அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதற்கு காரணமாக பொருளாதார நோக்கர்கள் குறிப்பிடும் காரணிகள்.
1. வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கி இருந்த கடன் பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்து வருவதால் அவற்றின் முதிர்வு தொகையை இந்திய நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களாக திருப்பிச் செலுத்த வேண்டி இருக்கிறது.
2. வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்திய வணிகச் சந்தையில் முதலீடு செய்த தொகைகளை திரும்பப் பெற்று தாய் நாடுகளுக்கு அதிக அளவில் அனுப்ப தொடங்கியுள்ளன.
3. குளிர் காலங்களில் வழக்கமாக கச்சா பெட்ரோலிய எண்ணெயை இந்தியா சர்வதேச சந்தையில் அதிக அளவு வாங்கும்.
மேற்கண்ட காரணங்களால் டாலரின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்கிறது.
அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.
இவற்றையும் விட நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பை விட இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் டாலரில் செலுத்த வேண்டிய பட்டியல் தொகையின் வெளிவர்த்தக பற்றாக்குறை சற்றேறக்குறைய 20 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு நவம்பர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
நமது மத்திய அரசு, மாநில அரசு, ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் இவைகள் போலவே நமது பொருளாதார நிலையும் சீர் கெட்டு கிடக்கிறது.
ஆனாலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பேங்க் ரேட் குறைந்து வருவதில் ஒரு மகிழ்ச்சி.
ஆனால் அது உண்மையான மகிழ்ச்சியாக இருக்காது. காரணம் இந்தியாவில் இந்த மாற்றத்தை அனுசரித்து இன்னும் உபயோகிப்பாளர் பொருள்களின் விலை ஏறும் விலைவாசியை குறை என்று இன்னும் பத்து நாள் பாராளுமன்றம் முடங்கும்.
விலைவாசி உயர்வை காரணம் காட்டி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் , ஓய்வூதியம் பெறுவோர்களின் அகவிலைப்படி & ஊதியம் உயர்த்தப்படும் . பணவீக்கம் அதிகரிக்கும். மீண்டும் விலை உயரும்.
விலைவாசியை குறை என்று மீண்டும் பாராளுமன்றம் முடங்கும் !!!!!!
வெளிநாடுவாழ் இந்தியர்கள் பேப்பரில் பேங்க் ரேட் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
- இப்ராகிம் அன்சாரி - துபை.
10 Responses So Far:
நல்ல அலசல்... ! அதோடு புரியவைக்கும் தகவல் !
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா ! இதே போல் அலசுங்கள் நிறைய !
உங்களை AN-வலைத்தளம் சார்பாக வாசகர்களின் சார்பாக வரவேற்கிறோம் ! :)
வெளிநாடுகளில் இந்திய நாணயத்தின் பேங்க் ரேட் உயர்ந்திருப்பதையே பெரும்பாலோனோர் விரும்புகின்றனர். அவர்கள் சொல்லும் காரணம் என்னவெனில் "பேங்க் ரேட் குறைவதால் ஊரில் கச்சாப்பொருட்களின் விலையோ அல்லது கத்தரிக்காயின் விலையோ குறைவதில்லை. அதனால் பேங்க் ரேட் நன்றாக இருப்பதே நமக்கு நல்லது என்று சொல்கின்றனர்".
இன்னொருவர் சொல்கிறார் "ஊர்லெ சாமான்களின் வெலை ஒரு தடவை ஏறுனா ஏறுனது தான் எங்கங்க கொறையுது".
இன்னொருவர் சொல்கிறார் "பெட்ரோல் ஒரு பேரரல் (உருளை) 45 டாலர் விற்கும் பொழுதும் இந்தியாவில் ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் ஒரு பேரரல் 175 டாலர் விற்கும் பொழுதும் கொஞ்சம் தான் கூடுதலாக விற்கப்படுகிறது" உலகப்பொருளாதாரம் ஒரு கண்கட்டி வித்தை என்கிறார்.
இந்திய தங்கத்தின் இருப்பு அபரிமிதமாக ஆகிவிட்டது என்பதனால் ஒரு பவுன் விலை பத்தாயிரத்துக்கு யாராச்சும் விற்பார்களா? என்று நாமே கேட்கவில்லையா?
நம்மள்க்கு உள்ள அறிவு கூட உலக பொருளாதார மேதைகளுக்கு இல்லாமெ பேச்சே என்று ஒருவர் தனக்குள்ளே புழுங்கிக்கொள்கிறார்.
கடைசியா நான் சொல்றது என்னான்டாக்கா "கண்ணுக்கு முன் தெரிவதே பெரிதாக தெரிகிறது. கண்ணுக்கு அப்பால் மறைமுகமாக வரும் தாக்கம் நமக்கு தெரிவதில்லை".
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அமெரிக்க அரசாங்கத்தின் திமிர் தனது நாணயம் [FLOATING CURRENCY]. இதை மட்டுப்படுத்தி தனது நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்கர்களின் கட்டுக்குள் கொண்டுவராமல் உலக பொருளாதார வள்ளுநர்களை ஆச்சர்யப்பட வைத்தவர். முன்னால் மலேசியப்பிரதமர். டாக்டர் மஹாதீர் முஹம்மது.
அமெரிக்கர்கள் சொல்கேட்காமல் வாழ இப்போது உள்ள நிதியமைச்சர்கள் , பிரதமர்கள் நிச்சயம் டாக்டர் மஹாதிர் முஹம்மதிடம் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. எப்போது I.M.F யிடம் கடனுக்கு கையெழுத்து ஒரு நாடு போடுகிறதோ அன்றைக்கே சனியன் பிடித்து விட்டது அந்த நாட்டுக்கு என சொல்லலாம்
மன்னிக்கவும்.
எனக்கு இந்த ஆக்கத்துக்கு என்ன கமென்ட் எழுதறதுன்னு தெரியல. ஏன்னா, இந்த கணக்கு வழக்கெல்லாம் மங்கலாத்தான் தெரியும், எனக்குக் கொஞ்சம்கூட வெளங்காது.
பத்தாம்ப்புல கோடிட்ட இடத்த நெரப்பி 2 மார்க்கும் பொருத்துக பகுதியில் ஃபுளூக்ல 2 மார்க்கும் வாங்கின ஞாபகமிருக்கு. அதற்குப் பிறகு அறிவியலைக் கட்டிக்கிட்டு ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரின்னு பிள்ளைகுட்டியெல்லாம் பெத்துக்கிட்டாச்சு.
இருந்தாலும், ஏன் மண்டையிலே ஏறுகிறமாதிரி ஏதோ இருக்குன்னு தெரிவதால். நன்றி இ.அன்சாரி அவர்களே
எனதுத் துணைப்பாடமான "பொருளாதாரம்" வகுப்புகளில் கற்றுக்கொண்ட விடயங்களைச் சகோதரர் இப்றாஹிம் அன்சாரி அவர்கள் மீண்டும் நினைவுப்படுத்தி விட்டார்கள். இங்கு அன்னியச்செலவாணி மதிப்புக் குறைகின்றது என்றால், நாம் அங்கு இந்தியாவில் உள்ளவர்கட்கு அதிகம் பணம் அனுப்பியாக வேண்டியக் கட்டாயம் உருவாகின்றது;முன்பு வாங்கிய அதே பொருளுக்கு இப்பொழுது அதிகம் விலைகொடுத்து வாங்க வேண்டும்;இஃதே "பணவீக்கம்" என்பதாகும்.இஃதொரு மாயத்தோற்றம்;இத்னால் பொருக்ட்லில் விலை ஏற்றம்!
ஆனல், தங்கத்தில் ஏற்படுத்தியுள்ள விலை நிர்ணயம், நம்மவர்க்கு இலாபம் அதனை ஒரு சேமிப்பின் முதலீடாக நாம் ஏற்படுத்திக்கொண்டால்.
வித்தியாசமான புரியும் படியான பொருளாதார ஆக்கம் தந்த மாமா அவர்களுக்கு நன்றி மேலும் பல்வேறு விசயங்களின் ஆக்கங்களையும் தங்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்
பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைய செய்யும் அந்நிய முதலீடு இந்திய பொருளாதாரத்தை Stableஆக வைத்திருக்க அனுமதிப்பளிப்பதில்லை.
நல்ல தெளிவான அலசல் இபுறாஹிம் காக்கா...
//இந்தியாவில் இந்த மாற்றத்தை அனுசரித்து இன்னும் உபயோகிப்பாளர் பொருள்களின் விலை ஏறும்// நிதர்சனமான உண்மை.....அ.நி உங்களை வரவேற்கிறோம் மாமா......அப்ப அ.நி-க்கு ஒரு பொருளாதார எழுத்தாளரும் கிடைத்துவிட்டார்கள் :)....அன்சாரி மாமாவிடம் நிறைய திறமைகளும்,பல பயனுள்ள அனுபவங்களும் புதைந்து கிடக்கின்றது...அதையெல்லாம் அள்ளிவிசி எங்கள் மனங்களை கொள்ளை கொள்ளுங்கள் மாமா...
காலத்திற்கேற்ற கச்சிதமான பதிவு.ஜஸாக்கல்லாஹ் ஹைர்
நமக்கெல்லாம் புரியும்படியாக நண்பர் ஒருவர் 'பணம் வந்த கதை'யை மிக தெளிவான தொடராக இங்கே எழுதுகிறர்.
http://www.inneram.com/inneram-special/money-story/Page-2.html
http://www.inneram.com/inneram-special/money-story/
Post a Comment