Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நிலவே ! நீதான் பிறையா ? 22

அதிரைநிருபர் பதிப்பகம் | August 21, 2011 | , , ,


நிலா நிலா - ஓடிவா
நில்லாமல் - ஓடிவா !
மலை மீது - ஏறிவா
மல்லிகைப் பூ - கொண்டுவா !
- நினைவில் இருக்கும் சிறு வயதுப் பாடல்

நிலவு, நிலா என்று கவிதைகளிலும் கதைகளிலும் கதாநாயகியாக சித்தரிக்கப்படும் சந்திரன், இதுதான் பூமிக்கு மிக அருகாமையில் (சுமார் 4,06,899 கிலோ மீட்டர் தூரம்) இருப்பதால் நாம் தினமும் சர்வ சாதாரணமாக கண்களால் பார்க்கக் கூடிய ஒன்றாகத் தெரிகிறது. பூமியை நான்காகப் பிரித்து மூன்று பங்கை நாம் (மனைகளாக) வைத்துகொண்டால் பாக்கி என்னவோ அதுதான் நிலவின் சுற்றளவு , அதாவது சுமார் 10,927 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதுதான் அந்த நிலா. அட! நமதூர் நிலங்களை வாங்கி விற்கும் ப்ரோக்கர்களை அங்கு அனுப்பினால் கிடைக்கின்ற இடங்களை அங்கு சிறு சிறு பாகங்களாக, சந்தும் பொந்துமாக, சாக்கடை ஓடக்கூட வழிவைக்காமல் துண்டு துண்டாக மனை போட்டுவிடுவார்கள்!.

நிலவை உற்று நோக்கினால் வட்டவடிவப் பகுதிக்கு நடுவே சிறு சிறு துகல்கள் போல் மங்கலாகக் கருப்பாக தெரியும் அது நிலவில் உள்ள மலைப் பகுதிகள். அந்த மலைப் பகுதி சூரிய வெளிச்சத்தை அதிகமாகப் பிரதிபலிக்காததால் நமக்குக் கருமை நிரமாகத் தெரிகின்றது நமது பூமியில் உள்ள மலைச் சிகரங்களில் மிக உயரமானது இமயமலையில் உள்ள everest சிகரம்.அதன் உயரம் 8,848 மீட்டர் (1955 ஆம் ஆண்டு இந்தியாவால் அளக்கப்பட்டது) ஆனால் நிலவில் உள்ள லைப்ரிட்ஸ் என்னும் மலை கிட்டத்தட்ட 10,600 மீட்டராகும். நிலவில் 120 டெசிபலை (நம் காதுகள் இந்த சப்தத்தில் செவிடாகிவிடும்) சப்தம் போட்டாலும் வெளியோ கேட்காது (நமதூர் குற்றால குளியல் பர்ட்டிகளின் சப்தமெல்லாம் அங்கு எடுபடாது) காரணம் சப்தத்தை கடத்த அங்கு அசைந்தாடும் காற்று இல்லை.

சூரிய ஒளி நிலவில் பட்டு அது பூமிக்கு வந்து சேர 1.3 வினாடிகள் ஆகிறது அதே சூரிய ஒளி சூரியனில் இருந்து நேரடியாக பூமிக்கு வர பல நிமிடங்கள் ஆகும் காரணம் சூரியன் தூரத்தில் இருப்பதால் வெளிச்சம் வந்து சேர தாமதம் ஆகும். சூரியன் அதே நிலவு இருக்கும் தூரத்தில் இருந்தால் (பூமி) நமலேல்லாம் கரிக்கட்டைதான் (அந்தோ கபாப் தான் போங்கள்)!. நிலவிலும் பூமியில் இருப்பது போல் எரிமலைகள் உள்ளன அதில் ஒலிம்பஸ் மான்ஸ் என்ற எரிமலை 3 கிலோ மீட்டர் உயரமும் 600  கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. 

நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வர 27 நாட்களும் 7 மணி நேரமும் 43 நிமிடங்களும் 11. 47 வினாடிகளும் ஆகும். நிலவின் இழுவிசை பூமின் இழுவிசையில் ஆறில் ஒரு பங்குதான். நாம் நிலவில் நின்று கொண்டு துள்ளிக் குதித்தால் அப்படியே ஸ்லோ மோஷனில் மேலும் கீழும் மிதந்து வருவோம்! நிலவு பூமியை மணிக்கு 3,700 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றது. சாதாரணமாக பயணிகள் விமானம் அதிகபட்சமாக 1000 கிலோ மீட்டர் வேகத்திற்குள் தான் பறக்கும். 

சில நேரங்களில் வானில் மேகமூட்டம் காணப்படுவதால் பிறையைக் காண்பதில் சிரமம் ஏற்படும் இது போன்ற நேரங்களில் நாம் சிறுவயதில் யோசிப்போமே நமது விமானப்படை விமானங்கள் மூலம் மேக மூட்டத்தை விளக்கிச் சென்று மறைந்திருக்கும் பிறையைப் பார்க்க ஏற்பாடுகள் செய்தால் நோன்பு வைப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் உள்ள பெரும் குழப்பங்கள் தடுக்கப்படலாம் அல்லவா என்று ? ஆனால் நமது நாட்டு விமானப்படை மிக்20 மற்றும் மிராஜ் 2000 ரக அதி நவீன போர் விமானங்களைத் துரு பிடித்துத் தூக்கி போடுவார்களே தவிர இதுபோன்ற காரியங்களுக்குப் பயன் படுத்தவே மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். அது நம் சிறுவயது கனவுதான்.

சவுதியில் இருந்து நம்மைத் தாண்டி (இந்தியாவை) இருக்கும் சிங்கப்பூர் மலேசியாவில் எல்லாம் சவுதியில் நோன்பு என்றால் அங்கும் நோன்பு, சவுதியில் பெருநாள் என்றால் அங்கும் பெருநாள் கொண்டாடி விடுகின்றனர். அங்கு எந்த குழப்பமும் கிடையாது. ஆனால், நாம் மட்டும் (இந்தியாவில்) இரண்டு பெருநாள் மூன்று பெருநாள் என்று ஆளுக்கு ஒரு இயக்கப் பெருநாள் கொண்டாடி நம் ஒற்றுமையை உருக்குலைத்துக் கொள்கின்றோம்.

இந்த நோன்புப் பெருநாள் தினத்திலிருந்து நம் ஒற்றுமையை நிலை நாட்டிட நாம் அணைத்து முஹல்லாக்களும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஒற்றுமை என்னும் கயிற்றை எட்டிப் பிடிப்போமா ?

- Sஹமீத்

22 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நிலவுக்கு அழைத்துச் சென்று இன்றுதான் பெருநாள் என்று சொல்ல வைத்திடுய்வீங்க போலிருக்கே !

பேச்சு, சிந்தனைக்கு ஏற்ப எழுத்திலும் அப்படியே சொல்ல் நினைத்ததை எங்களுக்கு தருவதிலும் ஒரு ஸ்டைல்தானே !

நிலவு எங்கிருக்கும் !?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்
எஸ் ஹமீத் காக்கா சிறப்புமிக்க விஞ்சான ஆக்கம் .இதை நோன்பு ஒரு வாரத்துக்கு முன்பு பதிந்து இருந்தால்.நம் காஜிமார்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்.
//நிலா நிலா - ஓடிவா
நில்லாமல் - ஓடிவா !
மலை மீது - ஏறிவா
மல்லிகைப் பூ - கொண்டுவா !
- நினைவில் இருக்கும் சிறு வயதுப் பாடல்//
+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@+@

இன்று நாம் இப்படிதான் பாட வேண்டும்போல் இருக்கு.

மேகமே ! மேகமே ! விலகிவிடு
பிறையை பார்க்கும்வண்ணம்-விலகிவிடு
மக்கள் பார்வை- உன் உருவத்தில் படாமல்- ஓடிவிடு
மகிழ்ச்சியான மழையை எங்களுக்கு -கொட்டிவிடு .


//இந்த நோன்புப் பெருநாள் தினத்திலிருந்து நம் ஒற்றுமையை நிலை நாட்டிட நாம் அணைத்து முஹல்லாக்களும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவை எட்டுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஒற்றுமை என்னும் கயிற்றை எட்டிப் பிடிப்போமா ?//

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக முடியும்.எப்போது ?அனைத்து முஹல்லா வாசிகளின்.தெளிவில்லா சிந்தனை என்னும் மேகங்கள் என்று கலைகிறதோ.அன்று
ஒற்றுமை என்னும் கயிற்றை எட்டிப் பிடிப்போம்.

sabeer.abushahruk said...

பாடம் இவ்வளவு டிட்டைலா நடத்தறதப் பார்த்தா... மேற்கொண்டு இதிலே பரீட்சை ஏதும் வைக்க மாட்டியலே?

குனிந்து பார்த்தேன்
நிலா
அதிர்ந்துகொண்டிருந்தது
தடாகத்தில்!

நிமிர்ந்து பார்த்தேன்
நிலா
உதிர்ந்து கொண்டிருந்தது
பெளர்னமி!

(கிரவுனும் அபு இபுறாஹீமும் எங்கே?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உற்றுப் பார்த்தேன்
நிலா
உயிரோட்டம் தெரிந்தது
வீட்டினுள்ளே!

அயர்ந்து உறங்கினேன்
நிலா
கனவுக்குள் கவிதையானது
விடியும் வரை !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
நிலா
பரிட்சைக்கு படிப்பவனுக்கு
இரவுச் சூரியன் !

ZAKIR HUSSAIN said...

கவிதை எழுதுபவர்கள் எல்லாம் 'பொய்' யாக சொன்ன இந்த நிலவில் இவ்வளவு உண்மையிருக்கா?...

வான சாஸ்திரமும் , இயற்பியலும் ரொம்ப இன்ட்ரஸ்டிங் சப்ஜெக்ட். படிக்க படிக்க இறைவனின் படைப்பில் ப்ரம்மித்து இறைவனை வழிபடும்போது ஒரு விதமான உணர்வு தெரியும்.

நாம் "தூசி" என்பது தெளிவாகும்

crown said...

sabeer.abushahruk சொன்னது…
குனிந்து பார்த்தேன்
நிலா
அதிர்ந்துகொண்டிருந்தது
தடாகத்தில்!
நிமிர்ந்து பார்த்தேன்
நிலா
உதிர்ந்து கொண்டிருந்தது
பெளர்னமி!
(கிரவுனும் அபு இபுறாஹீமும் எங்கே?)

---------------------------------------------------------

இரவு சண்ணல் வழியே நிலா கண்டு
மனம் மகிழ்வு கொண்டு
எண்ணங்கள் கவிதை எழுத தூண்டிய பொழுதில்,
நிலா பொழிந்த அந்த பெளர்னமி
என் கவித்தாகத்திற்கு நீர் வார்த்தது.
பின் கவிமழையில் நிலா நனைந்தாலும்
ஈரம் உலர்த்த வேண்டி,
சூரியனை தேடிச்சென்று
ஒளிந்து கொண்டதும்
கதிர்கள் தன் கரங்களை
இந்த புவி மீது பாய்ச்ச.
இந்த புவி தாகம் கொண்டது.
கவிதாகம் கொண்ட கவிஞர்கள்
கவி மழை பொழிவர்! ஆனால்
புவிதாகம் வந்தால்,
வான் மழைத்தேடி
எல்லா சீவராசிகளும் வேண்ட முகில் வந்து
மழை தந்தால்
தீர்ந்திடும் நம் தாகம்.,
வீறு கொண்டெழும் நம் தேகம்.
எல்லாம் நினைத்த மாத்திரத்தில்
நடப்பதற்கு கொடுப்பினையும் வேண்டும்.
நம் வாழ்வில் கொடுப்பினை வேண்டும் என்றால்
ஊர்கூடி தேர் இழுப்பதுபோல்,
ஒற்றுமையின் கயிர் பிடித்து வல்ல
நாயனிடம் வேண்டி நின்றால்
பிறை கூட சரியான
நேரத்தில் தோன்றி.,
குறை தீருமே!. எம் சமுதாயத்து
திரு நாளாம் அந்த பெருனாளுக்கு.
இதுதானே? விஞ்ஞான எழுத்தர்
நம் சகோ. சாகுலும் ,சகலோரும்
வேண்டுவது.
இன்ஷாஅல்லாஹ்,
இது நடந்தேறினால். வரும் பெரும் நாளும்
இன்ப திருனாலாகுமே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவிதை எழுதுபவர்கள் எல்லாம் 'பொய்' யாக சொன்ன இந்த நிலவில் இவ்வளவு உண்மையிருக்கா?...//

அந்த நிலவில் தான் காக்கா,

க.மு. = அவளின் முகம் தெரியுமாம்
க.பி. = இவளின் முகம் தெரியுமாம்

"ன்னு"

கவிதையில எழுது போர்த்தி வச்சுருக்காங்க தெரியுமா ?

கமு - கல்யாணத்திற்கு முன்
கபி - கல்யாணத்திற்கு பின்

அது சரி அ-வுக்கும் இ-வுக்கும் வித்தியாசம் என்ன ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு) ஸிக்ஸர்(டா)ப்பா !

கலக்கல் !

நீரூக்கு சொல்லியா தரனும் பல்லத்தாக்கு நோக்கி ஓடு என்று !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//பாடம் இவ்வளவு டிட்டைலா நடத்தறதப் பார்த்தா... மேற்கொண்டு இதிலே பரீட்சை ஏதும் வைக்க மாட்டியலே//

பரீட்சை வைத்தால் இங்கு வரும் அனைவரும் 100 / 100 மார்க்கு வாங்கிருவாங்க!

sabeer.abushahruk said...

//க.மு. = அவளின் முகம் தெரியுமாம்
க.பி. = இவளின் முகம் தெரியுமாம்//

இபுறாஹீம்,
உங்க வாப்பாவோட ஆட்டம் தாங்க முடியல. நைஸாப் போட்டுக்குடேன்.

Ahamed irshad said...

சூப்ப‌ர் ஆர்ட்டிகிள்..அருமையான‌ த‌க‌வ‌ல்க‌ள்.. அதிலும் பின்னூட்ட‌த்தில் பின்றாங்க‌ ந‌ம்ம‌ ம‌க்க‌ள்'ஸ்.. இன்ட்ர‌ஸ்ட்டிங்.. :))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

இபுறாஹிம் சொன்னது உங்கள் காதில் விழுந்ததா ?

"எப்போ நிலவுக்கு பயணம் செல்லப் போறோம் எல்லோருமாக சேர்ந்து - இன்னும் எத்தனை நாளைக்கு பார்த்துக் கொண்டே இருப்பது :))" !

ஆகவே! நிலவை வைத்து கவிதை கட்டுரை எழுதிய ஜெனரேஷன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் அடுத்து வரும் ஜெனரேஷன் அங்கே எப்படி பயணம் அமைப்போம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர்... கவிஞர்கள் வேறு வின்கோலை தேடிப் பார்க்கட்டுமாம் கதாநாயகனகவோ / நாயகியாகவோ ! :)

Unknown said...

மறுபடியும் பயனுள்ள தஹவல்லோடு நல்ல செய்தியும் ..............
அதற்க்கு தனிபதிப்பாக வெளியிட வேண்டிய அருமையான
பின்னூட்டம் கிரௌவுனடையது ..............

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.ஜாஹிர் அவர்களுடன் பேசும் போதும், அதே வேளை கவிஞர் நண்பர் அப்துற்றஹ்மானிடம் பேசும் போதும் அவர்கள் என் கருத்தை தனி பதிவாக போடவேண்டியது தானே என்றார்கள். அவர்களின் அன்பிற்கு நன்றி. நான் சொன்னேன் இதை நிர்வாகத்தினரிடம் அவர்கள் சொல்வது சாலச்சிறந்தது என்று. ஆனாலும் என்னையே இந்த கருத்தை இங்கு எழுதச்சொல்லி அழுத்தம் கொடுத்தனர். ஒருகாள் நிர்வாகத்தினர் தனி கவிதையாக வெளியிடுவதென்றாலும் ,இல்லையென்றாலும் எனக்கு ஏதும் சங்கடமோ, வருத்தமோ இல்லை. காரணம் அந்த கவிதை எழுத தூண்டிய சபீர்காக்கா,அபுஇபுறாகிம் காக்கா, கட்டுரையின் ஆசிரியர் விஞ்ஞான எழுத்தர் சகோ.சாகுல் ஆகியோரே தூண்டு கோளாய் அமைந்தது எனக்கு மிக்க மகிழ்வு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி கிரவ்ன்(னு): என் கருத்தின் ஆழத்தை உணர்ந்திருப்பார்... பல்லத்தாக்கு நோக்கி வேகமெடுத்து ஓடும் கவித்துவ வார்த்தைகளும், அதன் வளமும் எந்த நிலத்தையும் செம்மை படுத்தும் !

என் விருப்பம் தனிப்பதிவாக வெளியிடத்தான் ஆசை அது கருத்துக் குவியலுக்குள் வரும் முன்னர்... இருப்பின் உன் கவிதை வரிகள் குன்றின் மேல் என்றுமே இருக்கத்தானே செய்கிறது அதற்கு நாங்களும் கைகோர்த்து உணர்வுகளால் தூக்கி வைப்பதில் முன்னிருப்பவர்களே.

ஏற்கனவே வேண்டியிருக்கிறேன் உன்னிடம் வார்த்தை கிளிதட்டுக்கு வா(டா)ப்பா நோன்பில் விளையாடிய முன்னனுபவம் இருப்பதாலே :)

எழுதித் தா...
எழும்பி வா...
ஏங்க வைத்திடாதே !
ஐக்கியமே தலைப்பு !
என்று கொள் !

காத்திருக்கிறேன் சாரல் வீச அதன்பின்னர் தனி பந்தலாக போட்டுடலாம் முகப்பிலே !

என்னைத் தெரிந்தவனுக்கு தெரியும் என்ன நினைப்பேன் என்று !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல விஞ்ஞானப் பதிவு.முஹல்லாக்கள் மட்டுமல்ல மாநிலமே அல்லது நாடே ஒருமித்த கருத்துக்கு வரவேண்டும்.
விஞ்ஞானிக்கு ஒரு கேள்வி:நிலா நம் உருண்டையை சுற்றிவர 27.32 நாட்கள் எடுக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள்.அப்படிப் பார்த்தால் வருடத்திற்கு ஒவ்வொரு நோன்பும் 37 நாட்கள் முன்னதாக வரவேண்டும் ஆனால் சராசரியாக 11 நாள் தான் முந்தி வருகிறது.இது எதனால்?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா பார்த்தவுடன் படைக்கவேண்டிய சூழலில் உடனே அனுப்பிவிட்டேன். பார்த்து வார்தைகளை சரிபார்த்து வெளியிடவும் ,அதில் சில பிழைகள் தோன்றலாம் நேரம் இல்லாததால் அப்படியே அனுப்பு விட்டேன் சரிபார்த்து வெளியிடவும்.

crown said...

Assalamualikum
http://adiraipost.blogspot.com/2011/08/blog-post_5913.html

அப்துல்மாலிக் said...

தகவல் அருமை, பகிர்வுக்கு நன்றி

அலாவுதீன்.S. said...

சகோ. ஹமீது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நிலாவைப்பற்றிய நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கண்ணில் பட்டது அதுவும் என்னையும் கவர்ந்தது இது !

"தலைவரை அரெஸ்ட் செய்தது தேவையற்றது அநியாயமானது !"

"ஏன் அப்படி செல்றே ?"

"நிலா அபகரிப்பு வழக்குன்னு போட்டு உள்ளே தள்ளிட்டாங்கப்பா"

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு