Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பயணம் ஒன்று... பாதைகள் வேறு! - [ஏன் இஸ்லாம் ?] 30

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2011 | , , ,

பயணம் ஒன்று... பாதைகள் வேறு!
(ஏன் இஸ்லாம்?)


வா சகோதரி
வந்திங்கு அமர்
வாழ்வியல் தத்துவத்தின்
வாஸ்தவம் உணர்!

படைப்பினங்களுடன் இணங்கு
படைத்தைவனை மட்டும் வணங்கு
மனிதன் படைத்ததை
மக்கள் வணங்குவது
பகுத்தறிவுக்குப்
பங்கமல்லவா?

படைக்க ஒரு கடவுள்
பரிபாளிக்க ஒன்றெனும்
நூரிறைக் குழப்பம் உகந்ததா
ஓரிறைக் கொள்கை உயர்ந்ததா?

உலகைப் படைத்தவனே
உன்னையும் என்னையும் படைத்தான்
விண்ணையும் மண்ணையும் படைத்தான்

வணக்கத்துக் குரியவன் ஓருவன்
வழிகாட்டத் தந்தது குர்ஆன்
உறுதியாய் வாழ்ந்து காட்டிடவே
இறுதியாய் வந்தவர் இறைத்தூதர்!

தோளோடு தோள்சேர்ந்துத் தொழுவதே
திருத்தூதர் காட்டிய வழிபாடு
எளியவன் வலியவன் பாராத
ஏற்றமிகு சமன்பாடு இறைஇல்லம்!

ருசித்துப் பழகிய நாவும்
பசித்து நிறைகின்ற வயிறும்
கசிகின்ற மணத்தோடு இரைஇருக்க
புசிக்காமல் துதிப்பர் இறையை

பொறுமை புகட்டும் நோன்பைப்
பிடிப்பதும்
பொருளைப் புரிந்து திருமறை
படிப்பதும்
நல்லறம் கொன்டு ஷைத்தானை
அடிப்பதும்
நன்னீர் ஓடும் நதிகளைக்கொண்ட
சொர்கத்திலோரிடம்
பிடிக்கும்!

ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.

ஆரோக்கிய உடலும் அமைந்து
பார்மெச்சும் செல்வம் இருந்தால்
மரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்
பயணம் மேட்கொள்தல் கடமை.

எத்தனை வழியுண்டு ஈடேற
எதனால் ஏற்கனும் இஸ்லாம்?

இஸ்லாத்தில்தான்...
பாதை பண்பட்டிருப்பதால்
பயணம் இலகுவாகும்!
பெண்கள்...
போகப்பொருளாக வல்ல
பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்படுவர்!

புர்கா என்றொரு திரை எதற்கு?

தெருச்சரக்கா பெண்மை
திறந்து கிடக்க?
தீயவர் கண்கள்
தீண்டிக் கெடுக்க?
நட்சத்திர அந்தஸ்தல்லவா
நங்கையர்க்கு தீனில்?!
புஷ்பமல்லவா
பொத்திவைத்துப் பாதுகாக்க?!
தீபமல்லவா
கடுங் காற்றினின்றும்
காத்துக்கொள்ள?!

பெண்கள் பணிக்குச் செல்ல தடையா?

தடையில்லைப் பெண்ணே...
உடைதனைப் பேணி
அன்னிய ஆடவரிடமிருந்து
விலகி உழைத்தல்
நடைமுறைச் சாத்தியமெனில்!

அங்கங்கள் மறைத்தல்
அடிமைப் படுத்துவதா?
பெண்மையெனும் தன்மையே
பெண்ணுக்குச் சிறப்பென்ற
சீர்திருத்தம் செப்பினால்
பெண்ணுரிமைப் பறிப்பதாய்
பிதற்றுதல் நேர்மையா?!

ஒருவனுக்கு ஒருத்திதானே சரி?

பலதார மணம்
கடமையல்ல பெண்டிரே,
சின்னவீடு வப்பாட்டி
கள்ளத்தொடர்பு கண்றாவி...
தவிர்க்கமுடியாவிடில்
மறுபடி நீயும்
மணந்துகொள் என்பது
நேர்வழியல்லவா?

மனைவியர் மட்டுமல்ல,
மதிகெட்டு மாந்தரிடம்
மயங்கிச் சிக்குவரும் பெண்டிரே!
மறுமணம் அவளுக்கு
கவுரவம் அல்லவா?!

ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!

பாதை மாறினால்
பயணம் முடிந்தாலும்
எட்டவியலாது இலக்கை!

கலிமாச் சொல்
கண்ணியம் கொள்
காட்டிய பாதை செல்
காலத்தை வெல்!

- சபீர்
Sabeer abuShahruk

30 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வா தோழி... இல்லை இல்லை வா சகோதரி !

உனக்கென்று வைக்கிறோம் இந்த அழைப்பிதழ்...

சுற்றமும் சூழ வந்திடு எங்களின் சுற்றமும் சூழ்ந்திடும் உன்னைச் சுற்றி !

கவிக் காக்கா(வின்) வரிகள்
இளகிய இதயத்தில்
இடம் பிடிக்கும்
இறுக்கம் தளரும்
இனியவர்களை இழுத்திடும்
இஸ்லாம்தான் இனிய மார்கமென்று !
- ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

எத்தனை நாட்கள்தான் என்று இதுநாள் வரை நான் அயர்ந்ததில்லை ஆனால் இப்போது நினைக்கிறேன் இதற்குமேலும் காலம் தாழ்த்திடாதே !

காத்திருக்கோம்... வா சகோதரி(யே) !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (அல்குர்ஆன்: 3:19)

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (அல்குர்ஆன்: 3:85)

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக்கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3)
*************************************************************************************
ஆயிரம் மதங்களை மனிதர்கள் பின்பற்றி வாழ்ந்தாலும் அதுவெல்லாம் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது. வல்ல அல்லாஹ் இந்த உலகில் இஸ்லாத்தை மட்டும்தான் ஏற்றுக்கொள்வேன் என்பதை திருக்குர்ஆனில் தெளிவாக கூறிவிட்டான். ஆகவே பிற மதங்களை பின்பற்றும் சகோதர, சகோதரிகளே! சிந்தியுங்கள். திருக்குர்ஆனை படித்து - நன்கு ஆய்வு செய்து - இஸ்லாத்தை உங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

*********************************************************************************

மாஷாஅல்லாஹ்!
கலிமாவுக்கு அழகிய விளக்கம் தந்து
அழகிய ஏகத்துவ அழைப்பை விடுத்த
சபீருக்கு வாழ்த்துக்கள்!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உலகுக்கே உகந்த உன்னத மார்க்கத்தின் ஐந்து கடமைகளையும் அழகுக்கவி வடிவில் அழைப்பாய் சமர்ப்பித்த விதம் மிக அருமை.

அத்தகைய வழிகாட்டி(மார்க்கம்)முறையை தன்னுள் இணைத்திட அன்புடன் அழைக்கிறோம் வா(ருங்கள்) சகோதரமே விரைந்து வெற்றியை நோக்கி!

ZAKIR HUSSAIN said...

முதன் முதலாக 'தக்வா' பணிக்கு உன் தமிழ் கை கொடுத்திருக்கிறது. நிச்சயம் இறைவன் இந்த புனித ரமலானில் உனக்கு நன்மை செய்வான் என்று நம்புவோம். [ இன்ஷா அல்லாஹ்]

அதோடு மறக்காமல் நம் ஊரும் , நம் சகோதரர்களும் பிரிந்து கிடக்கும் ...தன்னால் ஏற்படுத்திக்கொண்டு, தனது வழிதான் சரி என்றும் ,மற்றவை எல்லாம் தவறு என்றும் இப்படி இயக்கம் , கொள்கை என்று பிரிந்து... கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மார்க்கத்தில் இல்லாத புதியவைகளை உருவாக்கிகொண்டு, ஒருவரை ஒருவர் எதிரியாய் பார்த்து வாழும் தற்போதைய 'மெயின் சப்ஜக்ட்டில் ஃபெயிலான" இந்த சூழ்நிலையயும் மறக்காமல் எழுது..

மறக்காமல் எழுது..underline please!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

என் பாசம் நிறைந்த சபீர் காக்கா,

நான் இது வரை வாசித்த கவிதைகளில் இதுவே மிகச்சிறந்த கவிதை என்று சொல்ல வைத்துவிட்டீர்களே..

இது போன்று எல்லோராலும் எழுத முடியாது காக்கா, இறைவனுக்கே எல்லா புகழும்.

இந்த கவிதை எழுதுவதற்கு நீங்கள் எடுத்த நேரம் சிரமம் பற்றி கவிதை வரிகளில் உணரப்படுகிறது. ஏகத்துவச் செய்தியை எல்லோரும் புரியும்படி சொன்ன உங்களுக்கு இந்த புனித ரமழான் மாதத்தில் நல்லருள் புரிய துஆ செய்கிறேன்.

அல்லாஹ் போதுமானவன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

மறுமை நாள் என்ற தலைப்பில் சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் சொற்பொழிவை கேட்டு மனம் உருகிய இருந்த நிலையில் இந்த கவிதையை படித்தேன். ஏகத்துவச் செய்தியை அறிவுரையுடன் கூடிய வேண்டுகோளாக வைத்துள்ளீர்கள்.

நாம் மரணிப்பதற்கு முன்பு ஒரு நபரையாவது இந்த தூய இஸ்லாத்தை அறிமுகம் செய்து அவர்களின் இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்க வைக்க முயற்சிக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

தொடர்ந்து இது போன்று எழுதுங்கள் காக்கா..

crown said...

வா சகோதரி
வந்திங்கு அமர்
வாழ்வியல் தத்துவத்தின்
வாஸ்தவம் உணர்!

படைப்பினங்களுடன் இணங்கு
படைத்தைவனை மட்டும் வணங்கு
மனிதன் படைத்ததை
மக்கள் வணங்குவது
பகுத்தறிவுக்குப்
பங்கமல்லவா?
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இது வரை எழுதியதில் மணிமகுடம் இந்த அருட்கவிதை.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே. அவனின் கருனை உங்களுக்கு என்றும் கிடைக்க அல்லாஹ் துணைனிற்பானாக.ஆமீன். நல்லதொரு தூது ! நலம்பெறகுரானை ஓது என மாதுக்கும், மங்கைக்கும் ,தங்கைக்கும் தனையனுக்கும் ,இன்னும் சகல மாற்று பெரியோருக்கும் அழைப்பு.இது தாவின் சிறப்பு.படைதவனை வணங்குவது கடமையும் பகுத்தறிவும்.படைப்பிணங்களை வணங்குவது பகுத்தறிவா? அனைவரும் அறிவீர்!. நல்ல தொரு விளக்கம் இனி எல்லாருக்கும் அந்த அருள் கிடைக்கட்டும்.

crown said...

ஒருவனே இறைவன் அவன் அல்லாஹ் ! ஓங்கி சத்தியம் ஒலிக்கும் விதம் அருமை. மேலும் ருசித்துப் பழகிய நாவும்
பசித்து நிறைகின்ற வயிறும்
கசிகின்ற மணத்தோடு இரைஇருக்க
புசிக்காமல் துதிப்பர் இறையை.
(இப்படி அழகழகாய் இஸ்லாத்தின் கடமையை அடுக்கி நோன்பின் மான்பை விளக்கும் விசயம்,வசியப்படுத்தும் வார்தை ஜாலம் ஆனாலும் நிஜத்தை சொல்லும் நிதர்சனம்).

crown said...

ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.
------------------------------------------------
புண்ணியத்தை காசு கொடுத்து வாங்க முடியாது ஆனாலும் ஜகாத் எனும் கொடையில் நமைகாத்துகொள்ள முடியும். மேலும் ஜாகாத்தில் சுவர்கம் செல்ல சில கூலிகள் கிடைக்கும். இங்கே காசு கொடுத்து கூலி வாங்கும் வித்தியாசமான நடைமுறை. இது இறைமுறை இஸ்லாம் சொன்ன வரைமுறை.

crown said...

ஆரோக்கிய உடலும் அமைந்து
பார்மெச்சும் செல்வம் இருந்தால்
மரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்
பயணம் மேட்கொள்தல் கடமை.
-----------------------------------------------------------
ஒருனாள் செல்வம் எல்லாம் விட்டு ,விட்டு இவ்வுலகைவிட்டுச்செல்வோம்.அதில் பொருட்செல்வமும், நம் செல்வங்களான குழந்தை, குடும்பம் இதை எல்லாம் எடுத்துச்செல்வோம் என யாரும் உரிமை கொள்ள முடியாது. அருட்செல்வமான அமல் மட்டும் அங்கே அமல் படுத்தப்படும்.எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும். இப்படி செல்வம் கொண்டு செல்ல முடியாதவர்களும் செல்வம் செழிக்கும் போது அதை இறை அருளாய் அருவடை செய்ய
புனித பயணம் கட்டாய கடமை.

crown said...

இஸ்லாத்தில்தான்...
பாதை பண்பட்டிருப்பதால்
பயணம் இலகுவாகும்!
பெண்கள்...
போகப்பொருளாக வல்ல
பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்படுவர்!
------------------------------------
உன்மையின் உறைவிடம் இஸ்லாம் பெண்மையின் பாதுகாப்பு பெட்டகம் இஸ்லாம்.பெண்கள் கற்பிற்கு கவசம் இஸ்லாம்.

crown said...

தெருச்சரக்கா பெண்மை
திறந்து கிடக்க?
தீயவர் கண்கள்
தீண்டிக் கெடுக்க?
----------------------------------
விலை மாது வேண்டாதது இஸ்லாம் அல்லவா? கூத்தியாள் என கூறுகெட்ட பழக்கம் அனுமதிக்காது. பெண்னை மதிக்கும் மதி மார்கம் இஸ்லாம் அல்லவா?
----------------------------------------------------
நட்சத்திர அந்தஸ்தல்லவா
நங்கையர்க்கு தீனில்?!
புஷ்பமல்லவா
பொத்திவைத்துப் பாதுகாக்க?!
தீபமல்லவா
கடுங் காற்றினின்றும்
காத்துக்கொள்ள?!
---------------------------------------------------

பெண்மை போற்றிடும் பேரு பெற்றமார்கம் இஸ்லாம். காமக்காற்று அந்த கற்பு ஜோதியை அனைக்காமல் காக்கும் அரன் இஸ்லாம்.

crown said...

தடையில்லைப் பெண்ணே...
உடைதனைப் பேணி
அன்னிய ஆடவரிடமிருந்து
விலகி உழைத்தல்
நடைமுறைச் சாத்தியமெனில்!
------------------------------------------------
இதைப்படிக்கும் மாற்றுமத தோழர்களும், தோழிகளும் சகோதர,சகோதரிகளும் புரிந்து கொள்ளனும், இதைத்தான் இஸ்லாம் சொல்லியுள்ளது தெளிவு கொள்ளனும். சரியான வார்தை பிரயோகம்.வாழ்துக்கள் தலைமை கவி.
-------------------------------------------------

அங்கங்கள் மறைத்தல்
அடிமைப் படுத்துவதா?
பெண்மையெனும் தன்மையே
பெண்ணுக்குச் சிறப்பென்ற
சீர்திருத்தம் செப்பினால்
பெண்ணுரிமைப் பறிப்பதாய்
பிதற்றுதல் நேர்மையா?!
-----------------------------------------
பெண் தன் உரிமையை நிலைனாட்டவும், தன் கற்புனிலையை பேனி வாழவும் இஸ்லாம் சொன்னால் அடிமைபடுத்துவதாய் சில சிந்தைனையில் முடிச்சு விழுந்த சீக்குபிடித்த சிந்தனை வாதிகளேனும் (மு)பிற்போக்கு வியாதிகள் உலரல் காண்கிறோம்.

crown said...

ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!
--------------------------------------------------------
இதுதான் இஸ்லாம்.இதுதான் இஸ்லாம்.இதுதான் இஸ்லாம்.
அருமை கவிஞரே உம்மை கண்டு நா(ன்)ம் பெருமைகொள்கிறோம், நீங்கள் பிறந்த ஊரில் நானும் பிறந்திருக்கிறேன் உங்கள் சக காலத்தில் வாழ்கிறேன் என்பதே மகிழ்வும் நெகிழ்வும். எல்லா வளமும் அல்லாஹ் தமக்கு தர துஆசெய்கிறேன். தாங்கள் இயற்றியதில் மிகச்சிறந்த ஆக்கத்தில் ஓன்று இந்த கவிதை. அல்லாஹுக்கே எல்லாப்புகழும். இதை நம் ஊரில் இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கூடத்திற்கான கால அட்டவனை புத்தகத்தில் முதல் பக்கத்தில் பதியனும்.பதிந்து குறிப்பாக நம் பெண்கள் கற்கும் கல்வி நிலையத்தில் வைக்கனும் என்பது அவா! அதிரை நிருபர் நிற்வாகதினரின் சீரிய பணி அனைவரும் அறிந்ததே. இதையும் தலைமேற் கொண்டு அந்த பணியினை ஏற்றால் நலம் பிறக்கும்.( நோட்டீஸ் போடாமல் காலமெல்லாம் வைத்து அறிவுருத்தும் வகையில் அமைப்பது சாலச்சிறந்தது).சபீர் காக்காவின் கையை பிடித்துக்கொண்டு குறைந்த பட்சம் அரை கிலோ மீட்டராவது நடக்க ஆசையாக இருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//.( நோட்டீஸ் போடாமல் காலமெல்லாம் வைத்து அறிவுருத்தும் வகையில் அமைப்பது சாலச்சிறந்தது)//

தம்பி கிரவ்ன்(னு): சும்மா விட்டுத்தான் வைப்போமா ? அதற்கென ஒரு திட்டமிருக்கும் காத்திரு உன்/நம் காதுகளை வருடும் நற்செதிகள் இன்ஷா அல்லாஹ் !

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//.( நோட்டீஸ் போடாமல் காலமெல்லாம் வைத்து அறிவுருத்தும் வகையில் அமைப்பது சாலச்சிறந்தது)//

தம்பி கிரவ்ன்(னு): சும்மா விட்டுத்தான் வைப்போமா ? அதற்கென ஒரு திட்டமிருக்கும் காத்திரு உன்/நம் காதுகளை வருடும் நற்செதிகள் இன்ஷா அல்லாஹ் !
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா நலமா? இதைப்படிக்கும் போதே மிகவும் சந்தோசமாக இருக்கு.

ZAKIR HUSSAIN said...

சபீர் இன்னும் எழுத நிறைய விசயம் இருக்கிறது...சகோதரர் கிரவுன்...உங்கள் பாராட்டுதல்கள் எல்லாவற்றையும் இந்த கவிதைக்கு தந்து விடாமல் இனிமேல் எழுதப்போகும் கவிதைக்கும் தாருங்கள்.

உங்கள் தமிழும் போற்றுதலுக்குறியது.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…

சபீர் இன்னும் எழுத நிறைய விசயம் இருக்கிறது...சகோதரர் கிரவுன்...உங்கள் பாராட்டுதல்கள் எல்லாவற்றையும் இந்த கவிதைக்கு தந்து விடாமல் இனிமேல் எழுதப்போகும் கவிதைக்கும் தாருங்கள்.

உங்கள் தமிழும் போற்றுதலுக்குறியது.
---------------------------------------------------------------


அஸ்ஸலாமு அலைக்கும். சரியாக சொன்னீங்க. ஜாஹீர் காக்கா. உடல் நிலை தேறிவர தூஆ செய்கிறேன் இன்சாஅல்லாஹ். சபிர்காக்காவிடம் சுரந்து நிற்கும் அந்த கவிதை பால்களை கறந்து இந்த சமூதாயத்துக்கு ஊட்டம் கொடுக்க அவரை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாக எந்த உத்தேசமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.அவரிடம் கறக்க நிறைய இருக்கு. கரக்கும் கரங்களுடன் என் கரமும் இனைந்திருக்கும்.இன்ஷாஅல்லாஹ்.

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த அழைப்புக்கான வரிகளை உங்கள் மூலம் கேட்டு வாங்கிய சகோதரிகளுக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

இவற்றில் சில வரிகள் நமக்கு இலகுவாக, கவி நயம் அற்றவைகளாகக்கூடத் தோன்றலாம். விருந்தாளிகளுக்குப் புரிய வேண்டுமே என்ற கவலையில்தான் அவ்வாறு அமைக்கப்பட்டன என்று சொல்லவும் வேண்டுமோ?

வாழ்த்துகளுக்கு ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

sabeer.abushahruk said...

அலாவுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அழைப்புப் பணியாயிற்றே, பிழை வந்திடக் கூடாதே என்ற பயம் எனக்குள் இருந்தது. நீ பேப்பர் திருத்தியப் பிறகு மிகுந்த ஆறுதல் மனத்திற்கு.

ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

எம் ஹெச் ஜே: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அழைப்பில் என்னோடு இணைந்தமைக்கு ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

தாஜுதீன்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உண்மையிலேயே இதை எழுத நிறைய சிரத்தையும் நேரமும் எடுத்துக்கொண்டேந்தான். அபு இபுறாஹீமுடன் நுனுக்கமாக விவாதித்து ஆங்காங்கே மாற்றி எழுதினேன். "தொடர்ந்து இணைந்திருப்பதால்" எல்லாம் நன்மையே :)
ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

sabeer.abushahruk said...

ஜாகிர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உடம்பு தேவலாமா?
கீழ்கண்டவை உன் ஆதங்கத்தைப் பிரதிபலிப்பவைதான். கோர்த்துத் தனிப் பூச்செண்டாகத் தரவில்லையே தவிர உதிரியாக ஆங்காங்கே சொல்லி வந்திருக்கிறேந்தான். 

"அடைகாக்கும் ஆசைகளி"ல் (அதிரை நிருபர்)
இயக்க குணம் புறக்கனித்து
இஸ்லாமியர் இணைய வேண்டும்
இறையில்லங்களை நிர்வகிக்கும்
இதயங்கள் இணைய வேண்டும்

தவ்ஹீதின் விரலசைவை
ஜமாத் பள்ளி சகிக்க வேண்டும்
ஜமாத்தாரின் தொப்பிகளை
தவ்ஹீது ரசிக்க வேண்டும்

என்றும்...

"போடுங்கம்மா ஓட்டு"வில் (அதிரை நிருபர்)

எத்தி வைக்க வேண்டிய
இயக்கங்க ளெல்லாம்
இளைஞர்களுக் கிடையே
வத்தி வைக்கின்றன!

புத்தி சொன்ன தேதி போய்
குத்திக் கொன்ன சேதிகள்
பத்தி பத்தியாய் 
பத்திரிகையில்!

மத்தியிலும் மாநிலத்திலும்
அத்தி பூத்ததுபோல்
குத்தியிருக்கும் நம்மவர்
கத்திப் பேசினாலோ
லத்தி யடிதான்!

அதுவின் ஓட்டு அதுக்கு
இதுவின் ஓட்டு இதுக்கு
நம்ம ஓட்டு நமக்கா -இல்லை
நமக்கு நாமே ஆப்பா?

என்றும்...

"சுட்டுவிரல் கரும்புள்ளி"யில் (சத்யமார்கம் டாட் காம்)

இயக்க போதையின்
மயக்கம் தெளிவோம்
பிரித்தாளும்  யுக்தியை
பகுத்தறிந்து தெளிவோம்

ஒட்டுமொத்தக் கூட்டமும்
ஓட்டு யுத்தம் மூட்டுவோம்
மாக்களின் மந்தையல்ல
மக்கள் சக்தியெனக் காட்டுவோம்!

தலைவர்கள் கூட்டத்தை
தள்ளி வைத்துக் கொள்வோம்
நமக்கு நாம்தா னென
சொல்லிவைத்து வெல்வோம்!

நமக்கென நாட்டில்
நல்லதைக் கேட்போம்
வாக்குறுதி தருபவருக்கே
வாக்குப் பதிவு செய்வோம்!

கரும்புள்ளி யொன்று
விரல்முனை பதியுமுன்
அருங்குணங்கள் கொண்டவனைத் தெரிந்தெடுத்துத் தெளிவோம்!

தெரிந்தெடுத்த ஒருவரை
பரிந்துரைத்து வைப்போம்
வரிந்துகட்டி யுழைத்து
வெற்றிக்கனி பறிப்போம்!

இயக்கமும் தயக்கமும்
இம்மையில் போக்குவோம்
மறுமையை குறிவைத்தே
மாற்றங்கள் கொணர்வோம்!

என்றும்...
சொல்லி வந்திருக்கிறேன். எனினும் நீ சொல்லி நான் செய்யாத காரியம் உண்டா? செய்றேன்டா!

ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///என்றும்...
சொல்லி வந்திருக்கிறேன். எனினும் நீ சொல்லி நான் செய்யாத காரியம் உண்டா? செய்றேன்டா!///

கிரவ்ன்(னு) : கேட்டுக்க இது இதுதான் நப்பு(டா)ப்பா !!!

கவிக் ககாகா: உங்களுக்கு தனி மின்னஞ்சலில் எனக்கு வந்த பதிலை அனுப்பியிருக்கேன் உங்களின் (மனம் குளிரத்தான்) இன்ஷா அல்லாஹ் விரைவில்..

sabeer.abushahruk said...

கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மிகச் சரளமாக பின்னூட்டங்களுக்கு மறுமொழி சொல்லி வந்தவன் உங்களுக்கான முறை வந்ததும் தடுமாறுகிறேன். ஏனென்று தெரிந்தும் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை.

சிறப்புச் சொற்பொழிவாளர் வரும்வரை காத்திருக்கும் பொதுக்கூட்ட மக்களைப்போல என் கவிதைகள் உங்களுக்காக காத்திருப்பதும், உமது பேச்சு முடிந்தபிறகும் பிரமிப்பில் எழுந்துபோக மனமில்லாத ஒரு தீவிரத் தொண்டனென நான் திக்பிரமை பிடித்து நிற்பதுவும் வழமையாகிவிட்டது.

அழைப்புபணியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நேரடியாகச் செய்தவன்( செய்பவன்)தான் என்றாலும் ஏற்கனவே எழுத்தில் பல "கடுதாசிகளை" "தபால்காரன்"மூலம் அனுப்பிய உங்களுக்கெல்லாம் நான் பிந்தொடர்பவன் தான்.

இனி, கூட்டாகச் செய்ய அள்லாஹ் நாடட்டும்!

ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

sabeer.abushahruk said...

//சபீர் காக்காவின் கையை பிடித்துக்கொண்டு குறைந்த பட்சம் அரை கிலோ மீட்டராவது நடக்க ஆசையாக இருக்கிறது.//

வாய்க்கட்டும் நமக்கு இன்ஷா அல்லாஹ் அப்படியொரு காலம்.
(கூடவே, ஜாகிரின் ட்ரீம் கேர்ள் ட்ரம் கேர்ள் நகைச் சுவையும், அபு இபுறாஹீமின் கன்னி சாரி கணினி கதைகளும், ஹமீதின் காகா பிரியாணி கதைகளும் , யாசிரின் காக்கா என்கிற ஒரே ஒரு சொல்லிலேயே அடிமையாக்கும் அன்பும், தாஜுதீனின் சென்ஸார் லகானும் அலாவுதீனின் துஆவும் வாய்த்தால் நம் பாதை பிரகாசிக்கும் தானே?)

sabeer.abushahruk said...

// உங்களுக்கு தனி மின்னஞ்சலில் எனக்கு வந்த பதிலை அனுப்பியிருக்கேன் //

பார்த்தேன்!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹு அக்பர்

Shameed said...

எளிமையான இஸ்லாம் மார்க்கம் பற்றி இனிமையாக கவிதை தந்த விதம் அருமை

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் ! மாஷா அல்லாஹ் !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரரே,

வாருங்கள் சகோதர சகோதரிகளே... எங்கள் உள்ளம் திறந்து உங்களை அழைக்கிறோம் !
لاَ إِلَهَ إِلاَّ اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ
என்று சாட்சி கூறுவோம்.

Unknown said...

ஆழமான அவசியமான அழைப்பு .....................
காக்கா உங்களின் புதிய பாதையை
எங்கும் பதிந்துவிடுங்கள் ......உங்களுக்கு நன்மையையும் ,ரசிகர்களும் கூடுவது திண்ணம்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சபீர் காக்காவின் பொன்னான மாதத்தில் பொன்னான வரிகள்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தாலாட்டி பாட்டு பாடி உணவை ஊட்டும் தாயைபோல்

செவிகளை கிழித்துச் செல்லும் எத்துணையோ மார்க்க பயான்களை கேட்டும் மனதில் பதியாத மாந்தர்க்கும் கூட.அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள கவிதை திறமையால் நீங்கள் செய்திருக்கும்.தாஃவா பணி நிச்சயமாக அல்லாஹ்வின் நாட்டத்தால் ஒவ்வொருவரு மனதிலும் ஆழமாக பதியும் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்னும் அதிகமாக இதுபோன்ற மார்க்க விசயங்களை

sabeer.abushahruk said...

சகோ.
ஹமீது,
அமீனா. ஏ.
ஹார்மீஸ்
எல் எம் எஸ் அபுபக்கர்,

ஜஸாக்கல்லாஹு க்ஹைரா!

//சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தாலாட்டி பாட்டு பாடி உணவை ஊட்டும் தாயைபோல்//

இதற்கு, பிரத்யேக நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு