இது எதோ முதுமலைக்காட்டில் வனவிலங்குகள் வராத சமயம் பார்த்து எடுத்த புகைப்படமல்ல. நம்மூர் அருகிலுள்ள ராஜாமட பாலத்தின் கீழே இறங்கி எடுத்த புகைப்படம். இங்கு மாசுகள் கட்டுப்பட்டு உள்ள தூசிகள் பறந்தோடும் ரம்மியமான ஒரு சாயங்காலப்பொழுது.....
அலைகள் ஓயாமல் அமைதியாகத்தான் ஆர்ப்பரிக்கும். இறைவன் கட்டளை வந்து விட்டால் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விடும் என்பதை நாம் சுனாமி மூலம் கண்டு கொண்டோம். ஆயிரமாயிரம் அதிசயங்களை தன்னகத்தே புதைத்து வைத்து பொறுமையுடன் இன்று அது திகழ்கிறது. (படம்: சென்னை மெரீனா கடற்கரை)
அயல்நாடுகளிலிருந்து ஊர் திரும்புபவர்களுக்கு உற்சாகத்தையும், ஊரிலிருந்து அயல்நாடு செல்ல இருப்பவர்களுக்கு அலர்ஜியையும் (அதிர்ச்சியையும்) கொடுத்து சுகமான சுமைகளுடன் சுகமற்ற சுமைகளையும் சுமந்து செல்லும் ஒரு வாயில்லா இயந்திரப்பறவை (விமானம்). படம் : சென்னை விமான நிலையம்.
இந்த புகைப்படங்கள் நான் சென்ற மார்ச் மாத விடுமுறையில் ஊர் சென்ற சமயம் எடுத்தவைகள். இப்பொழுது கோடைகாலமாதலால் குளங்களும், ராஜாமடத்து பாலத்தின் கீழ் ஓடும் நீரோட்டமும் வற்றி இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தில் ஓயாது ஓடும் பழைய நினைவலைகள் வற்றிவிடுமா? அல்லது ஓய்ந்துவிடுமா? நீங்களே சொல்லுங்கள்.....
ராஜாமட பாலத்தில் ஒரு பொன் நிற மாலைப்பொழுது நண்பர்களுடன் இங்கு சென்று விட்டால் உள்ளத்தில் ஆயிரம் கவலைகள் இருந்தும் அவை எல்லாம் பஞ்சாய் பறந்து விடும். அடர்ந்த பனைமரக்காட்டினில் மயில்கள் தஞ்சம் புகும். சலசலக்கும் அதன் காய்ந்த ஓலைகள் சங்கீதமாய் கேட்கும். இயற்கைக்கு இறைவன் இலவசமாய் அளித்த சலுகைகள் சல்லைப்படும் நம் மனசுக்கு நேர்த்தியான சிகிச்சையளிக்க
விமானம் ஓட்டுபவனுக்கு கூட ஆயிரம் கவலைகள் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் ட்ராக்டர் ஓட்டிச்செல்பவனுக்கு இந்த பயணம் சுகமான சுமைகளாகத்தான் இருக்கும் இந்த பாலத்தை கடக்கையிலே....
இது ஏதோ கிராஃபிக்ஸில் பேக்ரவுண்ட் இலைகளால் மற்றும் பூக்களால் சூட்டப்பட்டு எடுக்கப்பட்ட புகைப்படமல்ல. சும்மா வெறுமனே அப்படியே எடுத்த இயற்கை எழில் கொஞ்சும் நம் செக்கடிப்பள்ளியின் புகைப்படம் தான். இதன் படிக்கட்டுகள் நாம் சிறுவயதில் போட்ட ஆட்டம், பாட்டங்களையும் அதனால் வாங்கிய அடி, உதைகளையும் மற்றும் வேட்டியை தூக்கி தண்ணீரில் கருணையின்றி வீசி சென்ற பெரியவர்களின் பெயர்களையும் நிச்சயம் அதன் ஏட்டில் பதிந்து வைத்திருக்கும். வருங்காலத்தில் வரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் அதை விலாவாரியாக விளக்க வேண்டும்...
மரங்களெல்லாம் தண்ணீரில் தன் தலைவிரி கோலம் கண்டு சீவி சிங்காரித்துக்கொள்ளும் அப்படியொரு இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் செக்கடிக்குளத்தின் மறுபக்கம்....
அதிரையின் தாஜ்மஹாலாய் அழகாக கம்பீரத்துடன் காட்சி தரும் செக்கடிப்பள்ளி. என்னுடைய திருமண நிக்காஹ் இந்த பள்ளியில் தான் நடந்தது என்று நினைக்கும் பொழுது மனசு ரொம்ப சந்தோசமாக குளத்தில் இறங்கி தப்படிக்கிறது.......உங்களுக்கும் அப்படித்தானே.......(கவலெப்படாதியெ நிக்காஹ் நடக்காவிட்டால் என்ன? நார்சா வாங்கவாவது நாம் சபையில் அமர்ந்திருக்கிறோம் என்றால் பெருமை இல்லையா?)
கார்மேகம் வானில் படர்ந்து கதிரவனுக்கு விடுமுறையளித்த சென்னையின் ஓர் காலைப்பொழுது...(நான் சென்னையில் இருந்த சமயம் வீட்டிலிருந்து எடுத்த புகைப்படங்கள்)
உலக வரைபடத்தை வானில் வரைந்து காட்டும் இயற்கையின் அதிசயம். (நல்லா உத்துப்பாருங்க நார்வே, சுவீடன் தெரியுதா?)
ஓர் உச்சி பொழுதின் மெரீனா கடற்கரையின் சுத்தமான புகைப்படம் (காந்தி சிலை அருகிலிருந்து எடுத்தது). நான் புகைப்படம் எடுக்கும் பொழுது சுத்தமாகத்தான் இருந்தது.
நீல வானில் வெண் மேகக்கூட்டம் அணிஅணியாய் தொடர்ந்து வரும் அதிசயம். அமைதியாய் ஆர்ப்பரிக்கும் கடல் அதுவே ஒரு தடவை கோபமாய் சாலை வரை வந்து சென்றது சுனாமியாய். பசுந்தரையில் ஒரு குருவி, காக்கா கூட இருக்கவில்லை. ஆம் நகரமாதலால் எல்லாம் வேலைவெட்டி பார்க்க சென்றிருக்குமோ?
அலைகள் ஓயாமல் அமைதியாகத்தான் ஆர்ப்பரிக்கும். இறைவன் கட்டளை வந்து விட்டால் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விடும் என்பதை நாம் சுனாமி மூலம் கண்டு கொண்டோம். ஆயிரமாயிரம் அதிசயங்களை தன்னகத்தே புதைத்து வைத்து பொறுமையுடன் இன்று அது திகழ்கிறது. (படம்: சென்னை மெரீனா கடற்கரை)
அயல்நாடுகளிலிருந்து ஊர் திரும்புபவர்களுக்கு உற்சாகத்தையும், ஊரிலிருந்து அயல்நாடு செல்ல இருப்பவர்களுக்கு அலர்ஜியையும் (அதிர்ச்சியையும்) கொடுத்து சுகமான சுமைகளுடன் சுகமற்ற சுமைகளையும் சுமந்து செல்லும் ஒரு வாயில்லா இயந்திரப்பறவை (விமானம்). படம் : சென்னை விமான நிலையம்.
இந்த புகைப்படங்கள் நான் சென்ற மார்ச் மாத விடுமுறையில் ஊர் சென்ற சமயம் எடுத்தவைகள். இப்பொழுது கோடைகாலமாதலால் குளங்களும், ராஜாமடத்து பாலத்தின் கீழ் ஓடும் நீரோட்டமும் வற்றி இருக்கலாம். ஆனால் நம் உள்ளத்தில் ஓயாது ஓடும் பழைய நினைவலைகள் வற்றிவிடுமா? அல்லது ஓய்ந்துவிடுமா? நீங்களே சொல்லுங்கள்.....
ஜாஹிர் காக்கா, நல்ல டெக்னிக்கை தான் காமிச்சி உட்டுட்டியெ நமக்கு?... வழவழண்டு எழுதுறதுக்கு பதிலா இப்படி படத்தை போட்டு நோன்பு நேரத்துலெ பேச்செக் கொறக்க வச்சிட்டியெ...என்னா சித்துமத்து?(நம்மூர் பாசையிலெ தந்திரம் என்று பொருள்).
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
என்றும் இனிக்கும் இனிய, இளைய நினைவுகளுடன்...
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.




















22 Responses So Far:
நோன்பு நேரத்துலெ எழுத்தெ கொறச்சு பேச்செக் கொறச்சு வச்சு என்னா சித்துமத்து நெய்னா படத்தெ பேச வச்சு நோம்புலெ நன்மையெ கொள்ளெ அடிக்கிற சதி புரிஞ்சு போச்சு. சூப்பர் நெய்னா அசதிட்டியே!
எடிட்டராக்கா,
சில படங்கள் இணைத்து மின்னஞ்சலில் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். எனவே அந்த மின்னஞ்சலை இங்கு மீள்பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Excellent Snaps...Thanks for sharing
//எங்களூக்கும் சித்துமத்து வேல தெரியும்லே, வழவழனு எழுதி கமெண்டிடாம ஒரே வரி//
உங்கள் படங்களின் Focusing Area உண்மையில் அழகு. வித்தியாசமான ஆங்கிளில் எடுக்கப்பட்டிருக்கிறது. இது டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதிகம் Pixel உள்ள கேமராவாக வாங்கிக்கொள்வது நல்லது. நானும், சாகுலும் [ நல்ல திறமையான போட்டோகிராபர்], ஒப்புக்கு சப்பானியாக சபீரும் [ நான் குப்பை கேமராவை வாங்கச்சொன்னாலும் வாங்குவான்] அனைவரின் தேர்வு NIKON ...because of it's lense [NIKOR]
//சில படங்கள் இணைத்து மின்னஞ்சலில் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். எனவே அந்த மின்னஞ்சலை இங்கு மீள்பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்.//
MSM(n):
தனி மின்னஞ்சலில் அனுப்பித்தந்த நினைவுகளின் நிழற்படங்கள் மெரினா கடற்கரையும் சென்னை விமான நிலையமும் பதிவுக்கும் இணைத்திட்டோம்.
அன்புடன்,
நெறியாளர்
www.adirainirubar.in
நெய்ன வின் பேனாவுக்கு போட்டியாக இப்போ காமெராவும் ..............
குளிர்ச்சி யான படங்கள்
//அதிரையின் தாஜ்மஹாலாய் அழகாக கம்பீரத்துடன் காட்சி தரும் செக்கடிப்பள்ளி.//
மெய்யாலுமே ஆம் தாஜ்மஹால்தான் என்று சொல்லத் தோனுது அவ்வ்வ்வ்ளோ நிழற்படங்கள் எடுத்திருக்கிறேன் இந்த பள்ளியை !
//உங்கள் படங்களின் Focusing Area உண்மையில் அழகு. வித்தியாசமான ஆங்கிளில் எடுக்கப்பட்டிருக்கிறது.//
அந்த ஏரியாவை சுற்றி சுற்றி எடுத்த படங்களை டிஜிட்டல் அன்று இல்லாததால் காகித அட்டையோடு போய்விட்டது இப்படி பின்னால் வலைப்பூ வரும் அங்கே தோரணம் கட்டலாம் தெரியாமல் போச்சு அன்று !
தேடனும்...
கடந்த இரண்டு நாட்களாக ராஜபடம் ஆற்றில் நீர் அதிகமாக ஓடுகின்றது
ஏற் இந்திய விமான போட்டோ போட்டுள்ளீர்கள் குறித்த நேரத்திற்கு புறப்பட்டதா என்று சொல்லவில்லையோ !
ஏர் இந்தியாவை ஒரு விமான நிறுவனமாக நான் கருதுவதில்லை. உண்மையில் இந்த விமானத்தின் போட்டோவை பார்த்ததுதான் அலர்ஜி.
1995 ல் ஊர் வரும்போதும், மலேசியா திரும்பும்போதும் நான் பட்ட கஷ்டங்களை ஒரு சின்ன புத்தகம் போடும் அளவுக்கு எழுதலாம். அன்றிலிருந்து இன்று வரை ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டிலும் இலவசமாக டிக்கட் கிடைத்தாலும் போவதில்லை என இருக்கிறேன்.
அழகான புகைப்படங்கள். குறிப்பாக எங்களூரின் பள்ளிவாசல் புகைப்படம் மார்வெல்ல்ஸ். குட்டி தாஜ்மஹால் நல்ல உவமானம்.
அழகழகான ஃபோட்டோஸ் தொடர்ந்து பதிவாகிறதே, அதிரை நிருபருக்கு கல்யாணம், காதணி விழா என்று ஏதும் ஃபங்ஷன் நெருங்குகிறதா?
//அன்றிலிருந்து இன்று வரை ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டிலும் இலவசமாக டிக்கட் கிடைத்தாலும் போவதில்லை //
அசத்தல் காக்கா : நடுவானில் வேலை நிறுத்தம் செய்யக் கூட தயங்காதவர்கள் !
பேச்சவார்த்திக்கு பிரதமரை கயிறு போட்டு அதில் ஏறிவரச் சொல்வார்கள் விமானிகள் !!
உலகில் பயணிகளின் அசெளகரியத்தைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லும் அயோக்யர்கள் ஏர் இந்தியா ஊழியர்கள்..இவனுக அடிச்ச கொட்டம் இப்போது கம்பெனி சிங்கியடிக்கிறது. Management Re-structuring இல்லாவிடில் Air India மற்றுமொரு Trans world Airline
ZAKIR HUSSAIN சொன்னது…
அனைவரின் தேர்வு NIKON ...because of it's lense [NIKOR]
------------------------------------------------------------
.....because of it's called "sense"
அபுஇபுறாஹீம் சொன்னது…
//அன்றிலிருந்து இன்று வரை ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இரண்டிலும் இலவசமாக டிக்கட் கிடைத்தாலும் போவதில்லை //
அசத்தல் காக்கா : நடுவானில் வேலை நிறுத்தம் செய்யக் கூட தயங்காதவர்கள் !
பேச்சவார்த்திக்கு பிரதமரை கயிறு போட்டு அதில் ஏறிவரச் சொல்வார்கள் விமானிகள் .
-------------------------------------------------------
Hahahahah sense of humar!!!!!!!!!!!!!!
அழகான புகைப்படங்கள்....அருமையான செய்தி துணுக்குகள்....சகோ.நெய்னா எப்பொழுதும் எந்த விசயத்திலும் முன்னோடிதான்
நடுவானில் வேலை நிறுத்தம் செய்யக் கூட தயங்காதவர்கள் !
//பேச்சவார்த்திக்கு பிரதமரை கயிறு போட்டு அதில் ஏறிவரச் சொல்வார்கள் விமானிக//செய்வானுக இந்த வி(பே)மானிக
Assalamuaalikum check this plz,
http://www.citytv.com/toronto/citynews/news/local/article/144877--groups-to-protest-muslim-prayers-at-toronto-school
அஸ்ஸலாமு அலைக்கும்.
கேமிரா கவிஞனாய்பரிமளித்து
கேமிராவில் ஜாலம் காட்டி,'
நம் குளம் காட்டி,'
பாலம் காட்டி,
பட்டி காட்டை காட்டி;
பட்டிதொட்டியெல்லாம் காட்டி
கப்பல் துறைமுகம் காட்டி"
தலைனகரம் காட்டி'அசத்தியிருக்கும் நைனா
இப்படி உம்மையும் இதில் அசத்த
கைகாட்டிய அசத்தல் நாயகன் சகோதரர் ஜாஹிரே
எப்பவும் ஏதும் தெரியாதது போல் கைகட்டி
போஸ் தரும் போட்டோவை பார்த்தா
இவரா? என எண்ணவைக்கும் தோற்றம்
எல்லாமே அதிரை நிருபரில் களை கட்டுகிறது.
தொடரட்டும் உங்கள் யாவரின் வித்தைகள்.
crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். மானம் கப்பல் ஏறும்ன்னு சொல்லுவாங்க. இந்தியாவின் மானம் ஏர் இந்தியாவினால் மானம்(வானம்) ஏறி உலகமெல்லாம் பார்க்க வச்சிட்டானுங்க.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நோன்பு கஞ்சியில் வாடாவை ஊரபோடுவதுபோல். செக்கடிக்குலத்தில் அசர் தொளுததிலிருந்து நோன்பு திறக்கும் சற்று முன்பு வரையிலும் நாமல்லாம் ஊறிய அந்த நாள்களையும்.இப்போ வரண்டு அனாதைபோல் கிடக்கும் செக்கடி குளத்தை பார்த்தால் வருத்தமாக இருந்தாலும்.அதிரை நிருபரில் போட்டாவை பார்த்ததும் மனசுக்கு குளிச்சியாக இருக்கிறது.
நான் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவில்லை என்றாலும். 12 .நம்பர் பஸ்ஸைவிட மோசமாக இருக்கும் என்று சகோதரர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். அதிரை to பட்டுக்கோட்டைக்கு நிறைய பஸ் ஓடியும் நெரிசல் அதிகமாக இருப்பதால்.அந்த விமானத்தை ரூட் வண்டியாக ஓடுவதற்கு யாராவது சிபாரிசு செய்தால் நலமாக இருக்குமே!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
Excellent!!! Photos.
Post a Comment