Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிராம்பட்டினம் 2011 16

ZAKIR HUSSAIN | August 05, 2011 | ,

அதிராம்பட்டினம்


சமீபத்திய அதிராம்பட்டினத்து விசிட்..சில நினைவுகள் பின்னோக்கி.. சில விழிப்புணர்வுகள்..  இன்ன பிற அழுத்துப்போகாத அந்த உப்புக்காற்று.





தொலைந்து போன நிம்மதியை பூமியில் தேடும் என் நாட்டுப்பெண்கள் [ வைரமுத்து ]



இந்த உச்சி வெயிலும் உழைக்க நினைக்கும் பெரியவர் [ மல்லிபட்டினம்]

அன்றைய எங்களின் ரீடிங் ரூம்??? பரீட்சைக்கு படிக்க இதைவிட அமைதியான இடம் இருந்ததில்லை


இந்த புளிய மரம் பல பேருக்கு போதிமரம்...


யார் வேண்டுமானாலும் என் அனுமதி கேட்காமல் தேவைப்பட்ட படங்களை எடுத்து உபயோகித்துக்கொள்ளலாம்.

வீடியோ ..யூ ட்யூபில் அப் லோட் செய்து விட்டு எழுதுகிறேன்.

- ZAKIR HUSSAIN

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா: உங்கள் நட்பு கவிக் காக்கா கவிதைக்கு தடம் போட்டு எல்லோரையும் கவிதை எழுதவும் வாசிக்கவும் வைத்த வசியத்தை நீங்கள் படம் போட்டு எங்கள் கவிக் காக்காவுக்கு சவால் விடுவது என்னவோ எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன் ஆனால் இன்றக்கு அது வெளிச்சத்துக்கு வந்திட்டது...

ஒவ்வொரு படமும் உங்களின் ரசனையை மாட்டுமல்ல, அக்கறையும் அதோடு ஊரிலிருக்கும் கறைகளை நீக்கவும் சொல்லும் அருமையான படம் !

காத்திருப்போம் ஒவ்வொரு படத்திற்கும் கட்டுரையாக எழுதவும் கவிதையாக வடிக்கவும் எம்மில் நிறைந்திருக்கிறார்களே ! :)

sabeer.abushahruk said...

01) 
மும்மொழியில் 
ஊரை அறிவிக்கும்
ஒற்றைப்பலகையே
இவ்வழியில்
சென்னை செல்ல
கம்பன் எங்கே?

02)
விதைத்ததை
அறுக்குமுன்
தாக்காதிருக்க வேண்டும்
தொடர்மழையோ
அடைமழையோ

03)
படகுகளே
ஓய்வெடுக்கும்
பகல்பொழுதில்
மூத்தகுடியொன்று
முத்தெடுக்கவல்ல
சிப்பி பொறுக்கியாவது
சீவன் நடத்த
உழைக்கிறது!

04)
இந்த புளியமரம்...
பிடிக்காத வகுப்பெனில்
ஒளிய மரம்...
பிடித்த விளையாட்டெனில்
காசில்லாமல் காண
உச்சியே காலரி...
மனசுக்குப் பிடித்த
பெயரைக் கிறுக்கிய
நினைவுச்சின்னம்...
உங்கள்
அசத்தல் காக்காவுக்கொ
போதிமரம்!

உபரியாக:
நானில்லாத ஊரில் நீ
ஜாகிர்...
நீ
வாழ்ந்தாயா வருந்தினாயா?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மிக அருமையான நேர்த்தியான புகைப்படத்தொகுப்பு.அதற்கு தலைமைகவியின் கவிதை வாசிப்பு. நமக்கு இனி எங்கே வாய்ப்பு? இருந்தாலும் முயற்சிக்கிறேன் சில வார்ப்பு.இது துவர்ப்பு தரும் உப்பு காற்று என்றாலும் எம் நினைவில் இனிப்புதரும் சுகக்காற்று,சுகந்த காற்று இதனூடே கவிதை வாசிப்பு ஆரபியுங்களே எங்கள் நேச பினைப்பு.
எம்மை வழிஅனுப்பியும்
வரவேற்றும்
வரும் ஆனந்த கண்ணீரிலும்
ஆதாங்க சோக கண்ணீரிலும்
நனைந்த இந்த நிலையமா
இப்படி நாதி அற்று நிற்கிறது?
இன்று வரண்ட பூமியாய் போனாலும்
இதை காணும் போதில்
அந்த கண்ணீரின் ஈரம் நம் கண்ண்த்தில்
ஒட்டிக்கொண்டிருப்பதும்
எண்ணங்களாக ரத்த ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருப்பதும்
ஓய்ந்துடுமா, ஈரம் காய்ந்துடுமா
நம் இறுதி நாள் வரை?

crown said...

பசுமையான நினைவுளை விதைப்பதுதான்
இந்த பெண்டீரின் வேலையா?
கானும் போதெல்லாம் காட்சி அருவடையாய்
எம்மை கட்டி போடுதே!
காட்சியின் மாட்சி இந்த நஞ்சையான
தஞ்சை பூமி!
நமக்கு அன்னை பூமி!
இதை பார்த்ததும்
இதயத்தில் இயற்கையாய்
பால் வார்ப்பது எது?
மண்மேல் கொண்ட பாசமா?
இல்லை இன்னும் நம்மேல் வீசும்
மறந்து விடாத மண்ணின் வாசமா?

crown said...

வாழ்கை ஓடம் வேலை இன்றி எப்படி ஓடும்?
இப்படி ஓடாய் தேய்தும், காய்ந்தும் உழைத்தும்
முழு நேர உணவு இந்த முதியோருக்கு பகல் கணவு!
வாழ்வில் வசந்தத்தையும் இளைமையையும்
தொலைத்து விட்டு
இந்தகிளிசல்களுக்கு இடையே தேடிக்கொண்டிருக்கிறாறா?
இந்த கிளிசல் போல் அவர்வாழ்வை வறுமை
கிழித்துப்போட்டும் ஒத்தடம் கொடுக்கவோ,
மருந்திட்டு ஓய்வு கொடுக்கவோ முடியாத
இந்த சமூகம்
அதன் அழுக்கை இந்த கடலில் காலமெல்லாம் கழுவினாலும்
கறை என்றும் நீங்காது.

crown said...

இன்னும் நிழலாடிகிறது எம் நினைவு!
இந்த புளிய மரமா?
இல்லை எம் இடைக்கால பள்ளி கூடமா?
எதை மறப்பது?
எதை மறைப்பது?
எம் ரகசியம் தெரிந்த மரமல்லவா!
சும்மா மர மண்டையா நிற்காதே
என பிறர் எம்மை சொல்லாமல்
நீயும் நிழல் தரும்
பலன் தரும் மரம் என நம்மை
பிறர் அழைக்க இதுவும் ஒரு காரணியாயிற்றே!
தருவே இது(தரு=மரம்) சில நேரம்
குரு!
சாலையின் ஓரத்தில்
சாந்தமாய் எம்மை வழியனுப்பியும்
வரவேறும் வசந்த காற்று தந்த
இந்த மரம் அசந்த பொழுதிலும்
மறக்காது வேர்விட்டு நிற்கிறது எம் மனதில்.

crown said...

இங்கே சில கிளிசல்கள் , சிப்பிகள் போட்டுளேன், இனிவருவர் கவி சிற்பிகள். நன்கு செதுக்குவர், மேலும் தம்பி சாபாத் வருவான், அள்ளி,அள்ளித்தருவான். தலைமை கவி மருபடியும் வந்து நல்ல பல கவிதை மேலும் தருவார் எம் எழுத்தில் பிழையிருப்பின் மன்னிக்கட்டும் எம் சமூகம் . நானும் எழுதாளனாக முயற்சிக்கும் வேளையில் முயன்று பார்த்தது இவையாவும். ரமலான் சீரும் சிறப்புமாக கழிந்து அதன் முழு பயனை அனைவரும் அடைய அல்லாஹ் அருள் புரியட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பெயரைக் கிறுக்கிய
நினைவுச்சின்னம்...
உங்கள்
அசத்தல் காக்காவுக்கொ
போதிமரம்!//

ஆஹா !
அது ஒன்னுமில்லை கவிக் காக்கா... அங்கே கற்றவைகளும் கவிதையாகவும் கட்டுரையாகவும் வரத்தானே செய்கிறது !?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// தலைமை கவி மருபடியும் வந்து நல்ல பல கவிதை மேலும் தருவார் எம் எழுத்தில் பிழையிருப்பின் மன்னிக்கட்டும் எம் சமூகம் . //

அட கிரவ்ன்(னு) என்றுமே உம் கவி சுகப் பிரசவம் தான்யா !

நான் பிழை பொருக்கியாக த்தான் சில நேரக் இருந்து விடுகிறேன் வாசிப்பதிலும்... ஆதலால் பிழை பொருத்தருளட்டும்.

sabeer.abushahruk said...

//எம் ரகசியம் தெரிந்த மரமல்லவா//

தெரியாமல் போயிற்றே. அடுத்தமுறை ஊர் செல்கையில் ஒரு கயிற்றுக்கட்டில் போட்டுப்படுத்து காத்திருந்தாவது காது கொடுத்துக் கறக்க வேண்டும் கிரவுனின் ரகசியங்களை. கூடவே கோர்த்துக்கொண்டு வருமோ இபுறாகீம்ட வாப்பா ரகசியங்களும்?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கம்பீரமாய் கடற்கரைப்பள்ளி மஸ்ஜித்,
கந்தூரி கழிந்த கொடி மரங்கள்,
கருக்கொண்ட நெல்மணிகள்,
கருஞ்சாலையை பாதுகாக்க மணல் பரவல்கள்,
கையாலாகா கை காட்டிகள்,
அதிரை பேரூராட்சி போர்டு மட்டும் தங்கம்,
ஆலடிக் குளம் காக்கை குளியளுக்கு,
அரசு விளம்பரம் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி,
அலைகளை தடுக்க நான்கடுக்கு இரு(ம்)ப்புக் கோடுகள்,
அதோடு அண்டை ஊர்களின் காட்சிகள்.
.....என அதிரையை அழகாய் அள்ளி அசத்திவிட்டீர்கள்.
........................நீங்கள் அசத்தல் காக்கா தான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இங்கு படம் பேசுகிறது
எங்கோ இருக்கும் என உள்ளம் ஏசுகிறது
ந‌சீபு இல்லாம‌ல் போன‌தை எண்ணி ந‌சுக்குகிற‌து
க‌ண்ணுக்கு விருந்த‌ளித்து உள்ள‌த்துக்கு ம‌ருந்த‌ளிக்கும் ம‌கிமை.

ஒவ்வொன்றும் ஓராயிர‌ம் க‌விதைக‌ளை வ‌ரையும். நோன்பு நேர‌மாத‌லால் கொஞ்ச‌ம் அட‌க்கி வாசிக்க‌ வேண்டியுள்ள‌து.

இங்கு ஜாஹிர் காக்காவின் கேம‌ராவை ந‌ம்மூர் இய‌ற்கை மேய்ந்த‌தா? இல்லை இய‌ற்கையை கேம‌ரா மேய்ந்த‌தா என‌ ஒரு ப‌ட்டிம‌ன்ற‌மிட்டு தீர்க்க‌ வேண்டிய‌ பெரும் பிர‌ச்சினையை கொண்டு வந்துவிட்டீர்க‌ள்.

ந‌ம்மூரில் மக்களின் பழக்க,வழக்கங்களில் ஆயிர‌ம் தான் குறைக‌ள் இருந்தாலும் இறைவ‌ன் அருட்கொடையாய் அளித்த‌
இயற்கைக்கு எல்லாமே பஸ்பமாகிவிடும்.

காக்கா, பேச‌ட்டும் உங்க‌ளின் இயற்கைப்ப‌ட‌ங்க‌ள்.......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அப்துல்மாலிக் said...

படத்தொகுப்பு அருமை, பார்க்க 1000 கண்கள் வேண்டும் நம்மூரையும் சுற்றுச்சூழலையும், நன்றி பகிர்வுக்கு

sabeer.abushahruk said...
This comment has been removed by the author.
தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

விரைவு இரயில் வராததாலோ என்னவோ ஊரைத் தவிர இரயிலடி புகைப்படத்தில் சுத்தமாக உள்ளது.

படங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி

Ahamed irshad said...

ஆஹா.. அருமை..சூப்ப‌ர் காக்கா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு