Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நார்வே சம்பவமும் - உலக நாடுகளின் நரித்தனமும் 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 03, 2011 | ,


நார்வே அமைதியான, அழகான, இறைவன் தன் இயற்கையைப் போர்வையாக அள்ளி போர்த்திய நாடு. எந்த நாட்டின் மக்களையும் உரிய ஆதாரங்கள் இருந்தால் தன்னகத்தே அரவணைத்து கொள்ளும் அன்பான நாடு அவர்களுக்கு சமவுரிமை என்ற சாவியைக் கையில் கொடுத்து அழகு பார்க்கும் நாடு. எடத்த குடுத்தா எதனையோ பிடுங்கும் என்பார்களே அதனைப்போல் சில வெளி/உள் நாட்டு பெண்மணிகள் உரிமையைப் பயன்படுத்தி தன் உடல்சதை தொழிலை எந்த வித சலனமும் எந்நேரத்திலும் இல்லாமல் கடைவைத்து நடத்தும் நாடு. வாலிபர்களும், வயதானவர்களும் நேரம் காலம் தெரியாமல் மதுவருந்தி மயக்க நிலையில் இருக்கும் நாடு.

இப்பேர்பட்ட நாட்டில்தான் இஸ்லாம் காலூன்றி வேகமாக பரவ ஆரம்பித்தது. காரணம், அந்த நாட்டில் குடியேறும் இஸ்லாமியர்கள் வாழும் வாழ்க்கை நெறி, வழி தெரியாமல் சூடான பாலைவனத்தில் தவித்தவனின் கையைப் பிடித்துப் பாதுகாப்பாக ரோட்டுக்கு கொண்டுவந்து ஒரு கூல் ட்ரிங்ஸ்சும் வாங்கிக் கொடுத்தால். எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இஸ்லாமியர்கள் அவர்களிடம் நடந்து கொண்டது. இஸ்லாம் வந்தபிறகுதான் அங்கு வாழ்ந்த அந்த மனிதர்களுக்கு வாழ்க்கை என்னவென்று தெரிய வந்தது. எப்படி வாழ வேண்டும் என்ற தத்துவத்தை இஸ்லாம் அவர்களுக்கு கற்பித்துக் கொடுத்தது. இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல அது ஒரு வாழ்வியல் நெறி என்பதை அவர்களுக்கு விளங்க வைத்தது.

அமைதி தவழ்ந்த இந்நாட்டில் பிறந்த ஒரு வாட்ட சாட்டமான இளைஞன், தலைநகரில் இருந்த அரசு அலுவலகத்தை பலம்வாய்ந்த குண்டைவைத்து தகர்க்கிறான். அதுமட்டுமல்ல அடுத்த 7 மணி நேரத்தில் அருகில் இருக்கும் குட்டி தீவுக்கும் சென்று அப்பாவியான இளைஞர்களையும், இளைஞிகளையும் தான் கொண்டு சென்ற நவீன வகை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி மாய்க்கின்றான். அந்த நாட்டின் வருங்காலத்தை எழுதக்கூடிய ஒரு இளைய கூட்டத்தையே சுட்டு வீழ்த்துகிறான், சாவின் விளிம்பில் போராடிக் கொண்டு இருப்பவர்களை சார்ட் கன் கொண்டும் சாய்கின்றான். அந்த மனசாட்சி இல்லாத மிருகம். ஆனால் பலியானர்வர்களில் யாருடனும் இவனுக்கு முன்விரோதம் கிடையாது. அவர்களால் இவன் பாதிக்கப்படவும் இல்லை. புனையப்பட்ட காரணம் ஐரோப்பாவில் இஸ்லாம் வேகமாக பரவிவருகிறது அதனை அரசுகள் தடுக்கவேண்டும்..அதற்காகத்தான் இந்த பாதகம். தடுக்க இது என்ன பொங்கி வரும் ஊற்றுத் தண்ணீரா ? இது வாழ்க்கை முறை என்ற சுனாமி என்றாவது ஒரு நாள் வாழ்க்கை முறைப்படி வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

உலகம் கூடுகிறது, உலகத்தலைவர்கள் வாய் திறக்கிறார்கள் இது ஒரு இஸ்லாமிய தீவிரவாதம் என்று தாக்குதலை பற்றி முழுத்தகவலும் கிடைக்கும் முன் வசைபாடுகிறார்கள். உண்மை தெரிகிறது….அந்த கொடும்பாவி ஒரு கிருத்துவன் என்றும் தெரியவருகிறது. ஆனால் அந்த கிருத்துவ தீவிரவாதியை அவன் மதத்தின் பெயரை சொல்லி அழைக்க யாரும் முன் வரவில்லை எனென்றால் அவர் இவர்கள் மதத்தை சார்ந்த ஒரு “ கிருத்துவ தீவிரவாதி” காச்/முச் என்று கத்தும் பெரிய/சின்ன அண்ணன்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்

தன் கூட பிறந்த / பிறக்காத அண்டைவீட்டினர்கள், தன் நாடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் போது எதிர்த்துப் போரிடும் வீரனை, தன் குழந்தைகளையும், மக்களையும் நாடு தாண்டி, நிராயுதபாணிகளான மக்களை வந்து நாய் சுடுவதுபோல் சுட்டுதள்ளி கொன்று குவிக்கும் அரக்கர்களை. அவனால் முடிந்த அளவு எதிர்த்து போரிட்டால், ஒரு சிலரை அப்போரில் கொன்றால், அவன் ஒரு இஸ்ஸாமியன் என்றால் அந்த போராளியை இவர்களெல்லாம் அழைப்பது “ இஸ்லாமிய தீவிரவாதி “ தீவிரவாதத்திற்கு மதம் இல்லை தீவிரவாதத்தை இஸ்லாம் என்றுமே அனுமதித்தது இல்லை, அப்பாவிகளை கொல்வதை அறவே வெறுக்கிறது இஸ்லாம்..பாதிக்கபட்டவன் பலி வாங்குறான் அவர் முஸ்லிமாக இருந்தால் ஏன் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்த்து “இஸ்லாமிய தீவிரவாதி” என்று அழைப்பது எந்த வகையில் நியாயம்.

இவ்வளவு தரங்கட்ட பிரச்சாரத்தை பத்திரிக்கை பலத்தை பயன்படுத்தி இஸ்லாம் என்றால் தவறான மார்க்கம் (நவுதுபில்லாஹ்) என்ற மாயை உண்டாக்கும் மடமைகளை உடைத்தெறிந்து இன்று இஸ்லாம் ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கும் கோலோச்சி விளங்குகிறது. இஸ்லாம் வளரும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது எனென்றால், அது வாள்களாலோ அல்லது வசியத்தாலோ எத்திவைக்கப்பட்ட மார்க்கம் இல்லை அன்பாலும், சகோதரத்துவத்தாலும் எத்திவைக்கப்பட்ட மானுட வாழ்வியல் தத்துவம், இது இறைவனின் மார்க்கம் மற்றும் வாழ்க்கை வழிமுறை

ஐரிஷ் தத்துவமேதை சொன்னதை இங்கு காணுங்கள், இதனை கூறியதால் அவருக்குதான் பெருமையே தவிர இஸ்லாத்துக்கு அல்ல ஏனென்றால் இஸ்லாம் எல்லாம் சிறப்புகளும் பெருமைகளும் வாய்ந்த மார்க்கம்.

Sir George Bernard Shaw in 'The Genuine Islam,' Vol. 1, No. 8, 1936.

"If any religion had the chance of ruling over England, nay Europe within the next hundred years, it could be Islam."

"I have always held the religion of Muhammad (PBUH-Peace Be Upon Him)in high estimation because of its wonderful vitality. It is the only religion which appears to me to possess that assimilating capacity to the changing phase of existence which can make itself appeal to every age. I have studied him - the wonderful man and in my opinion far from being an anti-Christ, he must be called the Savior of Humanity."

"I believe that if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness: I have prophesied about the faith of Muhammad (PBUH-Peace Be Upon Him) that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today."


யாசிர்
துபாய்

10 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர், அடுத்த கட்டத்திற்கு சென்றாகி விட்டது இனி ஆய்வுகளும் அதனைத் தொடர்ந்து கட்டுரைகளும் நிகழ்வுலக சூழலை மையப் படுத்தி வரும் என்றும் எதிர்பார்க்கலாம் உங்களிடமிருந்து இன்ஷா அல்லாஹ்...

நல்ல அலசல், வெகு சீக்கிரத்திலேயே அதிரைநிருபரிலும் நற்செய்திகள் சீக்கிரத்தில் விரைவில் வரும், இதனை வாசிக்கு நேசங்களும் தொடர்பிலிருக்கும் நண்பர்களும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை நாடியே வருவார்கள் இன்ஷா அல்லாஹ் !

Yasir said...

thanks A.N for publishing this article of mine....small request...please add (PBUH-Peace Be Upon Him) after Muhammad name....it's highly important...i forgot to add as it was from original quote

அதிரைநிருபர் பதிப்பகம் said...

சகோதரர் யாசிரின் வேண்டுகோள் பதிவுக்குள் வந்து விட்டது - சுட்டியமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
வழக்கம் போல் சகோ. யாசரின் கவன ஈர்ப்பு தீர்மான மான தகவல். நார்வையில் மத போர்வையில் ஒரு உயிர் வாங்கும் போராட்டம்!
கயவன் நோக்கமோ இஸ்லாம் பரவலை தடுப்பது!
முஸ்லிம் பெயரை கெடுப்பது.
பதர்களுக்குத்தெரியுமா?
இஸ்லாம் வலிய காற்றென்று?
கைவசப்படுத்த முடியாதென்று!
அன்பாய் நடந்தால் தென்றலாய் வீசும்
அதிகமாய், அதிகாரமாய் பேசினால் புயலாய் கொல்லும்.
இது என்னை போல் சாமானியனின் எச்சரிக்கை
இறைவன் எச்சரிக்கையை தாக்குமா
இந்த எச்சில் இலைகள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நண்பர் யாசிர்,

நல்ல அருமையான உலக அரசியல் அலசல்.

இறைமார்க்கமே இவ்வூலகத்திற்கு ஏற்ற மார்க்கம் என்பதை அன்மைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளீர்கள், மேலும் இஸ்லாம் தொடர்பாக ஐரோப்பிய அறிஞர்களின் கருத்தையையும் பதிந்துள்ளதே இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இது போன்ற உலக நட்புகளின் அலசல் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

sabeer.abushahruk said...

நியாயமானதொரு கோபம் இழையோட இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இஸ்லாமியரின் ஆதங்கம் அப்பட்டமாக வெளியாக கவனமாக எழுதிப் பதிந்த யாசிருக்கு நன்றி.

நார்வே நாடகத்தில் ஊடகத்துறை செய்த தகிடுதத்தோம் வேலைகள் உலகத்துக்குத் தெரியவந்தும் கமுக்கமாக இருக்கும் கயவர்களே தீவிரவாதிகள்.

அதிரை தாருத் தவ்ஹீத் said...

உலகளாவிய பார்வையில் நல்ல பதிவு.
யாஸிருக்குப் பாராட்டுகள்.

இன்னொன்று : http://www.satyamargam.com/1744

அலாவுதீன்.S. said...

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் : 9:32)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோ. யாசிர் நிருபர் : அதிரை நிருபருக்கு அனுப்பிய நார்வே சம்பவ கட்டுரை நம் அனைவரின் ஆதங்கமே! நாளுக்கு நாள் சகோதரரின் எழுத்தில் மெருகு கூடிக்கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நார்வே நரியை அம்பலப்படுத்திய சகோ.யாசிர் பெரிய உலக ஆராய்ச்சி.வாழ்த்துக்கள்.

Yasir said...

தனக்கு படித்து கொடுக்கும் பள்ளி ஆசிரியர்கள்(அபு இபுராஹிம் காக்கா,கிரவுன் காக்கா,சகோ.தாஜுதீன்,கவிக்காக்கா,அலாவுதீன் காக்கா,சகோ.ஜஹபர் சாதிக் ) பாரட்டினால் அது ஊக்கம்தான்...ஆனால் அந்த பள்ளிக்கு வந்த கல்வி மேலதிகாரி (ஜமீல் காக்கா ) பாரட்டினால் அது மிகப்பெரிய ஊக்கம்.....உங்கள் அனைவருக்கும் மற்றும் படித்தும் கருத்திட முடியாமல் போன சகோதர்களுக்கும் துவாக்கள்...மீண்டும் இன்னொரு கட்டுரையில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு