Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஐக்கியம்... ! 41

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2011 | , , ,

ஐக்கியமே - சமூகத்தின்
ஆரோக்கிய மென
ஐயமற கொள்வோம் !

ஐக்கியம் எனும்
வாக்கியம்
ஒற்றுமை எனக்கொள்வதே !

கேளீர் !
ஒற்றுமை...
இதுநாம்
வேண்டும் நற்பண்பு!

சமத்துவத்தின்
சமாதான மொழி!
ஒற்றுமையும் நன்மையும்
இரட்டை குழந்தைகள்!

ஓற்றுமை
நம்மிலிருந்து பிறருக்கும்
தொடர வேண்டிய
தொடர் ஓட்டம்
இதில்..
வெற்றி யென்பது உறுதி !

வேற்றுமை
ஒரு நோய் !
ஒற்றுமையை
குழைத்திடும் கிருமி..
தாக்கியதும் தோல்விதான்

ஆகையால் !
ஒற்றுமையை போற்றுவது
கோழி தன் குஞ்சுகளைக் காத்திட
பருந்திடம் போராடிடும்
விழிப்பு வேண்டும்

வேற்றுமையில்
சிறு பகையும் அச்சுறுத்தும்.

ஒற்றுமையெனும்
படைகள் துணையிருந்தால்
வல்லரசாய்
பகைசூழ வந்தாலும்
மெல்ல சாகும்
பின்
முழுதும் வீழ்ந்து மடியும்.

வேற்றுமையில் ஒற்றுமை
காண வேண்டாம்
ஒற்றுமையில் ஒற்றுமை
காண நேர்ந்தால்
வேற்றுமையும் ஒற்றுமையைத் தேடிவரும்

- CROWN

41 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

நம் ஊருக்கு மிகவும் தேவையான கவிதை. அதை இவ்வளவு அழகாக தந்திருக்கும் கிரவுன்...நிறைய எழுதுங்க...உங்களின் ஒவ்வொரு கமென்ட்ஸ்ம் தனியாக வெளியிடக்கூடிய விசயம்.

கவிதையின் தூர நோக்கும் தன்மை நம் எல்லோரையும் சென்றடைந்தால் அதுவே வெற்றி.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

ஒற்றுமை என்னும் கையிற்றை வலுவாக பிடித்துக் கொள்ளுங்கள் நீங்கள் வழிதவற மாட்டீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இன்று சமுதாயம் கையிற்றை பிடிக்கவில்லை மட்டுமில்லை.துண்ட துண்டமாக வெட்டியதன் விளைவுதான்.ஒற்றுமையின்மை,இழிவு, பகைமை,சோதனை எதிரிகளை கண்டு அச்சம்.போன்றவைகளை அல்லாஹ் நம்மீது ஏவியுள்ளான்.

ஒற்றுமை ஒற்றுமை என்று வாய் கிழிய பேச கூடியவர்களிடம் கூட வேற்றுமை வேறுண்டி இருப்பதை காணமுடிகிறது.
சுயநலமும் நான்தான் என்கிற அகம்பாவமும் எப்போது வேரோடு அறுத்து எறியப்படுமோ அன்றுதான்
வேற்றுமையும் ஒற்றுமையைத் தேடிவரும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் சகோ.விஞ்ஞானி சாகுல் அவர்களின் நிலா ஆக்கத்திற்கு ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதை தனி ஆக்கமாக வெளியிட வேண்டும் என்று சகோ. மருத்துவர் ஜாஹீர் அவர்களும், கவிஞர் அப்துற்றஹ்மானும் கேட்டிருந்தனர். அபுஇபுறாகிம் காக்கா சொன்னார்கள் . ஐக்கியம் எனும் தலைப்பில் கவிதை எழுதச்சொல்லி உடன் எழுதி அனுப்பியதுதான் இது.வெகு சீக்கிரத்தில் இயற்றபட்டதால் பிழைஇருப்பின் மன்னிப்பீர்களாக.
(ஒற்றுமை என ஓர்மையில் அழைத்திடவே காரணம்
ஒரேஇனமாய் இணையவேண்டும்,
என கொண்டே ஐக்கியம்
எனும் வார்த்தை தவிர்த்து ,
ஒற்றுமையென வியம்புகின்றேன்)

crown said...

ஆகையால் !
ஒற்றுமையை போற்றுவது
கோழிக் குஞ்சுகளைக் காத்திட
பருந்திடம் போராடிடும்
விழிப்பு வேண்டும்.
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் மேற்கண்ட வரிகளில் கோழி தன் குஞ்சுகளை என (தன் சேர்கவும்).மேலும் ஒற்றுமையெனும்
படைகள் துனையிருந்தால் இந்த வரியில் துணை என 3 சுழி "ணையாக மாற்றினால் தமிழ் மணக்கும்.

Shameed said...

பின்னுட்டத்தில் அசத்துபவர் இப்போது முன்னுட்டத்தில் அசத்தி விட்டார்

ZAKIR HUSSAIN said...

என்னை மருத்துவர் என்று அழைப்பது சத்தியமாக சரியில்லை. 10 வது [SSLC ] படிக்கும் போது அறிவியலில் 68 மார்க் எடுத்து Hr Sec படிக்கும்போது அறிவியல் பாடம் எடுக்காமல் வணிகவியல் பிரிவில் படித்த என்னை இவ்வளவு பெரிய படிப்பு படித்தமாதிரி எழுதுவது "கலைஞர் குடும்பம் ஏழைக்குடும்பம்" என்று எழுதுவது மாதிரி உண்மைக்கு புறம்பானது.

சில சமயங்களில் மருத்துவம் சம்பந்தமாக எழுதுவதால் டாக்டர் என்று அழைத்தால் பிறகு பஸ்ஸ்டான்டில் மருந்து விற்பவர்களையும் அப்படியே அழைக்க வேண்டும்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

என்னை மருத்துவர் என்று அழைப்பது சத்தியமாக சரியில்லை.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இதற்குறிய விரிவான விளக்கத்தை பிறகு பதிகிறேன். நோன்பின் காரணமாய் உடற்சோர்வு ஏற்பட்டுள்ளது. சிறிது ஓய்வுக்குப்பின் தகுந்த விளக்கமும் ஆதாரமும் தரப்படும். அதுவரை இது விசயமாக அபுஇபுறாகிம் காக்கா மற்றும் உங்கள் பால்ய நண்பர் பெரும்கவி,சகோ.சபீர் அவர்களும் சில விசயங்களை இங்கே பறிமாறுவார்கள் என நம்புகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி கிரவ்ன்(னு):

ஐக்கியமென கரு கொள் என்றுதான் சொன்னேன்... ஆஹா !

உன்னிடமிருந்து பொங்கியெழுந்த வரிகளைனைத்துமே மெய்யாலுமே ஐக்கியமாக இருந்தது ஒன்றுடன் ஒன்றாக ஒற்றுமை போற்றியே !

அசந்துவிட்டேன் கேட்ட வேகத்தில் அள்ளித் தெளித்ததை !

மாஷா அல்லாஹ் !

ஐக்கியம் எனபதை ஒற்றுமை எனக் கொள் என்று சொன்னாதற்கினங்க ஐக்கியமாக வந்தக் கவி வரிளுக்க்கு வரப்பு கட்டி அவ்வழி செல்வோர்க்கு விளைந்த பயிர்கள் கண்டு ரசிக்க முயற்சித்தேன் அங்கே ! தமிழ் மணம் குறைவதாய் சொல்லியதும்ம்... "அம்"மணம் காத்தேன் !

என்னவோ போ(டா)ப்பா... உன்னோட பேசிப் பேசிப் பேசி... நானும்தான் எதோ எழுவுறேன்... "ஒரு நாளுகூட கலைஞர் குடும்பம் ஏழைன்னு" சொல்லவேயில்லை !

ஊழலால் பாதிக்கப்பாடவய்ங்களுக்குத்தான் அ.ஹ. என்ற காந்தித் தோள் போர்த்திய காவிக் காயவன் போராடுறாரரம் - அதுதான் மு.க.வுக்கு ஆறுதலாகவும் இருக்காம் ! ஏன்னா உழலால் பாதிக்கப்பட்ட பணக்கார ஏழை !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா! எனக்கு ஒரு ஆசை இது நிறைவேறனும் இன்சா அல்லாஹ். அதிரை நிருபர் மிகப்பெரிய செய்தி ஊடகமாக மாறனும் அதில் நானும் பணி செய்யனும். இவ்வளவு வேகம். அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹுக்கே. எப்படி திருத்தம் சொன்னாலும் உடனே நிவர்த்தி செய்யும் பாங்கே தனி! (ஆமா நீங்கலெல்லாம் தூங்குவிங்களா மாட்டியலா?).(மர்ம யோகி வராமல் ஏதோ பண்ணுதே! சபிர் காக்கா உங்களுக்கு அப்படி ஏதாவது பீலிக்ஸ் இருக்கா?வேறு யாருக்கேனும்???????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நோம்புக் கஞ்சி எப்புடின்னு கேட்டா !"

அதுக்கு இப்புடிலா பதிலு வருது ! :)

** சட்டியை கழுவி அடுக்கும் நேரத்தில் வெளியிட்டது.[நோன்பு 20 தை தாண்டிவிட்டது]

** நோன்பு கஞ்சி பற்றிய அறிமுகம் கொஞ்சம் நீளம். பாலச்சந்தரிடம் அசிஸ்டன்ட் ஆக இருந்தவர் எடுத்த மாதிரி பேக்கிரவுன்ட்டில் பேசுவதை ஸ்கிரிப்ட் சார்ட் செய்திருக்களாம்.

** நோன்புக்கஞ்சியை 3 முறை கிண்ட வேண்டும் என்பதை 3 முறையும் காண்பிக்க வேண்டியதில்லை. [ அது என்ன கந்தூரி /திருவிழா சமயத்தில் செய்யப்படும் மரியாதையா 3 முறையும் காண்பிக்க]..

இப்படி மருத்துவக் குறிப்பு கொடுத்துட்டு "ஆட்டு மூலை வறுவலும் ஆஸ்பத்திரி டோக்கனும்" என்று சூப்பரு ஆர்டிகள் எழுதி டாக்டர் பட்டம் வான்ங்கிட்டு அதெல்லாம் மு.க.குடும்பச் சொத்து மாதிரி CBIக்கு பயந்து ஒதுங்கினால் விட்டுடுவோமா ?

அசத்தல் காக்கா ! தேடி கிட்டு இருக்கேன் உங்களையும் !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// (ஆமா நீங்கலெல்லாம் தூங்குவிங்களா மாட்டியலா? //

கனவிலும் கவிதையும் கட்டுரையும் கலைகட்டுகிறதே... அங்கேயும் !

sabeer.abushahruk said...

ஒற்றுமையைப் பற்றிய கிரவுனின் கவிதை கவலைப்படுகிறது, கோபப்படுகிறது, சொல்லித்தருகிறது, வருணிக்கிறது மேலும் தீர்வு சொல்லி முடிக்கிறது.

கிர்வுனின் கவிதைகள் ஏறத்தாழ எல்லாமே, அல்லது குறைந்த பட்சம் அதிரை நிருபரில் பதிந்தவை மட்டும் ஆராய்ந்து பார்க்கும்போது அவை சமூக அக்கறை மட்டுமே கருவாகக் கொண்டுள்ளன.

கவிஞர், சில வாழ்வியல் மற்றும் உளவியல் கவிதைகளும் புனைய வேண்டுமென அவரின் மொழிப் புலமையை மனதில் கொன்டு கேட்டுக்கொள்கிறேன்.

sabeer.abushahruk said...

//சமத்துவத்தின்
சமாதான மொழி!
ஒற்றுமையும் நன்மையும்
இரட்டை குழந்தைகள்!//

தலைவா என்று கூப்பிடத்தோன்றுகிறது. அப்படிக் கூப்பிட்டால் முகஸ்துதி என்று யாராவது மர்மமாக யோசிப்பார்கள். எனவே, எ.பி.வ. என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

//ஓற்றுமை
நம்மிலிருந்து பிறருக்கும்
தொடர வேண்டிய
தொடர் ஓட்டம்
இதில்..
வெற்றி யென்பது உறுதி !//

இப்படிப்பட்ட சிந்தனை ஓட்டம் உள்ளவய்ங்களால கவிதை எழுதாமல் இருக்க முடியாது. எழுதி முடிக்கிறவரை "கழுதுக்குகும் வயிற்றுக்கும் உருவமில்லாத ஓர் உருண்டையும் உருளும்" என்று வைரமுத்து பாடியிருக்கிறார்.

sabeer.abushahruk said...

//வேற்றுமையில் ஒற்றுமை
காண வேண்டாம்
ஒற்றுமையில் ஒற்றுமை
காண நேர்ந்தால்
வேற்றுமையும் ஒற்றுமையைத் தேடிவரும்//

நாட்டாமை, நல்ல தீர்ப்பு. இதுவும் எ.பி.வ.

எ.பி.வ.?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏதோ மர்மமாக பொடி தூவிட்டு போறீங்க... என்ன பன்றானோ என்னோட பால்ய ஸ்நேகன் தும்மல் வந்துச்சுன்ன இங்கே வந்து தும்மிட்டு போனாலும் போகலாம் !

ZAKIR HUSSAIN said...

எ.பி.வ.?

இதற்கு சரியான பதில் சொல்பவர்களுக்கு ஏதாவது பரிசு இருக்கா?

sabeer.abushahruk said...

கிரவுன்,
மலேசிய டாக்டர் அபரிதமான, அளவிடற்கரிய, ஒப்புயர்வு இல்லாத பணிவினால் பம்முறாரு. நீங்கள் விளித்து தவறு எனில்,
டாக்டர் மு.க. எத்தனை பேருக்கு ஊசி போட்டாராம்?
டாக்டர் எம் ஜி ஆர் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனுக்கு எவன் மருந்து தருவானாம்?
அதிரை கல்லூரியில் எத்தனை டாக்டருங்க இருக்காய்ங்க. தலைவலின்னாக்கூட தன்க்குத்தானே வைத்தியம் பார்ப்பாய்ங்களாமோ?

நல்ல மருத்துவக் குறிப்புகளை பலமுறை சொல்லித்தராரேனு டாக்டர்ன்னா ரொம்ப பீத்திக்கிறாரு.

ஹமீது, அறந்தாங்கில காக்கா கறி, சாரி, கோழிக்கறி குறைவாக் கிடைக்கிறது என்பதைத் தவிர வேறு என்னத்த கண்டுபிடித்தாராம். விஞ்ஞானிக்காக்கா கூப்பிட அவர் எழுத்துதானே காரணம்?

அதெல்லாம் இருக்கட்ட்டும். நான் என்னாத்தே கிழிச்சேன்னு கவிக்க்காக்கான்னு கூப்பிடறீங்க. அப்படித்தான் இதுவும் சொல்லி வைய்யும் உங்க அசத்தல் டாக்டர் காக்காட்டே.

sabeer.abushahruk said...

"ஆ.மூ.வ. ஆ. டோ" மீண்டும் புதுப் பொலிவோடு அசத்தல் காக்கா எழுதனும்னு கேட்டுக்கிறேன்.

குறிப்பா அந்த, "தீர்த்துக்கட்டும் செல்வி" மேட்டர் மஸ்ட் பீ தேர்.

ZAKIR HUSSAIN said...

கூடிய சீக்கிரம் ஏதாவது நகைச்சுவையாக எழுதலாம்னு இருக்கேன் [ அது நகைச்சுவையா...அழுவாச்சியானு நாங்கல்ல சொல்லனும்! என யாராவது கமென்ட் எழுதப்போராப்லெ]

காரணம்...எல்லோரும் சமீப காலமாக சீரியசான மேட்டரா எழுதுவதால்...[ எல்லோரும் I C U லெயா உட்கார்ந்து எழுதுராங்கனு சபீர் கேள்வி கேட்கப்டாது..]

sabeer.abushahruk said...

அபூ இபுறாகீம்,
கூடிய வுக்கு எண் கணிதப்படி, கூவன்னாவுக்கு ஒரு ரெண்டு நாள், டியன்னாவுக்கு ஒரு அஞ்சு நாளு, யவன்னாவுக்கு ஒரு மூனு நாளு, ஆக மொத்தம் 5 நாட்களுக்குள் சார் எழுதி அனுப்பிடுவார்னு நினைக்கிறேன். இல்லேன்னா, பின்னூட்டதில் நிறுத்தி கேள்வி கேட்போம்ல.

(என்னோட கூட்டல் கணக்கில ஏதோ தப்பு இருக்கிற மாதிரி...)

சரி தராவீஹ் போறேன். மாஸலாமா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"ஆ.மூ.வ. ஆ. டோ" மீண்டும் புதுப் பொலிவோடு அசத்தல் காக்கா எழுதனும்னு கேட்டுக்கிறேன்.

குறிப்பா அந்த, "தீர்த்துக்கட்டும் செல்வி" மேட்டர் மஸ்ட் பீ தேர். ///

வழி மொழிகிறேன்... (அப்படின்னா ! யாரும் கேட்க மாட்டாங்கதானே !?)

// கூடிய விரைவில் //

காத்திருக்கோம் அசத்தல் காக்கா !

கவிக் காக்கா : அவொளுக்குத்தான் அகல இரயில் பாதையும், ஹாட்லைனும் (நேரடித் தொடர்புன்னு சொன்னேன்) இருக்கே ! எந்த வறுவலையும் ஆக்கிப் போட எப்போ வேனும்னாலும் உள்ளே வந்துடுவாங்க !

பி.கு: விஞ்ஞானிஹாக்கா(வின்) ஒரு ந.சு.ஆ. under process !!

Ahamed irshad said...

ஆஹா த‌ஸ்த‌கீர் காக்காவின் லைன்'ஸ் ஒவ்வொன்றும் ஜோடி போட்டு ஒற்றுமையை சொல்லுது.. அப்புற‌ம் டாக்ட‌ர்.!ஜாஹீர் காக்காவின் சிரிப்புப் போஸ்ட்டுக்கு வெயிட்டிங்..

இப்ப‌டிக்கு,

அநி வாச‌க‌ர்க‌ள் வ‌ட்ட‌ம்,

க‌த்தார் கிளை..

crown said...

sabeer.abushahruk சொன்னது…
கவிஞர்????????, சில வாழ்வியல் மற்றும் உளவியல் கவிதைகளும் புனைய வேண்டுமென அவரின் மொழிப் புலமையை மனதில் கொன்டு கேட்டுக்கொள்கிறேன்.
(அஸ்ஸலாமு அலைக்கும் . முன்னொரு நாள் எழுதிய உ(லரிய)ளவியல் கவிதை).
முரண்பாடு:
---------------
ஒழுக்கம் உயர்வானது,
உயிரைவிட மேலானது
ஆசிரியர் குறளுக்கு விளக்கம் தந்தார்..
பின்ஒரு மாணாக்கனை நோக்கிச் சொன்னார்-
போய் பெட்டி கடையில் என் பேரச்சொல்லி,
சிகரெட் பாக்கெட் ஒண்ணு வாங்கிவா!
இங்கே அவ் வொழுக்கம் தீவைத்து கொழுத்தப்பட்டது ஆசிரியனால்.
(crown)
---தபால்காரன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்ப‌டிக்கு,

அநி வாச‌க‌ர்க‌ள் வ‌ட்ட‌ம்,

க‌த்தார் கிளை//

கழக உடன்பிறப்புகள் யாரும் "போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்" தலிவரூ கம்பிக்குள் கண்ணீர்ன்னு ஒரு காவியம் எழுதிக் கொண்டிருப்பதால்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். முன்பு எழுதிய வாழ்வியல் கவிதையில் ஒன்று.
காலம் மாறிடுச்சு கணிணி காலமாச்சு!
-----------------------------------
நல்லா தலைவலி,
பொட்டெல்லாம் தெரிக்குது.
ஆபிஸூல பிராஜெக்ட் கழுதளவு!
லீவுபொபோட முடியாது.
இன்னும் தூங்கல பொழுதுவிடிஞ்சிருமெ!
டாட்டரை கின்டெர்கார்டெனில் போய்விடனும்.
அவள் அடுத்த ரூமில அசந்து தூங்குறா!
பிள்ளைய காலைலெ ஸ்கூலுக்கு விடச்சொன்னா-
இங்லீசுல காச்,மூச்னு கத்துவா!
ஐயம் ஆல்சோ வொர்க்கிங் ஐயம் நாட் ப்ரீ-
ஐ ஹவ் டு டூ லாட் ஆப் வொர்க் ரைட்னு கத்துவாள்!
என்ன செய்ய எல்லாம் தலைவிதி!
டைலனால் ரெண்டு போடுவோமா?
(மனதினில் மவுனமாய் சிந்தனை-
சட்டென்று பொட்டில் உதிதத்தது அம்மாவின் யோசனை).
இந்னேரம் அம்மாவ இருந்தா பச்சிலை பத்து போட்டு நெற்றியில் நீவிவிடிருப்பாள்.
போனதீபாவளிக்கு பத்து நிமிடம் பேசியது.
அம்மாவிடம் உடனே பேசினான்.
அவள் கனிவு,விசாரனை......அம்மானா,அம்மாதான்-
அம்மான்னாஅன்புதான்.
தலைவலி சற்று நீங்கியதை உணர்ந்தவனாக.
(மறுபடியும் உறங்க சென்று நன்று உறங்கிபோனான்- பொறியில் மாட்டிய கணினிபொறியாளன்).
(crown)
---தபால் காரன்

Ahamed irshad said...

கழக உடன்பிறப்புகள் யாரும் "போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்" தலிவரூ கம்பிக்குள் கண்ணீர்ன்னு ஒரு காவியம் எழுதிக் கொண்டிருப்பதால்..//


////

who is this?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///இவரு முன் சாய்வு கோடு


who is this?
எனக்குத் தெரிந்து மு.க.(தான்)

அலாவுதீன்.S. said...

சகோ. தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!

ஐக்கியம் - ஒற்றுமை
வடக்கு தெற்கு
கிழக்கு மேற்கு
இப்படி பலவாறாக
நம் மக்கள்
இருந்து கொண்டு
ஒற்றுமை கோஷம் போடுகிறார்கள்.

குடும்பத்தில் ஒற்றுமை இல்லை!
நண்பர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லை!
கம்பெனியில் ஒற்றுமை இல்லை!
அண்ணன் தம்பிக்கு நடுவில் ஒற்றுமை இல்லை!
அருகருகில் உள்ள வீட்டில் ஒற்றுமை இல்லை!
தெருவில் ஒற்றுமை இல்லை!

ஒற்றுமை என்பது
விவாத அளவில்தான் உள்ளது!
நடைமுறைக்கு வரவில்லை!
நிறைய பேசப்பட வேண்டும்!
எழுதப்பட வேண்டும!;

ஐக்கியம் ஒற்றுமைக்கு
மார்க்கத்தில் தெளிவான
வழிகாட்டல் உள்ளது!
முறையாக அறிந்து
கடைபிடிக்க வேண்டும்!

sabeer.abushahruk said...

கிரவ்ன்,
இந்த வார திண்ணையில் கீழ்கண்ட கவிதை வெளியாகியுள்ளது. எப்படியுள்ளதுன்னு சொல்லுங்க:

இருப்பு:

முற்றத்துக்
கயிற்றுக் கொடிக்கும்
வீட்டிற்கு மென
மாறிமாறி
உலர்த்தியும்
விட்டுவிட்டுப் பெய்த
தூறலின் ஈரம்
மிச்ச மிருந்ததால்

இரண்டு ஆண்டுகளுக்குமுன்
இறந்துபோன
வாப்பாவின்
சட்டை யொன்றை
உம்மாவிடம் கேட்க
‘வாப்பாவுக்கு
ரொம்பப் பிடித்த’தாக
தந்தச் சட்டை…
நான் பிரயோகித்துப்
புறக்கனித்துக்
கழட்டிப்போட்ட ஒன்று!

தென்னந் தோப்பில்
கரும் பச்சையாய்
செழிப்பா யிருந்த
ஒரு வரிசை மரங்களைக் காட்டி
புருவம் சுருக்க
‘அவை
வாப்பா நட்ட’வை என்றான்
தோட்டக் காப்பாளன்!

முன் முற்றத்தில்
தலைவாசலுக்கு வலப்புறம்
பந்தல் பிடித்து
மாடிவரைப் படர்ந்த
‘அவர் நட்ட’
மல்லிகைக் கொடியில்
மொட்டவிழும் போதெல்லாம்
வீட்டினுள்
வாப்பா வாசம்!

எதிர்மனையில்
‘அவர் நட்ட’
வேப்பமர நிழலில்
உம்மா அமர்ந்து
வெற்றிலை போடும்போதும்
‘அவர் விதைத்த’
சப்போட்டா
பழங்கள் கொழிக்க
பறித்துப் பாதுகாக்கும்போதும்
உம்மா
ஒற்றையாய் உணர்வதில்லை!

அவர் மாற்றியமைத்த
மாடி பால்கனி…
பிரித்து வேய்ந்த
பின்முற்றத்துக்
கீற்றுக்கொட்டகை…
வீட்டின்
இடமும் வலமுமாய்
‘இட்டு வளர்த்த’
கொய்யாவும் மாதுளையும்…
பேரனின்
முழங்காலைச் சிராய்த்ததால்
கற்கள் பொதிந்த
தெருவையே
‘மெழுகிய’
சிமென்ட் தளம்…

குடும்ப அட்டைத் தலைவராகப்
புகைப் படம்…
சொத்துப் பத்திரங்களின்
கீழே
இடது கோடியில் கையெழுத்து…
காரின்
உட்கூரை வேலைப்பாடுகள்…
வீட்டுக்
கதவின் கைப்பிடி…

உம்மாவின்
வெண்ணிற ஆடை…
வெறும் கழுத்து…
என
எங்கும்
எதிலும்
வாப்பாவின் இருப்பு!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த வாப்பாவைபற்றிய உங்கள் வார்ப்பு,ஈர்ப்பு! இருப்பு கொள்ளமுடியவில்லை ஒரு இடத்தில் நிலை பெறாமல் இதயம் அங்கும் இங்கும் அசை போட எல்லாம் அவர் தந்து விட்டு போன மிச்சம் நாமும் , நம் பிள்ளையும் அவரின் எச்சம்.(எச்சம்= சந்ததி).எல்லாத்திற்கும் ஒரு மச்சம் வேண்டும் என்பர் அன்பான வாப்பா வாய்ப்பது மச்சத்தின் உச்சம்.அருமையான நினைவூட்டல். முற்றம்,தோட்டம், வீட்டு முன் தாழ்வாரம் இப்படி அவர்வாழ்ந்த ஆதாரத்தை அள்ளித்தெளித்த பாங்கே சிறப்பு. மல்லிகையிலும் வாப்பாவின் வாசம். வாசம் செய்யும் வார்த்தை . தனிமையை மறந்த உம்மாவின் கணவன் நேசம். ஒரு அழகிய குடும்பவியலையும், ஒரு அன்பான மகனின் நெகிழ்வையும் சொல்லும் நல்லதொரு கவிதை.(வரிக்கு வரி எழுத வேறு ஒரு சந்தர்பம் வரும் இன்ஷா அல்லாஹ்).

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு டவுட்டு !

ஃபோட்டோவில் இருப்பங்களெல்லாம் ஏன் கைகட்டி நிற்கிறாங்க !?

sabeer.abushahruk said...

//ஃபோட்டோவில் இருப்பங்களெல்லாம் ஏன் கைகட்டி நிற்கிறாங்க !?//

சரியா கவனிங்க, கைகட்டியா கைக்குள் நம்மையெல்லாம் கட்டியா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஐக்கியப்பட அழகான கவிமாலை.
2-3ம் பின்னூட்டத்துக்கு வரக்கூடிய என்னை 32க்கு பின் தள்ளி அனைவரும் ஐக்கியமாகி கிரவ்னுக்கு மகுடம் சூட்டிவிட்டீர்கள்.வாழ்க ஒற்றுமை!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்கா போல் கிராஸாக நிற்காமல் இப்படி க்ரவுனும் கையைக்கட்டிக்கொண்டு நேரே இங்கு வந்து நிற்பது ஏதோ ஃபிரான்ஸிஸ் சார் வகுப்பில் சம்மரி படிக்காமல் வந்து நிற்பது போல் இருக்கிறது.

கையைக்கட்டிகொண்டு எப்படித்தான் உமக்கு இதுபோல் வார்த்தை முத்துக்களை ஒன்றாக்கி கவிமாலை உருவாக்க‌ இயன்றதோ?

உன் க‌விச்சார‌லில் குளிரூட்ட‌ப்ப‌ட்டேன். அருமைய‌ப்பா....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

crown said...

Naina Mohamed சொன்னது…

ஜாஹிர் காக்கா போல் கிராஸாக நிற்காமல் இப்படி க்ரவுனும் கையைக்கட்டிக்கொண்டு நேரே இங்கு வந்து நிற்பது ஏதோ ஃபிரான்ஸிஸ் சார் வகுப்பில் சம்மரி படிக்காமல் வந்து நிற்பது போல் இருக்கிறது.

கையைக்கட்டிகொண்டு எப்படித்தான் உமக்கு இதுபோல் வார்த்தை முத்துக்களை ஒன்றாக்கி கவிமாலை உருவாக்க‌ இயன்றதோ?

உன் க‌விச்சார‌லில் குளிரூட்ட‌ப்ப‌ட்டேன். அருமைய‌ப்பா....

மு.செ.மு. நெய்னா முஹம்மது.
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் மூளையின் கைங்கார்யம். அதனால் தான் மூளை சொன்னதை எண்ணம் கைகட்டிகொண்டு செய்து முடிக்கிறது. இது என் மனசாட்சியின் வாக்குமூலம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒற்றுமையை பற்றி எழுதிய க்ரவ்னுக்கு பரிசாக அவரின் பெயருக்கு ஒற்றுமையான 27 .மகுடங்கள?

Unknown said...

சமத்துவத்தின்
சமாதான மொழி!
ஒற்றுமையும் நன்மையும்
இரட்டை குழந்தைகள்!

ஓற்றுமை
நம்மிலிருந்து பிறருக்கும்
தொடர வேண்டிய
தொடர் ஓட்டம்
இதில்..
வெற்றி யென்பது உறுதி !

--------------------------------------------------------
இந்த வரிக்கு யார்தான் ரசிகனாக மாட்டார்கள் ?......
அருமையான ,அவசியமான பதிவு ..
கிரௌனின் முகவரி இந்த மாதிரி படைப்புகள் தான்

அப்துல்மாலிக் said...

வேற்றுமையில் ஒற்றுமை
காண வேண்டாம்
ஒற்றுமையில் ஒற்றுமை
காண நேர்ந்தால்
வேற்றுமையும் ஒற்றுமையைத் தேடிவரும்//

நிச்சயமா...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் தஸ்தகீர்

நலமா?

ஐக்கியத்திற்கும் அதிரைநிருபருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது என்பதற்கு கருத்துப்பறிமாற்றமே சாட்சி.

//வேற்றுமையில் ஒற்றுமை
காண வேண்டாம்
ஒற்றுமையில் ஒற்றுமை
காண நேர்ந்தால்
வேற்றுமையும் ஒற்றுமையைத் தேடிவரும்
//

ஐக்கியம் வேண்டும் என்று வாக்கியங்களில் அசத்தியிருக்கிறீர்கள்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

கிரவுன்,
மலேசிய டாக்டர் அபரிதமான, அளவிடற்கரிய, ஒப்புயர்வு இல்லாத பணிவினால் பம்முறாரு. நீங்கள் விளித்து தவறு எனில்,
டாக்டர் மு.க. எத்தனை பேருக்கு ஊசி போட்டாராம்?
டாக்டர் எம் ஜி ஆர் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனுக்கு எவன் மருந்து தருவானாம்?
அதிரை கல்லூரியில் எத்தனை டாக்டருங்க இருக்காய்ங்க. தலைவலின்னாக்கூட தன்க்குத்தானே வைத்தியம் பார்ப்பாய்ங்களாமோ?

நல்ல மருத்துவக் குறிப்புகளை பலமுறை சொல்லித்தராரேனு டாக்டர்ன்னா ரொம்ப பீத்திக்கிறாரு.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அதானே? இதத்தான் நான் வேறு மாதிரி கேட்க நினைத்தேன். அதாங்க நம்ம் நாட்டுல சினிமா காரனுவல ,அரசியல் வியாதிகல என்ன கிழிச்சாங்கன்னு பல்கலைகழகங்கள் மருத்துவர் பட்டம் கொடுக்குது. இப்ப உதாரணதுக்கு. விஜய்ன்னு ஒரு மூடன் நடிக்கிறான் அவனுக்கு மண்டைல என்ன இருக்கு? அதே வேளை கமல் ஹாசன் உலக விசயத்துல எல்லாத்தையும் கையில வச்சிருக்கிற ஆளு! அந்தாளுக்கும் டாக்டர் பட்டம். அப்ப அந்த விஜய நடிகனும் , கமல் என்கிற கலைஞனும் ஒன்னா? அதேதான் எம்.ஜி.ஆர் யாருன்னு தெரியும். இந்த மு.க இப்படி சம்பந்தமே இல்லாம மருத்துவர் பட்டம். அதில் அவர்கள் தம்பட்டம் வேறு அடித்துக்கொள்வார்கள் தாமே படித்து வாங்கியது போல. ஆனால் நாங்கள் உங்களுக்கு வைத்த மருத்துவர் முகஸ்துதிக்காக அல்ல ஒரு அன்பின் அடையாளம்.உங்கள் சமூக கண்ணோட்டம், இந்த சமுதாயத்தின் பினியான ஒற்றுமையின்மை, வறுமை,சுகாதரக்கேடு, கல்லாமை, அறியாமை இப்படி பார்த்து ஆதாங்கபட்டு எழுதுகிற நோக்கம் சிந்தனை.எல்லாம்தான் இப்படி அழைக்க காரணம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அனைவருக்கும் ஈத் பெருனாள் வாழ்த்துக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு