வயசு வந்து போச்சு
மனசு நொந்து போச்சு
ஆண்டுகள் பெருகிப் போச்சு
ஆயுளும் அருகிப் போச்சு
உணர்வுகள் கருகிப் போச்சு
கண்களும் அருவியாச்சு
வரன் பிச்சைக்காரர்களால்
சவரன் இச்சைக்காரர்களால்
முதிர்க்ன்னி நிலையில்
வாழ்ந்தோம்
புதிர்ப்பின்னிய வலையில்
வீழ்ந்தோம்
நரையும் வந்தாச்சு
வாழ்க்கை நாடகத்
திரையும் விழுந்தாச்சு
அலை ஓய்வது எப்போது?
நிலை மாறுவது எப்போது?
சாதியும் சவரனும்
பிரதிவாதி ஆன போது
நீதியும் கிடைப்பது எப்போது?
நாதியற்றோரைக் காணாத போது !
விடையறியா வினாவாக
நடைபெறா கனாவாக
விடியலறியா இரவாக
மடைதிறக்கா அணையாக.
தடைபட்டே அணைகின்றது
உணர்வுகளின் வெப்பம்
உருவாக்குமோ தப்பும்?
உன்னுடைய சுகத்துக்கு
பெண்ணிடம் பிச்சைக் கேட்கும்
உன்னுடைய ஆண்மைக்கு
என்ன பெயர் உலகம் வைக்கும்?
ஏக்கப் பெருமூச்சின்
தாக்கங்களே உங்களைத்
தாக்குகின்றன
சுனாமி, பூகம்பங்களாய்
இன்னுமேன் உணரவில்லை
பினாமி பூதங்களே
முதியோர் இல்லங்கட்கு
மூடுவிழா நடாத்த
புதியதோர் உலகம் காண
புறப்பட்ட கவிஞர்காள்!
முதிர்கன்னிகளின் இல்லங்கள்
புதியதாய் முளைப்பதை
பதிவு செய்யுங்கள்
மேற்காணுப்வைகள் புதுக்கவிதை வாசகர்க்ட்காக
கீழ்க்காணுப்வைகள் மரபுப்பா நேசகர்கட்காக
உண்ண வுணவு முடுத்த
உடையு மிருக்க வீடும்
திண்ண மாய்நீ தராமல் போனால்
திறமை மிக்க ஆணாய்
மண்ணில் வாழ்தல் வீணாய்
மதிப்பி ழந்து போவாய்
எண்ணி வரனைப் பேசு
என்றன் வயதுப் போச்சு
குறிப்பு: சீர்கள் கொடுக்க இயலாததால் வருத்தம்- அதனால்
ஆறு மாச்சீர்கள் கொண்ட ஆசிரிய விருத்தம்
- “கவியன்பன்” கலாம்
26 Responses So Far:
கவியன்பனின் கதிர்வீசும் எழுத்தில் முதிர்கன்னிகள்
முனகுவதாக அல்ல முழங்குவதாகவேக் காண்கிறேன்.
இதோ மற்றுமொறு அடி! இவ்வாறாக அடிமேல் அடி அடித்தால் விடியாதா வாழ்க்கை?
சமுதாயச் சீரழிவின் ஓர் அங்கமான முதிர்கன்னிகள் குறித்த உங்கள் கவலைக்கு நன்றி!
வாழ்த்துகள்!
அ.நி.-ன் புகைப்படத் தெரிவு, ஆக்கத்திற்கு வலுவூட்டுகிறது, வாழ்த்துகள்!
ஸ்தானம் தவறிய கூட்டல்!
இயலாமை
இளமையைத் தின்று
இருந்து எழுந்த
இடமெல்லாம்
ஏக்கம் தேங்க...
மனசும் உடலும்
முயன்ற
பரஸ்பர ஆறுதல்
விரக்தியில்
தோற்க...
சுவாசக்காற்றை
வேகவைத்தத்
தனிமை
கரியமில வாயுவில்
பெருமூச்சாய் வெடிக்க...
பத்திரிகையின்
காதல் கதைகளில்
பரவசம் கண்டு...
பருவம் முடியும்
தருவாயிலும்
வருவானென
மயக்க விளிம்பில்
முதிர்கன்னிகளும்...
ஆங்காங்கே
அவல முடிச்சுகளில்
செல்வக் கொழுப்பில்
ஏழை இளஞிகளை
மணந்த களிப்பில்
முதியவர்களும்...
ஒன்று ஒன்றோடும்
பத்து பத்தோடும்
நூறு நூறோடும்
எனவல்லாது-
இலக்க ஸ்தானம்
மாறிய கூட்டலும்
இலக்கண சாஸனம்
மறுவிய கூடலும்
எப்படி கணக்கிட்டாலும்...
இடறும் விடை
முடங்கும் விடியல்!
-சபீர்
//முதியோர் இல்லங்கட்கு
மூடுவிழா நடாத்த
புதியதோர் உலகம் காண
புறப்பட்ட கவிஞர்காள்!
முதிர்கன்னிகளின் இல்லங்கள்
புதியதாய் முளைப்பதை
பதிவு செய்யுங்கள்//
சமீபத்தில் சமுதாய அவலங்களை MSM(n) எழுதிய ஆக்கத்தின் தாக்கமும், அதைத் தொடர்ந்து அசத்தல் காக்கா அவர்கள் தனி மின்னஞ்சலில் எடுத்து வைத்த..
1. அதிராம்பட்டினத்தில் எது எது அவலம் என நினைக்கிறீர்களோ அதை " அதிரையின் அவலங்கள்" எனும் தலைப்பில விழிப்புணர்வு என்ற வில்லெடுத்து எழுதலாம்.
[உதாரணம் : ஊர் சுகாதாரம் , ஆண் / பெண்களுக்கு நடக்கும் அநீதி, பெரியவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத சமுதாயம்] மற்றம் நாடி எழுதினால் வாசிக்கும் சகோதரர்களால் உளப்பூர்வமான மாற்றங்களை உணர்ந்திட முடியும்.
//கதிர்வீசும் எழுத்தில் முதிர்கன்னிகள்
முனகுவதாக அல்ல முழங்குவதாகவே// அதே அதே !
அஸ்ஸலாமு அலைக்கும். நான் முன்பு எழுதியது,
திருமணம் நிச்சயப்படுவது சுவர்கத்தில் என ஒரு சொல் வழகுண்டு ஆனாலு வரன்கள் நிற்னயிக்கப்படுவது சவரன்களால். கலாம் காக்காவின் கவிவரிகள் முதிர்கண்ணிகளின் பெரும்மூச்சுமட்டுமல்ல, மலட்டு சமுதாயம் , கிழட்டு சமுதாயம் இப்படி சீர் கெட்ட சமுதாயம் இளம் கன்னியரை திருமணம் செய்து சீரழிக்கும் அவலத்தையும் என்னி பார்க்க தூண்டுகிறது அதற்கு கவிசக்கரவர்த்தி சகோ. சபிர் அவர்களின் கவிதையும் பறைசாற்று கின்றது.
உணர்வுகளின் வெப்பம்
உருவாக்குமோ தப்பும்?
உன்னுடைய சுகத்துக்கு
பெண்ணிடம் பிச்சைக் கேட்கும்
உன்னுடைய ஆண்மைக்கு
என்ன பெயர் உலகம் வைக்கும்?
--------------------------------------------------
இன்சா அல்லாஹ் சகோதரிகள் வாழ்கை தப்பனும், இப்படி கேட்கும் பிச்சைகாரர்களின் பெயர் ஆண்விபச்சாரன்.
//இலக்க ஸ்தானம்
மாறிய கூட்டலும்
இலக்கண சாஸனம்
மறுவிய கூடலும்
எப்படி கணக்கிட்டாலும்...
இடறும் விடை
முடங்கும் விடியல்!//
கவிக் காகாவின் - சுள்ளென்ற ஊசி !
குவைத் தமிழ் இஸ்லாமிக் கமிட்டி ( என்ற குழுவிலிருந்து மேற்கண்ட என் கவிதையினைப் பாராட்டி எழுதிய கருத்துரை உங்களின் மேலானப் பார்வைக்கு
Re: [K-Tic] வயசு வந்து போச்சுThursday, November 24, 2011 8:34 AM
From: "Zafrullah Rahmani" Add sender to Contacts
To: "K-Tic-group-owner@yahoogroups.com"
Cc: "k-tic-group@yahoogroups.com"
வஅலைகுமுஸ்ஸலாம்
இந்த கவிதை படித்த பின்னும் எவனாவது
வரதட்சணை,கைக்கூலி கேட்டால் அவனை கட்டி வைத்து உதையுங்கள்.
இந்த கவிதையை ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனையும் வாசிக்க தாருங்கள்
Your's
Zafrullah Rahmani
k
//சுவாசக்காற்றை
வேகவைத்தத்
தனிமை
கரியமில வாயுவில்
பெருமூச்சாய் வெடிக்க..//.
//இலக்க ஸ்தானம்
மாறிய கூட்டலும்
இலக்கண சாஸனம்
மறுவிய கூடலும்
எப்படி கணக்கிட்டாலும்...
இடறும் விடை
முடங்கும் விடியல்!/
பெண்மையின் மென்மை பூவானாலும்
உண்மையில் சுழற்றும் புயலெனவும்
உணர்வுகளின் இலக்கணம் படிக்காதவன்
பிணந்தின்னும் மிருகமே எனவும்
கவிவேந்தர் சபீர் கவிதை வரிகள்
செவியில் சூடேற்ற செய்தனவே
என்னைப் போல் ஒருவன் என்று எப்பொழுதும் நான் கணித்தது சரியாகவே அமைந்தது என்பதை உறுதி செய்யும் வண்ணம் எனது எண்ணம், எழுத்து ஒன்றிய வண்ணம் கலிஃபோர்னியா கவிஞர் கிரீடம் அவர்கள் கருத்தும் அமைந்து விட்டது.
இரண்டாம் முறையாக எனது கவிதை அ.நி. வாசலில் தோரணம்:
இதற்கெல்லாம் முழுமுதற் காரணம்,
நெறியான வாழ்வின் இலக்கணம், நெறியாளர் அபூ இப்றாஹிம் அவர்கட்கு
எனது நெஞ்சம் படர்ந்த நன்றி:ஜஸாக்கல்லாஹ் கைரன்
//முதியோர் இல்லங்கட்கு
மூடுவிழா நடத்த
புதியதோர் உலகம் காண
புறப்பட்ட கவிஞர்கள்!
முதிர்கன்னிகளின் இல்லங்கள்
புதியதாய் முளைப்பதை
பதிவு செய்யுங்கள்// K.காக்காவின் கருத்தாழமிக்க கட்டளை வரிகள்.
//இலக்க ஸ்தானம்
மாறிய கூட்டலும்
இலக்கண சாஸனம்
மருவிய கூடலும்
எப்படி கணக்கிட்டாலும்...
இடரும் விடை
முடங்கும் விடியல்!// S.காக்காவின் மிகச்சரியான கணக்கீட்டு வரிகள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
கவியன்பர் கலாம் காக்காவின் ஆழமான அனைத்து வரிகளும் மனதில் ஆழமாக தூர் வாருகின்றன.
// உண்ண வுணவு முடுத்த
உடையு மிருக்க வீடும்
திண்ண மாய்நீ தராமல் போனால்
திறமை மிக்க ஆணாய்
மண்ணில் வாழ்தல் வீணாய்
மதிப்பி ழந்து போவாய்
எண்ணி வரனைப் பேசு
என்றன் வயதுப் போச்சு //
உண்ண உணவும்,உடத்த உடையும் கொடுக்கும் ஆணுக்கு.
குடியிருக்க முழுதாய் வீடு தரும் பெண்ணின் பெயர் சொல்லும் நம் மண்ணில்
மதிப்பிழந்து போகிறோமே வீரனாய் திகழும் ஆண்கள் வீணாய்
இதற்க்கு உறுதியாக சாட்ச்சிகள் சொல்லும் நம் வயசு
திண்ணமாக உணர்ந்து இந்நிலையை மாற்றிடுமா நம் மனசு ?
வயசு வந்து போச்சு
மனசு நொந்து போச்சு
ஆண்டுகள் பெருகிப் போச்சு
ஆயுளும் அருகிப் போச்சு
உணர்வுகள் கருகிப் போச்சு
கண்களும் அருவியாச்சு
வரன் பிச்சைக்காரர்களால்
சவரன் இச்சைக்காரர்களால்
முதிர்க்ன்னி நிலையில்
வாழ்ந்தோம்
புதிர்ப்பின்னிய வலையில்
வீழ்ந்தோம்
-----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அருவியாய் விழும் வார்த்தை!. கவிதையாய் எழும் வார்த்தை!. முதிர் கன்னியர் நிலை சொல்லும் நியாயவான்கள் மனதை தொடும்!. அனியாயவாங்கள் இதயம் சுடும்!.
நரையும் வந்தாச்சு
வாழ்க்கை நாடகத்
திரையும் விழுந்தாச்சு
அலை ஓய்வது எப்போது?
நிலை மாறுவது எப்போது?
-----------------------------------------
மனதில் அலையும் ஆதாங்க அலை ஓய்வது எப்பொது? கல்யான வயதை தான்டிவிட்டு வயதாகிவிட்டோம். எவராவது வருவர் என காத்திருந்ததும் கணவாகி போனது! கணவனாகி போக ஒருத்தனுன் இனி இல்லை! வாழ்கை நாடகத்தில் பருவமங்கை பாத்திரம் தாங்கிய காலம் ஓடி விட்டது இன்னும் மனதில் ஏன் இந்த வேதனை அலை? என்று தீரும் இந்த நிலை? விலைபோக வில்லை! விலை கேட்கவில்லை! விலை கொடுக்க இருந்தும் விபரீதம் விலையெடுக்க ஒருத்தனும் வரவில்லை.
சாதியும் சவரனும்
பிரதிவாதி ஆன போது
நீதியும் கிடைப்பது எப்போது?
நாதியற்றோரைக் காணாத போது !
விடையறியா வினாவாக
நடைபெறா கனாவாக
விடியலறியா இரவாக
மடைதிறக்கா அணையாக.
தடைபட்டே அணைகின்றது
உணர்வுகளின் வெப்பம்
உருவாக்குமோ தப்பும்?
உன்னுடைய சுகத்துக்கு
பெண்ணிடம் பிச்சைக் கேட்கும்
உன்னுடைய ஆண்மைக்கு
என்ன பெயர் உலகம் வைக்கும்?
ஏக்கப் பெருமூச்சின்
தாக்கங்களே உங்களைத்
தாக்குகின்றன
சுனாமி, பூகம்பங்களாய்
இன்னுமேன் உணரவில்லை
பினாமி பூதங்களே
-----------------------------------------------------------------
பாவேந்தன் பாரதிதாசன் பாதிப்பு இந்த வார்தை வார்ப்பு! ஈர்ப்பு! எதிர்ப்பு!எதிர் பார்ப்பு! எதிர்பார்க்கும் தீர்ப்பு!பாடாதேனிக்கள் உண்டா? என கேட்டார் பாவேந்தர், இங்கே நம் கவிவேந்தர் கேட்கிறார்!
ஏக்கப் பெருமூச்சின்
தாக்கங்களே உங்களைத்
தாக்குகின்றன
சுனாமி, பூகம்பங்களாய்
இன்னுமேன் உணரவில்லை
பினாமி பூதங்களே!
விடை எழுத வாருங்கள்முதிர் கன்னி தடை நீக்கி போங்கள்.
முதியோர் இல்லங்கட்கு
மூடுவிழா நடாத்த
புதியதோர் உலகம் காண
புறப்பட்ட கவிஞர்காள்!
முதிர்கன்னிகளின் இல்லங்கள்
புதியதாய் முளைப்பதை
பதிவு செய்யுங்கள்
------------------------------------------------
ஆற்றமை, வேதனையின் வெளிப்பாடு இந்த பதிவு! விழிக்கட்டும் சமூதாயம் , நிம்மதியாய் உறங்கட்டும் ஏழை குமர(ர்)ர்களின் பெற்றோர்கள். வீசட்டும் அமைதி காற்று! தழுவட்டும் சாந்தி நம் சமூகத்தில். அல்லாஹ் அருள் புரியட்டும்.
கலாம் காதிர் சொன்னது…
என்னைப் போல் ஒருவன் என்று எப்பொழுதும் நான் கணித்தது சரியாகவே அமைந்தது என்பதை உறுதி செய்யும் வண்ணம் எனது எண்ணம், எழுத்து ஒன்றிய வண்ணம் கலிஃபோர்னியா கவிஞர் கிரீடம் அவர்கள் கருத்தும் அமைந்து விட்டது.
------------------------------------------------------------
நீங்கள் ,சபீர்காக்கா போன்றவர்களின் பெருந்தன்மை ! இந்த சாதாரன வாசகனை கவிஞன் என அழைப்பது. நீங்கள் உங்களை போல என அழைபதற்கு பெருந்தன்மையும், தைரியமும் வேண்டும். உங்களை என் உயரத்துக்கு தாழ்த்திக்கொள்ள
அதிரைநிருபரில் - தினமும் மார்க்க சொற்பொழிவு நேரலை நிகழ்வில்..
இன்றைய தலைப்பு: சீதனத்தின் எதார்த்த நிலை - ஓர் அலசல்
மௌலவி S.M. அப்துல் ஹமீத் அவர்கள் மற்றும் M.I. அன்சார் அவர்கள்
நம் சமுதாய அவலங்களை அலசும் முக்கியமான கலந்துரையாடலுடன் கூடிய உரை
அனைவரும் கேட்கவேண்டிய சொற்பொழிவு
இந்திய நேரம்: இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை
கவியன்பனிடம் இருந்து வந்திருப்பது எழுத்துக்களா ? அல்லது அணுகுண்டு வெடிப்பின் போது உண்டாகி எதிர்பட்டதையெல்லாம் எரித்து தள்ளும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளா ?? ...மு(தீ)ர் கன்னி கண்ணீர் உங்கள் மூலமாக வந்து அழிக்ககட்டும் கையாகலாத கயவர்களை..திருந்தட்டும் இனிமேலாவது
//முதிர்கன்னிகளின் இல்லங்கள்
புதியதாய் முளைப்பதை
பதிவு செய்யுங்கள்// aameen !!!
ஊருக்கு என்ன செய்யலாம் என்றெண்ணியிருந்த எனக்கு
எண்ணற்ற பல எழுத்தின் மூலம் செய்யலாம் என சொல்லும் கவியன்பன் கலாம்.
உங்கள் வரிகள் படிக்கும் கண்களுக்கு கதகதப்பளிக்கும் ஓர் நல்ல போர்வை. நம்முள் நடமாடும் கயவர்களுக்கு ஒரு நல்ல சாட்டையடி.
இஸ்லாமிய பெயர் தாங்கிய திருந்தாத ஜென்மங்கள் முற்றிலும் இல்லாமல் போகும் காலம் விரைந்தே வந்திடட்டும். சன்மார்க்கம் நறுமணத்தை நாலாப்புறமும் பரப்பிடட்டும்.
முதிர்கன்னிகளெல்லாம் நம்மூரில் முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம். அவர்களுக்கென தனி இல்லங்கள் நம்மூரில் வர வாய்ப்பில்லை. திருமணம் முடிந்து வருடங்கள் சில(அ)பல கடந்து அந்த பெண்களே தன்னை ஈன்றெடுத்த பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் வில்லியாக உருமாறி வருவதை நம்மூரில் பரவலாக காணலாம்.
அறியாமை(அய்யாமுல் ஜாஹிலிய்யா)காலத்தில் மக்காவாசிகளால் அன்று வெட்டிக்கொல்லப்பட்ட சாலிஹான எத்தனையோ நல்ல பெண்குழந்தைகளுக்கு பதிலாக இக்கால நவீன வில்லிகள் வெட்டிப்புதைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அநீதி கண்டு வெகுண்டெழும் அனைவரும் வெறிபிடித்தவர்களாக அநீதியாளர்களால் சித்தரிக்கப்படுகிறார்கள் அவர்கள் நம்முள்ளும் இருக்கிறார்கள் அவர்கள் சீரழிந்து சின்னாபின்னமாகப்போகும் அந்த நாளை மறந்தவர்களாக.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
"கேரளாவில் முஜாஹிதுகள் என்று சொல்லப்படும் தவ்ஹீதுவாதிகள் இப்பொழுது இரண்டாம் திருமணம் செய்வதை அதிகமாக நடைமுறைப்படுத்தி இருப்பதால், வரதட்சணை கேட்கும் மணாளர்களின் வாயிலே மண்", என்று என் கேரள நண்பர் சொன்னார்.
கவிதை மணலில்
விதைத்த இக்கரு
பூவாய் மலராமல்
புரட்சியாய் வளர்வதும்;
என்றன் முயற்சியால்
எங்கோ ஒரு மூலையில்
இருக்கின்றவர் மூளையில்
கருவாய் சமுதாயக்
கவலை வந்து விட்டது
இவ்வலையில் யான் பெற்ற
பலனென்பேனா;
பலமாய் எழுதும் இனியும்
என்பேனா...
கவி அன்பன் கலாம் அவர்கள் கையெழுத்து போட்டாலும் கவிதைத்தனமாக இருக்குமோ!
வ அலைக்கும் சலாம், லெ.மு.செ. அபூபக்கர் தம்பி.
உங்களின் நிதர்சனமான விமர்சனம் கூட அழகுத்தமிழ் நாரில் கோர்த்த அருமை கவிமாலையாய்க் காண்கின்றேன்.
கவிவேந்தர் சபீர் அன்று AAMF கூட்டத்தில் என் தொடையில் தட்டி விட்டுப் போனதன் பின்னர் தானே, அவரின் கரங்களில் பாயும் மின்காந்தக் கவிதை சக்தி எனக்குள்ளும் பாய்ந்தது;மரபை மடியில் கட்டிக் கொண்டிருந்த மனப்போக்கு ஒய்ந்தது;புரட்சிப்பூக்களாம் புதுக்கவிதைகளை விதைக்க விதைக்க உங்கள் எல்லாரின் ஊக்கமென்னும் நீர் வரத்தும் கிட்டியது;அ.நி மற்றும் சத்திய மார்க்கம் வரவேற்பரைக்குள் எட்டியது.
அல்ஹம்துலில்லாஹ்
ஜஸாக்கல்லாஹ் கைரன்
அஸ்ஸலாமு அழைக்கும்
அலாவுதீன் காக்கா நலமா எங்கே கொஞ்சநாளா உங்களை காணோம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
கவியன்பர் கலாம் காக்கா சொன்னது:
// உங்களின் நிதர்சனமான விமர்சனம் கூட அழகுத்தமிழ் நாரில் கோர்த்த அருமை கவிமாலையாய்க் காண்கின்றேன்./
இத்து போன நார்களில் பூக்கள் கோர்த்தால் பூக்களில் நற்மனங்கள் நார்களில் கமழ்வது போல்.
கவிக்காவின் கவிதைக்கு என் கிறுக்கலான கருத்து கூட கவிமாலையாய் போனதோ?
Post a Comment