Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை மக்கள் புகார்...!!. அரசு நடவடிக்கை எடுக்குமா?. 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 10, 2011 | , ,


கஞ்சிக்கு அரிசி, கெஞ்சி கேட்டும் கிடைக்கவில்லை..! அதிரை மக்கள் புகார்...!!. அரசு நடவடிக்கை எடுக்குமா?.

தமிழக அரசு நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக செயல் படுத்தி வருகின்றது. இந்த வருடமும் சுமார் 3800 டன் அரிசி வழங்க ஆணை பிறப்பித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அரசு இலவசமாக இந்த அரிசியை வழங்குவது போன்ற ஒரு தோற்றத்தை செய்தி ஊடகங்கள் அறிவித்தன. உண்மையில் அரசு இலவசமாக அரிசி வழங்குகின்றதா என்றால் இல்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும்!. கூப்பனில் வழங்கப்படும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிதான் நோன்பு கஞ்சிக்கும் வழங்கப்படுகின்றது!. அதாவது அரசின் இந்த கூப்பன் அரிசியை பள்ளிவாசல்கள் பெறுவதற்கு, கிலோ ஒன்றுக்கு ஓரு ரூபாயை அரசிற்கு செலுத்த வேண்டும். வழக்கம் போல இந்த வருடமும் அதிரையில் உள்ள சுமார் 23 பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க கடந்த 17 ஜூன் அன்று விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த வருடம் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, தஞ்சை போன்ற ஊர்களை எல்லாம் ஒன்றிணைத்து, அனைத்து பள்ளிவாசல்கள் கூட்டமைப்பின் சார்பில், பிலால் நகரை சேர்ந்த முத்தவல்லி ஜனாப். அஹமது கபீர் அவர்களிடம் வழக்கம் போலவே, இந்த வருடமும் இதற்கான கூட்டுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த சகோதரர் இதற்காக படும் அவஸ்தையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

Fax message to CM

அரசின் அரிசியை பெற பலமுறை அலைந்தும், நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையிலும், அரிசியை வழங்க ஆணை கிடைக்கவில்லை!. இதற்காக தினமும் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சாவூரில் அமையப் பெற்றுள்ள கலெக்டர் அலுவலகத்திற்கும், பட்டுக்கோட்டையில் உள்ள TSO அலுவலகத்திற்கும் நோன்பை வைத்துக்கொண்டு அலைய வேண்டிய நிலை!. காலையில் சுபுஹுக்கு பிறகு சென்றால், இரவு 7 மணிக்கு திரும்பவேண்டிய நிலை!. 

இவ்வாறு தாமதமானதால் வேறுவழியின்றி, முதலமைச்சரின் தனி அலுவலகத்திற்கு இரண்டு முறை பேக்ஸ் அனுப்பி இங்குள்ள அவலநிலையை எடுத்து சென்றோம். (இதற்காக, இங்குள்ள அரசு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நம்மிடம் கோபத்தை காட்டியது வேறு கதை!.)

இதன் பலனாக உடனடியாக அரிசியை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு சுமார் 15 பள்ளிவாசல்களுக்கு மட்டும் அரிசி வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சரின் தனி அலுவலகத்திற்கு பேக்ஸ் அனுப்பினோம். ஆனால் நாம் வின்னபித்து இருந்ததோ 23 பள்ளிவாசல்களுக்கு!. ஆணை கிடைத்ததோ (கடந்த வருடம் அனுமதி அளித்து இருந்த) 15 பள்ளிவாசல்களுக்கு மட்டும், இந்த வருடமும் அனுமதி தந்தனர். புதிதாக விண்ணப்பித்து இருந்த தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் உட்பட 8 பள்ளிவாசல்களுக்கு அனுமதியை தராமல் அதை கொண்டுவா, இந்த டாக்குமெண்டை கொண்டுவா என்று மீண்டும் அலைக்கழிக்க விட்டனர்.

CM cell fax confirmation

கேட்டதை எல்லாம் கொடுத்தும்(?), பட்டுக்கோட்டை தாலுகா வழங்கள் அதிகாரி(TSO) சான்று வழங்கியும், தஞ்சாவூரில் உள்ள மாவட்ட வழங்கள் அதிகாரிகளின்(DSO) மெத்தன போக்கினால் மீண்டும் இழுத்தடிக்க ஆரம்பித்துள்ளனர். காரணம் கேட்டால், சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அணுமதி பெறவேண்டும் என்ற பதில் மட்டுமே கிடைக்கின்றது. கலெக்டரின் உதவியாளரிடம் தகவலை கொண்டுசென்றும் பலன் இல்லை!. சுமார் பத்து நோன்பு முடிந்துவிட்ட நிலையிலும், இந்த எட்டு பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கவில்லை!. இதனால் வேறு வழியின்றி மீண்டும் முதலமைச்சரின் தனி அலுவலகத்திற்கு 9 ஆகஸ்ட் அன்று பேக்ஸ் அனுப்பி தகவலை தெரியப்படுத்தியுள்ளோம்.

TSO ORDER

இதனால் நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசு அறிவித்த அரிசியின் அளவு என்ன?. அதை முறைப்படி விண்ணப்பித்த அனைத்து பள்ளிக்கும் வழங்கப்பட்டதா? போன்ற தகவலை பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

மேலும் நாம் முழுமையாக விசாரணையில் இறங்கியபோது, அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு மட்டும் தான் இதுபோன்ற நிலை என்று இல்லாமல், அருகில் உள்ள சேதுபாவா சத்திரம், மதுக்கூர் போன்ற ஊர்களிலும் சில பள்ளிகளுக்கு அனுமதி கிடைத்து, சில பள்ளிகளுக்கு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை, என்ற தகவல் கிடைத்ததும் அரசின் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கும் திட்டத்தில், பல குளறுபடி இருப்பதை உணரமுடிந்தது!. மேலும் அரசு சில நல்ல திட்டங்களை அறிவித்தாலும் அரசு அலுவலர்களின் கால தாமதத்தினால் மக்களுக்கு உரியநேரத்தில் சென்று கிடைப்பதில்லை!. நோன்பு பத்து முடிந்துவிட்ட நிலையில் இனி எப்போது அரிசி கிடைக்கும்?. அரசின் நோன்புக்கஞ்சி அரிசி திட்டம், முஸ்லிம்கள் முழுமையாக பெருவதற்குள் நோன்பு முடிந்துவிடும் போலவே தெரிகின்றது!. ஓரு ரூபாய் மதிப்புள்ள அரிசியை பெற, சுமார் பத்து ரூபாய் வரை செலவு செய்தும் இதுவரை கிடைக்கவில்லை!.

சுமார் 800 வருடம் இந்தியாவை ஆட்சி செய்த ஓரு சமுதாயம், ஆட்சி அதிகாரத்தை இழந்து, அரிசிக்கு அலைய வேண்டிய நிலையில் உள்ளதை எண்ணி நம் உள்ளம் வேதனையின் உச்சத்திற்கே சென்றது!. ஆனால் இதை அறிந்து கொள்ளவேன்டிய சமுதாயம் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதே இந்த அவல நிலைக்கெல்லாம் காரணம்.

இத்திட்டம் சுண்டைக்காய் கால் பணம்!. சுமை கூலி முக்கால் பணம்!! என்ற பழமொழிக்கு ஒத்ததாகவே உள்ளது!. எனவே அரசு இதில் உடனடியாக தலையிட்டு இதில் உள்ள குறைகளை உடனே களையவேண்டும்!. மேலும் இந்த அரிசியை உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவசமாகவே கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்!.

அதிரையில் அரிசி கிடைக்காத பள்ளியின் பெயர்கள்:

  • மப்ரூர் பள்ளிவாசல்
  • பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி
  • கடற்கரை தெரு ஜும்மா பள்ளி
  • தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி
  • மக்தும் பள்ளிவாசல்
  • கலிபா உமர் பள்ளிவாசல்
  • தவ்ஹீத் பள்ளிவாசல்
  • அர்ரஹ்மான் பள்ளிவாசல்

மற்றும்

மதுக்கூர் தவ்ஹீத் அறக்கட்டளை பள்ளிவாசல்
சேதுபாவா சத்திரம் பள்ளிவாசல்

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பிலால் நகரை சேர்ந்த முத்தவல்லி ஜனாப். அஹமது கபீர் அவர்களிடம் வழக்கம் போலவே, இந்த வருடமும் இதற்கான கூட்டுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இந்த சகோதரர் இதற்காக படும் அவஸ்தையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.//

ஒரு தனிமனிதர் இவ்வளவு சிரமப்படுகிறார் எங்கே சென்றார்கள் நாங்களும் சமுதாயப் பணிதான் செய்கிறோம் என்று பிரிந்து கிடக்கும் இயக்கங்கள் !?? ஏன் இவர்களும் முன்வரலாமே கைகொடுக்க !

கண்துடைப்பு அறிவிப்பாக அரசு காலம் தள்ளாமல் மீதமிருக்கும் பள்ளிவாசல்களுக்கும் அதோடு அருகாமை ஊரிலிருக்கும் பள்ளிகளுக்கு சீக்கிரம் அரிசி கிடைத்திட அரசு ஆவன செய்ய வேண்டும் !

இந்தப் பதிவை முதல்வர் அலுவலத்திற்கு மின்னஞ்சல் ( cmsec@tn.gov.in மற்றும் cmcell@tn.gov.in) மூலமும் அனுப்பி வைக்கலாம்...

இப்னு அப்துல் ரஜாக் said...

PLEASE SUPPORT TO ARREST SUBRAMANYA SWAMY,

http://peacetrain1.blogspot.com/

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அரசின் சலுகைகளை மக்களுக்கு சென்றடையவிடாமல் காலம் கடத்திவரும் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

sabeer.abushahruk said...

நேர்த்தியான ரிப்போர்ட்.
தேங்க்ஸ் முஜீப்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அதே சமூக அக்கறை, கோபம் , ஆதங்கம் இது சகோதரர் முஜிபின் நல் நடவடிக்கைக்கு அல்லாஹ் அவருக்கு இந்த ரமலான் மாதத்தில் கூடுதலான பாலப்பலன்களைத்தந்தருள்வானாக ஆமீன்.
அர(ரி)சியல் இதுலேயும் நம் சமூதாயத்தை கஞ்சி காச்சுறாங்க. குல்லா போட்டு நோம்பு கஞ்சி குடிச்சி நம் மக்களை கவுத்துராங்க. ஆனாலும் இயக்கங்கள் என்ன செய்கின்றன.இவங்களுக்கு ஜால்ரா போடுது. சலாம் போடுது.அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அங்கம் வகிக்கும் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களே செவி சாய்ப்பீர்களா?

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------

பைத்தியார பசங்களும், மடத்தனமான செயல்களும்....

இது போன்ற சமயத்தில் துரித நடவடிக்கை எடுத்து பள்ளிகளுக்கு வேண்டிய அரிசிகளை உரிய நேரத்தில் உடனே வழங்க ஏற்பாடு செய்தால் முஸ்லிம்களும் பயன்பெறுவர், வரும் கால தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியையும் எளிதில் பெற இது போன்ற நடவடிக்கைகள் ஏதுவாக இருக்கும் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்களே???

இப்படி அடிப்படை அறிவு கூட இல்லாமல் இவர்கள் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ். படித்து பதவியில் இருந்து வருவதால் என்ன பயன்? இப்படி தொலை நோக்கு பார்வை இல்லாமல் தான் தவறான அரசு அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின் பேரில் கடைசியில் ஆட்சியை கோட்டை விட்டு விட்டு கம்பி எண்ண வேண்டிய நிலையை அரசியல்வாதிகள் அவர்களே அவர்களுக்கு ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

முஸ்லிம்க‌ளுக்கு நோன்பு கால‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் ப‌ள்ளிவாச‌ல்க‌ளுக்கு அரிசி கொடுப்ப‌த‌னால் இந்து ம‌ற்றும் கிருஸ்த‌வ‌ ம‌த‌த்தின‌ர்க‌ளுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா? அவ‌ர்க‌ள் ப‌ண்டிகைக‌ளுக்கும் தாராள‌மாக‌ கொடுக்க‌ வேண்டிய‌து தானே? யார் குற்ற‌ம் சும‌த்திய‌து அல்ல‌து கொடி பிடித்த‌து?

அவ‌ர‌வ‌ர் ம‌த‌த்தின் மேல் தீராத‌ ப‌ற்றும் ந‌ம்பிக்கையும் கண்டிப்பாக இருக்க‌ வேண்டிய‌து தான். குற்ற‌மில்லை ஆனால் துவேச‌ங்க‌ளுக்கு ஒரு போதும் இட‌ம‌ளிக்க‌லாகாது அது எந்த‌ ம‌த‌மாக‌ இருந்தாலும் ச‌ரி.

உண்ண‌ அரிசிதானே கேட்கிறார்க‌ள். ஆட்சியில் ப‌ங்கா கேட்டார்க‌ள்?

என்ன‌ இது சின்ன‌ப்புள்ளெத்த‌ன‌மா........

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அதிரை முஜீப் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கருத்து தெரிவித்த சகோதரர்களுக்கு நன்றிகள். சகோதரர் ஜவாஹிருல்லாஹ்வை நானே என் மொபைலில் இருந்து நான்கு முறை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க முயற்சி செய்தேன். ரிங்காகி கட்டாகியதே தவிர பதில் இல்லை. பட்டுக்கோட்டை எம் எல் எ மூலமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்ததற்கு தான் சட்டமன்றத்தில் இருப்பதாகவும் டி எஸ் ஓ விடம் தெரிவிப்பதாகவும் சொல்லி
இரண்டு நாளாகிவிட்டது.

பஸ் மறியல் செய்ய முயற்சி செய்தும் ஆதரவு இல்லை!. சென்னையில் உள்ள சண் டி.வி நிருபரிடம்(இ.வே.ரா ) நானே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இங்கு உள்ளவர்கள் அதை வெளியிட சம்மதிக்கவில்லை.

தவ்ஹீது ஜமாத்தும் இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அல்லாஹ் எல்லோருக்கும் சமுதாய சிந்தனையை அதிகபடுதவேண்டும் வேண்டும் என்று இந்த ரமளானில் துவா செய்யுங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு