Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பெருநாள் கொண்டாடுவது எப்படி? 4

அதிரைநிருபர் | August 29, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்த வருட புனித ரமழான் மாதம் இன்றுடனோ அல்லது நாளைய தினத்திலோ  நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்றைய முன்தினம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு அவசியமான உரை என்பதால் சிறிது அவகாசம் எடுத்து பொருமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.


இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பின்னராவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டத்தை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.

- அதிரைநிருபர் குழு

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த நல்ல உரை நேற்றைய முன்தினம் நேரலையில் முழுமையாக கேட்டேன் !

மண்வாசனை மணத்தோடு அழகுற வட்டார வழக்கு மொழியாடகளையும் கையாண்டு பெண்டிருக்கும் புரியும் விதமாகவும் பதமாகவும் அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் விளக்கிய விதம் அருமை !

கடந்த 29 நாட்களாக தொடர்ந்து மிகச் சிறப்பாக (ஓரிரு நாட்கள் விடுபட்டாலும்) செழுமையான குரல் வளத்துடனும், கம்பீரமான உரையுடனும், எழுச்சிமிக்க உரைகளை கேட்க முடிந்தது.

மிக முக்கியமாக மறைக்கப்பட்ட உண்மைய்கள் "எமது இலங்கை முஸ்லீம் சமுதாயம் அடைந்த சொல்லெனா இன்னல்களை ஆதரபூர்வமாக எடுத்து வைத்து பெரும்பாலான தமிழக முஸ்லீகளின் உள்ளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்... அந்த உரையைக் கேட்கும் வரை அப்படியான நிகழ்வுகள் நடந்ததா ஒரு சிலதைத் தவிர ! என்ற தகவல்கள் எள்ளலவும் எங்களது பார்வைக்கோ செவிக்கோ எட்டியதில்லை" உள்ளத்தை உருக்கிய கொடுரச் சம்வகங்கள் - இதுதான் நிஜம் !

அல்ஹம்துலில்லாஹ் !

இன்னும் உங்களின் தஃவா பணி சிறப்புடன் தொடர்ந்திடவும் ஆரோக்கியமாக இருந்திடவும் துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பெருநாள் பற்றிய சிறப்பான உரை ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

சந்தேகம்:
சூரியன் உதித்தவுடன் தொழுவது தான் ஏற்றம் என்ற அடிப்படையில் பெரும்பாலும் அரபு நாடுகளில் அதிகாலையிலேயே தொழுகை நடைபெறுகிறது.ஆனால் கொஞ்சம் மாற்றமாக சொல்லப்பட்டிருக்கிறதே!

தொழுகைக்காக அலங்கரித்து சிறப்பாக புத்தாடையுடன் வருவதும் ஏற்றமிக்க செயல் தானே .ஆனால் அதுபற்றி குறையாக சொல்லப்பட்டிருக்கிறதே!

முறையாக அனைவரையும் விளங்க வைக்க தொடர்ந்து பாடுபடாமல் பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு தொழ விடமாட்டோம் என்று இளைஞர் பட்டாளம் உருவாக வேண்டும் என்று தீவிரவாதமாக சொல்லப்பட்டிருக்கிறதே. இந்த போக்குதான் இன்றைய தலைகுனியக் கூடிய செயல் நடைபெறுவதற்கு மூல காரணமாக அமைகிறதே!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் ஜஹபர் சாதிக்,

தங்களின் சந்தேகங்களுக்கு நிச்சயம் மவ்லவி நாசர் அவர்களிடமிருந்து விரைவில் பதில் வாங்கி தருகிறோம்.

இருப்பினும் தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்க மீண்டும் ஒன்றுக்கு இரண்டு முறை காணொளியை காணுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹ் போதுமானவன்

sabeer.abushahruk said...

குல்லுஆம் வ அன்த்தும் பி க்ஹைர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு