Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நாட்டு நடப்பை அலசும் நம்மூர் ஆனாவும், சேனாவும்.... 6

அதிரைநிருபர் பதிப்பகம் | August 16, 2011 | ,

ஆனா : அஸ்ஸலாமு அலைக்கும் என்னா சேனா பாத்து ரொம்ப நாளாச்சே இவ்ளோ நாளா எங்கே போயிருந்தா?

சேனா : வலைக்கும்முஸ்ஸலாம் ஆனா. இல்லப்பா ஒரு வியாபார விசயமா மதராஸுக்கு போயி இருந்தேன். மூனு வாரம் அங்கேயே தங்க வேண்டியதாப்போச்சு அதான் பாக்க முடியலெ.

ஆனா : ஒரு வழியா சமச்சீரு கல்வி பெரச்சினை சூப்ரீம் கோர்ட் மூலமா முடிஞ்சி இப்பொ தான் புள்ளையெலுவொலுக்கு புக் கொடுக்க ஆரம்பிச்சி இருக்காங்க. அப்பொ இவ்ளோ நாளு சும்மா பிள்ளைகளின் பள்ளிப்படிப்பை வேஸ்ட் பண்ணுணதுக்கு யாரு பொறுப்பு ஏக்குறது? தண்டணை கொடுக்குறது? சொல்லு...

சேனா : இப்புடித்தானே நம் நாட்டில் பல இடங்களில் தீவிரவாதிகளுடன் தொடர்பு, குண்டு வெடிப்பில் தொடர்புண்டு நம் சமுதாய அப்பாவி இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்து பிறகு பல வருடங்கள் கழிந்து கோர்ட் மூலம் இவர்கள் நிரபராதி, நடந்த சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை என்று அறிவித்து வெளியிட்ட சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோமே.. அப்பொ இவ்ளோ நாளு சிறையில் இருந்து காலத்தை வீணடித்து சித்ரவதைக்குள்ளாகி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு போனதற்கு யார் பொறுப்பு ஏற்பது? தவறான அவர்களின் நடவடிக்கைக்கு யார் தண்டணை வாங்கி கொடுப்பது? சொல்லு...

ஆனா : சரியான கேள்வி இப்புடி கேட்டு வாயடைக்க வச்சுட்டியே? சம்மந்தப்பட்டவங்க தான் இதுக்கு பதில் சொல்லனும்.

சேனா : அது சரி மூனு வருசமா எந்த தடையுமின்றி நடத்தப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆ ஃ ப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு நெல்லை மேலப்பாளையத்தில் இந்த மாதம் 15ம் தேதி நடக்க இருந்ததே? அதற்கு திடீரென காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறதே? என்ன காரணம்? சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு அவர்களின் கடந்த கால நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லையே? பிறகு ஏன் தடை செய்தது அரசு? உனக்கு ஏதேனும் காரணம் தெரியுமா? 

ஆனா : எனக்கு தெரிந்த வரை காவி (பாஸிச) சிந்தனை உள்ள எவரேனும் இந்த அணிவகுப்பு பற்றி தவறான ஒரு கருத்தைச்சொல்லி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு எதுவும் வாங்கி இருக்கலாம். இவ்வளவு தூரம் நாட்டின் தேசப்பற்றுள்ள இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து சீருடைகளெல்லாம் சிறப்பாக சொந்த செலவில் தைத்து கொடுத்து நாட்டின் உண்மையான தேச பற்றை பறைசாற்ற அவர்கள் இந்த புனித ரமளானில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் காவல்துறையால் நிறுத்தப்பட்டு வீணடிக்கப்பட்டதை நினைத்தால் மனதுக்கு வேதனையாக இருக்குது சேனா...

சேனா : என்ன செய்யிறது? நம்ம உண்மையான தேசப்பற்றையும் நம் முன்னோர்களின் உண்மையான தியாகத்தையும் இப்பொழுதுள்ள அரசும், அதன் அதிகாரிகளும் புரிந்து கொள்ள மாட்டிக்கிறாங்கெ...நம்மை ஒரு வேண்டா வெறுப்பாக என்றும் மூன்றாம் தரக்குடிமகனாகவே அவர்கள் பார்க்க விரும்புகிறார்களோ? என்னவோ தெரியவில்லை?

ஆனா : நாமெ எப்பொழுதும் இறைவனிடம் கையேந்தி நம் குறைகளை சொல்லி பொறுமையாக இருப்போம். இந்த உலக வாழ்க்கை என்னா நிரந்தரமா? சும்மா போலி வாழ்க்கை. ஒரு நீண்ட பயணத்தில் வழியில் களைப்பாற சிறிது நேரம் ஓய்வெடுக்க தங்கும் ஒரு மரத்தின் நிழல் போல் தான் இந்த வாழ்க்கையை நெனச்சிக்கிடனும். நாம் இங்கு நிரந்தரமாக தங்கப்போவதில்லை என்று நினைத்து மீதி உள்ள காலத்தை அமைதியாக ஓட்டி விட்டு போய்ச்சேர வேண்டியது தான் சேனா...

சேனா : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் 1961ல் பிறந்து ஆரம்பக்கல்வி அங்கேயே படித்து பிறகு மேல் படிப்பிற்காக (எம்.எஸ்) 1982ல் அமெரிக்கா சென்று அங்கேயே படித்து பிறகு ஆராய்ச்சி பட்டமும் பெற்று அதன் பின் அந்த நாட்டு பிரஜையாகி ஒரு அமெரிக்கரை மணந்து நாசாவில் சேர்ந்து அந்த நாட்டு பிரஜையாக அந்த நாட்டு கொடியை ஏந்தி மற்றும் அதை தன் உடையில் அணிந்து 2003 பிப்ரவரி 1ம்தேதி நாசாவிலிருந்து கொலம்பியா ஓடத்தில் விண்ணில் பறந்த சில நிமிடங்களில் அது விண்ணில் வெடித்துச்சிதறி பலியான கல்பனா சாவ்லாவுடன் அவருடன் பயணித்த மொத்தம் ஏழு விஞ்ஞானிகளும் பலியான விசயம் உலகறியும். அப்படி இந்தியாவில் பிறந்து இறுதியில் அமெரிக்காவில் செட்டிலாகி அந்த நாட்டுக்காரரை மணந்து அந்நாட்டின் பிரஜையாகி இறுதியில் விண்வெளி விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவை நம் நாடு இன்றும் நம் நாட்டு பிரஜையாக எண்ணி உள்ளம் உருகி அவர் மறைந்து பின்னரும் போற்றிப்புகழ்கின்றது.

அவர் பெயரில் பல அறக்கட்டளைகளும், கல்லூரி, நிறுவனங்களும் நம் நாட்டில் உருவாகி அதையும் தாண்டி 'கல்பனா சாவ்லா விருது' என்று உருவாக்கி நாட்டில் வீர,தீர செயலில் துணிச்சலுடன் ஈடுபட்டவர்களுக்கு சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மத்திய, மாநில அரசுகள் வழங்கி அவர்களுடன் கல்பனா சாவ்லாவையும் மறக்காமல் கவுரவித்து மகிழ்கிறது. இதை நாம் குறை சொல்ல வில்லை.

ஆனால் நம் நாட்டில் பிறந்து, வளர்ந்து, அதனுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வரும் நம் சமுதாய துடிப்புள்ள இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சியில் நம் நாட்டுப்பற்றை பறைச்சாட்டும் வகையிலும் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் அவர்கள் நடத்த இருந்த இந்த சுதந்திரதின அணிவகுப்புக்கு தடை விதித்திருப்பது நம் தேசப்பற்றை கொச்சைப்படுத்துவதாகவே கருதுகிறேன். அவர்களுக்கு சுதந்திர தின கொடியேற்றத்தில் விருதுகள் கொடுத்து கவரவிக்க வேண்டியதில்லை அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குறைந்தது அவர்களின் அணிவகுப்பிற்கு அனுமதி அளித்திருக்கலாம் அல்லவா? 

ஆனா : என்னப்பா இப்படி உன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்திட்டியெ? நீ சொல்றது ஞாயம் தான்.. நாமெ சும்மா இருந்தால் இவர்களுக்கு இந்த நாட்டின் மேல் பற்றில்லை, நம்பிக்கை இல்லை தும்பிக்கை இல்லை என்று எதேதோ வாய்க்கு வந்தபடி குற்றம் குறைகள் பல சொல்லி நம் உண்மை வரலாறு அறியாமல் இவர்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த வந்தேறிகள் என்று சொல்லி இவர்கள் நாட்டை விட்டு வெளியேறி பாக்கிஸ்தானில் குடியேற வேண்டும் என்று சொல்வதை அரசும் நாமும் பல இடங்களில் பல முறை கனத்த இதயங்களுடன் கேட்டும், பார்த்தும் வருகிறோம். எல்லாவற்றிற்கும் படைத்த இறைவன் போதுமானவன். அவனிடமே முறையிட்டு நிராயுதபாணியாய் இன்று நின்று கொண்டிருக்கிறோம்.

சேனா : ஆனா, நோன்புக்கு பள்ளிகளுக்கு அரிசி தருவதில் கூட எத்தனை அரசியலும், அலட்சியமும் காட்டுகிறார்கள் பாத்தியா?

ஆனா : ஆமா சேனா, அரசவையில் அலங்கரிக்க வேண்டிய நாம் இன்று அரிசிக்கு அல்லல்பட வைத்து விட்டார்கள் இல்லையா?

சேனா : இவர்கள் வரும் காலத்திற்கு பதில் சொல்கிறார்களோ இல்லையோ? இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

ஆனா : நாம் இந்த புனித ரமளானில் எதற்கும் சபுர் செய்து பொறுமையுடன் இருப்போம். எதற்கும் பொறுமை இழக்கக்கூடாது. நமக்கு அல்லாஹ் துணை நிற்பான். சரி வரட்டா நோன்பு தொறக்க நேரமாஹிகிட்டு இருக்குது அப்புறம் வாடா வித்து போயிடும் வாட் சம்சாவும் கெடெக்காது...

இன்ஷா அல்லாஹ் அப்புறம் பாப்போம்....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆனால் நம் நாட்டில் பிறந்து, வளர்ந்து, அதனுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வரும் நம் சமுதாய துடிப்புள்ள இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சியில் நம் நாட்டுப்பற்றை பறைச்சாட்டும் வகையிலும் நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் அவர்கள் நடத்த இருந்த இந்த சுதந்திரதின அணிவகுப்புக்கு தடை விதித்திருப்பது நம் தேசப்பற்றை கொச்சைப்படுத்துவதாகவே கருதுகிறேன். அவர்களுக்கு சுதந்திர தின கொடியேற்றத்தில் விருதுகள் கொடுத்து கவரவிக்க வேண்டியதில்லை அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குறைந்தது அவர்களின் அணிவகுப்பிற்கு அனுமதி அளித்திருக்கலாம் அல்லவா? ///

மிகத் துள்ளியமான ஆதங்கமும் ஆத்திரமும் வருகிறது இந்த கேடுகெட்ட அரசியல் சூழ்ச்சியாளர்களின் பித்தலாட்டங்களையும் அவர்களின் வஞ்சகங்களையும் நினைத்திட்டால் !!

சுயநல ஈனப் பிறவிகள் !

ZAKIR HUSSAIN said...

மற்ற இனத்தவருக்கு இப்படி ஒரு தடை விதித்தால் அவர்களை சார்ந்த எல்லா சங்கங்களும் ஒன்று சேர்ந்து போராடும்.

இதே நமக்கு நடந்தால் எல்லா ஒற்றுமையான சங்கங்களும் பிரிவினை பேசியே ஒப்பேத்திவிட்டு..பிறகு அந்த பிரச்சினை மறக்கடிக்கப்பட்டு விடும்.

sabeer.abushahruk said...

ஆனாவும் சேனாவும் ஏனோ தானோ என்று நேரத்தை வீணாக்காமல் பிரயோஜனமாகவே உரையாடுகிறார்கள். வெல் டன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அலசல் நெய்னா.
அவங்க அனுபவித்தது போதும்,இனி நாட்டை ஆனா சேனா தலைமையில் கொண்டுவருவோம்.வாடா சம்சாக்கு முன்னாடி பிராத்திப்போம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ:நெய்னா சரியான சல்லடையை கொண்டு அலசி இருக்கிறாய்.வாழ்த்துக்கள் .

இந்தியா எங்கள் தாய் நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
யாரடா சொன்னது .
எம்மை அன்னியரெண்டு
யாரடா சொன்னது.

அல்லாஹ் கொடுத்த உடல் வலிமையாலும்,பொருள் செல்வத்தாலும் நம் முன்னோர்களால்.மகாத்மா காந்தி அடிகளின் தலைமைல் நம் தாய் நாட்டில் தலை விரித்தாடிய அந்நிய ஆதிக்கத்தை வேறொன்டோட செய்து நாட்டை மீட்டெடுத்த நம்மை பார்த்து .கால்வாய் வழியாக வந்தேறிய குள்ள நரிகள் ஓலமிடுகின்றன. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இவர்களின் தந்திர தரித்திரங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்களே!ஒரு காலம் வரும் இந்தியாவைமட்டுமல்ல உலகம் முழுவதும் இஸ்லாம் ஆட்சியே நிலைத்திருக்கும்.அப்படிப்பட்ட காலம் வெகுதுலைவில் இல்லை என்பதை அவர்கள் சிந்தையில் கொண்டு தந்திர சேட்டைகளை நிறுத்திக்கொள்ளட்டும்.

// எம்.எச் .ஜகாபர் சாதிக் சொன்னது .
நல்ல அலசல் நெய்னா.
அவங்க அனுபவித்தது போதும்,இனி நாட்டை ஆனா சேனா தலைமையில் கொண்டுவருவோம்.வாடா சம்சாக்கு முன்னாடி பிராத்திப்போம்.//

அன்று நம் தாய் நாட்டை 800 .வருடங்களாக ஆட்சி செய்த ஆனவும் ,சேனாவும்,(வாடாவுக்கும்,சம்சாவுக்கும்)ஆசைபடாமல். ஒழுங்காக இருந்திருந்தால் .இந்த ஆனவும் சேனாவும் கவலைப்படவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது .

அல்லாஹ் மிக பெரியவன் . அல்லாஹ் மிக பெரியவன் . அல்லாஹ் மிக பெரியவன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இவ்வளவு நாசுக்கா எல்லா பிரட்சனைகளையும் களையும் முறை என்ன ? என்பதை அழகா,ஆழமா எழுத்தில் கொண்டுவந்த நைனாவிற்கு வாழ்துக்கள். ஆனாலும் (ஆனாகா- நம்மூர் மொழி)இவ்வளவு நல்ல தொரு ஆக்கம் இங்கே சரியா கவனிக்கப்படாமல் அடிபட்டு போய்விட்டதோ? நம் நலன் கருதி எழுதப்படும் இதுபோல் ஆக்கங்களை நான் கவனத்தில் கொண்டு நாலுபேரிடம் சேர்த்து விழிப்புனர்வு செய்யலாம். உதாரணமாக அதிரை நிருபரில் நம் ஆதங்கம் தேவையான கட்டுரைகளை பொது ஜன பார்வைக்கு படும் படி நம் ஊர் தான்டி முகப்புத்தகம் போல தொடர்ந்து லிங் கொடுக்கவும்,தமிழ் நிருபர் இன்னும் பல வலைதளத்தில் வரும் படி செய்தால் நம் நியாயம் பொது ஜனங்களுக்கும் புரியும் தானே?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு