Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொலைகாட்சி பெட்டி(யா) வாங்க போறீங்க ? 33

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2011 | , ,

தொலைகாட்சிப் பெட்டி வாங்க போறீங்களா?
அதன் தொழில் நுட்ப சமாச்சாரங்கள்

தொலைகாட்சி பெட்டிகள் எப்போதுமே ஒரு தொல்லை காட்சி பெட்டிதான். இருந்தாலும் அந்த சனியனை பார்க்காவிட்டால் நிறையபேருக்கு தூக்கம் வருவதில்லை. இப்போதைக்கு எல்லோர் வீட்டிலும் டிவி உள்ளது. ஆனால், அது பற்றிய தொழில் நுட்பமான  விஷயங்கள் எந்த அளவுக்கு நமக்கு தெரியும். கடைக்கு போனோமா டிவி வாங்கினோமா என்று ஒன்றை பிடித்து வீட்டில் வைத்து விடுகிறோம். அப்புறம் பக்கத்துக்கு வீட்டுக்காரன் உங்களிடம் வந்து உங்க டிவி LCDயா, LEDயா HD readyயா Full HDயா அல்லது PLASMAவா, என்னுடையது SMARTV என்ற வார்த்தைகளை கேட்ட பிறகுதான், ஓ! அந்த மாதிரி வாங்க வில்லையே என நம்மில் நிறைய பேர் முனுமுனுப்பதுண்டு. நான் இந்த கட்டுரை மூலம்  டிவி பற்றிய சில  தொழில் நுட்ப விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்த முறை நீங்கள் டிவி வாங்கும்போது கண்டிப்பாக ஒரு சரியான டிவியை தேர்வு செய்து இருப்பீர்கள்
                                                                                           
1980 மற்றும் 90களில் டிவிக்கள்:

1980 மற்றும் 90களில் டிவி என்பது CRT (Cathode Ray Tube) என்று சொல்லக்கூடிய எதிர் மின் கதிர் குழாய் கொண்ட சதுர வடிவ பெட்டியாக இருந்தது அல்லது இன்றளவும் சில வீடுகளில் இருக்கிறது என்று சொல்லலாம். வீட்டு ஹாலில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். அது ஒரு போர்வையால் போர்த்தபட்டு (தூசு படாமல் இருக்க) ஓடிக்கொண்டு இருக்கும். இதில் வேடிக்கை என்ன வென்றால் டிவி ஓடும்போது போர்வை அகற்ற படாமல் இருக்க, உள் வெப்பம் வெளியில் வராமல் கொஞ்ச நாளில் டிவி படுத்துவிடும்.

புதிய வரவுகள்:

கடந்த 2000ம் ஆண்டு துவக்கத்திலிருந்து சுவரில் மாட்ட கூடிய LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் வரதொடங்கிவிட்டன. கடந்த ஒரு சில வருடங்களாக HDTV, SMARTV டிவி மற்றும் 3D டிவிக்கள் வந்து குவிவதால் நமக்கு எதை வாங்குவது என்று ஒரே குழப்பம். நாம் ஒவ்வொரு டிவி பற்றியும் கீழே விரிவாக பார்க்கலாம். கடைசியில் எந்த சைத்தானை வாங்குவது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய போகிறீர்கள்.

தற்போதுள்ள டிவிக்களின் சில வகைகள்.

STANDARD CRT TV (சாதாரண டிவி)
PLASMA, LCD, LED Flat Panel TV
HD Ready TV (அதிக நெருக்கமுள்ள டிவி)
Full HD TV (முழு நெருக்கமுள்ள டிவி)
SMART TV (கணினிமயமாக்கப்பட்ட டிவி)
3D TV (முப்பரிமாண டிவி)

STANDARD TV (சாதாரண டிவி)

சாதாரண டிவிக்கள் வரி விட்டு வரி தேடுதல் (interlaced scanning) என்ற படங்களை கையாளுகிறது. (மற்றொன்று progressive scan  தொடர்ச்சியான தேடல் முறை.) ஒரு வினாடிக்கான படம் 25 பிரேம்களாக(Frame) பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ப்ரேமும் 625 வரிகளை (lines) கொண்டது.  ஒவ்வொரு வரியும் 352 புள்ளிகளை (pixel) உள்ளடக்கியது. ஒவ்வொரு ப்ரேம்களும் இருமுறை காட்டப்படுகிறது. முதல் பிரேமில் உள்ள வரிகள் ,1,3,5,7 என்ற ஒற்றை படை கோடுகளாக ஸ்கேன் செய்யபட்டும் முதல் பிரேமின் மீதமுள்ள வரிகள் 2,4,6,8 என்ற இரட்டை படை கோடுகளாக இரண்டாம்முறை ஸ்கேன் செய்யப்பட்டு முழு படமாக நமக்கு திரையில் தெரிகிறது. சாதாரண டிவியின் காட்சி தெளிவு (resolution) 625x352x25=5.5Meg.Hz. அல்லது இதை picture bandwidth என்று சொல்லலாம். மேற்கண்ட முறை கருப்பு வெள்ளை படங்களுக்கானது. வண்ண படங்கள், மூன்று முதல்நிலை (Primary colors) வண்ணங்களான RED, GREEN, BLUE நிற படங்களாக மாற்றப்பட்டு வெள்ளை நிற படத்துடன் (modulation) ஏற்றப்படுகிறது. இவை PAL (Europe and Asia region), NTSC (USA), SECAM (France) என்ற நிறமாற்று முறைகளில் வண்ண படங்களாக மாற்றப்பட்டு  இதன் பிறகு sound மற்றும் synchronization Signalகள் சேர்க்கப்பட்டு  நமக்கு காட்டபடுகிறது. இது டிவியில் ஒரு அடிப்படையான விஷயம் என்று சொல்லலாம்.

மேற்சொன்ன விசயங்கள் புரிந்துகொள்ள சிரமப்பட்டு என்னை மனசுக்குள் திட்டுவது தெரிகிறது. ரொம்ப முடியை பிய்த்து கொள்ளாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அடுத்த பகுதிக்கு சென்று விடுங்கள்.

வரி விட்டு வரி தேடும் முறை.

ஒற்றை இலக்க வரியை scan செய்தல் இரட்டை இலக்க வரிகளை Scan செய்தல்


எல்லா வரிகளும் முழுமையாக Scan செய்தபின் முழு படம்:-


சாதாரண டிவிக்கள் Interlace scanning முறையையும் low resolutionஐ கொண்டிருப்பதால் அதில் அசவுகரியங்கள் அதிகம். வேறு வழி இல்லாததால் இன்னும் அதைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சாதாரண டிவியில் flickering என்ற மினுமினுப்பு அதிகம். கண்கள் அதிகம் சோர்வடையும். படங்களை உன்னிப்பாய் கவனித்தால் வரிகளாக தெரியும். அதனால் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். தூரத்தில் இருந்தால் நிறைய பேருக்கு அதில் ஓடும எழுத்துக்கள் தெரியாது.

தொடர்ச்சியாக தேடும் முறையில் (progressive scan) படங்கள் காட்டபட்டால் அதன் காட்சி தெளிவு சிறப்பாக இருக்கும். அப்படி ஒரு வசதி உங்கள் டிவியில் இருக்க வேண்டும். அத்தோடு படங்கள் progressive scan முறையிலும் ஒளிபரப்ப படவேண்டும். உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்பட்டு படங்கள் progressive scan முறையிலேயே காட்டபடுகிறது என்பதை நினைவில் கொள்க.. இப்போது வரக்கூடிய HDTVக்கள் progressive scan முறையிலும் படங்களை காட்டக்கூடிய வகையில் கிடைக்கிறது.


Flat Panel TV (தட்டையான டிவி)

இவ்வகை டிவிக்களில் CRTக்கு பதிலாக LCD  அல்லது Plasma குமிழ்கள் வரிசையாகக் அடுக்கப்பட்டு சுவரில் மட்டக்கூடிய வடிவில் கிடைக்கின்றன. இவை 19அங்குலத்தில் இருந்து 103 அங்குலம் வரை கிடைகிறது.

பிளாஸ்மா டிவி.

பிளாஸ்மா டிவிக்கள் inert gases என்று சொல்லப்படும் மந்த வாயுக்கள் நிரப்பப்பட்ட சிறு சிறு குமிழ் போன்ற  குழல் விளக்குகள்  (florescent Lamp) பலவரிசையாக அடுக்கப்பட்டு ஒரு தட்டையான வடிவில் (flat panel)  தயரிக்கபடுகிறது. இதில் உள்ள குமிழ்களுக்கு மின்னூட்டம் கொடுக்கப்பட்ட உடன் அதில் நிரப்பப்பட்ட வாயுவினை பொருத்து RED, BLUE or GREEN வண்ணமாக ஒளிருகிறது. பிளாஸ்மா டிவிக்கள் குறைந்த பட்சம் 40” அங்குலம் அளவில் இருந்து கிடைக்கிறது.

பிளாஸ்மா டிவிக்களின் நன்மைகளும் குறைபாடுகளும்.

நன்மைகள்
குறைபாடுகள்
அதிக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை உற்பத்தி செய்வதால் கருப்பு வெள்ளை விகிதாசாரம் (Contrast Ratio)  மிக மிக அதிகம்
முன்பு வெளிவந்த பல பிளாஸ்மா டிவிக்களில் அங்கங்கு நிரந்தர கரும்புள்ளிகள் விழ வாய்ப்புகள் அதிகம்
படம் பார்க்கும் கோணம் (viewing Angle) மிக அதிகம். ஒரு மூலையில் இருந்து பார்த்தாலும் படம் தெளிவாக தெரியும்.
மற்ற எல்லா டிவிக்களை விட ஆற்றல் நுகர்வு (Power Consumption) அதிகம். (மின் ஆற்றலை சேமிக்கவேண்டிய இந்த காலகட்டத்தில் யோசிக்க வேண்டிய விசயம்.)
குமிழ்கள் உயர் புதிபிப்பு விகிதம்  (high refresh rate) பெறுவதால் இயக்க தெளிவின்மை  (motion Blur)  பிரச்சினை இருக்காது.
37 அங்குலத்திற்கு குறைவான அளவில் கிடைக்காது. பிளாஸ்மா டிவி வைக்கப்பட்டுள்ள அறையில் MW, SW, Amateur Radio வானொலி அலைவரிசைகளை கேட்க முடியாது. ரேடியோ குறுக்கீடு செய்யக்ககூடியது.

LCD டிவி

LCD டிவிக்கள் Liquid Crystal Display என்ற Chemical பொருளால் சிறு சிறு குமிழ்களாக வடிவமைக்கப்பட்டு தட்டியான கண்ணாடி panelகளுக்கு இடையில் மோல்டிங் செய்யபடுகிறது.. LCD panelகளுக்கு CCFL (Cold Cathode Florescent Lamp) என்று சொல்லக்கூடிய florescent விளக்குகளால் (backlight)பின்னொளி கொடுக்கப்படுகிறது. Liquid crystalகளுக்கு கொடுக்கப்பட்ட மின்னுட்டத்தை பொருத்து liquid crystalன் பாதை மாறும்போது backlight வெளிச்சத்தை அனுமதிக்கவோ அல்லது தடுக்கவோ செய்யும் இந்த LCD பேனல்கள் CCFL விளக்குகளால் பின்னொளி கொடுக்கபடுவதால் LED டிவிக்களை விடLCD டிவிக்கள் கொஞ்சம் தடிமனாக இருக்கும்.

LED டிவி

LED டிவிக்கள் உண்மையில் LEDயால்(Light Emitting Diode) செய்யப்பட்ட டிவிக்கள் அல்ல. அவைகளும் LCD TVக்கள் தான். இந்த டிவிக்கள் LED விளக்குகளால் பின்னொளி  (Backlight) செய்ய படுவதால் LED டிவி என்கிறார்கள். LEDயால் பின்னொளி செய்யபடுவதால் அதிக வெளிச்சம் கிடைக்கிறது. CCFL விளக்குகளை விட மிக சிறந்த முறையில் Backlight வெளிச்சத்தை கொடுத்து குறைந்த மின்சாரத்தில் இயங்குவதால் பலராலும் இவ்வகை டிவிக்கள் அதிகம் விரும்பபடுகிறது. LED விளக்குகள் மிக சிறிய அளவில் இருப்பதால் இவ்வகை டிவிக்கள் மற்ற எல்லா டிவிக்களை விட குறைந்த தடிமனை (Thickness) கொண்டிருக்கின்றன.



LED TVயிலும் மூன்று வகை உள்ளது. 1. LEDTV, 2.LEDPLUS, 3.FULL LED.  முதல் வகையில் நான்கு ஓரங்களிலும் LED backlight செய்யபடுகிறது. இரண்டம் வகையில் ஒவ்வரு செங்குத்து வரிசையில் LED backlight செய்யபடுகிறது. மூன்றாம் வகையில் டிவி முழுவதும் backlight செய்யபடுவதால் இந்த வகை டிவியில் தான் அதிகம் Contrast கிடைக்கும். அனைவரும் மூன்றாம் வகை டிவியை தான் விரும்புவார்கள். நீங்கள் டிவி வாங்கும் போது FULL LEDயா என்று கேளுங்கள்.

அடுத்த வாரங்களில் நாம் HD TV, SMARTV, 3DTV, 3D glasses  பற்றியும் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் விதம், பொருத்தும் விதம், TV பார்வை கோணம் ஆகியவற்றை பற்றியும், LCD, LED, 3D, Plasma TVகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் பற்றியும் மிக விரிவாக காண்போம். 

- ஹாஜா ஷரீஃப்
- நன்றி : Sஹமீத்

33 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்தப் பதிவு எங்களது சின்ன மாமா (தேனீ உமர்தம்பி) அவர்களை ஞாபகப் படுத்தியது !

நல்ல திறனாளியின் அருமையான பதிவு !

தொழில்நுட்பங்கள் பற்றி நிறைய நீங்கள் எழுதனும்...

ZAKIR HUSSAIN said...

அப்பாடா ஊர் போயிருக்கும்போது நான் , சாகுல் இருவரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டதற்கிங்க ஹாஜா சரீஃப் எழுதிய இந்த ஆக்கம் நிச்சயம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். [ கீழத்தோட்டம் பார்க்கும் ஆர்வத்தில் உச்சி வெயில் மண்டையயை பிளந்தது யாருக்கும் தெரியாது]

ஹாஜா சரீஃப் என்னை பொருத்தவரை டெக்னிக்கல் அறிவில் யாருக்கும் சலைத்தவர் அல்ல. அவரிடம் பேசிய சில நிமிடங்களில் என் மகன் சொன்ன வார்த்தை ' எந்த சப்ஜெக்ட் என்றாலும் மிக டீட்டைலாக படிக்கும் இவர்களைப்போன்றவர்களால்தான் எதுவும் சாதிக்கமுடியும்"

ஹாஜா சொன்ன மாதிரி நிறைய சாதிச்சிருக்காப்லெ

ZAKIR HUSSAIN said...

To Adirai Nirubar

'இது நமக்குள்' ....அவசியம் என்ன?

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//'இது நமக்குள்' ....அவசியம் என்ன?//

நமக்குள்ளே இருந்திடட்டும் - தூக்கிட்டோம் ! :)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// தொலைகாட்சி பெட்டிகள் எப்போதுமே ஒரு தொல்லை காட்சி பெட்டிதான். இருந்தாலும் அந்த சனியனை பார்க்காவிட்டால் நிறையபேருக்கு தூக்கம் வருவதில்லை //

அன்பார்ந்த சகோதரர்களே தொலைக் காட்சி பெட்டியை தயாரித்த நிறுவனங்கள் கூட இவ்வளவு விலாவாரியான விளம்பரத்தை செய்திருக்கமாட்டார்கள்.

இன்று சமுதாயம் சீரழிந்து சின்னா பின்னமாக படும் பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது என்றால் இந்த தொல்லை பெட்டிகளால்தான்.

அவர்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் தாலாட்ட வேண்டிய முறைப்படி தாலாட்டி மார்க்கம் போதிக்க கூடிய எச்சரிக்கைகளை சொல்லி தூங்க வைக்க வேண்டும்.

இந்த கட்டுரையை படித்தால் தூக்கம் வராதவர்களுக்கு முகத்தி தண்ணீரை ஊற்றுவதுபோல் தெரிகிறது.

தூக்கம் வராதவர்கள் இப்பெட்டியின் மூலம் பெரும்பாலும் நல்ல வற்றை பார்ப்பதைவிட தீய வற்றை தான் அதிக மாக பார்ப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் மற்ற சகோதரக்கு நல்ல விசயங்களை சொல்லி அதை கேட்டவர் தன் வாழ்க்கையில்எடுத்து செயல் படுத்துகிறார்களோ.அது போன்ற கூலி சொல்லி கொடுத்தவர்க்கும் கிடைக்கும்.
யார் தீயவற்றை சொல்லி கொடுத்து அதை எடுத்து நடக்கிறாரோ.அந்த பாவத்தின் கூலி சொல்லியவர்க்கும் கிடைக்கும்.

அன்பான சகோதரார்களே! நீங்க நினைக்கலாம் ரொம்ப உத்தமரை போல் எழுதி இருக்கிறானே அவங்க வீட்டில் டீவி எல்லாம் இல்லையா என்று.நான் உத்தமன் இல்லை என்பது போல்.இன்று வரையுலும்.எங்கள் வீடு டீவி வாடையை கூட நுகர்ந்ததில்லை என்பதை அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லியவனாக இந்த செய்தியை தாங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

சகோதரார்களே! அளவுக்கு அதிகமான என்னுடைய கருத்தில் தவறுகள் இருந்தால்
அல்லாஹ்வுக்காக மன்னிப்பதோடு.அவற்றைசுட்றிகாட்டுங்கள்.திருத்திகொள்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

லெ.மு.செ.(அ): ஆரோக்கியமான விமர்சனங்களை நேசிக்கும் ரசிக்கும் ரசனையாளர்கள் நிறைந்த சபையிது அதில் ஐயப்படத் தேவையில்லை !

தொலைகாட்சியின் தீமைகளை மட்டுமே நம் கருத்தில் கொண்டு அந்தப் பெட்டி 'பாவம்' அது மேலேயே எல்லாப் பழியையும் போட்டுட்டு ஊட்டுல உள்ளவொல அது(வும்)தான் கெடுக்குக்குதுன்னு சொன்னா எப்புடி !?

ஊட்டுல உள்ளவெங்களையும் கண்கானிக்கத்தானே வேனும், டிவியைம் கொடுத்து ரிமோட்டையும் கொடுத்துட்டு... டி.விதான் கெடுக்குதுன்னா ?

நிச்சயமாக பாதகங்களை தாங்கிவரும் தரங்கெட்ட சீரியல்களும், மற்றான் தோட்டத்து மல்லிகையை பறிக்க வகுப்பெடுப்பதும், சூதுவாது ஓதிவூதும் சாத்தான்களும் வீட்டின் வரவேற்பறை அதனையும் தாண்டி படுக்கையறைக்கே வந்து தலையனை மந்திரம் வரை போட்டுக் காட்டுகிறார்கள், அடுத்த திங்கள் வரும்வரை இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கம் அதற்குள் இரத்த அழுத்த சோதனைக்கு போனால் அங்கே எகிரியிருக்குன்னு மருந்து செலவு வைக்க தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இருக்கத்தானே அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை !

இருப்பினும்,

தொழில் நுட்ப வளர்ச்சியின் பரிமானத்தை நாமும் நம் வீட்டினரும் அவசியம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும், அதுமட்டுமல்ல நல்லதையேச் சொல்லும் காட்டிடும் தொலைக் காட்சிகளை எத்தனைபேர் நம்மில் பார்க்கிறார்கள் !?

மிக முக்கியமாக நம்மில் எத்தனையோ பேருக்கும் இன்னும் கிடைக்கப் பெறாத புனித தளம் கஃபாவை அணு அணுவாக ரசிக்க அங்கே தவாப் சுற்றி வரும் மக்களையும் அதன் மேல் போர்த்தியிருக்கும் போர்வையின் நூலின் தடிமனைக் கூட நம்மால் இங்கேயிருந்து கொண்டு தொலைக் காட்சியில் 24 மணிநேரமும் நேரலையாக பார்க்கிறோமே !

மக்கா நேரலை, மதினா நேரலை, மார்க்க தொடர் சொற்பொழிவுகள், இயற்கையை எடுத்துச் சொல்லும் / காட்டும் ஏராளமான சேனல்கள், உடனுக்குடன் தெரிந்து கொள்ள செய்திச் சேனல்கள், அறிவியலை அசந்திருக்கும் நேரத்திலும் பார்க்க வைக்கும் காட்சியமைப்புகள் கொண்ட தொலைக்காட்சி சேனல்கள் என்று ஏராளம் இருக்கத்தானே செய்கிறது அதன் பயன்பாடுகளால் நன்மையே !

தொலைக் காட்சி பெட்டியில் தொல்லைக் காட்சிகள் எது எது என்று வரையறுத்து அதனை அடியோடு மறைத்திடுங்கள் அல்லது அதன் பக்கம் நம்மவர்களை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வதும் நம் பொறுப்பே ! அதில் வெற்றியடைய முடியவில்லை என்றால் அறவே ஒதுக்கி வைப்பதே நல்லது !

சுவற்றில் மாட்டி வைக்க ஒரு நல்ல ஃப்ரேம் கிடைத்தது என்று !

sabeer.abushahruk said...

ஹாஜா,
நீங்க ட்டெக்னிக்கலா பேசக்கேட்டிருக்கிறேன். எழுத்தும் நல்லாவே இருக்கு.

வாழ்த்துகள்.

(ஹமீது / ஜாகிர், வியட்நாமில் டி. வி. இருக்கா. தமிழ் சேனல்கள் வருமா?)

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

நான் வியட்நாம் போனபோது சில நிகழ்ச்சிகள் பார்த்தேன்..அங்குள்ள மக்கள் இன்னும் பழைய ஆங்கிலப்படங்களை பார்த்து கொண்டிருந்தார்கள். தமிழ் நிகழ்ச்சிக்கு டிஷ் ஆன்டெனா வைக்க வேண்டும் என நினைக்கிறேன்.

To Bro Abu Bakar,

டி வி மீதான குறைகள் நாம் கையாளும் விதத்தில்தான் இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியில் எப்படி நம் மார்க்கம் சொன்ன விதி முறைகள் மீறாமல் அந்த அறிவியல் வளர்ச்சிகள் பயன்படுத்த வேண்டும் என்பதில் தான் இப்போதைய முஸ்லீம்களுக்கு சவால் இருக்கிறது. ஆனால்...முக்கியம் அறிவியல் வளர்ச்சியில் பின்னோக்கிபோய்விடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கால்குலேட்டர் , கம்ப்யூட்டர் வந்த காலங்களில் மூலை வளர்ச்சி பாதிக்கப்படும் எனும் தவறான கருத்துக்களை சில ஆசிரியர்களே சொல்லக்கேட்டிருக்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

//வீட்டு ஹாலில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும். அது ஒரு போர்வையால் போர்த்தபட்டு (தூசு படாமல் இருக்க) ஓடிக்கொண்டு இருக்கும்.//

நானும் பார்த்திருக்கேன்...ரோட்டில் குட்டிக்கரணம் அடிக்கும் 'ஆடுரா ராமா...ஆடுரா ராமா' குரங்கு மாதிரி டி வி க்கு சட்டை போட்டு வைத்திருந்ததை

Muhammad abubacker ( LMS ) said...

/அபு இபுறாஹிம் சொன்னது
லெ.மு.செ.(அ): ஆரோக்கியமான விமர்சனங்களை நேசிக்கும் ரசிக்கும் ரசனையாளர்கள் நிறைந்த சபையிது அதில் ஐயப்படத் தேவையில்லை !//

உண்மையில் நல்ல கருத்து(கற்களால்)கோட்டைகள் கட்ட தரமான தளம் (அ.நி) தான் என்று இங்கு கூடும் சபையோர்கள் மூலம் உணருகிறேன்.

என்னுடைய ஐய்யங்களுக்கு நல்ல தெளிவுரையாக இருந்தாலும் தாங்கள் சொன்ன .


//ஊட்டுல உள்ளவெங்களையும் கண்கானிக்கத்தானே வேனும், டிவியைம் கொடுத்து ரிமோட்டையும் கொடுத்துட்டு... டி.விதான் கெடுக்குதுன்னா ?//

இந்த கருத்தை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .காரணம் டிவியையும்.ரிமோட்டையும்.வாங்கி கொடுத்து ரிமோட்டை இயக்கி கண்ட்ரோல் பன்ன ஆள்கள் இல்லாத 85 .சதவிகிதம் வீடுகளாகதான் இருக்கின்றன

கண்ட்ரோல் பண்ணுவதற்கு ஆள்கள் இருந்தும் தன் கட்டு பாட்டிற்கு கொண்டு வரமுடியாத 25 .சதவிகிதம் வீடுகளும்.இருக்கத்தான் செய்கின்றன .

காரணம் பிள்ளைகள் ஆசை படுகிறது மனைவி ஆசைபடுகிறாள் என்கிற சப்பை கட்டண வார்த்தைகளும் கூட
கண்ட்ரோல் பண்ண முடியுமென சாத்தியமுள்ளவர்கள் டிவி வைத்து இருப்பதில் நாமக்கு ஆட்சேபினை இல்லை .

நல்லதையே சிந்திக்கட்டும்.நன்மையான வற்றைமட்டும் பார்க்கட்டும்.

crown said...

இங்கே பெரியவங்க எல்லாம் கருத்து களம் போட்டிருப்பதால் நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க ஆசைபடுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///இங்கே பெரியவங்க எல்லாம் கருத்து களம் போட்டிருப்பதால் நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க ஆசைபடுகிறேன்.///

அப்படின்னா டி.வி.ரிமோட்டு கையில் இல்லையா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த கருத்தை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காரணம் டிவியையும்.ரிமோட்டையும்.வாங்கி கொடுத்து ரிமோட்டை இயக்கி கண்ட்ரோல் பன்ன ஆள்கள் இல்லாத 85 .சதவிகிதம் வீடுகளாகதான் இருக்கின்றன

கண்ட்ரோல் பண்ணுவதற்கு ஆள்கள் இருந்தும் தன் கட்டு பாட்டிற்கு கொண்டு வரமுடியாத 25 .சதவிகிதம் வீடுகளும்.இருக்கத்தான் செய்கின்றன .//

ரிலாக்ஸ்! இதுக்கு டி.வி. என்ன செய்யும் !? அதனைக் கையாளுபவர்களிடம்தான் குறையே தவிர... டி.வி.மேலோ அல்லது தொழில் நுட்பத்திலோ அல்ல !

அதனைத்தான் சொல்லியிருக்கேன், கட்டுப்படுத்த முடியாவிட்டால் அறவே அது வீட்டில் இல்லாமல் வைத்திருப்பதே நல்லது ! அதே நேரத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் பரிமானத்தை நல்வழியில் நமக்குறிய வழியில் பயண்படுத்த முடியும் அதனையும் சாதித்தும் காட்டிக் கொண்டிருக்கின்றனர் !

noohu said...

வகுப்பில் படித்த நாபகம் வருது

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அ. நி அதி வேக நடவடிக்கை இப்பொழுது இந்த ஆக்கம் தமிழ் நிருபரில் பதியபட்டுள்ளது. நன்றி. எல்லா புகழும் அல்லாஹுக்கே! உங்களின் சீரிய பணித்தொடர அல்லாஹ் அருள் புரியட்டும்.

sabeer.abushahruk said...

அதெல்லாஞ்சரிதான்.
வியட்நாமில சிகரெட் பிடிக்கிற இமாம்கள் டிவி பார்ப்பாராமா? (நான் யாரையும் வம்புக்கு இழுக்கல. இதுக்கும் மலேசியக்காரரே பதில் சொல்லலாம்)

அபு இபுறாஹீம், கிரவுன் வந்திருக்கிறமாதிரி தெரியுதே...அப்படியே ஆளை "உள்ளே விட்டு, வெளியே கேட்டை சாத்தினா என்ன?"

Shameed said...

உச்சி வெயில் 12 மணி அளவில் கீழத் தோட்டம் (BEACH)மேலே நின்று நானும் சகோ ஜாகிர் அவர்களும் கேட்டதற்கிணங்க டிவி தொழில் நுட்பம் பற்றி மிக அழக எழுதி அனுப்பிய நண்பன் ஹாஜா விற்கு நன்றி

மேலும் இது போன்ற நுட்பமான கட்டுரைகளை நண்பன் ஹாஜா விடம் இருந்து உரிமையுடன் எதிர்பார்க்கின்றோம்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது

//அபு இபுறாஹீம், கிரவுன் வந்திருக்கிறமாதிரி தெரியுதே...அப்படியே ஆளை "உள்ளே விட்டு, வெளியே கேட்டை சாத்தினா என்ன?" //

உள்ளேன்னா டிவி பெட்டி உள்ளேயா?

crown said...

Shameed சொன்னது…

sabeer.abushahruk சொன்னது

//அபு இபுறாஹீம், கிரவுன் வந்திருக்கிறமாதிரி தெரியுதே...அப்படியே ஆளை "உள்ளே விட்டு, வெளியே கேட்டை சாத்தினா என்ன?" //

உள்ளேன்னா டிவி பெட்டி உள்ளேயா?
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்ன விஞ்ஞானி சார் ஒருகாலத்துல கிரவுன் டீவி போட்ட போடுதான் உங்களுக்குத்தெரிந்திருக்குமே? விற்பனையில் சிகரமாய் விளங்கியது கிரவுன் டீவிதானே!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
காக்கா நீங்க கேட்டதை தந்துவிடுகிறேன்
கேட்டை சாத்தாதிய!
வீட்டில் வேலை போட்டது போட்டபடி
இருக்கு உங்க சேட்டைக்கு அளவில்லையா?
என்னை எதுக்கு இப்படி பூட்டிவைக்கசொல்றியோ?
என் சிந்தைனைக்கு ஊட்டம் தரும் நீங்க
என்னை பூட்ட நினைப்பதேன்.
வாட்டம் கண்டேன் ஆனாலும் வருதம் இல்லை
அன்பின் கோட்டையில் அடைக்க சொன்னீர்'
அதனால் வாட்டம் ஓட்டம் போட
என்னை பூட்டதியோ நானே இங்கே தங்கிச்செல்வேன்.
நான் உங்க வீட்டு பிள்ளையல்லவா?
அதிரை நிருபரின் அன்பு வாசகன் அல்லவா?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

இவ்வளவு மேட்டர் இருக்கா....

அறிவை வளர்க்கும் தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. எந்த ஒரு தொழில் நுட்பத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால் நன்மையே அதிகம்.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது
//(ஹமீது / ஜாகிர், வியட்நாமில் டி. வி. இருக்கா. தமிழ் சேனல்கள் வருமா?//


வியட்நாமில் டிவி இருக்குதோ இல்லையோ வீட்டுக்கு வீடு ஆஸ்ட்ரே இருக்கும்

Muhammad abubacker ( LMS ) said...

//ஜாகிர் காக்கா சொன்னது
கால்குலேட்டர் , கம்ப்யூட்டர் வந்த காலங்களில் மூலை வளர்ச்சி பாதிக்கப்படும் எனும் தவறான கருத்துக்களை சில ஆசிரியர்களே சொல்லக்கேட்டிருக்கிறேன்.//

காக்கா. நான் கருத்தை எழுதிவிட்டு பயந்து கொடிருந்த நேரத்தில்.படித்த வாத்தியாரே தவறான கருத்து சொல்லி இருக்கிறாரே.என்கிற ஆறுதலான வார்த்தையை பார்த்ததும்.கொஞ்சம் மனசுக்கு தெம்பு வந்தது போல் இருக்கு.

//அபு இபுராஹிம் சொன்னது
ரிலாக்ஸ்! இதுக்கு டி.வி. என்ன செய்யும் !? அதனைக் கையாளுபவர்களிடம்தான் குறையே தவிர... டி.வி.மேலோ அல்லது தொழில் நுட்பத்திலோ அல்ல !//

ஜாகிர் காக்காவுடைய கருத்தை படித்துவிட்டு ரிலாக்ஸ் ஆகிவிட்டேன் .நான் டிவியையோ,தொழில் நுட்பத்தையோ,குறைசொல்ல வரவில்லை. என் சிந்தனையை உங்களுடைய கருத்துக்கள் சரியாக கையாள்டு விட்டன .

sabeer.abushahruk said...

அதில்லை கிரவுன்,
'உள்ளே வெளியே'னு உங்களுக்குப் பிடிக்கிறமாதிரி ஒரு மேட்டர் இருக்கு. அதான் சொன்னேன், 'தம்பி'க்குப் புரியலயோ??

எப்படியோ, கேட்டை மட்டு பிடித்துக்கொண்டு என்னா சேட்டை பண்ணிட்டீங்க. எங்களுக்கு தமிழ் வேட்டைதான்.

ZAKIR HUSSAIN said...

To Brother லெ.மு.செ.அபுபக்கர்

//ஜாகிர் காக்காவுடைய கருத்தை படித்துவிட்டு ரிலாக்ஸ் ஆகிவிட்டேன் .//

அப்டீனா கையோட 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' மாதிரி ஒரு கட்டுரை எழுதிடலாமா...நிறைய மேட்டர் இருக்கு. நேரம்தான் போதவில்லை.

இருப்பினும் ஒரு சின்ன டிப்ஸ்:

நோன்பு காலங்களில் உடம்பு அதிக சூடு ஏற்படும். இரவில்... அமைதியாக .....விட்டுப்போன சன் நியூஸ்..பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு வாளியில் முக்கால் பகுதி சாதாரண பைப் தண்ணீரை பிடித்து அதில் உங்கள் கால்கள் இரண்டையும் முழுமையாக [முழங்கால் வரை] நனைத்துக்கொண்டு அட்லீஸ்ட் 20 நிமிடம் இருக்கவும். பிறகு தூங்கச்செல்லவும்.

தூக்கம் எப்படினு நாளைக்கு கமென்ட் எழுதவும்

Shameed said...

1986 களில் எனக்கும் ஹாஜா விற்கும்தொழில்நுட்ப விசயங்கள் பற்றி கடுமையான தர்க்கங்கள் நடக்கும் அந்த சமயத்தில் சகோ ஜாகிர் அவர்களின் கூட நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது எங்களின் தர்க்கங்களை சகோ ஜாகிர் ஆரோக்கியமான வழியில் செம்மை படுத்தினார் சிலநேரங்களில் அதையும் மீறி தர்க்கங்கள் ( ஆரோகியமான முறையில் ) தொடரும் கடைசியில்அண்ணான் ஷாகுல் சார் தான் நல்லமுறையில் பஞ்ச்யாத்தை சுமுகமாக தீர்த்து வைப்பார்!

குறிப்பு ;அண்ணன் N.A.S.அவர்கள் என்னதான் நல்லமுறையில் பஞ்சாயத்து தீர்ப்பு சொன்னாலும்கடைசியாக நாங்கள் கோரசாக சேர்ந்து சொல்வது அட்டு பஞ்சயது என்றுதான்,

Haja Shareef said...

என்னுடைய இந்த கட்டுரை கண்டிப்பாக டிவியை விளம்பரபடுத்த அல்ல. அது நோக்கமும் அல்ல. நம்மில் 90% பேரிடம் டிவி இருக்கும். அவற்றை எப்படி பயன் படுத்துவது என்பது தனிப்பட்டவர்களை சார்ந்தது. நீங்கள் ட்யூன் பண்ணுவது இஸ்லாமிய சேனலா, செய்தி சேனலா, சினிமா சேனலா என்பதை நீங்கள் தான் ட்யூன் பண்ணனும். நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது டிவிக்கு வெளியில் உள்ள சமாசாரம் அல்ல. டிவியில் உள்ளே உள்ள நுட்பமான விசயங்கள்.

நான் பலமுறை தொழில் நுட்ப விசயங்களை நண்பர்கள் ஹமீத், ஜாகிர் இவர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட சில பயனுள்ள விசயங்களை தமிழ் நிருபரில் தருவதால் "யாம் பெற்ற தொழில் நுட்ப விசயங்கள் இவ்வையகம் பெறட்டும்" என்ற ஆசையில் தான்.

அன்புடன்/ ஹாஜா ஷரீப்

crown said...

sabeer.abushahruk சொன்னது…

அதில்லை கிரவுன்,
'உள்ளே வெளியே'னு உங்களுக்குப் பிடிக்கிறமாதிரி ஒரு மேட்டர் இருக்கு. அதான் சொன்னேன், 'தம்பி'க்குப் புரியலயோ??

எப்படியோ, கேட்டை மட்டு பிடித்துக்கொண்டு என்னா சேட்டை பண்ணிட்டீங்க. எங்களுக்கு தமிழ் வேட்டைதான்.
-------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.தமிழை ஆட்டை போட்டது உங்களைபோல் உள்ளவர்களிடம் தான் . ஆனாலும் நீங்களெல்லாம் தமிழ் புலிகள்.வேட்டையாடி விளையாடுபவர்கள்.(சகோ.சாகுல் வேட்டையில் ராசான்னு கேள்வி பட்டிருக்கேன்.).வெட்டையிலேயே,விடலயா இருக்கும் போதே எதையும் விடாதவங்கன்னு தெரியும் தானே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அபு இபுறாஹீம், கிரவுன் வந்திருக்கிறமாதிரி தெரியுதே...அப்படியே ஆளை "உள்ளே விட்டு, வெளியே கேட்டை சாத்தினா என்ன?" //

கவிக் காக்கா : ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு போகவில்லை அதனால் கேட்டை (கிரவ்னை உள்ளே வைத்து)சாத்திட வாய்ப்பு கிடைக்கவில்லை இருப்பினும் என் தம்பி எங்கேயும் போகமாட்டான் என்னைச் சுற்றித்தான் வருவான் !

//அதில்லை கிரவுன்,
'உள்ளே வெளியே'னு உங்களுக்குப் பிடிக்கிறமாதிரி ஒரு மேட்டர் இருக்கு. அதான் சொன்னேன், 'தம்பி'க்குப் புரியலயோ??///

இன்று தம்பி சரியான் பிஸி கம்பெனியில் இஃப்தார் பார்ட்டி வேறு தான் தம்பி தலைகாட்ட முடியலை உள்ளே வெளியே மேட்டரு பேசும்போது...

அதனாலென்ன "உள்ளே <> வெளியே" யாவரும் உணரத்தானே போறாங்க ! அப்போ பாருங்க 'கேட்'டால் கூட பூட்டாதீங்கன்னு சொல்லுவாங்க பாருங்க !

லெ.மு.செ.(அ) : மாஷா அல்லாஹ் ! நல்ல புரிந்துணர்வு... அட என்னோட மச்சானும் கருத்தாய்வில் காலார நடக்கிறானே !

அசத்தல் காக்கா : என்னடா ஒன்னா சேர்ந்துட்டாய்ங்கன்னு சும்மா இருக்காம நேரம் ஒதுக்கி "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" (விடுவோமா ?) :)

டெக்னிக்கல் காக்கா (ஹாஜா ஷரீஃப்): இனிமே உங்களை எங்கே சும்மா விட்டாத்ததனே... தூண்டில் போட வேண்டிய இடத்தில் போட்டு மீன் புடிப்போமே !

Sஹமித் காக்கா : சாட்சி ! :)

கிரவ்ன்(னு): ரொம்ப நாளாயிடுச்சு(டா)ப்பா வார்த்தைகளோடு கிளிதட்டு விளையாடி... எதாவது ஆக்கிப் போடு(டா)ப்பா !

Mohamed Meera said...

ஹாஜா-வின் நண்பர்கள் வட்டம் எல்லாம், தொடர்ந்து 'அதிரை நிருபரில்' தங்களின் பங்களிப்புகளை செய்துகொண்டுவரும் போது
ஹாஜா வை மட்டும் 'அதிரை நிருபரில்' காணோமே என்று யோசனையில்!

தான் (ஹாஜா) படித்த Electronics and Communication Engineering சார்ந்த தொழில் நுட்ப கட்டுரையுடன் நண்பர்கள் வட்டதிற்குள் சங்கமாம் ஆன ஹாஜா வை வர்வேற்கின்றோம்

பயன் உள்ள (தொழில் நுட்பம் சார்ந்த) கட்டுரைகளை தொடர்ந்து எழுதவும்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

//ஜாகிர் காக்கா சொன்னது


நோன்பு காலங்களில் உடம்பு அதிக சூடு ஏற்படும். இரவில்... அமைதியாக .....விட்டுப்போன சன் நியூஸ்..பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு வாளியில் முக்கால் பகுதி சாதாரண பைப் தண்ணீரை பிடித்து அதில் உங்கள் கால்கள் இரண்டையும் முழுமையாக [முழங்கால் வரை] நனைத்துக்கொண்டு அட்லீஸ்ட் 20 நிமிடம் இருக்கவும். பிறகு தூங்கச்செல்லவும்.

தூக்கம் எப்படினு நாளைக்கு கமென்ட் எழுதவும்//

காக்கா என் உடம்பு நோன்பு காலங்களில் மட்டுமில்லாமல் எல்லா காலங்களிலும் அதிகபடியான சூடுதான்.முல்லை முள்ளலதான் எடுக்கணும் என்பார்கள் அது போல் என் உடம்பில் உள்ள சூட்டை நோன்பு தனித்துவிடுகிறது.

20 .நிமிடம் தண்ணீரில் நிற்க்காமல் நான் ஜப்பானில் மூன்று வருடம் பட்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன்.தூக்கம்டா அப்படித்தான் இருக்கும்

ZAKIR HUSSAIN said...

To Bro ABUBAKAR,

Wa Alaikkumsalam

ஜப்பானில் இருப்பவர்கள் உண்மையில் மிகவும் பொறுமைசாலிகள். சில வருடங்களுக்கு முன் அங்கு இருந்த என் தம்பி சொன்னது .."எப்பபார்த்தாலும் 5 1/2 ரயிலில்போரமாதிரி ஆடிக்கிட்டே இருக்கும்" ...அந்த அளவுக்கு பூமி ஆட்டங்கண்ட ஊரா?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாகிர் காக்கா ஜப்பானில் உள்ளவர்கள் பயம் கலந்த பொறுமைசாலிகள்.நம்மை போன்ற வெளி நாட்டவர்களுக்கு. பூமி ஆடும்போதும் ,போலீஸ்&இமிக்ரேசன் பிடித்துவிடுமோ.பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் தான் ஒவ்வொரு நாளையும்.கழிக்க கூடிய சூழ்நிலை.

தாய் குழந்தையை தொட்டியில் போட்டு தூங்குவதற்கு தாலாட்டுகிறாள் .அல்லாஹ் பூமியை தாலாட்டுவது.பாவத்தின் போதையில் மூழ்கி தூங்கக்கூடிய பருவத்திருக்கு வந்து முதுமையை அடைந்த எல்லா தரப்பு குழந்தையை எச்சரிப்பதற்க்காக.

கம்பன் எக்ஸ்ப்ரெஸில் போற மாதிரியான ஆட்டத்தை உணர செய்து.பல்லவன் எக்ஸ்ப்ரெஸில் போகிற ஆட்டத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கு அதிகமாக நன்றி செய்ய ஜப்பானில் இருந்த அனைவரும் கடமை பட்டுள்ளோம் .

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு