Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்றைய சவால் [ பகுதி - 4 - நிறைவு...] 30

ZAKIR HUSSAIN | December 03, 2011 | , , , ,


வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி உள் நாட்டில் வாழ்ந்தாலும் சரி பிள்ளைகளுக்கு தெரிந்து இருக்க வேன்டிய விசயம் வயதான காலத்தில் உள்ள பெரியவர்களை மதிக்க கற்றுத்தருவது. அது மட்டுமல்ல, அவர்களை கவனிப்பதும் இளையவர்களின் கடமை என்பதும்.  ஆனால் இப்போது வந்திருக்கும் நவீனம் கேட்ஜெட், ஐபேட் எல்லாம் மனித உறவுகளை கிழித்து போட்டுவிடும்.

மறுபடியும் உறவுகளை தெரியப்படுத்தவும், மனிதம் போதிக்கவும் புதிய வழிமுறைகள் எதிர்காலத்தில் கையாளப்படும்...எல்லா சமுதாய சீரழிவுக்கும் காரணம் மார்க்க அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காத குடும்ப சூழல் தனக்கு நேர்ந்த கேவலங்களை கூட "சரி' என வாதிடச்சொல்லும். பொதுவாக தொழுகையை சரியாக கடைபிடிக்காத மக்கள் எதிலும் வெற்றியடைவதில்லை. அப்படியே அடைந்தாலும் சமயங்களில் பணம் சம்பாதிப்பதில் மட்டும் வெற்றியடைந்த பிறகு வரும் மன நிம்மதி தொழுகையின்றி இறைவனுக்கு நன்றி சொல்லாமல் கிடைப்பதில்லை. 


சரி, இப்போது வரும் பிள்ளைகள் முக்கியமாக பெண் பிள்ளைகளை இப்பொது எப்படி எதிர்கால சவால்களை சமாளிக்க தயார் செய்கிறோம். சமீபத்தில் ஒருவர் சொன்னது பெரியவர்கள் இல்லாத வீட்டில் எந்தபிள்ளையும் காலை 8 மணிக்கு முன்பு எழுவதில்லை...உண்மையில் பார்த்தால் சவால்களும்கடமைகளும் அதிகம் நிறைந்த நேரம் இப்போதுதான். அதற்காக தூங்கும் பிள்ளைகள் மீது தண்ணீரை ஊற்றி எழுப்புங்கள் என சொல்லவில்லை. அப்படி செய்தால் வாட்டர் ப்ரூஃப் போர்வையில் நாளையிலிருந்து தூங்குவது எப்படி என பசங்க யோசிக்கலாம். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் துரித உணவிலேயே [Fast Food] எல்லாம் இருக்கிறது எனும் தவறான முடிவில் இருக்கிறார்கள். அதனால்தான் கல்யாணத்துக்கு முன்பே இடுப்பைசுற்றி டயர்கட்டிய மாதிரி உடம்பு போட்டுவிடுகிறது [இதில் ஆண் பிள்ளைகளும் அடங்குவர்]. பிறகு, ஸ்லிம்மிங் எக்சர்சைஸ் மருந்து இப்படி வாழ்க்கை திசை மாற ஆரம்பிக்கிறது. கொஞ்சம் "எல்லாவற்றிற்கும் விடை தெரியும்" பார்ட்டிகள்,  மார்க்க அறிஞர் மாதிரி சீன் போடுறவைங்க, அப்படி செய்தால் தப்பு, இப்படி செய்தால் தப்பு என சொல்லிவிட்டு கல்யாண விருந்துகளில் பயங்கர கட்டு கட்டுவதில் குறியாக இருப்பார்கள்.

இவனுக அட்வைஸ் எல்லாம் அதிக நாள் எடுபடாது. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அடிப்படை இல்லாத அட்வைஸ் இப்போது அதிகம் எல்லாரிடமும் கிடைக்கிறது.
 
வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தனது பிள்ளைகளுடன் அதிகம் பேசுவதை ஒரு முக்கியமாக கருத வேண்டும்  இப்போது எல்லாம் இன்டர்நெட் வசதியில்  ஐபேட். ஸ்கய்பே என இருக்கிறதே மனைவியிடம் பேசிவிட்டால் எல்லா செய்தியும் பிள்ளைகளை போய் சேர்ந்துவிடும் என நினைப்பதன் மூலம் சமுதாயத்தில் திடீர் திடீர் என உருவாகும் சவால்களை எதிர்நோக்க சிரமப்படும் ஆண்பிள்ளைகளை உருவாக்கி விடுகிறோம்.

ஊரைப் பொருத்தவரை பெண் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். கல்யாணம் என வரும்போது ஆண்களின் படிப்பு பெண்ணை விட குறைவானதாக இருப்பதாக இப்போது தெரிகிறது. இதற்கு படிப்பில் ஆண்பிள்ளைகளுக்கு நம்பிக்கை குறைந்து இண்ஸ்டன்ட் வெற்றியாக வெளிநாட்டு வாழ்க்கையை நம்பியிருப்பதுதான். வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தனது பிள்ளைகளின் தேவைக்கு தகுந்தாற்போல் பொருள்களை வாங்கி கொடுப்பதில்லை. பெரும்பாலும் பிள்ளைகளின் ஆசைக்கு தகுந்தாற்போல் விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கித்தருவதால் விளைவுகளும் சமயங்களில் அதிர்ச்சியை தருகிறது.

'சும்மா இருக்கிறேன்" பார்ட்டிகள் ஊரில் எப்படி இந்த பெட்ரோல் விலையிலும் அழுக்காமல் பைக் வைத்திருக்கிறார்கள் என்பது அதிரையின் அதிசயம். உன் வருமானத்தில் பெட்ரோல் போட்டுக்கொள் என சொல்லிவிட்டால் அதிராம்பட்டினத்தில் பல மோட்டார் பைக் இருக்காது.

ஆக உடம்பு வளையாத, மைனர் பார்ட்டிகளை பிள்ளைகளாக உருவாக்கி விட்டு பிறகு 'கஞ்சி ஊத்துவான், ஊறுகாய் தருவான்" என்றிருப்பது கதைக்கு ஆகாது.


மொத்தத்தில் இந்த உலகம் எதிர்பார்ப்பது அதிகம். ஆனால், மார்க்கம் எதிர்பார்ப்பது எப்போதும் ஒரே மாதிரிதான். உலகத்தை காரணம் காட்டி மார்க்கத்தை ஒதுக்கி வாழும் [அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்து போக வைக்கும் பழக்கம்] பிள்ளைகளை தொற்றிக் கொள்ளாமல் பார்க்க வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் ஒரு கட்டத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு குடும்பத்தை கவனித்துக் கொள்வான் என்பதெல்லாம் லாட்டரிச் சீட்டு வாங்கி பரிசு விழுமா விழாதா என சலூன்களில் கிடக்கும் பேப்பரில் தன் வாழ்க்கையை தொலைத்தவர்களின் புத்தி.

வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே "தான் யார்" என்று சரியாக உணர்த்தாத எந்த குடும்ப தலைவனும் பின் காலத்தில் உணர்த்த முயற்சி எடுப்பது எறுமை மாட்டை ரேஸ் குதிரையாக்கும் முயற்சி.


வெளிநாட்டில் வாழும் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுக்க மட்டும் தயார் படுத்துவது, ஒரு தகப்பனின் வேலை அல்ல. அந்த பெண் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என பெற்றோர்கள் உதாரணமாய் இருந்து காட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதுடன் ஆண் பிள்ளைகளுக்கு உள்ள கடமைகள் போல் உயர் கல்வியும் தவிர்க்க முடியாதது என உணர்த்தி விட்டால் எல்லாம் வெற்றிதான்.


--- நிறைவுறுகிறது ---
- ZAKIR HUSSAIN

30 Responses So Far:

தலைத்தனையன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

\\ “உன் வருமானத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்” என சொல்லிவிட்டால் அதிராம்பட்டினத்தில் பல மோட்டார் பைக் இருக்காது.\\

அமெரிக்காவிலும், அதிராம்பட்டினத்திலும்தான் வெட்டிப்பேச்சு வேதாந்திகள் அதிகம். அதிராம்பட்டினத்தில் பல பைக் ராஜாக்களுக்கு செவுட்டுல விட்டது மாதிரி இருக்குமே?

Shameed said...

தலைத்தனையன் சொன்னது…

//அதிராம்பட்டினத்தில் பல பைக் ராஜாக்களுக்கு செவுட்டுல விட்டது மாதிரி இருக்குமே?//


நான் சொல்ல இருந்ததை தலைத்தனையன் முந்தி சொல்லிட்டார்

Shameed said...

//ஆக உடம்பு வளையாத, மைனர் பார்ட்டிகளை பிள்ளைகளாக உருவாக்கி விட்டு பிறகு 'கஞ்சி ஊத்துவான், ஊறுகாய் தருவான்" என்றிருப்பது கதைக்கு ஆகாது.//

பிள்ளைகளை சோறு போடும் விதமாக தான் வளர்க்கணும் கஞ்சி ஊத்துற அளவுக்கு ஏன் வளர்க்கணும் வளர்ப்பிலும் கஞ்சத்தனம் கூடாது

sabeer.abushahruk said...

சவாலான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு சரளமாகச் சொல்லி முடித்த விதம் அருமை.

சொந்த காசில் பைக்குக்கு பெட்ரோல் போடற மேட்டர் ரொம்ப பலன் தரும்போல இருப்பதால் உடனே முயற்சித்தல் நலம்.

நீ எழுதியது சேவை வகையைச் சேர்ந்தது என்பதால்...வாழ்த்துகள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வயதான பெரியவர்களை மதிக்க கற்றுத் தருவது - அதே நேரத்தில் நவீனம் என்ற போர்வையில் வந்திறங்கும் அனைத்து மயைகளும் உறவுகளை கிழித்துப் போட்டுவிடும்.

//அதற்காக தூங்கும் பிள்ளைகள் மீது தண்ணீரை ஊற்றி எழுப்புங்கள் என சொல்லவில்லை. அப்படி செய்தால் வாட்டர் ப்ரூஃப் போர்வையில் நாளையிலிருந்து தூங்குவது எப்படி என பசங்க யோசிக்கலாம்.//

யோசிக்க வேண்டியவைகள் !

//'சும்மா இருக்கிறேன்" பார்ட்டிகள் ஊரில் எப்படி இந்த பெட்ரோல் விலையிலும் அழுக்காமல் பைக் வைத்திருக்கிறார்கள் என்பது அதிரையின் அதிசயம். “உன் வருமானத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்” என சொல்லிவிட்டால் அதிராம்பட்டினத்தில் பல மோட்டார் பைக் இருக்காது.//

பொறை ஏறுது - !!!

//ஆக உடம்பு வளையாத, மைனர் பார்ட்டிகளை பிள்ளைகளாக உருவாக்கி விட்டு பிறகு 'கஞ்சி ஊத்துவான், ஊறுகாய் தருவான்" என்றிருப்பது கதைக்கு ஆகாது.//

அப்போவும் தொட்டுக் கொள்ளவா உன்னைத் தொட்டுக் கொள்ளவா என்றுதான் இருக்குமாம் ! சரியா நச் !

இருந்தாலும் வளர்ப்பில்தான் இருக்கிறது காய்கள் கனிவதும் !

//வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே "தான் யார்" என்று சரியாக உணர்த்தாத எந்த குடும்ப தலைவனும் பின் காலத்தில் உணர்த்த முயற்சி எடுப்பது எறுமை மாட்டை ரேஸ் குதிரையாக்கும் முயற்சி.//

அந்த எருமை மாட்ட ஓட்ட எடுத்த சாட்டை...

நல்ல தொடர் ஆராய்ந்து எழுதியவைகள் நிறைவுக்குள் வந்தாலும், உங்களின் தொடர் ஆராய்ச்சி நிற்காது என்பது எங்களுக்குத் தெரியும், வாழ்கையின் வருடல்களை கட்டுரைகளாக்குவதில் கைதேர்ந்த கட்டுரைக் கலை வல்லுநர் என்பதில் ஐயமில்லை !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாகிர் காக்கா சொல்லுங்க சொல்லிக்கொண்டே இருங்க அப்பதான் நம்மவர்களுக்கு மண்டையில ஏறும்

\\ “உன் வருமானத்தில் பெட்ரோல் போட்டுக்கொள்” என சொல்லிவிட்டால் அதிராம்பட்டினத்தில் பல மோட்டார் பைக் இருக்காது.\\


அந்தமாதிரி ஒரு சொல்லை சொல்லி விட்டால் வீட்டுக்குள்ளேயே கமிசன் பார்ட்டி நிறைய பேர் உருவாகி விடுவார்கள் .
பல மோட்டார் பைக் இல்லாமல் போனாலும்,அதிரையில் சுத்தமான பெட்ரோல் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக தான் இருக்கும் .

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"கொஞ்சி விளையாடும் இன்றைய வாலிபமும், ஆரோக்கியமும் என்றோ வர இருக்கும் வயோதிகத்தை பற்றி சிந்திக்காமல் இருந்து வருவது ஒரு வேதனையான வேடிக்கையன்றி வேறென்னவாக இருக்க முடியும்?"

வேதனையில் பெற்றெடுத்து அணுதினமும் பொத்தி,பொத்தி வளர்த்து, ஆளாக்கி, பேராக்கி, தக்க வயதில் உற்ற துணையிடம் ஒப்படைக்கும் அந்த பெற்றோரையே துச்சமென மதித்து இப்படித்தான் சொல்லிவிடுகிறாள் பரவலாக எல்லா இடங்களிலும் "வாப்பா/உம்மா நீங்க ரெண்டுபேரும் அறைக்கக்கூசை பயன்படுத்தாதீர்கள் அவ்வொளுக்கு புடிக்கலெ, கொல்லைக்கக்கூசை புலங்கிக்கொள்ளுங்கள்" இவள் ஈன்றெடுத்த பாசமிகு மகளா? இல்லை உயிருடன் பெற்றோரைக்கொன்று புதைத்த கொலைகாரியா? நீங்களே சொல்லுங்கள்.

பெற்றோரின் பத்வாக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை விட‌ கோடி ம‌ட‌ங்கு கொடிய‌து என்ப‌தை எப்பொழுது தான் அவ‌னும், அவ‌ளும் உண‌ர‌ப்போகிறார்க‌ளோ? இல்லை உண‌ராம‌ல் செத்தும‌டிய‌ப்போகிறார்க‌ளோ?

ஜாஹிர் காக்கா, பெற்றோரை போற்றிப்ப‌ணிவிடைக‌ள் செய்ய‌ நீங்க‌ள் உருவாக்கும் ஒவ்வொரு க‌ட்டுரையும் மேற்க‌ண்ட‌ க‌ல்நெஞ்ச‌ம் கொண்ட‌ பிள்ளைக‌ளின் க‌ல்பில் ந‌ல்ல பிரேம் செய்து கூரிய‌ ஆணி அடித்து தொங்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ வைர‌ வ‌ரிக‌ள்.

தொட‌ர்ந்து சுழ‌ல‌ட்டும் உங்க‌ளின் சீரிய‌ அந்த‌ சாட்டை.

உங்க‌ள் க‌ட்டுரைக‌ளுக்கு பின்னூட்ட‌ம் இட‌ இய‌லாம‌ல் போனாலும், ப‌டிக்க‌த்த‌வ‌றாத‌...

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நெய்னா சொன்னது ;

// பெற்றோரின் பத்வாக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை விட‌ கோடி ம‌ட‌ங்கு கொடிய‌து என்ப‌தை எப்பொழுது தான் அவ‌னும், அவ‌ளும் உண‌ர‌ப்போகிறார்க‌ளோ? இல்லை உண‌ராம‌ல் செத்தும‌டிய‌ப்போகிறார்க‌ளோ? //

மலைகளிருந்து நெருப்பு கொழம்பு பொங்கி எழுவது போல். பெற்றோர்கள் மனங்களை சாகடிக்கும் சஞ்சாலர்களின் சதிகெட்ட செயல்கள் .அணுமின் உலைபோல் எம்.எஸ்.எம் மனதிலிருந்து பொங்கி எழுவதை உணருகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான ஆலோசனைகள்.

// வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தனது பிள்ளைகளுடன் அதிகம் பேசுவதை ஒரு முக்கியமாக கருத வேண்டும் இப்போது எல்லாம் இன்டர்நெட் வசதியில் ஐபேட். ஸ்கய்பே என இருக்கிறதே மனைவியிடம் பேசிவிட்டால் எல்லா செய்தியும் பிள்ளைகளை போய் சேர்ந்துவிடும் என நினைப்பதன் மூலம் சமுதாயத்தில் திடீர் திடீர் என உருவாகும் சவால்களை எதிர்நோக்க சிரமப்படும் ஆண்பிள்ளைகளை உருவாக்கி விடுகிறோம்.//

சரியாக சொன்னீர்கள். வெளிநாட்டு சம்பாத்தியம் பணவசதியை தந்தாலும் சமுதாயத்தித்தில் ஏற்படும் திடீர் திடீர் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் நம் பிள்ளைகளுக்கு இல்லை என்பதை அதிகம் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.

இது வேதனையே...

ஜாஹிர் காக்கா "இன்றைய சவாலை" இன்னும் தொடரலாமே... இது அன்பான வேண்டுகோள்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//வெளிநாட்டில் வாழும் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுக்க மட்டும் தயார் படுத்துவது, ஒரு தகப்பனின் வேலை அல்ல. அந்த பெண் பிள்ளைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என பெற்றோர்கள் உதாரணமாய் இருந்து காட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதுடன்//

நிறைய பெற்றோர் அப்படி உதரணமாக வாழ்ந்து காட்டுவதில்லை.. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே..

Anonymous said...

பெற்றோர்களை மதிக்க தெரியாதவன் அவன் மனிதன் அல்ல அவனுக்கு பெற்றோர்களுடைய அருமைகள் எல்லாம் எப்போ தெரியும் என்றால் அவர்கள் இறந்த பிறகுத்தான் தெரியும். பெற்றோர்கள் உயிருடன் இருக்கிற வரைக்கும் ஒன்றும் தெரியாது பெற்ரோல்களுக்கும் அந்த வாப்பா, உம்மா தான் செலவுகளுக்கு பணம் கொடுக்கிறார்கள். பெட்ரோல் போடுவதற்கு கூட சம்பாதிப்பதில்லை எல்லா வற்றிலும் கமிசனாக போய்விட்டது
வாப்பா, உம்மா பெட்ரோலுக்கு பணம் இல்லை என்று சொல்லிவிட்டால் அந்த பெற்றோர்களுக்கு அடியும்,உதையும் தான் கிடைக்கும். பிள்ளைகளை சாலிகான பிள்ளையாகவும், தீன் கல்வி உள்ள பிள்ளையாகவும் நாம் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நாம் அல்லாஹ்விடம் தப்பித்து விடுவோம் பெற்றோர்களுக்கு அதிகமாக பனி விடை செய்ய வேண்டும்.இப்போ உள்ள பெண்களும் சரி, ஆண்களும் சரி தனது பெற்றோர்களை சரியாக கவனிப்பதில்லை.பெற்றோர்கள் எப்படி இருந்தால் நமக்கு என்ன நாம் நன்றாக இருக்கிறோமா? நம்மளுடைய உடல்களை பார்த்துக் கொண்டால் போதும்.பெற்றோர்களை பற்றி கொஞ்சமாவது சிந்திப்பதில்லை அவர்களை பற்றி எப்போ சிந்திப்பார்கள் என்று சொன்னால் வீட்டுக்கு,வயலுக்கு,தோப்புக்கு எல்லாம் கையெழுத்து வாங்கலையே அதை மௌத்தா போக முன்னாடியை வாங்கனும் என்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள். பெற்றோர்கள் எப்படி அவதிபட்டாலும் சரி, அவர்களை கண்டுக்கொல்வதில்லை பெற்றோர்கலை கவனிப்பதில் எவரும் அக்கறை காட்டுவதில்லை.பெற்றோர்கலை நல்ல விதத்தில் கவினிக்க வேண்டும் அதற்கு இறைவனிடத்தில் எவ்வளவு பெரிய கூலி உண்டு என்ற எண்ணம் பெற்ற பிள்ளைகளுக்கு வருவதில்லை. அப்படி பட்ட எண்ணம் வந்தால் இதைவிட மேலான ஒன்றும் நமக்கு கிடையாது என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.

மு.செ.மு.அபூபக்கர்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n): சுல்லென்று இருக்கு ! சீரியஸாகவே ஊர் நடப்பை நச்சுன்னு போட்டுடைத்தது...

KALAM SHAICK ABDUL KADER said...

”எல்லா வாப்பாமார்களும் பைக் வாங்கிக் கொடுப்பதால் தனக்கும் வேண்டும்” என்று சொல்லி அடம்பிடிக்கும் நிலைமயினை உருவாக்கி விட்டவர்களால்
நம் பிள்ளைகள் நண்பர்கள் மத்தியில் கௌரவப்பிரச்சுனை மற்றும் ஈகோ போன்ற மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

Ahamed irshad said...

ந‌ல்ல தொட‌ர் ஜாஹிர் காக்கா..

பைக்குக்கு பெட்ரோல் என்று பின்னாடி யோசிக்கிற‌த‌ விட‌ உன‌க்கு சைக்கிள்தான் முடிஞ்சா ஓட்டு இல்லாட்டி ந‌ட‌ ராஜா ச‌ர்வீஸ்தான் என்று முன்னாடி யோசிக்கிற‌து ப‌ல‌ன் த‌ருமா..# மாபெரும் ட‌வுட்டு

ரெண்டாவ‌து சைக்கிள் ஓட்டின‌ கால‌த்தில் இருந்த‌ ச‌ந்தோஷ‌ம் பைக் வ‌ந்த‌ கால‌த்தில் இல்லை என்ப‌து உண்மை..அதைவிட யார்னே தெரியாத‌ பெட்ரோல் ம‌ந்திரியை தின‌ந்த‌ந்தி பேப்ப‌ர்'ல‌ பார்த்து திட்ட‌ வேண்டிய‌ அவ‌சியம் இருக்காது பாருங்க‌..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சவால் நிறைந்த வாழ்க்கையை சாமர்த்தியமாக அறிவுறுத்தியது அருமை. ஆனால் தொடரும் சவால்களை தொடர்ச்சியாக போர் தொடுக்க வேண்டிய நீங்கள் ஈசியாக நிறைவுறுகிறது என்று போட்டுவிட்டீர்களே.மறுபரிசீலனை தேவை.

நெய்னாவின் கூரிய வரிகள் சரியானவை.

ZAKIR HUSSAIN said...

//பைக் ராஜாக்களுக்கு செவுட்டுல விட்டது மாதிரி இருக்குமே?//

To சகோதரர் தலைத்தனையன்.....அவர்கள் [ students] உணர்ந்தாலே போதும்.

//பிள்ளைகளை சோறு போடும் விதமாக தான் வளர்க்கணும் கஞ்சி ஊத்துற அளவுக்கு ஏன் வளர்க்கணும் வளர்ப்பிலும் கஞ்சத்தனம் கூடாது //

Tuan Haji Shahul

கஞ்சி ஊத்துவான் என்பது ஒரு 'சொலவடை" க்காக எழுதியது.

To Sabeer

//நீ எழுதியது சேவை வகையைச் சேர்ந்தது என்பதால்...வாழ்த்துகள்.//

சேவை பெரியவர்களுக்கு நிறைய பேர் 'முனிஞ்சி கொட்ட" சான்ஸ் இருக்கே...

To Bro Abu Ibrahim...

//பொறை ஏறுது - !!!//

why?


To bro லெ.மு.செ.அபுபக்கர்

//சொல்லுங்க சொல்லிக்கொண்டே இருங்க//

தொடர்ந்து அறிவுறுத்தும் நிலை வருவதற்கு காரணம்....கேட்பவர்களுக்கு காது பிரச்சினை இருக்களாம்

To Bro Naina Mohamed

நீங்களும் கமெண்ட்ஸ் பகுதியில் ஒரு நல்ல ஆக்கத்தை தந்து இருக்கிறீர்கள். நீங்கள் சொன்ன அந்த விசயம் [ டாய்லெட் பயன்படுத்துவதில் ] அந்த வீட்டுக்குள் 'சகிப்புத்தன்மை' வீட்டை விட்டு வெளியேறி வெகுநாட்களாகி விட்டது என்பதை காண்பிக்கிறது

To bro Mohamed ...[pls re-do your photo in your profile]

//வீட்டுக்கு,வயலுக்கு,தோப்புக்கு எல்லாம் கையெழுத்து வாங்கலையே அதை மௌத்தா போக முன்னாடியை வாங்கனும் என்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள். //

இன்றைய நிதர்சனத்தை மிகப்பிரமாதமாக எழுதியிருக்கிறீர்கள்.

To bro. Kalam Kadir

//நண்பர்கள் மத்தியில் கௌரவப்பிரச்சுனை மற்றும் ஈகோ//

நீங்கள் சொன்ன விசயத்தை எழுதும்போது குறிப்பிட நினைத்தேன்...நீங்கள் எழுதி விட்டீர்கள். இருப்பினும் இது ஒரு தகப்பனின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.

பலவீனத்தை திருத்திக்கொள்ள வேண்டியது தகப்பன் தான்.


To brother Ahamed Irshad

//பைக்குக்கு பெட்ரோல் என்று பின்னாடி யோசிக்கிற‌த‌ விட‌ உன‌க்கு சைக்கிள்தான் முடிஞ்சா ஓட்டு இல்லாட்டி ந‌ட‌ ராஜா ச‌ர்வீஸ்தான் என்று முன்னாடி யோசிக்கிற‌து ப‌ல‌ன் த‌ருமா..# //


அதிராம்பட்டினத்துக்குள் போய் வர அது போதும். மாணவப்பருவங்களில் அதிக வசதிகள் செய்து தரப்படும் பிள்ளைகளின் ப்ராக்ரஸ் கார்ட் அவ்வளவு அழகாக இருக்காது என்பது என் வாப்பா & என் கருத்து.

To Brother MHJ [ இப்படி அழைக்கும்போது ஒரு தனி மரியாதை இருப்பதுபோல் எனக்கு தெரிகிறது]

//நீங்கள் ஈசியாக நிறைவுறுகிறது என்று போட்டுவிட்டீர்களே.//

இந்த பரபரப்பான உலகில் சொல்ல வந்த விசயத்தை சிம்பிளாக , சுருக்கமாக சொல்வது நல்லது.

அதனால் தான் எனக்கு வரும் மிகப்பெரிய இ-மெயில் இவைகளையெல்லாம் நான் வேலை மெனக்கட்டு படிப்பதில்லை. அதுவெல்லாம் இன்ட்ர்ஸ்டிங் விசயம் என்றால் லீவு நாட்களில் படிக்க வைத்திருப்பேன்.

ZAKIR HUSSAIN said...

To Brother Thajudeen

//நிறைய பெற்றோர் அப்படி உதரணமாக வாழ்ந்து காட்டுவதில்லை.. விதிவிலக்காக ஒரு சிலர் மட்டுமே.. //


வாழ்க்கையின் ப்ராஸஸ் தொடர்ந்து திருத்திக்கொள்வதுதான்.

Yasir said...

மிகப்பெரிய விசயங்களை..அதன் பளு அதிகம் தெரியாமல் “நச்” ஈசியாக என்று சொல்லி இருக்கிறீர்கள்...அழகிய எழுத்து நடை அதனை படிக்கும்போது வாசர்கர்கள் மனதில் ஊடுருவும் லேசர் கதிர்கள்போல் பவர் செய்யப்பட்ட வார்த்தைகள்....இத்தொடரை முடிக்கத்தான் வேண்டுமா ??

//வெளிநாட்டில் வாழும் ஆண்கள் தனது பிள்ளைகளுடன் அதிகம் பேசுவதை ஒரு முக்கியமாக கருத வேண்டு/// அப்பன்கள் தப்பாமல் செய்யவேண்டிய கடமைகளில் இது ஒன்று

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாகிர் காக்கா சொன்னது:

// தொடர்ந்து அறிவுறுத்தும் நிலை வருவதற்கு காரணம்....கேட்பவர்களுக்கு காது பிரச்சினை இருக்களாம் //

லயன்ஸ் கிளப் ,அரிமா சங்கம் போன்ற அமைப்புகள் அதிகமாக இலவச கண் பரிசோதனைகள் தான் நடத்துகிறார்கள்.
காது சம்பந்தபட்ட பரிசோதனைகள் நடத்தினால் இலவசமாக காது கருவி வாங்கி கொடுத்து.அறிவுரை செய்து பார்க்காலாம்

அப்துல்மாலிக் said...

அழகான அறிவுரை, தெளிவான சிந்தனை... ஆனால் இதையெல்லாம் நடைமுறைப்படுத்துபவந்தான் வாழ்வில் வெற்றிப்பெருகிறான், அந்த வெற்றியாளன் நாமாக இருப்போம், இன்ஷா அல்லாஹ்

தலைத்தனையன் said...

நானும் பல நாட்களாக பைக் வாங்கலாம், அவசரத்துக்கு உதவுமே என்று 7 அல்லது 8 வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆளிடம் ரூ 2500 கொடுத்து TVS 50 வாங்கினேன். அதை வாங்கிய மூன்றாவது நாள் ஆட்டோவில் போகவேண்டிய என் மகளை கால தாமதத்தினால் வாப்பவோடு பைக்கில் போய்விடுகிறேன்மா என்று ஆசையோடு சொன்ன என் மகளை கூட்டி சென்றபொழுது 100 மீட்டர் கூட தாண்டி இருக்காது, கேபிள் அறுந்து சுவற்றில் முட்டி என் மகளுக்கு கையில் சரியான அடி. அல்லாஹ்வின் உதவியால் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை. நம்ம காலம் இப்படித்தான் போய்கொண்டிருக்கிறது.

பைக் ராஜாக்களுக்கு எங்கிருந்துதான் காசு வருகிறதோ தெரியவில்லை.

ZAKIR HUSSAIN said...

To Brother தலைத்தனையன் ...


நீங்கள் சொல்லும் கஷ்டமெல்லாம் சம்பாதிப்பவர்களுக்கு மட்டும் தான். சம்பாதிக்காதவர்களுக்கு பல இடங்களில் இருந்து கிடைத்து விடுகிறதே!!

KALAM SHAICK ABDUL KADER said...

// இது ஒரு தகப்பனின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.// உண்மைதான்
பாசமென்னும் மனக்குரங்கு
பாதாளத்தில் தள்ளிவிடும்
ஆட்சியையேக் கவிழ்த்து விடும்
காட்சியே பாசத்தின் சாட்சி

sabeer.abushahruk said...

மேலே லாபி போல் தோன்றும் புகைப்படம் ஒரு மாறுபட்டக் கோணத்திலிருந்து எடுக்கப்பட்டு வசீகரிக்கிறது. அஃப்சலா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆட்சியையேக் கவிழ்த்து விடும்
காட்சியே பாசத்தின் சாட்சி //

ஆட்சியே வீழ்ந்தாலும் - பாசத்தால்
கட்சியே கைநழுவினாலும் !
கண்ணுக்கு காட்சியாகத் தெரியாது !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உண்மையிலேயே! இன்று சவால்தான் காக்கா, எமிரேட்ஸ் ரோட்டில் இரண்டு மணிநேரம் காரில் உள்ளே உட்கார்ந்து கொண்டு தள்ளிக் கொண்டு வந்த ஃபீலிங் :(

இத ஏற்கனவே கிரவ்னிடம் சொன்னேன், அதுக்கு அவன் சொன்னது "பயனம் சரியான ஜாம் ஜாம்னு இருந்திச்சு சொல்லுங்க" என்று வழமையான சொல்லாடலுடன் கிண்டல் வேற...

வேகமா ஓட்டுறாங்களே எங்கே போகப்போறாங்களோ தெரியலையே !?

KALAM SHAICK ABDUL KADER said...

ஆன்மீகம் நீதிபோதனைகள் கல்விக்கூடங்களில் இல்லை;
கல்வி கற்கச் செல்லும் “கோ எஜுகேஷன்” கல்விக்கூடங்களில் கட்டுப்பாடில்லை;தியாகம் செய்து கற்பிக்காமல்- ஏனோ தானோ என்று சம்பாதிக்கும் எண்ணம் வைத்துக் கற்பிக்கும் நிலை(”இக்லாஸ்” என்னும் உளத்தூய்மையுடன் செய்யும் எந்தச் செயலும் உயிரோட்டம் பெறும்);
தன் பிள்ளைகளிடம் நட்புடன் அதேநேரம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளும் பக்குவம் பெற்றோர்களிடம் இல்லை.

இவைகள் “இல்லை” என்ற நிலையிலிருந்து “உண்டு” என்ற நிலை உருவானால் இன்றைய சவால்கள் சமாளிக்கப்படும்.

Thameem said...

அஸ்ஸலாமு அழைக்கும் ஜாகிர் காக்கா

நீங்கள் எழுதிய படிக்கட்டு தொடரை படித்துவிட்டு முன்னேற்றம் என்ற படியில் அடியேன் அடியடுதுக்கொண்டு இருகிறேன்.உங்கள் ஆக்கங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து புத்தகங்களாக வெளியிட்டால் நன்று.

I need your advice more personally.

my email id : mfthameem@gmail.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு