ஆன்லைனில் பதிவு செய்க.//

இலட்சங்கள் கொட்டி செங்கற்களை அடுக்கிவிடுவோம் அது அழகிய வீடாகும் வரை உழைத்துக் கொண்டிருப்போம்... இப்படி இயற்கையாக கிடைக்க வேண்டிய ஆற்று நீரின் வாய்க்காலை... வறண்ட கூவமாக மாற்றியதில் அப்பகுதி வாழ் மக்களே !!!

சிரத்தை எடுத்தாவது அதனை சுத்தம் செய்ய ஏன் முயற்சிக்க வில்லை அலல்து ஏன் அரசு இயந்திரத்தை உசுப்ப வில்லை !?

//யாரைக்கேட்டாலும் படித்ததாக சொல்கிறார்கள் எப்படி இதை பொறுத்துப்போகிறார்கள்.//

இதுக்குத்தானா படித்தோம் / படிக்கிறோம் என்ற கேள்வி எழுப்பவும் தயங்காதவர்கள் !!!!!!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அருமை காக்கா அப்படியே ஊரைகாட்டிவிட்டீர்கள்.
இனியாவது தங்க பலகையில் மின்னும் அதிரை நிர்வாகம் CMP பக்கம் முன்னுரிமை கொடுத்து அப்பகுதியின் அருவருப்பை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

நட்புடன் ஜமால் said...

ஒற்றுமையற்ற நிலைதான் இவற்றிற்கு மூல காரணம்.

வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா நேரத்தில் அடக்கப்படும் மின்சாரம், பெருநாட்களில் அடக்கப்படும் மின்சாரம்,

உணர்வுகளற்று போய்விட்ட சமுதாயமாகிவிட்டது அதிராம்பட்டினம் (என்னையும் சேர்த்தே தான்).

100 ஆண்டுகளுக்கும் மேலான இஸ்லாமிய பாரம்பரியம் நிறைந்த ஊர், ஏட்டு சுறைக்காய்.

ஊரும் உள்ளமும் அழுக்கு நிறைந்து கிடக்கின்றது

இப்படி புலம்புவதை தவிர வேறொன்றும் (இக்கணம்) செய்யவியலா ஆதங்கத்தில் ...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைப்பட்டினம் - 1ல் கவிக் காக்கா சொன்னது...

//ஒரு கயிற்றுக்கட்டில் போட்டுப்படுத்து காத்திருந்தாவது காது கொடுத்துக் கறக்க வேண்டும் கிரவுனின் ரகசியங்களை. கூடவே கோர்த்துக்கொண்டு வருமோ இபுறாகீம்ட வாப்பா ரகசியங்களும்?//

கவிக் காக்கா : நாங்கள் படிக்கும்போது தேடிச் சென்றதோ நம்ம ஹர்மீஸ் (அப்துர்ரஹமான்) வரிகளில் வருமே அந்த இயற்கையோடு உறவாடத்தான் மாலை நேரமானாலும் அதிகாலை நேரமானாலும், பள்ளிக்கூடத்திற்கு எவ்விதத்தில் ஜூட் விட்டதில்லையே :) ரொம்பவே நல்ல பசங்களாத்தானே இருந்தோம் !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பிற்குரிய ஜாகிர் காக்கா நீங்கள் கண்ட காட்சியை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.சிந்திக்க வேண்டிய படம்.

// அசிங்கமாய்ப்போன அதிராம்பட்டினம் , இங்கு எல்லோரும் படித்ததுபோல் ஒரு தோற்றம் தெரிகிறது.//

படிக்காத சூரக்கோட்டை மக்களை தூய்மை என்னும் அரசாங்கம் ஆட்சி செய்கிறது.

படித்த அதிரைப்பட்டினத்து மக்களை சுயநலம் என்னும் அரசாங்கம் ஆட்டிப்படைக்கிறது.

சில ஏரியாவில் வரிப்பணத்தை மட்டும் கூட்டி பெருக்கி அள்ளிவிட்டு.வரிகட்டாத ஏரியாவில் தெனமும் ரோட்டை கூட்டி குப்பைகளை அள்ளுவோம் என்கிற போக்கு பேரூராட்சிக்கு இருந்தாலும். நம் மக்களின் போக்கு குப்பைகளை நடு ரோட்டிலும் அடுத்த வீட்டு முன்பாகவும் கொட்டக்கூடிய சுயநலம்தான் வேரூன்றி இருப்பதை காணமுடிகிறது.

தூய்மை ஈமானில் ஒரு பகுதி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Shameed said...

குப்பைகளை அள்ளுவதில் பேரூராட்சி தாமதம் என்றாலும் குப்பைகளை கொட்டுவதில் நமக்கு இன்னும் கூடுதல் பொறுப்பும் பொது நலனில் அக்கறையும் வேண்டும்

(இங்கு கண்ணால் பார்த்ததை எல்லாம் கேமரா மூலம் காட்டி அசத்தியது அசத்தலோ அசத்தல் )

sabeer.abushahruk said...

நினைக்க நினைக்கத் தெவிட்டாதவை, எத்தனைக் களித்தாலும் தீராதவை இரண்டு. ஒன்று ஊர் நெனப்பு; இன்னொன்று:

தீராதவை…
 
அம்மா கைகளில்
குழந்தை…
சும்மாச் சும்மா
உம்மா 
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.
 
கன்னங்களிலோ 
நெற்றியிலோ
குத்து மதிப்பாக
முகத்திலோ
இன்ன இடம்தான்
என்றில்லாமல்
வாகாக வாய்க்கும்
எந்த இடத்திலுமோ
வென...
 
வாகனங்களைக்
காட்டியொரு உம்மா
வானத்தைக்
காட்டியொரு உம்மா
மரங்களைக்
காட்டியொரு உம்மா
மனிதர்களைக்
காட்டியொரு உம்மா
 
கத்தும் 
குருவியைக் காட்டியும்
கொத்தும்
கோழியைக் காட்டியும்
கழுவும்
கறி மீனைக் காட்டியும்
காத்திருக்கும்
கரும் பூனையைக் காட்டியும்
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.
 
இடது கையிலிருந்து
வலது கைக்கு 
மாற்றும்போதொரு உம்மா
மயங்கும்
விழிகளில் உம்மா
மெல்லச் சுமந்து
தூளியில் இட  
கிடத்தும்போதொரு உம்மா
கிடத்திய பின்னொரு உம்மா
 
தூளியைத் தூக்கி
கொத்துக் கொத்தாக
பலமுறை உம்மா
என
சும்மாச் சும்மா
உம்மா கொடுத்தும்
தீர்ந்து போனதா 
அம்மாவின் உம்மா?
 
 sabeer.abushahruk@gmail.com
thanks:www.thinnai.com


 

தாஜுதீன் (THAJUDEEN ) said...

திருச்சி ஏற்போட்டிலிருந்து ஊருக்கு போகிற உணர்வு காணொளியை பார்த்தவுடன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"தண்டவாளம்"

இரு நேர்க்கோடுகள் ஒன்றோடொன்று
இறுதிவரை இணையவுமில்லை; பிரியவுமில்லை
காத்திருந்து காத்திருந்து கால்க‌ள் ம‌ர‌ங்க‌ளாயின‌
குதிரை வ‌ண்டிக‌ளும் கோபித்துக்கொண்டு
சென்ற‌வை இதுவ‌ரை திரும்ப‌வில்லை
கடைசிவரை கம்பனைக்காணவில்லை
ர‌யில‌டி ம‌ட்டும் உண்டு இளவு காத்த கிளியாய்

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அப்துல்மாலிக் said...

வெளிநாட்டுலேர்ந்து/ஊரிலேர்ந்து நமதூருக்கு நுழையும்போது குழந்தையாய் மனம் குதூகலிக்கும் அதே குதூகலம் இதை காணும்போதும்..

மின்வெட்டு, கொசுத்தொல்லை, சுத்தமின்மை, இன்னும் என்னென்னவோ இந்த ஊரை ஊர்காரரே வெறுக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று நினைக்குப்போது வருத்தப்படவைக்கிறது..

Unknown said...

வெளிநாட்டுலேர்ந்து/ஊரிலேர்ந்து நமதூருக்கு நுழையும்போது குழந்தையாய் மனம் குதூகலிக்கும் அதே குதூகலம் இதை காணும்போதும்..
---------
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பும்போது ஏற்படும் அனுபவம் .....சூப்பர் காக்கா...
போட்டோ அருமை

ZAKIR HUSSAIN said...

இன்னும் நாம் நம் ஊரை நேசிக்கிறோம் என்பதன் சான்று சகொதரர்கள் , மு.செ.மு. நெய்னா முஹம்மது.. அப்துல்மாலிக்..தாஜுதீன்..லெ.மு.செ.அபுபக்கர்..M.H. ஜஹபர் சாதிக்.. ஜமால்..சாகுல், இர்சாத், [தமிழில் பின்னி பெடலெடுக்கும்] கிரவுன். சபீர் எல்லொருக்கும் நன்றி [ சபீர் தவிர்த்து ]

இந்த வீடியோவை நான் திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கு போகும்போதுதான் எடுத்தேன்.[ Nikon Coolpix s3000- 12.0 Megapixel]

ஊரின் பல முன்னேற்றங்களை நாம் திட்ட மிட்டாலும் ஊரின் குப்பை, கொசு ,வடிகால் இல்லாத சாக்கடை இவைகளுக்கு தீர்வு இல்லாமல் செய்தால் அது நோயாளிகளை அதிகமாக்கும் சமுதாயத்தை உருவாக்கும் , [ அது ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது என்பது கொடுமை] இப்போது ஊர் போயிருக்கும்போது நான் கண்ட உண்மை முன்பு அறிதான "எபிலப்சி' சில இளைய சமுதாயத்தை தாக்கி இருந்தது.

Anonymous said...

நன்றி நண்பரே, அதிராம்பட்டினத்தின் நிழற்படங்களை பதிந்து பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

இது என்ன நம்ம ஸ்கூல் கிரவுண்டா ? ஏன் இப்படி விட்டார்கள் ? ஸ்கூல் நிர்வாகம் ஏன் இதனை பாதுகாக்கவில்லை ? வேறு ஏதும் பிரச்சினைகள் உள்ளதா ?

ZAKIR HUSSAIN said...

அது ஸ்கூல் கிரவுன்ட் இல்லை. எங்கள் தெருவுக்கும் [ தரகர்தெரு ] ஹாஜா நகருக்கும் இடைப்பட்ட தரகர்தெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான கிரவுன்ட். கிரவுன்ட் காய்ந்து விடும் பரவாயில்லை. நிரந்தர பிரச்சினை அங்கு இருக்கும் சாக்கடை...

அலாவுதீன்.S. said...

காணொளியை Play பண்ணினால் An error occurred. Please try again later என்று வருகிறது.

/// ஊரின் பல முன்னேற்றங்களை நாம் திட்ட மிட்டாலும் ஊரின் குப்பை, கொசு ,வடிகால் இல்லாத சாக்கடை இவைகளுக்கு தீர்வு இல்லாமல் செய்தால் அது நோயாளிகளை அதிகமாக்கும் சமுதாயத்தை உருவாக்கும்.///
*************************************************************************************************

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோ. ஜாகிர் அழகான படங்கள்.


நோயாளிகள் உள்ள சமுதாயத்தை வைத்துக் கொண்டு நாம் என்ன சாதிக்கப் போகிறோம்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம் இவை அனைத்திலும் சுகாதாரம்தான் முதல் நிலையில் இருக்கிறது. ஆனால் இந்த சுகாதாரமே அசுத்தமாக இருக்கும்பொழுது என்ன சொல்வது?

ஒவ்வொரு தடவை அதிரை இப்படி இருக்கிறது என்று வருத்தப்படுவதோடு கால ஓட்டத்தில் சுகாதாரம் மறந்து விடுகிறது. பூனைக்கு மணி கட்டுவது எப்பொழுது??????????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//காணொளியை Play பண்ணினால் An error occurred. Please try again later என்று வருகிறது.//

அலைக்குமுஸ்ஸலாம்,

அன்பின் அலாவுதீன் காக்கா: உங்களின் உலவி (browser) பிரச்சினைகள் தரலாம், ப்ளேயைக் தொட்டது கார் ஓடுகிறதே நன்றாக பின்னனியில் Sஹமீத் காக்காவின் குரல்போல் பிரம்மையும் இருக்கே !

நீங்கள் browserஐ refresh செய்து விட்டு முயற்சியுங்கள் அல்லது வேறு browserல் கிள்ளிவிட்டுப் பாருங்களேன்... :)

Yasir said...

அதிரையின் அழகை அள்ளி தந்த விதம் அருமை.....அதனில் உள்ள அசுத்தத்தையும் அலசிய விதம் சூப்பர் அசத்தல் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு