Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திருமணம் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2011 | , , , ,

ஓர்
அழகிய பூஞ்சோலை
இரண்டு வண்ணத்துப் பூச்சிகள்
ஒன்று
அழகிய ஓவியங்கள் தன் மீது கொண்டது
மற்றொன்று
ஓவியம் இல்லாதது....

அழகிய ஓவியம் கொண்டது
தென் திசையை நோக்கி
தன் இறகை விரித்து மடக்கியது
அதில்
வெளியான சிறு காற்று
சற்று தொலைவில் நிலைகொண்டிருந்த
ஈரமான
தென்றல் காற்று குவியலில்
சிறிய
உந்துதல் ஏற்படுத்தியது
உந்துதலில் ,
எதிர்பட்ட வெளியெல்லாம்
சுகந்த தென்றல் காற்று வீசி
சூழலை ரம்மியமாக்கியது.....

நம்மில் சில ஆண்மை கொண்ட
கைமாறு வாங்காமல் மனமுடித்த
கதாநாயகன் ,
சமுதாயத்தின் மீது ஏற்படுத்திய
நன்மையான அதிர்வை போல.....

ஓவியம் இல்லா வண்ணத்துப் பூச்சி
கிழக்கு நோக்கி
தன் இறகை விரித்து மடக்கியது
அதில்
வெளியான சிறு காற்று
படிப்படியாக முன்னேறி
வெகு தொலைவில் நிலை கொண்டிருந்த
புயல் காற்று மண்டலத்தில்
ஒரு
உந்துதல் ஏற்படுத்தியது ..
உந்துதலில் ,
எதிர்பட்ட வெளியெல்லாம்
பெரும் புயலாக மாறி
சர்வ நாசம் செய்தது.....

கைமாறு வாங்கி மனமுடித்த
கையாலாகாதவன்
நம் சமுதாயத்தை
நாசம் செய்தது போல....
(see wikipedia :Butterfly effect)

---Harmys---

16 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

எண்ணத்தை ஈர்த்தன
வண்ணத்துப் பூச்சியாய்
வர்ணம் தீட்டிய வரிகள்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

(திரு)மணங்களை வண்ண(த்துப்)பூச்சியாக ஒப்பிட்டது அருமை !

கரு இரண்டே வரிதான்...
அதன் மெருகூட்டலோ, இயற்கை ரசிக்கும் ரசிகனின் கையில் கிடைத்த தூரிகையின் பாடுதான் இந்தக் கவிதை..

வருடம் வரிகளை மென்மையாக சொல்லும் தம்பி அப்துர்ரஹ்மான் எங்கேயிருந்தீர் இவ்வளவு நாட்கள் !?

sabeer.abushahruk said...

பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டை கவிதையாக்கியிருப்பது அபரிதமான கற்பனை எனினும் முத்தாய்ப்பாய் சமூக சிந்தனையோடு கோர்த்தது அற்புதம்.

வண்ணத்துப்பூச்சியின் ஓவியங்கள்போலவே அழகு உங்கள் எண்ணத்தால் எழுதிய கவிதை.

வாழ்த்துகள் அப்துர்ரஹ்மான்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கைமாறு பெற்று கைபிடித்தவனை கையாளாதவனாக உவமையுடன் எடுத்துக்காட்டிய சிந்தனை வரிகள் அதிக அர்த்தம் நிறைந்தவை.

தலைத்தனையன் said...

அதீத கற்பனை வளம்
அழகான உருவகம்

கருத்துச் செறிவு
கண்டகனுக்குக் கண்டனம்

இலை மறைக் காயல்ல
இது வெள்ளிடை மலை

உரைக்கவேண்டும், இல்லை
மண்டை உடைத்துச் சொல்லவேண்டும்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ:அப்துர்ரஹ்மான் அவர்களின் வண்ண வரிகள் சிறகடித்து பறக்கிறது.
// கைமாறு வாங்கி மனமுடித்த
கையாலாகாதவன்
நம் சமுதாயத்தை
நாசம் செய்தது போல....//

வண்ணத்து பூச்சியை பார்த்து.
என்னத்தை பேசமுடியும்.
கைம்மாறு வாங்கிய கடவான்களுக்கு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸ்லாமு அலைக்கும்

அப்துல் ரஹ்மான்,

வழக்கம் போல் வித்யாசமான கற்பனை.

பட்டர்ப்ளையை வைத்து பெட்டரான கவிதையை தந்தமைக்கு மிக்க நன்றி.

இது போன்று வகையிலும் சொல்லிக்கொண்ட இருக்க வேண்டும் இந்த கைக்கூலித்தனம் ஒழியும் வரை.

Yasir said...

வித்தியாசம் = அப்துற்ரஹ்மான்
அழகாக கேவலப்படுத்தி இருக்கிறீர்கள்
கையலாகாத திருடர்களை

Shameed said...

சமுதாய சிந்தனை ஒப்பீடுகள் மிக அருமை

sabeer.abushahruk said...

//அதீத கற்பனை வளம் 
அழகான உருவகம்

கருத்துச் செறிவு
கண்டகனுக்குக் கண்டனம்

இலை மறைக் காயல்ல
இது வெள்ளிடை மலை

உரைக்கவேண்டும், இல்லை 
மண்டை உடைத்துச் சொல்லவேண்டும்//

தலைத்தனயன்,

இந்த உணர்ச்சிப் பிழம்பு இலக்கியம் படைப்பவனுக்கான அடையாளம். தனி விருந்தொன்று  படைத்து எங்களுக்குப் பரிமாறக்கூடாதா? தூய மரபுக்கு கவியன்பன், புதுசுக்கு கிரவுன் ஷஃபாத், முன் நவீனத்துவக்கவிதைகளுக்கு அப்துர்ரஹ்மான், கலந்துகட்டிக்கு நானு என இருக்கும் அதிரை நிருபரில் பாரதிபோன்றதொரு கனல் கவியின் இடம் காலியாக இருப்பதும் உங்கள் எழுத்துகளுக்காக காத்திருப்பதுவும் தெரியவில்லையா உங்களுக்கு?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தலைத்தனையன் காக்கா:

//அதிரை நிருபரில் கனல் கவியின் இடம் காலியாக இருப்பதும் உங்கள் எழுத்துகளுக்காக காத்திருப்பதுவும் தெரியவில்லையா உங்களுக்கு? //

அதே அதே... நானும் வழிமொழிகிறேன்... !

ஒவ்வொருவரா க்யூ ப்ளீஸ் !

crown said...

//அதீத கற்பனை வளம்
அழகான உருவகம்

கருத்துச் செறிவு
கண்டகனுக்குக் கண்டனம்

இலை மறைக் காயல்ல
இது வெள்ளிடை மலை

உரைக்கவேண்டும், இல்லை
மண்டை உடைத்துச் சொல்லவேண்டும்//

தலைத்தனயன்,

இந்த உணர்ச்சிப் பிழம்பு இலக்கியம் படைப்பவனுக்கான அடையாளம். தனி விருந்தொன்று படைத்து எங்களுக்குப் பரிமாறக்கூடாதா? தூய மரபுக்கு கவியன்பன், புதுசுக்கு கிரவுன் ஷஃபாத், முன் நவீனத்துவக்கவிதைகளுக்கு அப்துர்ரஹ்மான், கலந்துகட்டிக்கு நானு என இருக்கும் அதிரை நிருபரில் பாரதிபோன்றதொரு கனல் கவியின் இடம் காலியாக இருப்பதும் உங்கள் எழுத்துகளுக்காக காத்திருப்பதுவும் தெரியவில்லையா உங்களுக்கு?
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லாம் சரிதான் பூவோடு சேர்ந்த நாரும் நாறும் என்பது போல் என்னை என் பிரியமான தம்பி ஷபாத்துடன் சேர்த்து எனக்கு பெருமை சேர்க்கும் பெரிய மனது என்றும் வாழ்க!எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

கைமாறு வாங்காதவனும் கை மாறுவது ஏனோ ? !

-பாமரன்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இரண்டு பூச்சிகளை உருவகமாக எடுத்துக்கொண்டு சாயம் உள்ளவை கைகூலி வாங்காத நன் ஆண்மகனுக்கும், கைகூலி வாங்கி சமுகத்தை பாழாடிக்கும் சாயம் வெளுத்த அந்த திருடனுக்கும் உவமானம். சாயம் வெளுத்த அவமானம். இப்படி கற்பனையை , கற்பனை நூல் விட்டே பிடித்து கற்றுகொள்ள நல்ல விடயம் புனைந்து சிறகடித்து பறக்கும் அழகிய பட்டாம் பூச்சியாக அப்துற்றஹ்மானின் கவிதைகள்.சமூகவியலை இப்படியும் சொல்லமுடியும்????!!!!! ஆமாம் முடியும் என்பதை நம் ஊரில் பிறந்த கவிஞர்கள்(சபிர் காக்கா, தம்பி சபாத், நண்பர் அப்துற்றஹ்மான்) தொடர்ந்து நிரூபித்து வருவது நம் அதிஸ்டம். குடும்பம் வந்த புஸ்டி கவிதையிலும் தெரிகிறது.

crown said...

கைமாறு வாங்காதவனும் கை மாறுவது ஏனோ ? !

-பாமரன்
-------------------------------------------------------
கைமாறு வாங்காதவனுக்கு கைக்கூலியாக அல்லாஹ் கூலி கொடுப்பான்.

crown said...

அல்லாஹ்வின் நற்கூலியை இக்கால இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு