அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
version : 6
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
‘‘ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான் ’’ என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி)( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39 )
‘‘உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும் ’’ என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள்(புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்:40 )
‘‘அல்லாஹ், தன் அடியானுக்கு நல்லதை நாடிவிட்டால், அவனுக்கு உலகத்திலேயே தண்டனையை தீவிரமாக்குவான். அல்லாஹ் தன் அடியானுக்கு தீமை செய்ய நாடிவிட்டால் அவனது குற்றம் காரணமாக அவனை விட்டும் (சோதனையைத்) தடுப்பான், இறுதியில் மறுமை நாளில் அவனுக்கு அதை நிறைவேற்றுவான் ’’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.
‘‘கூலியில் மகத்தானது, கடும் சோதனையுடன் உள்ளதாகும். நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். ஒருவன் அதில் திருப்தி அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) திருப்தி உண்டு. மேலும் ஒருவன் கோபம் அடைந்தால், அவனுக்கு (அல்லாஹ்வின்) கோபம் உண்டு’’ என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 43 )
'மல்யுத்தம் புரிவதால் '''வீரன்' என்பதில்லை. கோபம் ஏற்படும் சமயம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 45)
'நபி(ஸல்) அவர்களுடன் நான் உட்கார்ந்திருந்தேன்.இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்திருந்தது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ''ஒரு சொல்லை நான் அறிவேன். அதை அவன் கூறினால், அவனிடம் ஏற்பட்டுள்ள (கோபம்) அவனை விட்டும் போய்விடும். (அதாவது) ''அஊதுபில்லாஹி மினஷ்ஷய்தானிர் ரஜீம்'' (வெறுக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறினால், அவன் அடைந்தது(கோபம்) போய் விடும்'' என்று கூறினார்கள். உடனே நபித்தோழர், கோபப்பட்டவரிடம் சென்று, ''ஷைத்தானை விட்டும் பாதுகாப்பை அல்லாஹ்விடம் நீ தேடவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் '' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுலைமான் இப்னு சுரத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 46)
'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்று கேட்டார். 'கோபம் கொள்ளாதே என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் மீண்டும் மீண்டும் கேட்டார். கோபம் கொள்ளாதே' என்றே நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 48)
'ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும். இறுதியாக அவர் (சோதனை மூலம் மன்னிப்பு ஏற்பட்டதால்) குற்றம் ஏதுமின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 49)
"எனக்குப்பின் உரிமை பறித்தலும், நீங்கள் வெறுக்கும் காரியங்களும் உருவாகும்" என நபி(ஸல்) கூறினார்கள். "இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (இது விசயமாக) நீங்கள் இடும் கட்டளை என்ன?" என்று நபி தோழர்கள் கேட்டனர், உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு தேவையானதை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி)அவர்கள்(புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 51)
"ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
- S.அலாவுதீன்
19 Responses So Far:
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !
அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு !
அடுத்து அன்பான வேண்டுகோள் இனி தொடரனும் தொய்வின்றி இன்ஷா அல்லாஹ் !
அதற்கடுத்து காத்திருக்கோம் சகோதரி தொடருக்காவும் இன்ஷா அல்லாஹ்! :)
நல் உபதேசங்களுக்கு நன்றி, அலாவுதீன்.
ஜஸாக்கல்லாஹு ஹைரா.
அஸ்ஸலாமு அழைக்கும்
எங்கே அலாவுதீன் காகா உங்கனை கானது மணம் அமைதியற்ற நிலையில் இருந்தது உங்கள் ஆக்கம் வந்ததும் மணம் அமைதி அடைந்தது
வாங்க காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்,
ரொம்ப நாளைக்குப்பின் வைத்தியம்.ஜஸாக்கல்லாஹ்.
அப்பப்ப மருந்தும் தாருங்கள்.
ரொம்ப நாள் பத்தியமாக்கி விடாதீர்கள்.
Welcome Alaudeen
Assalaamu alaikum.
Dear Alaudeen kaka,
Thank you very much for your timely article after long intermission with precious wordings extracted from the Hadees which we need often to refresh our mind and think about the hereafter things.
No book in the world can defeat the single word of our holy Qur'an & it's hadees.
Whenever we read them all we feel the mind calm and remedy from all diseases mentally and physically. This is the real devine words to the whole mankind blessed freely by the grace of Allah.
Kaka, please keep posting this kind of article with Qur'an & Hadees frequently in order to keep calm our mind with contentment whatever we have in our possession gifted by the almighty Allah.
Thanks again and may Allah's all blesses be upon all of us. Aameen.
MSM Naina Mohamed.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அமைதியற்ற உள்ளத்திற்கு அ.நி.ரில் தொடர்ந்து மருந்துகள் கிடைக்காமல் தவித்தோம்.தட்டுபாடு இல்லாமல் மருந்துகள் தருமாறு அலாவுதீன் காக்காவை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.தாங்கள் தந்திருக்கும் பத்து மருந்துகளும் தவறாமல் உண்ணக் கூடியவை. வாழ்த்துக்கள்.
//Whenever we read them all we feel the mind calm and remedy from all diseases mentally and physically. This is the real devine words to the whole mankind blessed freely by the grace of Allah.//
-----------------------------
Absolutely..........
Real Divine Words.
Assalaamu alaikum.
Dear Abdul Rahman,
How are you and your family doing in California? Hope, this post finds you safe and sound by the grace of almighty Allah. My warm salaam and best queries to all of you. Convey this to them.
Thanks to correct my spelling mistake from devine to divine.
ஓட்டப்பள்ளிக்கூடத்தில் (வாய்க்கால் தெரு ஊ.ஓ.தொ.பள்ளி) படித்திருந்தாலும் எம்மை இந்தளவுக்கு ஆங்கிலம் எழுத வைத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
வ அலைக்கு முஸ்ஸலாம் நெய்னா,
அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் அனைவரும் நலம் .அவர்களின் சலாம் உனக்கும் .
உன்னுடைய பதிவுகள் அனைத்தும் வீட்டில் படிக்க தவறுவதில்லை :).
அ.நி கட்டுரைகள் தான் இங்கு வீட்டில் உள்ளவர்களுக்கு பள்ளிக்கூடம் மாதிரி .
இப்ப கூடே அலாவுதீன் காக்காவின் இந்த அருமருந்தான கட்டுரையை படித்து
காண்பித்து ,காக்கவுடைய பழைய கடன் வாங்கலாம் வாங்க பகுதி அறிமுகம் .
உன் (என்) ராத்தவுக்கு சலாமும் துவாவும்......
Assalaamu alaikum.
My dear Abdul Rahman,
Wa alaikum mussalaam for yours salaam. Alhamdulillah, I am very happy to hear this from you that you all are reading our articles published at AN without any fail. Whenever i read your poem, indeed something is taking my mind to somewhere where i can see our ancients whoever lived in this world B.C. (Jesus is a prophet of Islam).
We Both have a deep relation in one thing that I am a brotherless person. You are a sisterless person. That's the reason we both are loving and sharing our good thoughts each other without any hindrances. Insha-allah, sure I'LL convey your salaam to my raathaa.
தொலைதூரங்கள் நம் தூய பாச/நேசப்பிணைப்பை தொலைத்து விட வேண்டாம் இக்கண்ணிருக்கும் வரை மண்ணிலிருக்கும் வரை.
Keep in touch whenever you get free and take care of your whole family health.
Wassalaam.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான அலாவுதீன் காக்கா,
அருமையான அமைதி தரும் மருந்து தந்துள்ளீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ்...
தொடருங்கள் உங்கள் பணியை..
அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
வாங்க காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்,
ரொம்ப நாளைக்குப்பின் வைத்தியம்.ஜஸாக்கல்லாஹ்.
அப்பப்ப மருந்தும் தாருங்கள்.
ரொம்ப நாள் பத்தியமாக்கி விடாதீர்கள்.
***************************************
அன்புச் சகோதரர் ஜஹபர் சாதிக்கிற்கு வஅலைக்கும் ஸலாம்(வரஹ்)
தங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து மருந்துகள் வெளிவரும். இன்ஷாஅல்லாஹ்!
மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது… /// லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
அன்புச்சகோதரர் மு.செ.மு. நெய்னா முஹம்மதிற்கு வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
//// Kaka, please keep posting this kind of article with Qur'an & Hadees frequently in order to keep calm our mind with contentment whatever we have in our possession gifted by the almighty Allah.///
தங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டேன். மன அமைதியை கொடுக்கும் குர்ஆன் - ஹதீஸ்கள் இனி தொடர்ந்து வெளிவரும். இன்ஷாஅல்லாஹ்!
*****************************************************************************************************************
///லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
அமைதியற்ற உள்ளத்திற்கு அ.நி.ரில் தொடர்ந்து மருந்துகள் கிடைக்காமல் தவித்தோம்.தட்டுபாடு இல்லாமல் மருந்துகள் தருமாறு அலாவுதீன் காக்காவை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.தாங்கள் தந்திருக்கும் பத்து மருந்துகளும் தவறாமல் உண்ணக் கூடியவை. வாழ்த்துக்கள்.////
அன்புச்சகோதரர் லெ.மு.செ. அபுபக்கருக்கு வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)
தங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து மருந்துகள் வெளிவரும். இன்ஷாஅல்லாஹ்!
அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் : அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
மாஷாஅல்லாஹ்! அதிரை நிருபர் மாறுபட்ட அழகிய வடிவத்தில் பார்ப்பதில் மகிழ்ச்சி. நீண்ட இடைவெளிக்கு பிறகு கருத்திடுகிறேன்.
*******************************************************************************
//// m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !
அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் உங்களுக்கு நல்வரவு !
அடுத்து அன்பான வேண்டுகோள் இனி தொடரனும் தொய்வின்றி இன்ஷா அல்லாஹ் ! ///
அதற்கடுத்து காத்திருக்கோம் சகோதரி தொடருக்காவும் இன்ஷா அல்லாஹ்! :)
******************************
அன்புச்சகோதரர் நெய்னா தம்பிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இனி வரும் காலங்களில் தொய்வின்றி தொடர முயற்சி செய்கிறேன். இன்ஷாஅல்லாஹ்!
ஜனவரியில் சகோதரியே தொடரை தொடங்கலாம் என்று நினைத்துள்ளேன். எழுதிக்கொண்டு இருக்கிறேன். இன்ஷாஅல்லாஹ் விரைவில் வெளிவரும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அல்லாஹ் குர் ஆனில் கூருகிரான் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம்தான் இதயம் அமைதி பெரும் என்று.
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!(அல் குர் ஆன்13:28)
'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152)
'(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205)
'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்)
திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும். மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
அவைகளை நாம் மனனம் செய்து கொண்டு வாழ்க்கையில் அமல் செய்ய வேண்டும், பித் அதான திக்ருகளை தவிற்க்க வேண்டும்.......இன்ஷா அல்லாஹ்.
சகோதரர் அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி அவர்களின் பின்னூட்டம் தான் இக்கட்டுரையின் சாரம். கட்டுரையாளர் சகோதரர் அலாவுதீன் அவர்கள் ஹதீஸ்களை மட்டுமே சான்றுகளாக எடுத்து வைத்துள்ளார்கள். “அல்லாஹ்வின் திக்ரினால் மட்டுமே உள்ளம் அமைதி பெறும்” எனற கருத்தினை வலியுறுத்தும் அல்-குர் ஆனின் வசனம் ஆணித்தரமான ஆதாரம் என்பதை பின்னூட்டம் இட்ட சகோதரர் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு நூர் அஹமது சலஃபி அவர்களின் பின்னூட்டமே இக்கட்டுரையின் தலைப்புக்குப் பொருத்தமானச் சுருக்கம். சகோதரர் அலாவுதீன் அவர்கள் இனிவரும் கட்டுரைகளில் குர்-ஆன் வசனங்களை முதலில் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டுகின்றேன். “அல்-கிதாப் வல் ஹிக்ம” என்பதிலிருந்தே அல்லாஹ்வின் வேதமும் , ரசூலுல்லாஹ்)ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் என்று விளங்கியுள்ளோமாதலால், முதலில் அல்-குர் ஆனின் ஆதாரம், பின்னர் அல்-ஹதீஸ்களின் ஆதாரம் என்று கட்டுரையில் இடம் பெறுதல் வேண்டும்.
பாரக்ல்லாஹ் ஃபீக்கும்......رَبِّ زِدْنِيْ عِلْمًا
اَللَّهُمَّ أَلْهِمْنِيْ رُشْدِيْ، وَقِنِيْ شَرَّ نَفْسِيْ.
யா அல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! (திர்மிதி)
Post a Comment