Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹத்தனா மாப்பிள்ளை 1970 35

அதிரைநிருபர் பதிப்பகம் | December 21, 2011 | , , , , ,

அப்புறம்...?

என்னத்தெச் சொல்ல?

கருப்பு வெள்ளையில்
படம் ஒன்று எடுத்தாக
கழுத்து மாலை கழட்டி
சுவத்துக்குக் கொடுத்தாக

சப்பாத்தும் ஸ்ட்டாக்கிங்ஸும்
சட்டுபுட்டென்று கழட்டி
வெல்வெட்டுத் தொப்பி யெடுத்துத்
மேல்தட்டில் வைத்தாக

மாப்பிள்ளைத் தோழன் வைத்து
ட்டை அவிழ்த்து எடுத்தாக
மோதிரமும் சங்கிலியும்
மேனியிலே விட்டு வச்சாக

கம்ஸு சட்டையோடு
கஞ்சிப்பிராக்கும் களைந்தாக
கால்சராயும் கருப்பு பெல்ட்டும்
கலர் ஜட்டியும் உருவினாக

முக்காலி மேலிருத்தி
முகம் மடக்கிப் பிடிச்சாக
முழங்கால்கள் வளைத்து
முன்னோக்கி இழுத்தாக

என் சப்தம் அமிழ
எல்லோரும் குலவையிட்டு
கதறக் கதறவே
ஹத்தனா செய்தாக

மூட்டாத கைலி கட்டி
முருக்குக் கடிக்க தந்து
ஆவிகள் அண்டாதாம்
மடக்குக் கத்தி தந்தாக

மல்லாக்கப் படுக்க வைத்து
மேலிருந்து மரப்பு கட்டி
எஸ்கிமோ வீட்டைப் போல
டென்ட்டு போட்டு வச்சாக

வேறென்ன சொல்ல?

விருந்து கொடுத்ததெல்லாம்
விதம் விதமா கவனிச்சதெல்லாம்
வெட்டிப் போடத்தான்னு
விளங்காமல் போனதென்ன

எனக்கு நடந்ததுதான்
எம் எஸ் எம்முக்கும் நடந்திருக்கும்
கிரவுனுக்கும் சபீருக்கும்
நெய்னாத் தம்பிக்கும் தம்பியின் தம்பிக்கும்!

யாருக்கெல்லாம் வலித்ததோ
எல்லோரும் வாங்க இங்கே
முருக்குக் கடிக்கத் தந்த
மர்மத்தை போட்டுடைங்க

வலிக்கிடையே வாய்த்த
விடுமுறை நாட்களெல்லாம்
பட்டுடாமல் பாதுகாக்க
வேட்டி பிரித்துப் பிடித்த
நினைவுகளே மிச்சமுங்க

ஃபோட்டோவைப் பாருங்க

- Sabeer abuShahruk,

35 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா !

உரல் மேல் உட்கார வைச்சிட்டீங்களே கவிக் காக்கா !

கிளறிவிட்டுட்டீங்களே ! :)

அப்புறமா வருகிறேன்....

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
கத்தி(து)னான் ஆண்பிள்ளை ஹத்னா பண்னியதால்..இதோ நானும் வந்துடுறேன்.

Shameed said...

அமெரிக்க டாலர் பற்றி எழுதிய என் மாமா (அன்சாரி மாமா அவர்கள்)என்கையை பிடித்து மாப்பிள்ளை ஊர்வலமாகஅழைத்து சென்றுகொண்டிருக்கும்போது அடிக்கடி என் முகத்தையோ பார்த்தார்கள் ஏன் அப்படி பார்க்கின்றார்கள் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை உரலில் உட்கார வைத்து சாம்பல் தடவியா உடன் தான் மாமா ஏன் என்னை அப்படி பார்த்தார்கள் என்று புரிந்தது

அன்சாரி மாமா அவர்களுக்கு நினைப்பு உண்டா என்று தெரியவில்லை

சுன்னத் மாப்பிள்ளை போட்டோ யார் என்று எனக்கு விளங்கி விட்டது

sabeer.abushahruk said...

//சுன்னத் மாப்பிள்ளை போட்டோ யார் என்று எனக்கு விளங்கி //

ச்சும்மா இருங்க ஹமீது. கண்டுபிடிப்பவர்களுக்கு ஆயிரம் வெள்ளி பரிசு என்று ஏதும் அறிவிக்கவில்லையே!

அந்த சாம்பல் மேட்டரும் எழுதும் நோக்கம்தான். அ.நி.ன் அமீர் ஒரு கண்டிப்பு பேர்வழி.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//அந்த சாம்பல் மேட்டரும் எழுதும் நோக்கம்தான். அ.நி.ன் அமீர் ஒரு கண்டிப்பு பேர்வழி.//

இப்போ சாம்பல் மேட்டர் நாலு முறை இடம் பெற்று விட்டதே அ.நி.ன் அமீர் இப்போ என்ன பண்ணுவாராம்

Yasir said...

எனக்கு இந்த சோவடித்த அனுபவம் இல்லை..குளோரெஃபார்ம் கொடுத்து குளோஸ் பண்ணிட்டாங்க.....மயக்கம் தெளிய தெளியதான்...வலி பின்னி எடுக்க ஆரம்பித்தது..முருக்கும்...சோத்து மேல பொரிச்சு வச்சுதரும் முட்டையும்..தாயின் அரவணைப்பும் அந்த வலிகளையெல்லாம் சுகமாக்கியது

Yasir said...

சில வீட்ல..ரொம்ம ஓவரா போயி அய்யனார் ரேஞ்சுக்கு அரிவாள் எல்லாம் தலைமாட்டுலவச்சு ரகளை விடுவாங்க

அதிரை என்.ஷஃபாத் said...

ஹத்தனா நாள்நடக்கும்,
அதையொட்டி தான்நடக்கும்
அத்தனை நிகழ்வுகளும்
அழகாகய்ச் சொன்னீர்..

சுன்னத்து செய்வதற்கு
செய்கின்ற திட்டமிடல்,
என்னத்த சொல்ல?
என்னத்த விட?

வெளிநாட்டில் இருக்கின்ற
வாப்பா வரவேண்டும்.
செலவெல்லாம் இதற்கு
வாப்பிச்சா தரவேண்டும்

நடுவீட்டில் உரல்போட்டு
நாவிதன் அழைத்துவந்து
பிடிவாதம் செய்பவனை
பிடித்து வந்திடுவார்

எறும்பு கடித்ததைப்போல்
இருக்கும் என்பார்கள்
'திரும்பு வலப்பக்கம்'
திசைதிருப்ப பார்ப்பார்கள்.

காரியம் நடந்தேறும்
கடைசி நிமிடத்தில்
வீரிட்டு அழுவானிவன்.
விளையாட்டு மற்றவர்க்கு.

காக்காவுக்கு நடக்கும்
ஹத்தனா நிகழ்வுகளை
பார்க்காமல் இருப்பதற்கே..
பலகாரம் தமையனுக்கு!!

பின்..

உளுந்து மாவரைத்து
களிகிண்டி தான்கொடுப்பர்
இளைய பருவத்து
கோழியிலே சூப்புவைப்பர்..

வாரம் போனபின்னே
வெதுவெதுப்பாய் நீர்வைத்து
சேர்வை விழும்வகையில்
செய்விப்பார் குளியல்..

வலியும், அதனைப்போக்கும்
வழியும்-இப்படியாய்
கழியும் ஒருவாரம்.
களியுடன் சலிப்புமாய்..

இப்போதோ..

வலியினை மறக்கடிக்கும்
வகையினைக் கையாண்டு,
சிலமணித் துளிகளுக்குள்
செய்திடும் ஹத்தனாக்கள்.

மயக்க மருந்துகண்டு,
அதற்கும் அளவுகண்டு,
வியக்கும் வித்தைசொன்ன
மருத்துவ மேதைக்கும்,

இம்முறையைக் கையாண்டு
வலியில்லா வழிசெய்யும்
நம்மூரு டாக்டருக்கும்
நன்றிசொல்லும் தலைமுறைகள்.

KALAM SHAICK ABDUL KADER said...

உரலில் உட்கார வைத்து
குரலில் சப்தம் அடைத்து
மிட்டாய் இதமாக ஊட்டி
தட்டினார்கள் தொடையில்

வெள்ளைத் துணியில் இரத்தம்
உள்ளோரின் குலவைச் சத்தம்
தாய் தந்த காசை
தாய் மீத வீச

ஐம்பது வருடங்கள் பின்னால்
ஐயமின்றி அச்சாக என்னால்
சொல்ல முடிந்தது என்றால்
எல்லாம் சபீரின் கவியொன்றால்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அங்கமெல்லாம் தங்கம், அங்கே சங்கம் அமைத்து சின்னத்து மாப்பிள்ளையை மையப்படுத்தி தொடர்ந்தது வாதம்...

சின்னத்து மாப்பிள்ளையின் கழுத்தில் நகைகள், ஆனால் சிலரின் முகத்தில் "நகை"ப்புடனான புன்னகை !

முதல் மொட்டை போட்டுவிட்ட முடிவெட்டும் 'அப்பா' (அவர்களுக்கென்று அடைமொழிப் பெயரும் உண்டு) வீட்டுப்பக்கம் வந்தால் வழமையாக தலையை தடவிக் கொண்டு வாசலில் இருக்கும் இருக்கையில் இருப்பார்கள், என் "அப்பா"வின் வருகைக்கு காத்திருப்பார்கள் அங்கே நாங்கள் சென்று அப்பாவிடம் சொல்லும் வரையில். ஆனால், அன்றைய தினம் கூடத்தில் வந்து அமர்ந்து எல்லோருடனும் அமர்ந்திருப்பார்கள்.

அவர்களுக்கு அப்படியொரு ஸ்பெஷல் மரியாதை அன்றைய தினமும் !

சுற்றியிருந்தவர்களில் சிலர் நமுட்டுச் சிரிப்பும், ஏதோ ஒருவிதப் பார்வையும், ஆனால் பெரியப்பாவைத் தவிர... கனிவான பேச்சும், கவனத்தை திசைதிருப்பும் முயற்சியும், அயாராத விழிப்பும் மறக்க முடியுமா ?

அடுத்த நாள் தேர்தலில் வெற்றியடைந்த கட்சி அலுவலகத்திலிருந்த மாதிரியான உணர்வு...

"சும்மாவா, அடியா அவ்வோள கூப்புடலாம, ஆமாவுல மூஞ்சிய திருபிகிட்டாவ, காக்கா அவ்வோ எங்கே?, வான்கோழி பிரியானிமா, அனுப்புனேமா சாப்பாடு, இவ்வூட்டுக்கு அனுப்பலடி, மனுசி யோசிக்கவா உட்டா, அனுப்பினோம் சாப்பாடு, அவ்வூட்டில் வாங்கலமா, யானாம் ?, கடக்குது வுடுவுலே... இப்படியாக..."

பாதுகாப்பு வலையத்திலிருந்து மீண்டுவந்து பெற்ற தாய் முகம் கண்டது மூன்றாம் நாள், சேய் கோலம் கண்ட அவர்கள் துடித்தவர்கள் ஆனால் தளரவில்லை, தைரியமே புகட்டினார்கள் பொறுமையின் சிகரமாக என்றுமே.

கவிக் காக்காவும், கவித் தம்பியும் எல்லாத்தையும் பட்டியலிட்டுட்டாங்களே...

கடலை மிட்டாய் அதிகம் தின்றிருக்கிறோம் அந்த நாட்களில் !
பழங்களை பத்து மீட்டர் தள்ளித்தான் வைக்கச் சொல்லி அடம்பிடித்திருக்கிறோம் அதே நாட்களில் !

சைக்கிள் கற்றுக் கொடுத்த பெரியப்பா கொடுத்த வாக்குப்படி சைக்கிளும் வங்கித் தந்த நாள் அது ! ஆனால் ஓட்டவேயில்லை என்னோட மச்சான் "தமீம்"தான் அதிகம் ஓட்டினார் என்னை பின்னால் வைத்துக் கொண்டே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா சிரிக்க வைத்தே கவி வரிகளில் வருடிக் கொண்டே அழைத்து வந்தார்கள், ஆனால் கவித் தம்பி அப்படியே கண்முன்னால் நிறுத்திவிட்டாய(டா)ப்பா ! நள்ளிரவில் கண்ட உன் கவிதை வரிகள் கனவுபோல் இருந்தது அப்படியே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்போ சாம்பல் மேட்டர் நாலு முறை இடம்//

அ.நி.வலைத்தள menu bar வண்ணமும் சாம்பல் நிறம்தான்... :) Cool Boss !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆஹோ இப்புடி யெல்லாத்தையும் உடாமெ போட்டு ஒடச்சுப்புட்டியல்வொலே!
சம்பவ இடத்துக்கு சேவலும் வருமாமே!

N. Abdul Hadi Baquavi said...

என் மகன் பிறந்து 17 ஆம் நாளில் மருத்துவமனையில் சென்று கத்னா செய்துவிட்டேன்.

N. அப்துல் ஹாதி பாகவி
சென்னை 81

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எல்லா சோலியும் முடிஞ்சதுக்கப்புறம்...


ந‌ல்ல வெள்ள‌வேட்டி நாலாக‌ கிழிக்க‌ப்ப‌ட்டு
தன் வேட்டியே கூடாரம் போல் ஆகி
அதன் நடுப்பகுதி நூலால் கட்டப்பட்டு
சிறு வ‌ய‌தில் அணிந்த‌ த‌ங்க‌ ச‌ங்கிலி
க‌ழுத்தில் உர‌சி எம்மை சிரித்து நோக்கும்

சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ளின் குச‌ல‌மும் கூடுத‌லாய் இருக்கும்
அவ‌ன் வ‌ள‌ர்ந்த‌தும் த‌ன்வீட்டு மருமகனாய் வ‌ச‌ப்ப‌டுத்த‌
உழுந்துகளியின் மேனியில் முட்டைவ‌றுவல் ப‌டுத்துற‌ங்கி ப‌டுக்கையிலிருக்கும் எம்மை பார்த்து ப‌ல்லிளிக்கும்.

சேவ‌ல் வாங்கிவ‌ந்து சேர‌வேண்டிய‌ இட‌ம் போய்சேரும்
வெட‌க்கோழிக‌ளின் சூப்பில் எம் உட‌ல் மிடுக்கு ஏறும்
பால்வினை நோய்க‌ளெல்லாம் ப‌ற‌ந்து போகும்
ஆரோக்கிய‌மே அத‌ன் நோக்க‌மாய் அமையும்

குதிரை வ‌ண்டிக‌ளெல்லாம் இன்று ஆட்டோக்காளாக‌
ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி பெற்றிருக்கும் வேளையில்
தொடை அடி ம‌ட்டும் இன்னும் தொட‌ர‌ முடியுமா என்ன?
க்ளோரோஃபார்மாய் ஊசிக்குள் நுழைந்து உற‌க்கம் கொடுக்கும்

என்றோ தொலைநோக்குப்பார்வையில் சொல்ல‌ப்ப‌ட்ட‌
இஸ்லாமிய‌ 'சுன்ன‌த்' இன்று மாற்றாரும் விரும்பிச்செய்யும்
அறிவிய‌லின் கால‌ம் தாழ்ந்த‌ புதிய‌ ஆரோக்கிய க‌ண்டுபிடுப்பு
க‌டைசியில் எல்லாமே அற்புத‌மும், அறிவிய‌லும் தானே?

சில‌வ‌ற்றை ஏற்று ப‌ல‌வ‌ற்றை தூற்றி
சுய‌ந‌ல‌த்துட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் உல‌க‌ம்
உன் சுய‌ச‌ரிதை சுழ‌ன்று நிற்குமுன்
விரைந்தே விழித்துக்கொள்ள‌ மாட்டாயோ?


க‌விக்காக்கா, ந‌ம‌க்கு ஹ‌னீஃப் டாக்ட‌ரிட‌ம் வைத்து சோலியை முடித்து விட்டார்க‌ள். இருந்தாலும் சில‌‌ உற‌வின‌ர்க‌ளின் உர‌ல் அனுப‌வ‌த்தை ப‌ய‌த்துட‌ன் பார்த்திருக்கிறேன். அந்த (அறுந்த) நாள் ந‌ல்ல‌ ஞாப‌க‌த்தை இங்கு ப‌கிர்ந்த‌மைக்கு த‌ம‌க்கும், ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் யாவ‌ருக்கும் ரொம்ப‌ தேங்க்ஸும், து'ஆவும்.

இனி உங்கள் கவிதைக்குப்பின் நம்மவர்கள் புதுசா தயாரிக்கும் "க‌ர்ரிக்குல‌ம்விட்டே" (யாரையோ செவுள்லே ஓங்கி ஒன்னும உட்ட‌ மாதிரி இருக்குதுலெ) அதாங்க‌ சீ.வி.யில் 'சுன்னத்' முறை உரலா? ஆஸ்பத்திரியா? என்று போட்டு டிக் செய்ய‌ வேண்டி வ‌ரும் போல‌ தெரிகிற‌து.


ஞாப‌க‌ப்ப‌ய‌ண‌ங்க‌ள் முடிய‌வில்லை.......


மு.செ.மு. நெய்னா முஹம்ம‌து.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நூ. அப்துல் ஹாதி பாகவி சொன்னது…
என் மகன் பிறந்து 17 ஆம் நாளில் மருத்துவமனையில் சென்று கத்னா செய்துவிட்டேன். //

என் மகன் இபுறாஹிமுக்கு பிறந்து 7ம் நாள் மருத்துவமனையில் கத்னா செய்திட்டேன்...

ZAEISA said...

அழகான கவிதை.திரும்ப திரும்ப படித்தேன்.மொத்தத்தில் எல்லோரு(டை)யும் நிணைக்க
வைத்துவிட்டது.

sabeer.abushahruk said...

சுன்னத்து மாப்பிள்ளை ஃபோட்டோவில் கல்யாண மாப்பிள்ளை மாதிரி கெத்தா நிக்காரே ஆருய்யா இது.

ஃபோட்டோ எடுக்கும்போது அடுத்தது என்ன ஏதுன்னு விவரம் தெரியாதோ. ச்சும்மா சோல்ஜர் மாதிரி நிக்காரேப்பா.

அவர்தாம்யா சொல்லனும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கெத்தா நிக்காரே ஆருய்யா இது.//

கவிக் காக்கா: நேற்று லோக்பால் மசோதா தாக்கல் செய்துட்டாங்க... அதனால் எனக்குத் தெரியாது(ன்னு) சொல்றதுதான் (இப்போதைக்கு) சரி ! :)

அது சரி, சந்தடி சாக்கில் லல்லுவின் லொள்ளு(ஜோக்கை) கவணீத்தீர்களா !? I like it !

Shameed said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//அ.நி.வலைத்தள menu bar வண்ணமும் சாம்பல் நிறம்தான்... :) Cool Boss ! //

ஒ அங்குமா சாம்பல்

Anonymous said...

மருமகன் சா. ஹமீது குறிப்பிடும் சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததால் எனக்கு நினைவு இல்லை. ஒருவேளை அவர் மாப்பிள்ளை என்பதால் நினைவு இருக்கலாம்.

எனக்கு நடந்த உரல்- சாம்பல்- கோடாலி- சந்தன அத்தர் -நாசுவர் மிஸ்கீன் - காரில் ஊர்வலம்- காவன்னா அப்பா காது பொத்தி சொன்ன பைத்து- கடல்கரைதெரு பள்ளி - காலையில் களறி வைக்க அறுக்கப்பட்ட ஆடு- கையில் தரப்பட்ட பினாங்கு கத்தியை காணாக்கிவிட்டு வாப்ப்பாவிடம் முதுகில் வாங்கிய அடி- தலைமுழுகாட்டிய அன்றே பார்த்த பாகப்பிரிவினை படம் - அன்று குடித்த நெஞ்ஜெளும்பு சூப்பு- உளுந்துகளி- அதில் முட்டை போட்டு மத்தளித்தது கேட்டு அழுது அடம்பிடித்தது - எல்லாம் நினைவில் உண்டு.

நினைவோ ஒரு பறவை- விரிக்கும் அதன் சிறகை.

- இப்ராகிம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலையைத் தடவும் முடிவெட்டும் அப்பா(வாக) குறிப்பிட்டது "மிஸ்கீன்" அவர்களைத்தான் !

Unknown said...

போடோவுல இருப்பது யாரு ?
சபீர் காக்கா? அல்லது ஜாகிர் காக்காவா ?

Anonymous said...

ஹத்தனா மாப்பிள்ளையை கோர்ட்டுகள் போட்டு பைத்துசபா அடித்து ஜீப்பில் ஊர்வலம் சுற்றுவார்கள். சொந்தக்காரவங்க வீட்டில்யெல்லாம் கூட்டிக்கிட்டு பொய் பால் தருவார்கள். அதற்கு விருந்தே வைத்துவிடுவார்கள் சொந்த பந்தங்களை கூப்பிட்டு சீறு,சீராட்டு என்றல்லாம் நடக்கும்.
ஏழாவது நாள் அன்று குலத்திற்கு குளிக்க வைக்க நாசுவர் மிஸ்கீன் அவர்கள் கூட்டிக்கிட்டு போவார்கள். அன்றை தினம் ஒரு விருந்து நடக்கும் காலையில் முட்டை போட்ட உளுந்து கழியும், கோழி போட்ட சாளியாவும் தருவார்கள். நாசுவர் மிஸ்கீன் அவர்களுக்கு புது சட்டையும், புது வெல்ல வேட்டியும் கொடுப்பார்கள்.

இப்ப வெல்லாம் பிந்த உடனே ஹத்தனா செய்து விடுகிறார்கள் யாருக்கும் தெரியாமலும் பொய் விடுகிறது. இதை மோளம் அடித்துக்கொண்டு செய்வது கிடையாது. அந்த பிள்ளைகளுக்கும் எந்த வித சிரமும் தெரியாது பெரிய பிள்ளையாக போனதிற்கு பிறகு ஹத்தனா செய்யும் போது பிள்ளைகள் அழுக ஆரம்பித்து விடுகிறது. சின்ன வயதில்லையே செய்து விட்டால் அந்த பிள்ளைகளுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

அபூபக்கர் - அமேஜான்

sabeer.abushahruk said...

//போடோவுல இருப்பது யாரு ?
சபீர் காக்கா? அல்லது ஜாகிர் காக்காவா ? //

அப்துர்ரஹ்மான்,

ஃபோட்டோவ்ல உள்ள பொடுசு நெம்ப அலக்கா இருக்கான்பா. அதனால நான் அவன் இல்லை.

sabeer.abushahruk said...

ஹார்மிஸ்,

கீழ்கண்ட மின்னஞ்சலை எனக்கு அனுப்பியவர்தான் ஃபோட்டோவில் இருப்பவர்.

///மோதிரமும் சங்கிலியும்
மேனியிலே விட்டு வச்சாக///


பாஸ் லேசா பயமா இருக்கு பாஸ்...மறுபடியும்....செய்யமாட்டாய்ங்கல்ல???

//ச்சும்மா இருங்க ஹமீது. கண்டுபிடிப்பவர்களுக்கு ஆயிரம் வெள்ளி பரிசு என்று ஏதும் அறிவிக்கவில்லையே!//

இது என்ன 'திருவிளையாடல்" எடுத்த காலமா?....தெரிஞ்சுடும் பாஸ்....


//ஹத்தனா மாப்பிள்ளை 1970//

இப்படி வருசமெல்லாம் போட்டு [ நல்ல வேலை ஃபிலிம் , அப்பர்ச்சர் , ஷட்ட்ர் ஸ்பீடெல்லாம் போடல]

விவரமா எழுதாமெ கண்டுபிடிக்க விட்டிருக்களாம்

Shameed said...

எல்லாம் சரி சுன்னத்து மாப்பிள்ளை இன்னும் வரவில்லையோ ஏன் பயமா ?

Yasir said...

//எல்லாம் சரி சுன்னத்து மாப்பிள்ளை இன்னும் வரவில்லையோ ஏன் பயமா ?//ஆவணத்துக்குதிரைக்காக வெயிட்டிங் காக்கா...இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்..மாப்பிள்ளை யாரென்று பார்க்க ஆசையா ??? துரியான் பழம் தின்று ......போட்டவர்போல இருக்கு..கரெக்ட்ட்டா கவிகாக்கா ???

ZAKIR HUSSAIN said...

சரி ..எல்லோரும் விட மாட்டீங்க போல தெரியுது. அந்த போட்டோவில் உள்ளது நான் தான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

யான்ங்காக்கா,

என்.சி.சி. மாணவரணி தலைவன் மாதிரி சும்மா மிடுக்கா அட்டென்ஸென்லெ நிக்கிறியெளே... எதுத்தாப்லெ நிக்க வச்சி பயம் காட்டுனது யாரு மிஸ்கீன்யாக்காவா? தலையிலெ தொப்பிக்கு மேலெ செகப்பு குஞ்சம் ஒன்னும் வச்சா...சும்மா அசத்தலா ஈக்கிம்லெ...

அது எந்த நேரம்ண்டு கரெக்ட்டா சொல்லவா? திக்கு,திக்குண்டு அடிச்ச நேரம் தானே??

ச்சீ...அதெ நெனெச்சாலெ வெக்கமா ஈக்கிது...ஏழாவது படிக்கும் போதா செய்வாஹெ (5+7=12) ???? (என்னா செஞ்சாஹெ? யாருக்கு செஞ்சாஹெ? சஸ்பென்ஸ்.....)

மு.செ.மு. நெய்னா முஹம்ம‌து.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹத்தனா பன்னும் முன் அட்டேன்சனில் நிற்கும் விதம் அருமை காக்கா அதுலா சரி விருந்து எப்போ போட போறியே?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹமீது காக்கா சொன்னது:

// எல்லாம் சரி சுன்னத்து மாப்பிள்ளை இன்னும் வரவில்லையோ ஏன் பயமா ? //

1970.ல் N.K.S மற்றும் பக்கர் வாய்ஸ் அலங்கரிப்பு வாகனம் இல்லாமல் இருந்திருக்கும் போலும்.அதனால் மாப்பிளை வர தாமதமாகி இருக்கலாம்.

ZAKIR HUSSAIN said...

To Brothers Naina & Abu Bakar...

அட்டென்சனில் நிற்க காரணம் பயம்தான். விருந்து....இனிமேல் பிள்ளைகளின் கல்யாண நாளில்தான்.

அன்றைய கூட்டணியில் பக்கர்வாய்ஸ், மிஸ்கீன் காக்கா, கார் எல்லாம் இருந்தது.[ மாலையெல்லாம் போட்டு 'பலிகிடா' மாதிரி கூட்டிட்டு போனாப்லெ]

Rajakamal said...

what to say, super, nowadays all in poem only.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாகிர் காக்கா சொன்னது:
// அட்டென்சனில் நிற்க காரணம் பயம்தான். விருந்து....இனிமேல் பிள்ளைகளின் கல்யாண நாளில்தான்.//

பயத்திலும் வீர(மான)னின் தோற்றம் காக்கா. (அல்லாஹ் நாடினால்)


//அன்றைய கூட்டணியில் பக்கர்வாய்ஸ், மிஸ்கீன் காக்கா, கார் எல்லாம் இருந்தது.[ மாலையெல்லாம் போட்டு 'பலிகிடா' மாதிரி கூட்டிட்டு போனாப்லெ] //

அன்று கொடுத்த பலியால் இன்று வலிகள் இல்லாமல் நிம்மதியாகத்தான் இருக்கின்றன.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு