Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 28, 2011 | , ,

"நான் கண்ட சரித்திரக்குறியீடு"

உத்வேகமும், உற்சாகமும் தரும் அருமையான ஒரு அப்பட்டமான உண்மை நிறைந்த அனுபவ கட்டுரையை வழங்கிய கட்டுரையாளர் இப்ராகிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு முதற்கண் நன்றிகளும், வாழ்த்துக்களும்.

என் பத்து வருடங்கள் தாண்டிய சவுதி அரேபிய அனுபவத்தில் என் கண் முன்னே நான் கண்ட ஒரு அதிசயத்தை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நான் முன்பு சவுதியின் முக்கிய எண்ணெய் வள தொழில்நகரமான‌ யான்பு நகரில் ஒரு ஸ்டீல் கம்பெனியில் என்னுடைய மேலாளர் திரு. காமராஜ் (மன்னார்குடி சொந்த ஊர், படிப்படியாக முன்னேறியவர் ஆரம்பத்தில் ப்ராஜெக்ட் இன்‍ஜினியராக நிறுவனத்தில் சேர்ந்து, பிறகு சீனியர் ப்ராஜெக்ட் இன்‍ஜினியர், பிறகு ப்ராஜெக்ட் மேனேஜர், பிறகு ப்ளேனின் மேனேஜர் தற்சமயம் ப்ராஜெக்ட்ஸ் மேனேஜர்) அவர்களின் கீழ் பெர்சனல் செக்ரட்டரியாக ப்ராஜெக்ட்ஸ்/திட்டமிடல் துறையில் (ப்ளேனிங்) பணியாற்றிக்கொண்டிருக்கும் பொழுது நான் வேறொரு

வாய்ப்பிற்காக இன்னொரு கம்பெனி செல்ல நேரிட்டது. அங்கு செல்ல வேண்டிய‌ பணிகள் நடந்து கொண்டிருக்கும் சமயம் எனக்கு மாற்றாக ஒரு ஆள் என் துறைக்கு தேவைப்பட்டது.

அச்சமயம் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தும் வெல்டராக பணிபுரிந்து கொண்டிருந்த பீகாரைச்சேர்ந்த ஒரு இளைஞன் (பெயர் அஸ்லம் அன்சாரி) ப்ராஜெக்ட் முடிந்து பணியில்லாமல் இருந்த அவனை சில மாதங்களுக்கு முன் ஆவணக்கட்டுப்பாட்டு துறையில் ஆவணங்களை கோப்பிலிட ஒரு ஆள் தேவைப்பட்டு நான் அவனை அடையாளம் கண்டு என் மேலாளரிடம் சொல்லி அங்கு அவன் அமர்த்தப்பட்டு பணி செய்து வந்தான். நான் நிறுவனத்தை விட்டு வெளியேற இருக்கும் தகவலறிந்து நான் வேலை செய்த ப்ராஜெக்ட்/திட்டமிடல் துறைக்கு வரவழைக்கப்பட்டான். என் மேலாளரும் அவனுடைய சுறுசுறுப்பு கண்டு எனக்கு மாற்றாக அவனை ஏற்றுக்கொண்டார். நான் அங்கிருந்து வெளியேறியதும் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக திட்டமிடல் துறையின் முக்கிய‌ மென்பொருளான "ப்ரைமவேரா" வை அக்கம்பக்கத்தினரிடம் மெல்ல,மெல்ல கற்றுக்கொண்டான்.

நான் மற்றொரு கம்பெனியில் பணியில் சேர்ந்து என் பழைய நண்பர்களுக்கு வேலைவாய்ப்பு சம்மந்தமான மின்னஞ்சல்கள் அவ்வப்பொழுது அனுப்பி வருவேன். அதில் கத்தாரில் ஹுன்டாய் நிறுவனத்திற்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்து அதில் ப்ராஜெக்ட் ப்ளேனர் வேலையும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

அதை கண்ட அவன் அதே துறையில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மூத்த ப்ளேனரின் சி.வி.யை வாங்கி அப்படியே இவன் பெயருக்கு சில மாற்றங்களுடன் மாற்றி கத்தார் ஹுன்டாய் விலாசத்து மின்னஞ்சல் அனுப்பி விட்டான்.

உடனே அங்கிருந்தும் இன்டர்வியூவிற்கு அழைப்பு தொலைபேசியில் வந்து ப்ராஜெக்ட் ப்ளேனராக 2000 சவுதி ரியால் சம்பளத்தில் என் பழைய நிறுவனத்தில் வேலை பார்த்த அவன் இன்று கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டாலர் சம்பளத்தில் சவுதி விசாவை முடித்துக்கொண்டு போய் அந்த நிறுவனத்தில் சேர்ந்து கார் மற்றும் குடும்ப சகல வசதிகளுடன் கத்தாரில் நலமுடம் செளக்கியமாக இருந்து வருகிறான். மாஷா அல்லாஹ்..

சென்ற வாரம் சில பழைய கம்பெனி நண்பர்களுடன் இணைந்து அவன் நிறுவன‌ வேலைகளுடன் தோஹாவின் மையப்பகுதியில் ஒரு பெரிய சவுத் இண்டியன் ரெஸ்ட்டாரெண்ட் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதில் வந்து என்னை அவசியம் கலந்து கொள்ளும்படியும் பத்திரிக்கை அனுப்பி இருந்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதில் பொறாமைப்படுவதை விட தொடர் முயற்சியால் தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அதை நிரூபித்துக்காட்டி வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில் இன்று கத்தாரில் சந்தோசமாக குடும்பத்துடன் அவன் வாழ்ந்து வருவது என் வாழ்வில் நான் கண்ட சரித்திரக்குறியீடு....

எப்பொழுதோ, எங்கோ, தனக்கோ அல்லது யாருக்கோ நடந்த சில அசெளகரியமான‌ சம்பவங்களையே காரணம் காட்டி அதையே நினைத்து கொண்டு பயந்து நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளையும் அதனால் வர இருந்த நல்ல பல வளர்ச்சிகளையும், வாழ்க்கை முன்னேற்றங்களையும் நாம் நமக்கு தெரியாமலேயே அவிழ்க்க முடிந்தும் முடியாமல் இறுகக்கட்டிப்போட்டு வைத்துள்ளது வேதனையான மற்றும் நிதர்சனமான உண்மையே.

ஒருவன் வெளிநாட்டில் குடும்பம், கார், சகல‌ வசதிகளுடன் சந்தோசமாக இருந்து வரும்பொழுது அவன் இந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு சிரமம் எடுத்து படித்திருப்பான் இல்லை சிரத்தை எடுத்து முயன்றிருப்பான் என்பதை நாம் பெரும்பாலும் சிந்திக்க மறந்து விடுகிறோம். மாறாக, பொறாமையே முன்வந்து நின்று கொண்டு நம் முயற்சிகளை கொன்றுவிடுகிறது. கர்வம் வந்து தானே சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு நம் வாழ்வில் கொடுங்கோல் ஆட்சி செய்து வேதனைப்பட வைத்து விடுகிறது.

இது போன்ற கட்டுரைகள் எழுதுபவருக்கும், அதை கவனத்துடன் படிப்பவருக்கும் பல்கலைக்கழகம் செல்லா ஒரு நல்ல பாடம். நமக்கு ஏற்பட்ட இது போன்ற அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வதுடன் நம் வீட்டு பிள்ளைகளின் காரியத்தில் இதை கடைபிடித்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிட்டு மார்க்க வரம்பிற்குட்பட்டு கொண்டு செல்வோமேயானால் வரும் காலம் அவர்களால் நமக்கு ஆனந்தமாக இருக்குமேயன்றி ஒருபோதும் அல்லல்பட வைத்து விடாது.

அதிரை நிருபர் குழுமத்திற்கு, இயன்றால் மேற்கண்ட என் கருத்துக்களை "நான் கண்ட சரித்திரக்குறியீடு" என்ற தலைப்பில் தனிக்கட்டுரையாக‌ வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அனுபவங்கள் பேசட்டும் அதுவே நம் வாழ்க்கைக்கு ஓர் ஏணிப்படியாக ஆகட்டும் எனக்கும் உங்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தில்.
அனுபவம் பேசுகிறது தொடரும்...
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

17 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): நல்ல பகிர்வு மட்டுமல்ல, படிப்பினையும் இருக்கே இங்கே !

அனுபவங்கள் நிறைய பேசனுமே !

ஜோலியை முடிச்சுட்டு வந்துடுறேனே... :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அனுபவம் பேசுகிறது. தலையெழுத்து என தொடர்பவர்களை தட்டியெழுப்புகிறது!

Yasir said...

///எப்பொழுதோ,..................................கொடுங்கோல் ஆட்சி செய்து வேதனைப்பட வைத்து விடுகிறது.////மாஷா அல்லாஹ் என்ன வார்த்தைகள்....அனைவரின் மனதிலும் நிறுத்த வேண்ட்டிய வைர வரிகள்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// அதே துறையில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த ஒரு மூத்த ப்ளேனரின் சி.வி.யை வாங்கி அப்படியே இவன் பெயருக்கு சில மாற்றங்களுடன் மாற்றி கத்தார் ஹுன்டாய் விலாசத்து மின்னஞ்சல் அனுப்பி விட்டான். //

துணிந்தவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.அது போல் அந்த சகோதரனின் தைரியத்தால் ஹுன்டாய் கூட போண்டாவை போனது இறைவன் நாட்டத்தால்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வாழ்வில் முன்னேற தீவிர முயற்சியேதும் செய்யாமல் இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களை காரணம் காட்டி கடைசியில் இறைவனின் "தக்தீர்"(நாட்டத்தின்) மேல் பழிசுமத்தி விட்டு நம்மில் பலர் மேலும் முயற்சிக்காமலேயே மெல்லமெல்லெ மறைந்து கொண்டிருக்கிறோம். இது தான் நம்மக்களின் எதார்த்தமான நிலை. படிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல எழுதிய எனக்கும் சேர்த்துத்தான்.....

"தொட‌ர் ஆர்வ‌மும் தொய்வ‌ற்ற‌ இறைந‌ம்பிக்கையும் ந‌ம்மை ஈருல‌க‌ வாழ்வில் க‌ரைசேர்க்காம‌ல் விட்டு வைக்க‌ப்போவ‌தில்லை".

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வெறும் 1200 சவுதி ரியால் ச‌ம்ப‌ள‌த்தில் வெட்ட‌ வெயில்/குளிரின் நேர‌டிப்பார்வையில் கவரால் எனும் உடல் முழுவதும் அணிந்து கொள்ளும் பணிச்சீருடை அணிந்து வெல்ட‌ராக சைட்டில் வேலைப்பார்த்த‌வனை அலுவலகம் கொண்டு வந்து பணிகள் மெல்ல கற்றுக்கொடுத்து பின் ஒன்ன‌ரை ஆண்டுக‌ளுக்குள் 4000 அமெரிக்க‌ டால‌ர்க‌ள் மாத சம்பளம் வாங்கும் அள‌வுக்கு அவ‌ன் த‌ன் த‌னி ஆர்வ‌த்தில் த‌ன்னை த‌யார்ப்படுத்திக்கொண்டுவிட்டான் என்றால் அவ‌ன் ஆர்வ‌ம்/துணிச்ச‌லை என்னால் இங்கு எளிதில் எடைபோட்டு கூற‌ முடியாது. யாருக்குத்தான் ஆச்ச‌ர்ய‌ம் வ‌ராது?

இன்னொரு ரூம்மேட் (அறை ந‌ண்ப‌ன்) மூல‌ம் ந‌ட‌ந்த‌ ஆச்ச‌ரியத்தை இன்ஷா அல்லாஹ் அடுத்த‌ க‌ட்டுரையில் பார்க்க‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ச‌கோ. யாசிர், இக்க‌ட்டுரையை ப‌டித்த‌தும் என் ச‌வுதி டெலிபோன் நம்பரை ஈமெயிலில் எப்படியோ தேடிக்க‌ண்டுபிடித்து இன்று ம‌தியம் துபையிலிருந்து அழைத்து என்னிடம் பேசிய‌து க‌ண்டு பெருமித‌ம் கொள்கிறேன் அக‌ம் ம‌கிழ்கிறேன். அல்ஹ‌ம்துலில்லாஹ்....

உங்களின் ஆர்வ‌ம் க‌ல‌ந்த உற்சாக‌ வார்த்தைக‌ளால் தான் ப‌ழைய‌ ச‌ர‌க்குக‌ளை உள்ளத்தூசி த‌ட்டி இங்கு என்னால் இய‌ன்ற‌ள‌வு வ‌ழ‌ங்கி வ‌ருகிறேன். உங்க‌ளுக்கெல்லாம் இதை விட‌ சிற‌ப்பான/நேர்த்தியான‌ அனுப‌வ‌ங்க‌ள் நிச்சயம் இருக்கும் அதை இங்கு ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ள் நாமும் தெரிந்து கொள்வோம்.

அதிரை என்.ஷஃபாத் said...

உழைப்பால் உயர்ந்தவர் பற்றிய நல்ல உதாரணம். - ஊக்கமளிக்கும் கட்டுரை இது.

sabeer.abushahruk said...

அனுபவங்களே படிப்பினைகள். நெய்னா தம் அனுபவங்களை இங்கு பகிர்ந்தது ஏனையோருக்குப் படிப்பினை.

நன்றே செய்தீர் நெய்னா.

வாழ்த்துகள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. நெய்னா முஹம்மது.

அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வதால் நல்ல படிப்பினைபெறலாம்.

தொடருங்கள்..

ஹலாலான உண்மை உழைப்பு இம்மையிலும் மறுமையிலும் நன்மை தரும்.

KALAM SHAICK ABDUL KADER said...

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இறைநம்பிக்கை+தன்னம்பிக்கை=வெற்றி

இங்கு பின்னூட்டமிட்டவர்கள் எல்லாரும் (அடியேன் உட்பட) பின்னோக்கி நமது நினைவு நாடாக்களைச் சுழற்றி ஒலி பரப்பினால், ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுபோன்ற அற்புதங்கள் வெளிக்காட்ட இயலும். எனது கணிப்பில் ஷஃபாஅத், சபீர், மு.செ.மு. நெய்னாமுஹம்மத் ஆகியோரின் கடந்த கால வாழ்க்கை மற்றும் நிகழ்கால வாழ்க்கையில் இவர்கள் எட்டிய சிகரம் பற்றி நிரம்ப அனுபவங்களை நம்மிடம் இத்தொடரில் தொடரலாம்; அவர்களிடம் நாம் பெற வேண்டியப் படிப்பினைகள் பல உள. குறிப்பாக சகோ. தாஜூத்தீன் அவர்களிடம் தொடர்ந்து இரு தினங்களாகத் தொலைபேசி உரையாடலில் மனம் நிரம்பி மகிழ்ச்சியும் நிம்மதியும் பொங்கி வரும் வண்ணம் உணர்ந்தேன்; “அக்னிக் குஞ்சு” என்று சபீர் அவர்கள் சொன்னதன் தாத்பரியம் தாஜுத்தின் அவர்களின் பேச்சு மற்றும் கருத்துரைகள் வழியே உணர்கின்றேன்; அவர்களும் அனுபவங்களை எழுதலாம். ஒன்று மட்டும் அடிப்படையானது: வறுமையின் பிடியில் வாழ்ந்து, கஷ்டங்களை அனுபவித்தால் பொறுமை என்னும் படியில் ஏறி உழைப்பு என்னும் “சக்தி”யும் “ஈமான்” என்னும் பக்தியும் ஒன்று சேர்ந்து நம்மை உந்தி அடியெடுத்து வைக்கும்; முந்திச் சென்று சிகரட்தை எட்ட வைக்கும்.

sabeer.abushahruk said...

//ஒன்று மட்டும் அடிப்படையானது: வறுமையின் பிடியில் வாழ்ந்து, கஷ்டங்களை அனுபவித்தால் பொறுமை என்னும் படியில் ஏறி உழைப்பு என்னும் “சக்தி”யும் “ஈமான்” என்னும் பக்தியும் ஒன்று சேர்ந்து நம்மை உந்தி அடியெடுத்து வைக்கும்; முந்திச் சென்று சிகரட்தை எட்ட //

என்னை எழுதச் சொல்லிவிட்டு என்னைப்பற்றி நீங்களே எழுதத் தலைப்பட்ட மாதிரியல்லவா தெரிகிறது.

sabeer.abushahruk said...

நான்
எட்டியிருக்கும் உயரம்
கிட்டுமுன்னர் துயரம்
கஷ்டங்களுக்குப் பகரம்
கிடைத்ததிந்த சிகரம்

தூசுபடிந்த
புகைப்படம் நான்
தூசுதட்டப் புறப்படாதீர்கள்
அவை
உங்கள்
கண்ணீருக்கு
கால்வாய் அமைக்கலாம்.

நடக்காமல் நீளாது பாதை
நாடாமல் வாய்க்காது வாழ்க்கை

முயற்சி திருவினையாக்கும் என சும்மா சொல்லவில்லை, கவியன்பன்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களின் அனுபவங்கள் போல் பலரும் தங்கள் வாழ்வில் கண்டிருக்கலாம். சில அனுவங்கள் ஆச்சர்யத்தை வரவழைக்கக்கூடியது.

/// வாழ்வில் முன்னேற தீவிர முயற்சியேதும் செய்யாமல் இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களை காரணம் காட்டி கடைசியில் இறைவனின் "தக்தீர்"(நாட்டத்தின்) மேல் பழிசுமத்தி விட்டு நம்மில் பலர் மேலும் முயற்சிக்காமலேயே மெல்லமெல்லெ மறைந்து கொண்டிருக்கிறோம். இது தான் நம்மக்களின் எதார்த்தமான நிலை. படிக்கும் உங்களுக்கு மட்டுமல்ல எழுதிய எனக்கும் சேர்த்துத்தான்..... ///


சகோதரரே : இதுதான் 100 சதவீதம் அனைவரின் வாழ்வில் நடக்கும் உண்மை.

/// "தொட‌ர் ஆர்வ‌மும் தொய்வ‌ற்ற‌ இறைந‌ம்பிக்கையும் ந‌ம்மை ஈருல‌க‌ வாழ்வில் க‌ரைசேர்க்காம‌ல் விட்டு வைக்க‌ப்போவ‌தில்லை". ///


இம்மையிலும் மறுமையிலும் நாம் அனைவரும் வெற்றியடைய வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் நண்பர்களே!

மு.சே.மு. அவர்கள் தொடக்கமாக எனது கட்டுரையை தொட்டு பின் தந்த விபரங்களால் எல்லோர் உள்ளத்தையும் தொட்டுவிட்டார்கள்.
தம்பி சபீரின் கவிதை வரிகள் கண்களை பனிக்க செய்துவிட்டன.
//தூசுபடிந்த
புகைப்படம் நான்
தூசுதட்டப் புறப்படாதீர்கள்
அவை
உங்கள்
கண்ணீருக்கு
கால்வாய் அமைக்கலாம். //

எல்லோர் வாழ்விலும் தூசுகள் உண்டு- துயரங்கள் உண்டு.

தென்றலை மட்டும் தீண்டுவதுதான் உலகுக்கு தெரியும். தீயை தாண்டியது தெரியாது.

ஒவ்வொரு மனிதனின் உதடுகளின் சிரிப்புக்கு பின்னும் இரு கண்கள் ஏற்கனவே அழுதே இருக்கும்.
ஒரு நெற்றி வியர்வை வடித்தே இருக்கும். ஒரு முதுகு பாரம் சுமந்தே இருக்கும். இரு கைகள் உழைத்தே இருக்கும்.

இப்போது தந்த சரித்திரக்குறிஈடுகள் போல் இன்னும் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். எதிர்பார்க்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் தயாராகிக்கொண்டிருக்கிற இன்னொரு ஆக்கத்தோடு விரைவில் சந்திப்போம்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி.

KALAM SHAICK ABDUL KADER said...

Every successfull person has a painfull story
Every painfull story has a successfull ending

Accept the pain
&
get ready to gain...

Anonymous said...

1. ஆழ்மனத் துள்ளேயே ஆழமாய் எண்ணமதை
பாழின்றி வைத்துப் பழகு. .

2. அடுத்தவ ரெண்ண மழகெனப் பட்டு
கடுத்தலின்றிப் பேசுதல் நன்று.

3. உதவிட்ட நல்லவ ருள்ள மகிழ
உதவிகள் செய்து விடல்.

4. எறும்பினை போலவே என்றுமுன் வாழ்வில்
சுறுசுறுப்பை காணல் சிறப்பு.

5. உற்சாக மென்னு முயிரணுக்க ளுள்ளத்தில்
நிற்காம லோடட்டும் நாள்.

6. மகிழ்ச்சியை காட்டி மகிழ்ச்சியை யூட்டி
மகிழ்ச்சியை கண்ணாலே காண்.

7. நல்ல எதிர்பார்ப்பு நம்மில் வளர்ப்பதுவே
வல்லவனாய் மாற்றும் வழி.

8. நம்பிக்கை ஒன்றே நமக்குள்ள மூன்றாம்கை;
நம்பி யிறங்கு களம்.

9. வேட்கை யுணர்வுகள் வேகமாய்ப் பீறிடும்
யாக்கைதான் வேண்டுமே ஈண்டு.

10. வாய்மட் டுமன்று வசீகரக் கண்களும்
நோய்விட் டகலச் சிரிப்பு.

11. உள்ளத் தினுள்ளே உருவானப் புன்னகை
கள்ளமின்றிக் காட்டு மிதழ்.

12. உன்னையே உள்நோக்கி உன்னையே நீகண்டால்
உன்னையே மாற்றும் மனம்.

13. உன்வாழ்வு உன்றன் உளப்பூர்வ எண்ணமெனில்
உன்வாழ்வே நீயே உணர்.

14. அடாதிழப்பு வந்தாலும் அங்கேயே நிற்காமல்
விடாதுழைப்பு செய்து விடல்.

15. எவரின் உதவியும் எப்போதும் வேண்டும்
எவருடனும் நட்புடனே பேசு.

16. மற்றவரின் ஆசை கவனம் மகிழ்ச்சி
பற்றியே பற்றுடன் கேள்


17. குற்றங்களை ஏற்கும் குணம்தான் பிறரிடம்
பற்று வளர்த்திடும் பண்பு

18. சரளமாய்ப் பேசிடும் சங்கீதம் போல
கரவோசை காணும் இசை.

19. மனச்சுமை போக்க மனம்விட்டு பேச
தினம்சுரக்கும் புத்துணர்வு பார்.

20. உரையா டலில்கண்ணை உற்றுநீ பார்த்தால்
திரையில்லா அன்பே தெரிவு

21. எண்ணித் துணிந்தால் எவரும் வியந்திடும்
வண்ணம் செயலும் நிகழ்வு.

22. சிரித்த முகமே சிறந்த முகமாம்
விரிந்த மலரின் மணம்.

23. ஆபத்தை நோக்கி ஆர்வமாய்ப் போற்று
கோபத்தை விலக்கி விடல்.

24. தீர்வுகள் காணத் தெரியும் புதியவைகள்
ஆர்வமுடன் செய்யப் பழகு.

25. மனமும் செயலும் மொழியும் கலந்த
தினப்பயிற்சி என்றும் சிறப்பு.

26. "உன்னால் முடியும்" உளமதில் சொல்லிவை
பின்னால் தெரியும் விளைவு.

27. உன்னை விடவும் உலகில் நலிந்தவரை
தன்னுயிராய்க் காத்தல் நலம்.

28. எல்லா உலகும் இயக்கும் இறையிடம்
எல்லாமும் விட்டு விடு.

29. வெற்றி கனியினை வெல்லும் வரையிலே
பற்றிய பாதையில் செல்.

30. எல்லா செயல்களும் ஏற்கப் படவேண்டி
நல்லெண்ண உள்ளமே கொள்.

31. இறந்தகாலம் விட்டு இனிவரும் காலம்
மறந்து நினைக்கவே இன்று.

32. இன்பமும் துன்பமும் இங்கொன் றெனயெண்ணி
அன்பினைப் பற்றியே வாழ்.

33. கட்டுப்பாடு கண்ணியம் கட்டுடல் காட்டுமே
விட்டு விடாது ஒழுகு.

34. தேடலொன்றே வாழ்வினை தேடிடும் காரணம்
ஓடவோடத் தேடி உழை.

35. வாழ்க்கை புயலை வரவேற்றுக் கொண்டால்
வாழ்க்கைப் பழகிடும் பார்.

36. சிடுசிடுப்பு கோபம் சிதைத்திடும் உன்னை
அடுத்தடுத் தென்றும் அழிவு

37. ஆசை வளர்த்திடு ஆங்கே முயற்சியின்
ஓசை விளையும் உளம்.

38. நன்றி மறவாமை நன்றெனக் கொண்டாலே
என்றும் வருமாம் உதவி.

39. பாரமாய் வாழ்வை பயத்துடன் பார்த்தால்
தூரமாய் நிற்கு முலகு.

40. எண்ண மெதுவோ இயக்கமு மதுவேயாம்
திண்ணம் உளவியல் சொல்\

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு