Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி? செய்முறை காணொளி 17

அதிரைநிருபர் | August 22, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அதிரைநிருபர் வலைத்தளம் எக்காரியத்திற்கும் செயல் வடிவம் கொடுத்திட எத்தனித்து விட்டால் அதன் முழுமை நிகழ்வாக உணர்த்திக் காட்டுவதில் முன்னனியில் இருப்பதை எங்கள் வாசக நேசங்கள் நன்கறிந்ததே !

சமையல் என்பது ஒரு கலை ! அந்த கலையால் படைத்த உணவை ருசிப்பதில் எம்மிடமிருக்கும் ஆர்வமும் போட்டியும் அல்லது அதன் சுவையை விமர்சிப்பதிலும் ஆர்வம் காட்டுவோம். இதுநாள் வரை பெரும்பாலும் சமையல் குறிப்புகள் என்று ஏராளமாக எழுத்து வடிவிலும் / அச்சுவடிவிலும்தான் நாம் கண்டிருக்கிறோம் ஒரு சிலவற்றை தவிர, அப்படியான சமையல் குறிப்புகளை வாசித்து விட்டு முயற்சித்தும் பார்த்து ருசித்தும் இருந்திருக்கிறோம்.

இனி வழமையாக வாய்ப்புகள் வசப்படும்போதும் அதிரைநிருபரின் சமையல் கலை செயல்வடிவ வல்லுநர் சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்களுடைய சமையல்களின் செய்முறை காணொளிகள் இடம்பெறச் செய்ய இருக்கிறோம். அதன் தொடர்ச்சியின் துவக்கப் பகுதியாக ரமளான் மாதத்தில் நம் யாவரின் மனம் நாடும் உணவாக "நோன்பு கஞ்சி" தயாரிக்கும் செயல் முறையினை காணொளித் தொகுப்பாக இங்கே வழங்குகிறோம்.





இந்த நோன்பு கஞ்சிக்கு அதிரை அஜ்மாஸ் நோன்பு கஞ்சி என்று பெயரிடப்பட்டுள்ளது,  இந்த செய்முறை பிடித்திருந்தால் செய்து பாருங்கள். இந்த காணொளி பற்றி தங்களின் கருத்துக்களை எதிர்ப்பார்க்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு

17 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆஹா என்ன ருசி! செய்முறை விளக்கத்திலேயே!
அதிரைகஞ்சி அண்டை நாட்டு வர்ணனையில்!
காணொளியும் கஞ்சி செய்முறையும் ருசிதான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கோ கேட்ட குரலாக இருக்கிறதே !? எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே !? என்று நினைத்துக் கொண்டே செய்முறைக் கண்டு வரும்போது அட ! நோம்புக் கஞ்சி ரெடி !

இந்த வீடியோவில் செய்து காட்டப்பட்ட நோன்பு கஞ்சியை ருசித்ததில் ரசித்தது... சுவையின் கலவை, தமிழின் சுத்தம்....

அது சரி... செஃப் அவர்களுக்கு தனித் திறன்களில் கவிதையும் எழுதுவார்களாமே !!

எங்கே ஒரு கவிதை சொல்லுங்கள் எழுதித் தாருங்கள் பார்க்கலாம் !

sabeer.abushahruk said...

சூப்பர்ப் சூப்பர்ப் சூப்பர்ப்!!!

கஞ்சி ருசி உண்டிலன்
காட்சி ருசி கண்டுளன்

மறக்கமுடியுமா இப்த செஃபை!
மறந்தால்
மன்னிக்குமா அன்று தந்த ஹமூர் கறி!

இப்படியொரு
சமையற்கலைஞர்
அமையக்கிடைத்த
அத்தனை
அறைத்தோழர்களும்
அதிர்ஷ்டக்காரர்களே!

ஃபரூக் பாய், நெல் டன் (குரல் உங்களோடதா...இல்லே ஜமாலு...?)

அபு மஹ்மூத்: வெர்ய் நெல் டன்.

ஜாகிருக்கான கேள்வியையும் நானே கேடுவிடுகிறேன் (அவன் பிஸி)

"இவ்ளோவ் தேங்காயிப்பால் ஊத்தினா கொலஸ்ட்ரால் கூடி கார்டியாக் ப்ராப்ளம் வராதா?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்சாரி கேப் ஸ்தாபனத்தின் சார்புடைய சமையல் குறிப்பா இந்த அஜ்மாஸ் நோன்பு கஞ்சி.சும்மா சொல்ல கூடாது பாருக் பாய் அவர்களின் கை வண்ணத்தைப் பற்றி.வீடியோ காட்ச்சியை பார்த்ததும்.1994 .ல் சவூதி அரேபியாவில் உதைலியா என்ற இடத்தில் வாழ்க்கையை களித்த நினைவுகள் நிழலாடுகின்றன.

நானும் பாரூக் பாயும் சவூதி அராம்கோவில் வேலை செய்தோம்.நாங்கள் கேம்பில்தான் தங்கி இருந்தோம். வேலை முடிந்து ரூம்க்கு வந்ததும் அவருடைய சமையல் தினத்தில் டூட்டி டிரெஸ்ஸை மாற்றிவிட்டு ரூமில் உட்க்கார கூட மாட்டார்.சமைத்துவிட்டு வந்துறேன் என்று சொல்லிவிட்டு சமையல் இடத்துக்கு செல்லும் போது. டவல் ,சோப்பு எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டு போய் துரிதமாக எல்லா வேலையும் முடித்து விட்டு ரூம்க்கு வரக்கூடியவர்.அவ்வளவு வேகமாக சமைத்தாலும்.கறியை வேகாமல் விட்டுவிட மாட்டார்.அவருடைய நோன்பு கஞ்சியை ருசிக்க கூடியவை மட்டுமல்ல.அவர் பேச்சையும் கூட ரசிக்க கூடியவை.

அரேபியாவில் பார்த்த அவரின் கை வண்ணத்தை.மீண்டும் அதிரை நிருபரில் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

அப்துல்மாலிக் said...

அதிரை நோன்புக்கஞ்சி (இதுக்கு தனி கிராக்கிதான் மற்ற ஊர் வாசிகளிடமும்) செய்முறை படிச்சி செய்ததுபோக இப்போ செயல் முறை ஒரு தனித்தன்மைதான். முன்னரெல்லாம் நொன்புக்கஞ்சி என்றாலே பள்ளியில் காய்ச்சுவதுதான் என்ற நிலை மாறி இப்போ எல்லா வூட்டு அடுப்பிலும் தேத்தனி போடுறமாதிரி சர்வசாதாரணமா போச்சு, இந்த செயல்முறை வடிவம் இன்னும் ஈஸியாக்கியாச்சு....இதற்கான ஏற்பாடு செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நல்லதொரு செயல்விளக்கம்.சைடுல மூடிய வச்சுட்டு மருபடியும் கழுவிட்டு போட்டிருக்கலாம், மேலும் சமையல் கையால் தன் உடம்பை இன்னும் கொஞ்சம் நீளமான கைகளுடன் கூடிய ஆடை போட்டு மறைத்திருக்கலாம் போன்ற சில தவறுகள் இருந்தாலும் மொத்தத்தில் பார்க்க,பயன்படுத்திக்கொள்ள நல்லதொரு தொகுப்பு. வாழ்த்துக்கள்.

அதிரைநிருபர் said...

//crown சொன்னது… நல்லதொரு செயல்விளக்கம்.சைடுல மூடிய வச்சுட்டு மருபடியும் கழுவிட்டு போட்டிருக்கலாம், மேலும் சமையல் கையால் தன் உடம்பை இன்னும் கொஞ்சம் நீளமான கைகளுடன் கூடிய ஆடை போட்டு மறைத்திருக்கலாம் //

சகோதரர் கிரவுன்,

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.

செயல்முறை ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தவித செயற்கையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

இருப்பினும் தங்களின் கருத்தை கவணத்தில் கொண்டு அடுத்த சமையல் குறிப்பில் செயல்படுத்த முயற்சிக்கிறோம்.

நன்றி

crown said...

அதிரைநிருபர் குழு சொன்னது…
சகோதரர் கிரவுன்,
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி.
செயல்முறை ரியலிஸ்டிக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்தவித செயற்கையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.
இருப்பினும் தங்களின் கருத்தை கவணத்தில் கொண்டு அடுத்த சமையல் குறிப்பில் செயல்படுத்த முயற்சிக்கிறோம்.
நன்றி.
-----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அது.அதுதான் அ/ நி. நன்றி நான் நவிலனும். உங்கள் செயல் வேகம்.விவேகம்,கருத்து பறிமாற்றம் எல்லாம்தான் சேர்ந்து தங்களை இன்னிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது.(ஜால்ரா,ஜால்ரா - மாயாவி(எங்கே ஆளையே கானோம். அல்லாஹ்வின் பயம் வந்து விட்டதா?).

crown said...

மாயாவியா?மர்ம யோகியா? மொத்தத்தில் மறந்துவிட்டது. தாம் அடிக்கடி வந்து எங்களை உசுபேத்துனாதான் இன்னும் வேகமா செயல் பட முடிகிறது. காரணம் நாங்கள் தடைவர, தடைவர அதை தான்டி செல்லும் (திமிர்)குணம் பெற்றவர்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஃபாரூக் காக்கா,

தாங்கள் தயாரித்த கஞ்சி மற்றும் இதர உணவு வகைகளை சாப்பிட்டவர்கள் நானும் ஒருவன். அனைத்தும் ருசியோ ருசி.

நீங்க துபாயில மட்டும் தான் பிரபலமான ஆளு என்று நினைத்திருந்தேன் இங்கே பின்னூட்டம் படிக்கும் போது தான் தெரிகிறது, நீங்கள் மற்ற நாடுகளிலும் பிரபலமான ஆள் என்று.

வாழ்த்துக்கள் காக்கா..

அடுத்து என்ன செய்து காண்பிக்க போகிறீர்கள்?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஹமீத் காக்காவையே காணொமே..

இது போன்று நோன்பு கஞ்சி தயாரித்து, நோன்பு திறந்து ருசி பார்த்துவிட்டு கருத்திடலாம் என்று இருக்கிறாஹ போல தெரியுது... :)

நீங்க நோன்பு கஞ்சி காய்ச்சினால் ஊருக்கு வந்திருக்கும் நண்பர் யாசிருக்கு என் சார்பா கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள் காக்கா ... :)

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

அதே ஏன் கேட்கிறீங்க தம்பி தாஜுதீன் நோன்பு இருபது(20) வரைக்கும் பள்ளிவாசல் கஞ்சி வாங்கி நோன்பு நிம்மதியா போனது எப்போ நீங்க கஞ்சி வீடியோ போட்டியளோ அன்னகி சகோ ஜாகிர் வீட்டில் கஞ்சிக்கு வெங்காயம் வெட்டியதில் விரலை வெட்டிக்கொண்டார் நான் தேங்காய் உடைத்ததில் அருவாள் கையை பதம் பார்த்து விட்டது மொத்தத்தில் நீங்கள் போட்ட கஞ்சி வீடியோ எங்களை கஞ்சி காய்ச்சி விட்டது

குறிப்பு = அதனால்தான் பின்னுட்டம் தாமதம்

Ahmed said...

Very Tasty and healthy food " Nonbu kanchi "

For More Food Recipes
http://www.easyrecipes.in

அதிரை என்.ஷஃபாத் said...


ஃபாரூக் காக்கா,

அஸ்ஸலாமு அலைக்கும், நான் C.M.P லைன், போன வருஷம் அதிரை நிருபர்-ல நீங்க கஞ்சி காய்ச்சி காண்பிச்சீங்க..

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5wxkFQ8MhtI

நான் இப்போ வெளிநாட்ல இருக்கேன், உங்க வீடியோ பார்த்தேன், ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்துச்சு, இப்போ ரமழான் மாசம், உங்க மாடல்-ல செய்யுற கஞ்சி தான் இங்க தயார் பன்றேன், வெளியூர் மக்கள் எல்லாம் இங்க ஆஹா ஓஹோ-ன்னு சொல்லிட்டே குடிக்குறாங்க, ரொம்ப தேங்க்ஸ் காக்கா!!

அன்புடன்,
அதிரை என்.ஷஃபாத்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு