Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரமளான் முதல் பிறை ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2011 | , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்ஹம்துலில்லாஹ் ! 

ரமளான் முதல் பிறை !

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே:

இன்று வளைகுடா (அதிரை)வாசிகளான எங்களுக்கு முதல் நாள் ரமளான் (நோன்பு வைத்திருக்கிறோம்).... இதேபோல் ஏனைய நாடுகளிலும், பகுதிகளிலும் இன்றே முதல் நாள் ரமளானாக இருக்கலாம். வழமையான நினைவலைகளை அசைபோடுவதில் வல்லவர்கள் இங்கே இருந்தாலும் இன்றையச் சூழலில் நாம் எவ்வாறு இருக்கிறோம் என்பதை பகிர்ந்து கொள்ளத்தான் இப்படியொரு கருத்துப் பரிமாற்றமும் ஆய்வும்.

அதிரைப்பட்டினம் என்றால் அவரவருக்கு என்று மனம் வென்ற முஹல்லாக்களின் பள்ளிவாயில்களின் நினைவுகளும் அங்கே அவர்கள் நின்று தொழுத இடங்களும் வெள்ளிப் பாணையில் உருளும் பளிங்கு போல் சலசலத்துக் கொண்டிருக்கும் மறக்க முடியாத நினைவுகள்.

சரி, நேற்று முதல் நாள் இரவுத் தொழுகை ! உங்களுக்கு எப்படியிருந்தது எங்கே தொழுதீர்கள், அங்கே நீங்கள் சந்தித்த நிகழ்வுகள் பரிமாறிக் கொள்ளலாமா ? இதே போல் இன்னும் தொடரலாமே வரும் நாட்களிலும்.

இங்கே அனுபவங்களை கருத்துக்களாக கோர்வையாக்கி, வாசிக்கும் நேசங்களுக்கும் அவர்களின் அன்றைய / இன்றைய நிகழ்வுகளை பகிர்ந்திட வழிவகுக்கட்டும் இன்ஷா அல்லாஹ் !.

- அபுஇபுறாஹிம்

9 Responses So Far:

Yasir said...

நேற்று வழக்கமான வேலைநேரம் என்பதால்....வீடு சென்று பள்ளிக்கு செல்ல நேரமாகிவிட்டது....ஷார்ஜா பேரீச்சபள்ளில் மிச்சப்பட்டு கிடைத்த ரக்காத்துகளை தொழுதுவிட்டு வந்தேன்...அந்த அளவிற்க்கு திருப்தி இல்லை...இன்ஷா அல்லாஹ் இன்று எல்லாம் நல்லாமாதிரியாக போகும்

Yasir said...

மாசித்தொட்டுகறியும் - புளியானமும் + நாட்டுகோழி மிளகு கறியும்...சஹர் நேரத்தை சிறப்பாக்கியது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வழமையான நாட்களைப் போல்தான் வேலை முடிந்து வீடு திரும்பும்போது மஃரிப் முடிந்த தருனம், இஷாத் தொழுகைக்கான் நேரமும் நெருங்கிவிட்டதால் உடனே பள்ளிவாயிலுக்குச் செல்ல நேரிட்டது.

மாஷா அல்லாஹ் ! நிரம்பி வழிந்தது (behind Taj Palace Hotel) இஷா முடிந்ததும் இமாம் பட்டென்று எழுந்தார் ! மைக்கப் பிடித்தார் ! நன்றாகவே பிடித்தார் அவசரகதியில் தொழுபவர்களையும் ரமளானை எப்படி அனுக வேண்டும் என்றும் அருமையான பேச்சு ! யாருமே அசையவில்லை எழுந்து சுன்னத் தொழ வில்லை (பின்னர் அவர் பேசி முடித்ததும் அனுமதித்தார் சுன்னத் தொழ).

அப்புறம் இரவுத் தொழுகையை தொடர்ந்து நான்கு சலாம் முடிந்ததும் ஒரு கூட்டம் எழுந்துச் சென்றது மீண்டும் மைக் பிடித்தார் வித்ரையும் தொழுதுவிட்டுச் செல்லுங்கள் என்றார் கூட்டத்தில் சிலர் மீண்டு வந்து சேர்ந்தனர் வரிசையில்.

வித்ரு முடிந்ததும் சிலருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கிறது அவர்கள் எதிர்பார்த்து வந்தது தொழுகையின் ரக்காத்துகள் நீண்டிருக்கும் கடந்த வருடத்தினைப் போல் என்று, ஆனால் இவர் அவரல்ல இவர் புதிய இமாம் என்றும் பேசிக் கொண்டே கலைந்தனர்.

sabeer.abushahruk said...

தற்போது நான் அஜ்மானில் வசிக்கும் டவரின் இரண்டாவது தளத்தில் மிக நேர்த்தியாக மஸ்ஜித் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அங்குதான் தொழுதேன். எட்டு ரகாஅத் தொழ ஒரு மணி நேரம் பிடிக்கிறது. தொழுகைக்குப் பின்னர், அங்கேய்ரெ உண்ணவும் பருகவும் நிறைய ரெஃப்ரெஷ்மென்ட் வைத்திருக்கிறார்கள். தென்னிந்தியனுக்குப் பிரியமான ச்சாயாதான் என் சாய்ஸ் எனினும் அதற்கு முன் ஓரிரண்டு பேரிச்சை வகைகளும் அரேபிய கஃவாவும் குடிச்சிட்டு, சாயாவைக் கையிலெடுத்துக்கொண்டு நடையைக் கட்டினேன்.
 
எனினும், ஊரில் இருக்கும்போது, குறிப்பாக சிறுவனாயிருக்கும்போது தராவீஹ் தொழுதது இனிமையான நினைவுகள்.  

அப்பொதெல்லாம் கடற்கரைத்தெருவில்தான் வாசம்.  இரண்டு ரகாஅத்துகளுக்கிடையே ‘அல்லாஹ் அர்ஹம்னா பி ரஹ்மத்திக்க யா ரஹ்மான் யா ரஹீம்’ சத்தமா காத்துவோம்.  போகப்போக ஒன்றிரண்டு பேரிடமிருந்து மட்டும்தான் சப்தம் வரும். பின் வரிசைகளிலிருந்து கல்சரைப் பசங்க ருக்கூஹ் போகும்போது தொப்பியைத் தட்டி விடுவாங்க.  சட் பட் நு சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
 
தொழுது முடித்துத் தரும் இஞ்சித் தேத்தண்ணிக்கு சொத்தை எழுதி வைக்கலாம்.  அவ்ளோவ் சுவையாய் இருக்கும். அதற்கடுத்து ஹிஸ்பு ஓத உட்கார்ந்து விடுவோம்.  எனக்கெல்லாம் ஒரு வரி ரெண்டு வரி தர மாட்டங்க நல்ல ராஹமா ஒதுவேன்னு ஒரு 'ஐன்' தருவாங்களாக்கும். ஓதி முடிச்சி, ரொட்டியும் கறியும், இடியாப்பமும் ரவாக்கஞ்சியும், சீனிசோரு, காராசேவு பொட்டலம், சம்சாக்கள் என்று வித விதமா நார்ஷா தருவார்கள்.
 
அதற்குப்பிறகு, கிளித்தட்டு… அது பெரிய கதையாக்கும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பிரிட்டனிலும் வளைகுடாவைப்போல திங்கள் முதல் நோன்பு.
மஃரிபுக்கு 2 மணிநேரத்துக்கு முன்பே நோன்பு பற்றிய செய்தியை அறிவித்துவிட்டார்கள்.
(அந்த அறிவிப்பு Ramadhaan 2011 Announcement
According to the Islamic criteria from the Qu'raan and Sunnah, there are several verified reports that the crescent moon was sighted in many neighbouring countries.)
இங்கு பெரும்பாலான பள்ளிகளில் ஜூம்மாவை விட அதிக கூட்டம் தராவீஹுக்கு நிரம்பி வழிந்தன.4 சலாமுக்கு பிறகே இடைவெளி தெரிந்தது.
ஷஹர் முடிவு நள்ளிரவு 2.32am: இப்தார் 8.53pm

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஷஹர் முடிவு நள்ளிரவு 2.32am: இப்தார் 8.53pm //

தம்பி MHJ நீண்ட ரமளான்

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் செயல்களையும் அமல்களையும் அங்கீகரிப்பானாக இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

//ஷஹர் முடிவு நள்ளிரவு 2.32அம்: இப்தார் 8.53ப்ம்//

அல்லாஹு அக்பர்.
அப்ப்டீனா ஒரு குத்துமதிப்பாக் கணக்குப்போட்டா ஒரு மாத ரமதானில் உங்களுக்கெல்லாம் ஒன்றரை மாத பசியும் தாகமுமா?

அல்லாஹ் ஆதிக் ஆஃபியா, தம்பி!

sabeer.abushahruk said...

சகோதரர்களே,
எது கவிதை நினைவிருக்கிறதா?
உதாரணம் தர மறந்துபோனேன். உணர்வும் கருவும்தான் முக்கியம் என்பதற்குச் சான்றாக கீழ்கண்ட கவிதை இன்று திண்ணை டாட் காமில் வெளி வந்துள்ளது?

81) தீராதவை…
 
அம்மா கைகளில்
குழந்தை…
சும்மாச் சும்மா
உம்மா 
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.
 
கன்னங்களிலோ 
நெற்றியிலோ
குத்து மதிப்பாக
முகத்திலோ
இன்ன இடம்தான்
என்றில்லாமல்
வாகாக வாய்க்கும்
எந்த இடத்திலுமோ
வென...
 
வாகனங்களைக்
காட்டியொரு உம்மா
வானத்தைக்
காட்டியொரு உம்மா
மரங்களைக்
காட்டியொரு உம்மா
மனிதர்களைக்
காட்டியொரு உம்மா
 
கத்தும் 
குருவியைக் காட்டியும்
கொத்தும்
கோழியைக் காட்டியும்
கழுவும்
கறி மீனைக் காட்டியும்
காத்திருக்கும்
கரும் பூனையைக் காட்டியும்
உம்மா
கொடுத்துக் கொண்டிருந்தது
அம்மா.
 
இடது கையிலிருந்து
வலது கைக்கு 
மாற்றும்போதொரு உம்மா
மயங்கும்
விழிகளில் உம்மா
மெல்லச் சுமந்து
தூளியில் இட  
கிடத்தும்போதொரு உம்மா
கிடத்திய பின்னொரு உம்மா
 
தூளியைத் தூக்கி
கொத்துக் கொத்தாக
பலமுறை உம்மா
என
சும்மாச் சும்மா
உம்மா கொடுத்தும்
தீர்ந்து போனதா 
அம்மாவின் உம்மா?
 
 
 
-சபீர் அபூஷாருக்


 

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நோன்பு காலத்தில் செய்யவேண்டிய தவிர்க வேண்டிய ப(ல்)ல செயல்களை சகோ.அலாவுததீன் விளக்கிய விதம் அருமை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு