Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஸ்டார்ஸ் வார் :: Stars War 23

அதிரைநிருபர் பதிப்பகம் | August 08, 2011 | , , ,


இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் அரசு ராடார் (கதிரலை கும்பா) எனும் தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தியதன் விளைவு தற்போது அதிநவீன ராடார்கள் உலகில் வலம் வருகின்றன வானொலி கதிர் அலைகள் அதிக திறனில் செயல்பட்டால் இவற்றின் தாக்கத்தால் மனித உயிர்கள் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆனால் இந்த கதிர்களை வைத்து மனித உயிர்களை கொல்வதை விட வேவு பணிகளுக்கு (மனித உயிர்களை போட்டுத் தள்ளத்தான்) பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் சிந்தித்ததன் விளைவே ராடார் எனும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலக அளவில் நவினப்படுத்தப்பட்டு உள்ளது இன்று இலங்கை போர் முடிவுக்கு வந்தது என்றால் அதற்கு முழு முதல் காரணம் இந்த ராடார்கள் தான்.

மகா ஹெட்ஸ் அதிர்வெண் அலையில் இயங்கும் இந்த ராடார் தன்னை தாக்க வரும் எதிரி விமானத்தின் மீது அதன் கதிவீச்சை பாய்ச்சி அதன் நீளம் அகலம் அதன் மீது பொறிக்கப்பட்டுள்ள எழுத்து முதற்கொண்டு மிக துல்லியமாக நமக்கு காட்டிவிடும். மேலும், அது பயணிகள் விமானமா? அல்லது போர் விமானமா? என்பதையும் நமக்கு அறிவித்துவிடும். நீண்ட தூரத்தில் நகர்ந்து அல்லது பறந்து செல்லும் ஒரு பொருளின் மீது பாய்ச்சப்படும் கதிர் வீச்சின் அதிர்வெண்ணும் அதன் மீது மோதி திரும்பி வரும் எதிர் ஒலி கதிர்வீச்சின் அதிர்வெண்ணின் வேறுபாட்டை வைத்து ராடார் கதிரின் அலை நீளத்தால் பெருக்கி அதன் தொகையின் பாதி அளவே பறந்து கொண்டிருக்கும் அல்லது நகர்ந்தது கொண்டிருக்கும் அந்த விமானத்தின் வேகமாகும் என்பதுதான் இந்த ராடார்களின் விவேகமான கணக்கு. 

Surveillance Target Attack Radar System - இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்துகளே ஸ்டார்ஸ் (STARS) எனும் பெயரை குறிக்கும். 

இங்கே சுருக்கமாக கதிரலை கும்பா (RADAR) எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்:

  • 1. மேக்னட்ரான் உயர் அதிர்வெண் ரேடியோ அலைகளை உருவாக்குகிறது.
  • 2. டூப்லெக்சர் அலைக்கம்பம் மூலம் மேக்னெட்ரானை மாற்றுகிறது.
  • 3. அலைக்கம்பம் காற்றலை மூலம் ரேடியோ அலைகளின் குறுகிய கற்றை அனுப்பி, டிரான்ஸ்மிட்டர் போல் செயல்படுகிறது.
  • 4. ரேடியோ அலைகள் எதிரி விமானத்தை தாக்கி மற்றும் மீண்டும் பிரதிபலிக்கும்.
  • 5. அலைக்கம்பம் பரிமாற்றங்கள் இடையே ஒரு இடைவெளியின் போது பிரதிபலிக்கும் அலைகளை பெறுகிறது.
  • 6. டூப்லெக்சர் மாற்றிகள் அலைக்கம்பம் மூலம் ஏற்பி சாதனத்திற்கு மாற்றுகிறது.
  • 7. ஏற்பி அலகு செயல்முறைகள் கணினி அலைகள் பிரதிபலித்தது மற்றும் ஒரு தொலைக்காட்சி திரையில் இன்னும் பெற்றுக்கொள்கின்றன.
  • 8. எந்த எதிரி விமானம் வேறு அல்லது அருகில் உள்ள இலக்குகளை தொலைக்காட்சியில் கதிரலை கும்பா காட்சி வரைந்து காட்டுகிறது.

21ஆம் நூற்றாண்டின் நட்சத்திர போர் பற்றி உலகநாடுகள் பயப்பட காரணம் இருளிலும் பார்க்க கூடிய அகச் சிவப்பு கதிர் மின்னணு கண்களை கொண்டு காற்றில் பறந்து கண்காணிக்கும் ராடார்கள். துல்லியமாக இலக்கை தாக்க கூடிய ஏவுகணைகள், லேசர் கண் பொருத்தப்பட்ட மிசைல்கள்.  எதிரி முகாம்களை காட்டிக் கொடுக்கும் ஆளில்லா! விமானங்கள் இவை காட்டிக் கொடுத்த சில மணித்துளிகளில் எதிரி முகாம்கள் மிசைல் (misile) தாக்குதலில் துவசம் செய்யப்படும் இவை எல்லாம் நட்சத்திர போரின் சில ஆயுதங்கள். இவை அனைத்தும் மனிதனை மனிதன் கண்காணிக்கவும் அவர்களின் கொள்கைகளை நிலை நாட்டவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மனிதனை மனிதன் கண்காணிக்க இத்தனை அதி நவீன வசதிகளை வைத்துள்ள போதும் மனிதனை படைத்த அந்த ரப்பில் ஆலமீன் நம்மை கண்காணிக்க எத்தனை பெரிய ஏற்பாடுகளை செய்து வைத்து இருப்பான். தடுக்கப்பட்ட காரியங்களை ஒளிவு மறைவாக செய்வதை விட்டுவிட்டு நமக்கு அளிக்கப்பட வாழ்க்கை முறையை பின்பற்றி அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளவேண்டும் அவன் எபோதும் நம்மை கண்காணித்து கொண்டு இருக்கின்றான் என்ற எண்ணம் நம் மனதில் எப்போதும் நினைவு இருக்க வேண்டும்.அந்த நினைவு எப்போதும் நம் மனதில் இருந்தால் வாழ்க்கையில் நேர்மையும் நல்வழியும் கிடைக்கும்.

அதிரைபட்டினத்திலிருந்து...

- அதிரை Sஹமீத் 

23 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா ! அதிரைப்பட்டைனத்திலிருந்து கொண்டு இப்படியா வேவு பார்பப்து !?

நீங்க தான் ஸ்டார்(ஸ்) காக்கா !

Yasir said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா....கதிரலை கும்பாவைப்பற்றி ரொம்ப தகவல்கள்...அனைத்தும் அறிவுக்கு விருந்து...கடைசியில் ஒரு “ நச்” என்ற குட்டையும் வைத்துவிட்டீர்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஹமீத் காக்கா,

நலமா?

நல்ல அறிவியல் தகவலை பகிர்ந்துவிட்டு, இறுதியில் சொன்ன செய்திகளை மிக அழுத்தமாக சொன்னவிதம் அருமை.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

ZAKIR HUSSAIN said...

கடந்த வாரத்தில் என்னை அழைத்துக்கொண்டு தோப்பில் இளநீர் வெட்டித்தந்து,பக்கத்தில் உள்ள ஆற்றுக்கு போகும்போது கீழே விழுந்து தெறித்த பனங்காயை தோட்டக்காரரிடம் சுடச்சொன்னதும், தென்னைமரங்களுக்கு இயற்கை உரத்தை சாக்கில் கட்டி வைத்ததும், இந்த சாகுல் தானா? என என்னை பிரம்மிக்க வைத்திருக்கிறது இந்த ஆக்கம்.

என்னுடைய கஸ்டமர் ஒருவர் [ முன்பு மாஸ் விமான கேப்டன்..இப்போது ஏர் ஆசியாவில் கேப்டன்] எப்படி ரடார் துணையுடன் ஒரு விமானத்துக்கும் மற்றொரு விமானத்துக்கும் மிக சிறிய இடைவெளியில் பறக்க முடியும் என்பதை விளக்கியது போல் இருந்தது உங்களின் மெகாஹெர்ட்ஜ் ராடார் பற்றிய செய்தி.

நீங்கள் சொன்ன Surveillance Target Attack Radar System முன்பு சிங்கப்பூரில் கமன்டோ படையினரால் மிகத்துள்ளியமாக விமானக்கடத்தல்காரர்களை மட்டும் சுட்டுத்தள்ள உதவியான ஒரு தொழில்நுட்பம். இது முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் நடந்தது.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஸ்டார் எழுத்தாளரே நலமா? வீட்டில் யாவரும் நலமா? நோன்பு எப்படி போகுது? தீடீரென எழுத்து வானில் இருந்த நட்சத்திரம் தன்னை மறைத்துக்கொண்டது ஏன் என ஏங்கி நின்ற வேளையில் படார் என ரேடார் பற்றி தகவலுடன்,தடார் ஆஜர் அனதும் இன்ப அதிர்ச்சி மேலும் இப்பதார் நேரத்தில் இந்த ரேடார் பற்றி சிந்தித்து எழுதியதா?ரொம்ப சுத்தம் அச்சு பிசகாமல் அப்படியே விஞ்ஞானத்தை சொல்லிவிட்டு மெஞ்ஞானத்தையும் அதில் புகுத்தும் உக்தி உங்கள் புத்திக்கு மட்டுமே எட்டும் சக்தி. அல்ஹம்துலில்லாஹ்.

sabeer.abushahruk said...

வெல் டன் ஹமீது.

கடலின் ஆழம்கூட இதே முறையில்தான் அறியப்படுகிறது. இல்லையேல் அளக்கும் டேப்பைத் தூக்கிக்கொண்டு ஒருவர் எவ்வளவு ஆழம்தான போவார்?

Yasir said...

//இல்லையேல் அளக்கும் டேப்பைத் தூக்கிக்கொண்டு ஒருவர் எவ்வளவு ஆழம்தான போவார்?/// ஹாஹாஹ....நாங்கள் காலேஜ் படிக்கும் போது எங்க வகுப்புக்கு ”மரணகடி மைதீன்” என்ற சார் வருவார் அவரை நினைப்படுத்தியது உங்கள் வரிகள்

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்

ஹமீத் காக்கா,

நலமா?

//நல்ல அறிவியல் தகவலை பகிர்ந்துவிட்டு, இறுதியில் சொன்ன செய்திகளை மிக அழுத்தமாக சொன்னவிதம் அருமை//

வலைக்கும் முஸ்ஸலாம்

இங்கு நாங்கள் நலமே, தங்களை அதிரையில் ஐந்து நிமிடம் சந்தித்தது மறக்கமுடியாத சந்திதிப்பு

Shameed said...

இன்னும் பின்னுட்டம் இடாத பாக்கி சகோதரர்களை நம் கும்பா கதிர் கொண்டு வேவு பார்த்ததில் அவர்கள் நோன்பு களைப்பிலும் இபாதத் செய்வதிலும் பிசியாக இருப்பதாக நம் ராடார் தெரிவித்துள்ளது

அதிரை என்.ஷஃபாத் said...

/*இன்னும் பின்னுட்டம் இடாத பாக்கி சகோதரர்களை நம் கும்பா கதிர் கொண்டு வேவு பார்த்ததில் அவர்கள் நோன்பு களைப்பிலும் இபாதத் செய்வதிலும் பிசியாக இருப்பதாக நம் ராடார் தெரிவித்துள்ளது*/

ஹா ஹா...

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சகோதரர் ஹமீது: ராடாரை பற்றி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். அப்படியே பேருராட்சி கும்பகர்ணர்களை எழுப்பி பேட்டி எடுத்து - அதிரையை எப்பொழுது சுத்தம் செய்வார்கள் என்று ஒரு கட்டுரையை தயார் செய்து வாருங்கள்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிரையில் அத்தனை கழிவுகளையும் அகற்ற முன்வரவில்லையென்றால் 33பில்லியன் கொசுவையும் அவர்கள் அலுவலகத்தில் அனுப்பி விடுவோம் என்று சொல்லுங்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்க ரேடாரின் கடைசி தகவலின் படி லண்டனில்(ஸ்டார் வார்) பெரும்பாலான இடங்கள் கருப்பர்களின் பிடியில் சிக்கி எரிந்து கொண்டிருக்கிறது.பெரும்பாலான கடைகள் உடைத்து கொள்ளைகள் நடந்து கொண்டிருக்கிறது.போலீஸாரால் எதுவும் செய்யமுடியாமல் நாடு திணருகிறது.

அப்துல்மாலிக் said...

// ராடார்களின் விவேகமான கணக்கு, star war //

இது எல்லாமே அறிவுக்கு புதுசு, நன்றி பகிர்வுக்கு சகோ.

Unknown said...

அட்டகாசமான பதிவு ........ நீங்கள் கண்டிப்பாக அடிக்கடி நிறைய எழுதணும் ...
உங்கள் பதிவு அறிவுகளுடன் நக்கலும் ( மனித உயிர்களை கொல்வதை விட வேவு பணிகளுக்கு (மனித உயிர்களை போட்டுத் தள்ளத்தான்) பயன்படுத்தலாம் )...கலந்த
பதிவு ..
இத்துடன் தஸ்தகீரின் பின்னோட்டமும் கலக்கல்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

Simpile
Teaching
Article
Reading
Super

ஹமீது காக்கா உங்களுடைய ராடார். நோன்பாளிகளை ரொம்ப வேவு பார்க்குது.

Shameed said...

கருத்துசொல்லி ஆர்வமூட்டிய அனைத்து சகோதர்களுக்கும் நன்றி

இந்த கொசுக்கள் மட்டும் நம் பேச்சை கேட்டால் கொசுக்களை வைத்து முதல் அட்டாக் நமதூர் பேரூராட்சி அதற்க்கு அடுத்து இரண்டாவது அட்டாக் நம் ஊர் கறி கோழி வியாபாரிகள் காரணம் பக்கத்து ஊரான பேராவுரணி மார்க்கட்டில் கறி கோழி கிலோ 80 ரூபாய் அதே கோழி நம் ஊரில் 140௦ ரூபாய் இதை அணியாம் என்பதா ? அல்லது நெருப்பு விலை என்பதா ? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்

( ஏழுகிலோ கோழி ரூ 80 என்று வாங்கி வந்ததில் அடியேனுக்கு இன்று ஒருநாள் மட்டும் சமத்து பிள்ளை என்று நல்ல பெயர் வீட்டில் )

ZAKIR HUSSAIN said...

ரூபாய் 80 க்கு 1 கிலோ கறியா...[ சபீர்..இன்னா செய்ரே..அப்பவே சொன்னேன்ல அந்த காக்காயை வெரெட்ட சொல்லி...ஒழுங்கா சொல்லுரதெ கேளு..]

sabeer.abushahruk said...

விரட்டியாச்சு விரட்டியாச்சு. அப்பவே விரட்டியாச்சு (ஆனா, அத்தனைக் காக்காவும் பேராவூரணி பக்கம் போனது இப்ப ஹமீது சொல்லித்தான் தெரியும்)

crown said...

இதை அணியாயம் என்பதா ? அல்லது நெருப்பு விலை என்பதா ? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்
------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சாதா (சோதா)கோழிக்கே நெருப்பு விலைன்னா, நெருப்புக்கோழிக்கு என்ன விலை வைப்பாங்க?(அப்படா பத்த வச்சாச்சு)

Yasir said...

//அத்தனைக் காக்காவும் பேராவூரணி பக்கம் போனது இப்ப ஹமீது சொல்லித்தான் தெரியும்)/// ஹாஹாஹா.... ஓஓ காக்காகறி விலைகூட ஏறிப்போச்சா ?? 80ரூ டூமச் காக்கா

Yasir said...

சாவன்னா காக்கா வந்தா கலகலப்புதான்.....இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை ஊரில் சந்திப்போம் காக்கா

Shameed said...

காகா மாறு காக்கை விரட்டுவதில் வல்லவர்கள் என்று பார்த்தால் காக்கை போகும் திசையையும் ராடார் வைத்து பார்த்து விடுகின்றனர்

Shameed said...

Yasir சொன்னது…
//சாவன்னா காக்கா வந்தா கலகலப்புதான்.....இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை ஊரில் சந்திப்போம் காக்கா//


வெள்ளிக்கிழமை ஊர் வருகின்றீர்களா வாங்க வாங்க உங்களுக்கும் காக்கை கடை சாரி கோளிகடையை காடித்தருகின்றேன் அது காகையா கடையா அல்லது கோழியா கடையா என்று ஒரு (அட்டு ) தீர்ப்பை சொல்லுங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு