Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உள்ளே - வெளியே ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | August 19, 2011 | , , , ,

இழுப்பிலும் உமிழ்விலும்
உள்ளே வெளியே
உலாச்சென்ற சுவாசம்
வெளியே சென்றதோடு
மூப்பிலும் பிணியிலும்
உள்ளே வராமல்
நின்றுவிட
அகவை முதிர்ந்த
அப்பா ஒருவர் மவுத்தானார்கள்!

(அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்)

அவர்களின்
அத்தனை அபிமானிகளையும்
வெளியே இறுத்தி
உடலை
உட்கூடத்தின்
உள்ளே கிடத்தி
அவர்தம் அனுமதியின்றி
துணிமனி அகற்றி
உள்ளுடல் பிதுக்கி
வெளியுடல் குளிப்பாட்டி
நறுமண மூட்டி
நல்லுடை அணுவித்து
உள்ளேயோ வெளியோவோ அன்றி
நடுவீட்டில் கிடத்தி...

பின்னர்


அன்னாரைச் சுமந்து
அவருக்காகத் தொழுது
தெருவிற்கு வெளியே உள்ள
மையவாடியின்
உள்ளே சென்றபோது...

மண்ணுக்கு மேலேயும்
மட்டப்பாவிலும்
மகிழ்ந்திருந்த மனிதருக்கு
மண்ணுக்குக் கீழே
சதுர அடிக் கணக்கிட்டு
அறை ஒன்று
தயார் நிலையில் இருக்க...

பச்சைப் பாம்புகளென
காய்கள் தொங்கும்
முருங்கை மரத்திலிருந்து
மூன்றல்லது நான்கடிக்கு உள்ளே
அடை மழைக்கு முன்னே
அடக்கம் செய்த
வாப்பாவின் கபுரைத்
தேடிப் பிடித்துக்
கண்கள் வருடின!

கபுரின் தலைமாட்டிலும்
கால்மாட்டிலும்
குத்தி யிருந்த
கட்டைகள்
கோணங்கள் பிசகி
சாய்ந்திருக்க
பிரண்டைக் கொடிகள்
சறுகுக ளாகியிருக்க
அவற்றிற்கிடையே
வெளியே மேடிட்டிருந்த
வாப்பாவின் கபுருஸ்தான்
உள்ளே சற்றே அமிழ்ந்தும்...

வசிப்பின் உள்ளே
இருந்தபோது
வசீகரித்த வாப்பா
கபுருக்கு வெளியே
என்னை நிறுத்த...
பனித்தன விழிகள்!

என் காற்றும்
வெளியே நிற்கும் நாளில்
என்னுடலை
உள்ளே கொணரும்போது
வாய்க்கப்போகும் கபுர்
இங்கேயா
அல்லது அங்கேயா வென
கேள்விகளோடு
மையவாடி விட்டு
வெளியே வந்து
இம்மைக்கு உள்ளே புக...

உள்ளே இழுத்தது
ஸ்தம்பித்து
உயிரையும் உணர்வையும் பிசைந்து
பெரிதாக
வெளியே வந்தது!

- சபீர்
Sabeer abuShahruk

24 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நோன்பை வைத்துக்கொண்டு இதுபோல் உயிரை உலுக்கிபார்க்கும் கவிதை படித்து கருத்திட மேனியிலும்,உயிரிலும் தெம்பு இல்லை காக்கா(இங்கே சஹர்)ஆனாலும் மவுத்தை பத்தி எழுதி வாய் விட்டு அழ வைத்தாலும் நல்ல ஒரு எச்சரிக்கை இச்சமயத்தில் தேவை என்பதை அழுத்த பதிந்த சாகா வரம் பெரும் கவிதை இது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இழுப்பிலும் உமிழ்விலும்
உள்ளே வெளியே
உலாச்சென்ற சுவாசம்
வெளியே சென்றதோடு
மூப்பிலும் பிணியிலும்
உள்ளே வராமல்
நின்றுவிட///

ஷக்கராத்துடைய ஹால் என்று சொல்லும் அந்நிலையை சொல்லும் வரிகளின் வலி உணராமல் இருக்க முடியவில்லை !

மூச்சு இருக்கும் வரை உறவுமுறைச் சொல்லி அழகுற அழைத்த நாம் மூச்சு நின்றதும் "மையத்" என்றழைக்கவும் தயாராகிவிடுவோம்.. இதுதான் இவ்வுலக வாழ்கையின் தருனம் !

கவிக் காக்கா : எத்தனையோ மையத்தினை மண்ணறைக்குள் இறக்கிட முன்னிருந்திருக்கின்றேன் ஒவ்வொரு சமயத்திலும் அங்கே கைப்பிடி மண் போட்டிடும் தருனம் சுல்லென்ற வலி வராமல் இருந்ததில்லை...

உங்களின் வரிகள் அச்சமூட்ட வந்ததல்ல... அச்சத்துடன் மீதமிருக்கும் வாழ்வை அல்லாஹ்வின் பொருத்தம் நாடி அங்கே சென்றிட வைக்கப்பட்ட முகவுரை...

//உள்ளே இழுத்தது
ஸ்தம்பித்து
உயிரையும் உணர்வையும் பிசைந்து
பெரிதாக
வெளியே வந்தது!//

ஒவ்வொரு (மையதடக்கம் நிகழும்) தருனத்தில் உணர்வது !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மைய வாடிக்கு சென்றும் மொவுத்துடைய சிந்தனை இல்லாத எமக்கு. காக்காவின் வசீகர வார்த்தையால் எம் உடலை குழிக்குள் வைப்பதுபோல் உணர்வுகளால் மேனியெல்லாம் சிலிர்க்கின்றன .

நிச்சயமாக ஒவ்வொருவரும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும்.நம்மை வழிஅனுப்ப யார் யாரோ ?

நம் பயணம் பயனுள்ள பயணமாக இருக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

crown said...

இழுப்பிலும் உமிழ்விலும்
உள்ளே வெளியே
உலாச்சென்ற சுவாசம்
வெளியே சென்றதோடு
மூப்பிலும் பிணியிலும்
உள்ளே வராமல்
நின்றுவிட
அகவை முதிர்ந்த
அப்பா ஒருவர் மவுத்தானார்கள்!

(அவனிடமிருந்தே வந்தோம்
அவனிடமே மீளுவோம்).
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.மூச்சு உள்ளேயும் வெளியும் சென்றுவர அது நிச்சயமல்ல திரும்பி நுரையீரல் தொட்டு சுவாச பறிமாற்றம் தொடர்ந்து நடக்கும் என்பது. அதனால்தான் சவூதி அரேபியர்கள் பார்க்கும் பொழுதெல்லாம் ஹைப ஹாலூக்? என்ற எப்படி இருக்கே என்பதை எப்பொழுதும் கேட்க நாம் பார்கிறோம். மனிதன் நிலை நிலையற்றது. ஒவ்வொரு வினாடியும் நிச்சயமற்ற நேரக்கழிவுகள்தான் . அப்படி ஒரு நிச்சயமற்ற நேரத்தில் நிச்சயமாய் நடந்த மரணம் நம்மை மூச்சற்ற பிணமாய் இஸ்லாத்தில் அழைக்கப்படும் மையத்தாக மாற்றிவிடும். நொடியில் மாறும் நம் நிலையும், நம் மேனியின் நாமகரணமும்.இப்படி ஒரு நிலைதான் வயதில் மூத்த அப்பாவின் இறப்பும்,அவர்களின் உயிர் உதிர்பும் பூத்த கவிதை இது. வழக்கம்போல் அர்த்தம் பொதிந்த வார்தை ,வாசிக்கும் போது சுவாசத்தில் சிறிது கைவைத்து அழுத்துவது போல் அமைந்த எழுத்து நடை. நல்ல தொரு மரண நிவைவூட்டல்.... அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

மண்ணுக்கு மேலேயும்
மட்டப்பாவிலும்
மகிழ்ந்திருந்த மனிதருக்கு
மண்ணுக்குக் கீழே
சதுர அடிக் கணக்கிட்டு
அறை ஒன்று
தயார் நிலையில் இருக்க...
---------------------------------------------------------

ஆஹா! என்னே உவமானம்.அரசன் முதல் ஆண்டி வரை தோண்டிவைத்த அந்த மண்ணறைதான் இனி மஹ்சர்வரை இது நிறந்ததர மற்ற மண்ணுக்கு மேலே உள்ள வாழ்கையை நிறந்தரமாய் மண்ணுக்கு உள்ளே மருபடியும் வல்ல நாயன் அல்லாஹ்வால் எழுப்பபடும் வரை தங்கும் அறை.இந்த அறை எத்தனை பேர் அடங்கி அதில் குடியிருந்தாலும் நிரந்தரமாய் மண்ணுக்கு மேலே ரூம் காலி என சொல்லாமல் சொல்ல, மரணித்தவர்கள் மண்ணின் உள்ளே செல்ல உள்ள அறை.

crown said...

பச்சைப் பாம்புகளென
காய்கள் தொங்கும்
முருங்கை மரத்திலிருந்து
மூன்றல்லது நான்கடிக்கு உள்ளே.....
--------------------
வெளியே மேடிட்டிருந்த
வாப்பாவின் கபுருஸ்தான்
உள்ளே சற்றே அமிழ்ந்தும்...

----------------------------
வசிப்பின் உள்ளே
இருந்தபோது
வசீகரித்த வாப்பா
கபுருக்கு வெளியே
என்னை நிறுத்த...
பனித்தன விழிகள்!
-------------------------------------------------------
வாப்பா!அது வாப்பாவாய் வாழ்ந்த எம்மை அச்சில் வார்த்த அச்சு இயந்திரம் மூடி வைக்கப்பட்ட மண்ணறை. நெஞ்சு அடைக்க துக்கம் வந்து கண்ணீர் திரண்டு வந்தாலும் திரும்பி வருவாரா வாப்பா? இல்லை அருமை மகனே அருகில் வாப்பா என அழைக்க முடியுமா வாப்பாவாய் வாழ்ந்து மரணித்து போன அந்த மையத். நாம் தான் அந்த மைய வாடியில் எப்படி வாடினாலும் தங்கிவிடமுடியுமா? எல்லாம் இறப்பு வரைதான் எல்லா உயிர்களின் உரிமையும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனம்போல் வாழும் நம்மை மரணத்தையும் நினைவூட்டி ஆக்கிய கவிமூலம் கல்லும் கரையும் கண்ணும் கலங்கும் நிச்சயம்.

crown said...

என் காற்றும்
வெளியே நிற்கும் நாளில்
என்னுடலை
உள்ளே கொணரும்போது
வாய்க்கப்போகும் கபுர்
இங்கேயா
அல்லது அங்கேயா வென
கேள்விகளோடு
மையவாடி விட்டு
வெளியே வந்து
இம்மைக்கு உள்ளே புக...

உள்ளே இழுத்தது
ஸ்தம்பித்து
உயிரையும் உணர்வையும் பிசைந்து
பெரிதாக.
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நிச்சயம் நாமும் மரணிப்போம், சாவு மறக்காமல் நம்மை வந்து சேரும். அது வந்து சேரும் நாள்? எவ்விதம்? எங்கே? எம்மையும் மையத்தாய் அடக்கபோகும் மண்ணறை எது? விடைகள் தெரியாத கேள்விகள் ஆயிரம் ஆயினும் மரணம் வரனும் எனும் போது வந்தே தீரும். ஆனாலும் நம்முடைய மருமை பயனம் மடியில் கணம் வழியில் பயமாக இருக்காமல் பார்த்துகொள்வதும் நிய்யத் நல்லாஇருந்தா நல்ல மையத்து என சொல் வழக்குப்படி,போகும் இடம் சிறக்க நாம் நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு ஆத்மாவின் கடமை. இன்சா அல்லாஹ் அல்லாஹ் எல்லாருக்கும் அவன் பொருந்தி கொள்ளக்கூடிய மரணத்தை தந்து மருமையை செம்மையாக்குவானாக. இதையெல்லாம் நினைத்துப்பார்க்கையில் ஒரு நாளைக்கு நூறுமுறை இறந்து, வாழுது நம் மூச்சு காற்று அது தடையில்லாமல் வெளியே சென்று உள்ளே உறுதியா வருதா இல்லை இறுதியா வருதா? வந்து போனால் வருமா?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் .முதல் கருத்தில் கைஃப ஹாளூக் என்பதை ஹைப என தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும்.

Shameed said...

மையாத்தான்கரை சுவர் ஏறி குதித்தது "உள்ளே" போட்டோ எடுத்துக்கொண்டு திரும்பவும் சுவர் ஏறி குதித்தது "வெளியோ" யாருக்கும் புரிந்ததா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மையாத்தான்கரை சுவர் ஏறி குதித்தது "உள்ளே" போட்டோ எடுத்துக்கொண்டு திரும்பவும் சுவர் ஏறி குதித்தது "வெளியோ" யாருக்கும் புரிந்ததா? //

உள்ளே சென்று(ம்) வந்து வெளியே(றி) உடணே அனுப்பியதை மறக்க முடியுமா ? எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் !!

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே,நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!(அல்குர்ஆன் : 21:35)

மரணம் என்பது உண்மையானது நிச்சயமானது. மரணத்திலிருந்து பூமியில் உள்ள எந்த உயிரினமும் தப்ப முடியாது.

மரணத்தை மறந்தவர்களாகத்தான் நாம் இருக்கிறோம். உலக வாழ்க்கையின் இறுதிக்கட்டம்தான் மரணம்.

அலாவுதீன்.S. said...

மரணித்த ஒருவரை மண்ணறைக்கு எடுத்துச் செல்லும் போது மூன்று விஷயங்கள் அவரை பின் தொடர்ந்து செல்கின்றன; அவருடைய உறவினர்களும் சொத்துக்களும் திரும்பி விடுகின்றது. அவர் செய்த செயல்கள் மட்டும் அவரோடு தங்கி விடுகிறது.

அலாவுதீன்.S. said...

“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).

அலாவுதீன்.S. said...

“முஃமினான முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம். (அறிவிப்பவர்: புரைதா (ரலி) முஸ்லிம்)


சபீர்! நல்லதொரு மரண சிந்தனை ரமளான் மாதத்தில்.

ரமளானின் கடைசி பத்தில் இருக்கிறோம். அதிகம் அமல்கள் செய்து, அதிகம் பாவமன்னிப்பு தேடி நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். இன்ஷாஅல்லாஹ்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு பாசமிகு சபீர் காக்கா,

இந்த புனித ரமழான் மாத்தில் எல்லோருக்கும் மரண சிந்தனையை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். மரணம், கபுர் வேதனை பற்றி கட்டுரை நிறைய படித்திருக்கிறேன், நிறைய மார்க்க சொற்பொழிவுகள் கேட்டிருக்கிறேன். ஆனால் தங்கள் கவிதையை படிக்கும் போது மையவாடிக்கு சென்று வந்த உணர்வு. இந்த பதிவை ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும்.

நானும் சில சந்தர்ப்பங்களில் என் சொந்தங்களின் மையத்துக்களை கபுரில் வைத்து மூடியிருக்கிறேன், அப்போதேல்லாம் இல்லாத ஒரு அச்ச உணர்வு இந்த பதிவை படித்தவுடன் ஏற்பட்டது.

ஜஸக்கால்லாஹ்... இது போன்ற இறையச்ச உணர்வு கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள் காக்கா.

தாங்களும், தங்கள் குடும்பதவர் அனைவரும் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நலமுடன் இருந்து வர துஆச் செய்கிறேன் -இன்ஷாஅல்லாஹ்!

ZAKIR HUSSAIN said...

உள்ளே & வெளியே என்ற 2 வார்தையை வைத்து இவ்வளவு எழுதமுடியுமா?

crown said...
This comment has been removed by the author.
crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
உள்ளே & வெளியே என்ற 2 வார்தையை வைத்து இவ்வளவு எழுதமுடியுமா?
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.உள்ளே இருந்தாதான் இப்படி வெளியே வரும். வெளியே இருப்பதை கிறகித்து உள்ளே அனுப்பி வெளியே விட ஒரு இது ... அதான் இது.... வேணும். அந்த இது அதாங்க எண்ணியவை திண்ணமாய் பிண்ணும் ஆற்றல். கவிஞரிடம் அது அதீகமாகவே இருக்கு அல்ஹம்துலில்லாஹ். இன்னும் மேலும் பல எழுதி அதை தொகுக்க வேண்டும்.

Ameena A. said...

மறுமை சிந்தனை பற்றி பயான் கேட்டு விட்டு, பக்கத்தில் பதிவாகியிருந்த "உள்ளே வெளியே" கவிதை வாசித்ததும் சிலிர்க்கிறது...

யா அல்லாஹ்.. ! மீதமிருக்கும் நாட்களில் எங்களை உன்னுடைய பொருத்தத்தை அடைய கூடிய தூய்மையான முஃமீனாக வாழ்ந்து மரணிக்கச் செய்வாயாக !

ரமளானின் கடைசி பத்தில் அள்ள வேண்டிய அமல்கள் ஏராளாம் ஏராளம் இருக்கிறது வினாடிப் பொழுதையும் வீனடிக்காமல் நன்மைகள் செய்திட எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான சக்தியையும் ஆர்வத்தையும் வழங்கிடுவானாக !

கவிதை எழுதிய எங்கள் சகோதரர் சஃபீர் அபுசரூஹ்க் அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

சொல்ல வேண்டியதை பளிச்சென்று சொல்வதில் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு தனித் தன்மையை அல்லாஹ் கொடுத்திருக்கிறான், நல்ல நேரத்தில் அல்லாஹ்வின் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஞாபகப் படுத்தியதற்கும் ஜஸாகல்லாஹ் ஹைர்..

அப்துல்மாலிக் said...

//உள்ளே & வெளியே என்ற 2 வார்தையை வைத்து இவ்வளவு எழுதமுடியுமா? //

அதுவும் மவுத்தின் பயத்தை உண்டுபண்ணி, அந்த அறையில் யாருமே உதவிக்கு இருக்கமாட்டங்க. இப்போ நினைத்தாலும் உடம்பு ஜிலீர்னு இருக்கு. அல்லாஹ் நம் பாவங்களை மண்ணித்து கஃபுரின் வேதனைகளை விட்டும் பாதுகாப்பானாக.. ஆமீன்

அருமையான சிந்தனையை தூண்டிய சபீர்காக்காவுக்கு வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

//மையாத்தான்கரை சுவர் ஏறி குதித்தது "உள்ளே" போட்டோ எடுத்துக்கொண்டு திரும்பவும் சுவர் ஏறி குதித்தது "வெளியோ" யாருக்கும் புரிந்ததா?//

எத்தனை சிரமம்! ஆனால், கபுருஸ்தானை எடுத்திருந்தாலும் ஃபோட்டோக்களில் உயிரிருந்தது. நன்றி ஹமீது!

(கேட்டைப் பூட்டுபோட்டு பூட்டலைனா உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்துடுவாங்களாமா? :))

sabeer.abushahruk said...

கிரவுன் / அலாவுதீன்,
அந்த கால தப்லீக் ஜமாத்போல (இப்பவும் உண்டுதானே)லேசா பயங்காட்டி எல்லோரையும் அழைத்துக்கொண்டுவந்து இங்கு சேர்த்ததோடு என் வேலை முடிந்தது.

அருமையான பயான் செய்த உங்களிருவருக்கும் என் மனமார்ந்த நன்றி

sabeer.abushahruk said...

சத்தியமாக நிகழப்போவதை உணர்ந்து கருத்துகளைப் பறிமாறிய அனைத்துச் சகோதரர்களுக்கும் நன்றி.

இந்த உணர்வை எதிர்பார்த்துத்தான் எழுதினேன்

//உயிரை உலுக்கிபார்க்கும் கவிதை படித்து கருத்திட மேனியிலும்,உயிரிலும் தெம்பு இல்லை//- crown

//அங்கே கைப்பிடி மண் போட்டிடும் தருனம் சுல்லென்ற வலி வராமல் இருந்ததில்லை...// abu ibuRaahim

//உடலை குழிக்குள் வைப்பதுபோல் உணர்வுகளால் மேனியெல்லாம் சிலிர்க்கின்றன// - LMK abu backer

//,வாசிக்கும் போது சுவாசத்தில் சிறிது கைவைத்து அழுத்துவது போல்// -crown

//எல்லாம் இறப்பு வரைதான் எல்லா உயிர்களின் உரிமையும்.// -crown

//மனம்போல் வாழும் நம்மை மரணத்தையும் நினைவூட்டி// MHJ

//மூச்சு காற்று வெளியே சென்று உள்ளே உறுதியா வருதா இல்லை இறுதியா வருதா? வந்து போனால் வருமா?// - crown

//அப்போதேல்லாம் இல்லாத ஒரு அச்ச உணர்வு இந்த பதிவை படித்தவுடன் ஏற்பட்டது.// - thajudeen

//உள்ளே & வெளியே என்ற 2 வார்தையை வைத்து இவ்வளவு எழுதமுடியுமா?// - zakir 

//மறுமை சிந்தனை பற்றி பயான் கேட்டு விட்டு,  "உள்ளே வெளியே" கவிதை வாசித்ததும் சிலிர்க்கிறது...// Ameena A

//இப்போ நினைத்தாலும் உடம்பு ஜிலீர்னு இருக்கு. அல்லாஹ் நம் பாவங்களை மண்ணி// - Abdul Malik

---waSSalaam---

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு