Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஃபோட்டோகிராஃபியும் அதன் நகலும் ! 53

அதிரைநிருபர் பதிப்பகம் | December 01, 2011 | , , ,

பேசும் படங்களும் அவைகள் என்னையும் பேச அழைத்த அழகும் !

சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒரு பகுதியில் செவ்வானம் சிவந்திருக்கும் அந்தி மாலையின் அழகிய இயற்கை காட்சியை துல்லியமாக காட்சிப் படுத்திட உள்ளம் துடித்தது. கிட்டியதோ வழமையாக எம்மோடு தோள்மீது தொங்கும் எனது மூன்றாம் கண்ணாக கேமரா அதனை கையிலெடுத்து குறிவைத்தேன் மறைய எத்தனிக்கு சூரியனை சுட்டுவிடலாம் என்று. ஆனால், எனது விரலோ அழுத்தியது அந்தக் கேமராவின் பொத்தனை அதனூடே பதிந்தது இந்த வண்ணப்படம் நிழற்படமாக.


1. சமீபத்தில் கொடைக்கானல் சென்றிருந்தபோது பில்லர்-ராக் எனும் இடத்தில் மேகக்கூட்டம் அந்த பில்லர் ராக்கை கிராஸ் செய்தபோது எடுத்த படம்.


2. ஒற்றை காலில் தலைகீழ் நின்ற இந்த பூக்கள் என்னை தலை நிமிர்ந்து பார்த்திடத் தூண்டியதன் விளைவு இந்தப் புகைப்படம்.


3. இந்த மஞ்சள் வண்ணப்பூ மென்மையாக இருந்ததை பார்த்து மனம் கவர்ந்து கிளிக் செய்தது .


4. ஊருக்கு விடுப்பில் சென்றிருந்தபோது வீட்டில் இருந்ததை விட தோப்பில் இருந்த நேரம்தான் அதிகம் அப்படி ஒரு நாள் தோப்பில் இருந்தபோது ஒரு மாலை நேரத்தில் பெய்த மழையில் மேற்கே இருந்த சூரியன் கிழக்கே தந்த அந்த வானவில்.


5. கேரட்டை நல்லா கழுவி சாப்பிடனும் இங்கே வந்து பார்த்ததும் தோனியது, காரணம் இவங்க அதை காலால் கழுவி விற்பனைக்கு அனுப்புறாங்க !


6. குட்டி குட்டியாய் இந்த சிவந்த(பூ)விதழை பார்க்க நன்றாக இருந்தது எனக்கு ! உங்களுக்கு எப்படி ?


7. கொக்கு குருவிகளை நேரில் பார்த்த நாம் அதை எல்லாம் இப்போ இப்படித்தான் இனி பார்க்க வேண்டி வருமோ !


8. வெள்ளையும் ரோஜா நிறமும் சேர்ந்த இந்த 'பூ' ஏற்காட்டில் எடுத்தது.








9. நீ முந்தி போவதா நான் முந்தி போவதா என்ற யோசனையில் இருவருமே போகாமல் நிக்கும் காட்சி (எடுத்த இடம் ராஜஸ்தான்)இதை எடுக்க ராஜஸ்தான் போவனுமான்னு யாரும் கேட்டுறாதிங்கா...


10. எக்ஹினோ கேக்டஸ் என்ற இந்த செடி பூமி உருண்டையா ? அல்லது நாங்கள் உருண்டையா என்று கேட்பது போல் இருந்தது.



11. இது எந்த இடம் என்று யாருக்கும் சொல்ல தேவை இல்லை என நினைகின்றேன்.


12. நம்மூர் மார்க்கெட் நம்மூர் தேசை பொடி மீன்.


இந்த புகைப்படங்களை கண்டதும் கவிதையாக எழுதுபவர்கள் கவிதையை அப்படியே எழுதுங்கள், மேலும் கருத்துக்களால் வர்னிப்பவர்கள் பின்னுட்டங்களால் அலங்காரம் செய்யலாம். புகைப்பட அணி வகுப்பு இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ். 

- ஹமீது

53 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காக்கா மூன்றாம் கண்ணுக்கு ரொம்ப நன்றி.சூப்பர்.

0. சவுதியில் சூரியன் மறைவதுமட்டும் தான் கண்களுக்கு விருந்தா?
1.கிராஸிங் மட்டுமல்ல.வருடியும் செல்கிறது.மோதியும்பார்க்கிறது.
2.தலைகீழல்ல.அவளின் காதில் தொங்கும் தங்கம்போல்.
3.வண்ணப்பூ மென்மை மட்டுமல்ல.கண்களுக்கும் குளுமை.
4.அந்த வானவில் நம் மரங்களுக்கும் பாதுகாப்பு வளையமோ.
5.கண்ணாலெ பாத்தா தானே கழுவுறது? அப்ப புளியை எப்படி கழுவுறது?
6.உங்களுக்கு மட்டுமா அழகு?எங்களுக்கும் தான்.
7.இங்கே தான் பார்ப்பதற்கு.ஆனால் அங்கே இப்பவும் புசிக்கவும் கிடைக்குதாமே.
8.இந்த பூ ஏர்காட்டில் மட்டுமல்ல. எங்க நாட்டிலும் உண்டு.
9.ராஜஸ்தானில் மாடுகளுக்காக மனிதர்கள் கடையா?
10.கருப்பர்கள் சீவிய மண்டை மாதிரியும் இருக்கு.
11.இந்த இடத்தை வருணிக்க தகுதி மச்சான் MSM(N) தான்.
12.தேசப்பொடி விற்க நம்மூரில் தானியங்கி கடைகளா?
(தானியங்கி வட்டாரம் ரொம்பதான் வல்லலவா இருக்கு.)

ZAKIR HUSSAIN said...

//கொக்கு குருவிகளை நேரில் பார்த்த நாம் அதை எல்லாம் இப்போ இப்படித்தான் இனி பார்க்க வேண்டி வருமோ !//

அப்டீனா துப்பாக்கிக்கு வேலை இல்லையா? என்ன கொடுமை சார்!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

முதல் படம் - பதிந்த இந்தப் படங்களைப்போன்று அன்று மேல்நிலைப்பள்ளிப் பருவத்தில் சைக்கிளில் நண்பர்களோடு ஏரிக்கரைப் பக்கம், ராஜாமடம் பாலம் சென்று எடுத்த ஏராளமான அந்தி மாலைப் பொழுது படங்கள் என் வீட்டின் எந்த மூலையிலோ என்று பரபரக்க வைக்கிறது மனசு !

அதனை பிரிண்ட் போட, துபாய்க்கும், பஹ்ரைனுக்கும் அனுப்பியதலாகட்டும், பட்டுகோட்டையிலும் பிரிண்ட் போட்டு ரசித்த அந்தப் படங்களை ரசித்தவர்களில் (அபுல் ஹசன் (CMP-லைன்),பிஸ்மில்லாஹ் கான் (தரகர் தெரு), நெய்னாகான் (புதுத் தெரு), இம்தியாஸ் (தட்டரத் தெரு), அன்வர் (நடுத்தெரு), ஜெய்லானி (புதுமனைத் தெரு), அப்துல் மாலிக் (புதுமனைத் தெரு), ஜஹபர் (சேது ரோடு), புஹாரி ( (மேலத்தெரு, இவன் மட்டும்தான் பைக் வைத்திருந்தவர் அப்போது), இப்படியாக நீளும் நண்பர்கள்) எங்கிருந்தாலும் இங்கேயாவது வந்து ஒரு அட்டெண்டஸ் போட்டு விடவும்... ந.தோ.ப.சீனியர்கள் தொடர்ந்து ஆட்டக்களத்தில் இருப்பதனால் இப்படியாக இரு வேண்டுகோள் வைக்கும்படியாகிவிட்டது...

இதுல ஏதாவது உங்களுக்கும் பங்கு இருந்தா அட்டெண்டஸ் போட்டுடுங்க...

எங்களை கிரவுண்டு வெளியில நிக்கிறவங்கன்னு நெனச்சுக்கிடுங்களேன்... :)

ஏன்னா குடும்பத்துக்கு பாட்டுப்பாடி பிரிஞ்ச குடும்பம் ஒன்னா சேரும்னு ? சினிமாக்காரய்ங்க ஒரு விதி எழுது வச்சுட்டாய்ங்களா அதுபோல ஏதோ அந்த நாளில் மறக்க முடியாத நிகழ்வை (அதாங்க இந்த அந்தி மாலைப் பொழுது கலர்ப்படம்) சொல்லியாவது இவய்ங்களை ஒரே இடத்துல பார்க்க முடியுமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்... :) :)

அபூபக்கர்-அமேஜான் said...

அந்த பில்லர் ராக் மீது மேகக்கூட்டம் போய் மோதுகிறது இந்த படத்தை பார்த்தவுடன் மிக அழகாகவும்,அருமையாகவும் இருக்கிறது. இந்த பூ தங்கத்திலானவை உள்ள பொருட்கள் தலைகீழாக காதிலும், மூக்கிலும் தொங்குவது போல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. மஞ்சள் நிறம் உடைய
வண்ண பூக்கள் படத்தில் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கிறது நேரில் பார்த்தால் எப்படி இருக்கும். வெளி நாட்டில் இருந்து தனுடைய சொந்த ஊர்களுக்கு போகும் போது இனிய மாலை பொழுதையும்,பேய்கின்ற மழையையும் பார்க்கலாம் என்ற ஆசையோடனும், ஆர்வத்தோடோனும் செல்கின்றனர். மழையை எப்போ பார்க்கலாம் என்றால் மழைக் காலங்களில் மட்டும் தான் பார்க்க முடியும் எல்லா நேரத்தில் மழையை பார்க்க முடியாது. வெளி நாட்டில் இருந்து மழைக் காலங்களில் வருபவர்களுக்கு மட்டும் தான் இந்த வாக்கியம் பொருந்தும். கேரட்டை மட்டும் கழுவி சாப்பிட்டால் போதாது சீனியையும் கழுவி சாப்பிடனும். சீனியையும் இப்படிதான் காலில் போட்டு மிதித்து விடுவார்கள். சிவந்திப் பூ மிக அழகாகவும், அருமையாகவும் உள்ளது. கொக்கு குருவிகளை பார்ப்பதற்கு வெளி நாட்டில் உள்ளவர்கள் மழைக் காலங்களில் வந்தால் தான் பார்க்க முடியும். வெள்ளையும் ரோஜா நிறமும் சேர்ந்த இந்த 'பூ' ஏற்காட்டில் மட்டுமல்ல எங்க நாட்டிலும் இருக்கிறது. ராஜஸ்த்தானில் மனிதர்கள் போகவேண்டிய இடத்தில் மாடுகள் போகுது. பூமியும் உருண்டை அல்ல நாங்களும் உருண்டை அல்ல செடியை தான் உருண்டையாக வடிவமைத்து இருக்கிறது. இந்த இடைத்தை பார்த்தவுடன் மிக எளிதாக சொல்லிவிட முடியாது நீங்கள் சொல்லாமலே சொல்லிவிடலாம். தான்யங்கி போல தனந்தனியாக தேசை பொடி மீன் நம்மூர் மார்க்கட்டில் இருக்கிறது. தான்யங்கிக்கு கார்டை போட்டால் பணம் வரும் தேசை பொடி மீனுக்கு காசை போடணும்.

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//அப்டீனா துப்பாக்கிக்கு வேலை இல்லையா? என்ன கொடுமை சார்!!! //

துப்பாக்கிக்கும் வேலையில்லை கேமராவில் பிலிம் ரோலுக்கும் வேலையில்லை!!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
----------------------------------------------

மிகவும் ரசிக்க தகுந்த புகைப்படங்கள். ஒரு நல்ல ரசிகரால் எடுக்கப்பட்டு இருக்கின்றன்.

என்னை மிகவும் கவர்ந்தது அந்த தோப்பும் வானவில்லும்.

காரணம் அதில் அடிப்பது அதிரையின் அபரிதமான் மண்வாசனை.

வானவில்லுக்காக காத்திருந்து எடுத்ததில் கவனம் தெரிகிறது.

- இப்ராஹிம் அன்சாரி துபை.
எடுத்தவரின் மாமா என்ற பெருமையுடன்.

அபூ சுஹைமா said...

படங்கள் என்னையும் பேச அழைக்கின்றன. கொள்ளை அழகு!

sabeer.abushahruk said...

இங்கு நேஷனல் டே கொண்டாட்டங்களில் ஒன்றான வாகனங்களின் அணிவகுப்பில் நானும் குடும்பத்தோடு கலந்துகொண்டு வந்து பார்த்தால் இங்கும் அற்புதமான புகைப்படங்களின் அணிவகுப்பு.

ரசனையான கலைஞருக்கு வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

முதல் படம்:

சுடும் சூரியனையேச்
சுட்டவிதம் வெதுவெதுப்பு

வானம்
டார்ச் அடித்து நோக்கியும்
தெளிவாய் இல்லை
பூமி

KALAM SHAICK ABDUL KADER said...

காமிரா கவிதைகட்கு
கலாமின் கவிதைகள்
ஈடுகொடுக்காது; எனினும்
பாடுபட்டெடுத்த (”மயக்கம் என்ன?”)
படபிடிப்பைப் “பா”ராட்டவே..


பைக்குள் இருந்த மூன்றாம் கண்
கைக்குள் வந்ததும் காண்
“ஹைக்கூ” கவிதையாய்
“பளிச்” சென்று படம் தான்!

”அதிரைப்பட்டினம் வரவேற்கிறது”
அதிகமதிகம் என்மனம் துள்ளுமிடம்
அயல்மண்ணிலிருந்து விடுமுறையில்
தாய்மண்ணில் நுழையும் வாயில்
ஒவ்வொரு முறையும் மனம்
ஓயாமல் துள்ளிக் குதிக்குமிடம்!
தூரத்தில் செல்லும் “பைக்கும்”
”ஜூமு”க்குள் லபக்கும்
அத்துப்படி; அதெப்படி?
வித்தைப்படித்த வித்தகரே!

இயற்கையினை இரசிக்கும்
இயற்கையான குணமே
இதயத்தில் காமிரா கவிதைகள்;
உதயமாகும் புதையல்கள்!

அதிரை நிருபரின்
ஆஸ்தான கவிஞர்
சபீர் என்பது போல்
அதிரை நிருபரின்
ஆஸ்தான புகைப்படக்
கலைஞர், ஷாஹுல் ஹமீத்

நிழற்படங்கட்குக் கீழே
வழங்கியுள்ள வசனகவி
அழ்காகவும்;பொருத்தமாகவும்
நிழற்கவிஞரே நிஜமானக் கவிஞராக
நிச்சயம் இன்ஷா அல்லாஹ்!!!
அச்சமயம் உங்கட்கு
அளிப்போம் பட்டம்

“காமிராக் கலைஞர்; கவிஞர்”

பயிற்சிகள் வாழ்க
முயற்சிகள் சூழ்க

sabeer.abushahruk said...

இரண்டாவது படம்:

பூனம் புடவைகள்
வ்ந்தாலும் வந்தன
மறைத்தும் மறைக்காமலும்
கொள்ளை அழகு.

sabeer.abushahruk said...

மூன்றாம் படம்:

என்ன கலாச்சாரமோ
நாணமும்
தலை
தரை பார்த்தலும் சரி..
அதென்ன
முகம் முழுதும்
மருதாணி?

sabeer.abushahruk said...

நான்காம் படம்:

கிளியொன்று
திடீரென்று
சிறகு விரிப்பதற்குப் பகரம்
இதழ் விரித்திருக்கிறது?

sabeer.abushahruk said...

ஐந்தாவது படம்:

வெயில் மழை!

நிரம் ஒத்த
பிம்பமோ
நிரம் செத்த
நிழலோ
தமக்கென
வாய்க்கப் பெறாத
வாணவில் ஒன்றை
வறைந்து முடித்திருந்தது
மெல்லிய தூறலின்
திவாளைகளுக்குள்
புகுந்து புறப்பட்ட
சோகையான வெயிலின்
சுடர் கற்றைகள்!

தட்பவெப்பத்தின் தொடற்சியில்
வெட்டி வெட்டிப் பறக்கும்
தும்பிகள் துறத்தும்
தம்பிகள்
சப்தித்துக் கொண்டவற்றில்
பொதிந்திருந்தது
பெளதீகத் தேற்றங்களும்
தாம்பத்ய தாத்பரியங்களும்:
"வெயிலுக்கும் மழைக்கும்
கல்யாணம் டோய்!"

sabeer.abushahruk said...

ஆறாம் படம்:

காரட்:
கழுவக் கழுவ
ஆரஞ்சு.

sabeer.abushahruk said...

ஏழாம் படம்:

எல்லோரும்
எங்கேப் போய்விட்டு
வருகிறீர்கள்
சிவப்பு பாவாடைகள்
சிறகடிக்க...?

sabeer.abushahruk said...

எட்டாவது படம்:

கலர் கலராய்க்
கண்ணாடிக் குருவிகள்
இருந்தால்
இறக்கையொன்று வேண்டும்
புத்தகப் பக்கங்களில் பாதுகாக்க!

sabeer.abushahruk said...

ஒன்பதாம் படம்:

யாரப்பா அது
சாய்மடித்த கேசத்தைக்
கோதிவிடாமல் நடப்பது?

sabeer.abushahruk said...

பத்தாவது படம்:

ராஜஸ்தானில்
மாடுகளுக்காக
மனிதர்கள் கடையா?

நன்றி: எம் ஹெ ஜே

sabeer.abushahruk said...

பதினோராவது படம்:

பார்த்து உட்காருங்கள்
சிட்டுக் குருவிகளே
பஞ்ச்சராகிடப் போகுது

sabeer.abushahruk said...

பனிரெண்டாவது படம்:

அதிகமதிகம் என்மனம் துள்ளுமிடம்
அயல்மண்ணிலிருந்து விடுமுறையில்
தாய்மண்ணில் நுழையும் வாயில்
ஒவ்வொரு முறையும் மனம்
ஓயாமல் துள்ளிக் குதிக்குமிடம்

நன்றி: கவியன்பன்

sabeer.abushahruk said...

பதின்மூன்றாவது படம்:

வடு மாங்காய்
புளி சேர்த்து
மண்சட்டியில் சமைத்தெடுத்தால்
தேசப் பொடிகள்
நேசப் பொடிகளாகும்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

படத்திற்கேற்ற பளிச் பளிச் வக்கனைகள் சூப்பர் Mr.S. கவிஞரே!

KALAM SHAICK ABDUL KADER said...

மண்வாசனையை நான் நுகர
மீன்வாசனையை சபீர் நுகர
கண்ணுக்கும்;”கல்புக்கும்” விருந்தாக
மண்ணுக்குள்ளிருந்தே வெளிப்பட்ட
காட்சிகளை அமைத்து வைத்து
ஆட்சி செய்யும் “ரப்பில்
ஆலமீன்” புகழுக்கே மாட்சி!

ZAKIR HUSSAIN said...

//வடு மாங்காய்
புளி சேர்த்து
மண்சட்டியில் சமைத்தெடுத்தால்
தேசப் பொடிகள்
நேசப் பொடிகளாகும் //

அடை மழையில் அதிரைக்கு
அஃபீசியல் கறி..

Unknown said...

அதிரைப்பட்டினம் வரவேற்கிறது”
அதிகமதிகம் என்மனம் துள்ளுமிடம்
அயல்மண்ணிலிருந்து விடுமுறையில்
தாய்மண்ணில் நுழையும் வாயில்
ஒவ்வொரு முறையும் மனம்
ஓயாமல் துள்ளிக் குதிக்குமிடம்!
தூரத்தில் செல்லும் “பைக்கும்”
”ஜூமு”க்குள் லபக்கும்
அத்துப்படி; அதெப்படி?
வித்தைப்படித்த வித்தகரே!
-----------------------------------------------------------
நாங்கள் எங்கள் நண்பர்கள் மத்தியில் அடிக்கடி இந்த எல்லை
வரவேற்ப்பு பலகையை பற்றி விளையாட்டாக விவாதிபதுண்டு.
ஆனால் வெளிநாட்டிற்கு போய் ஊர் திரும்பும் அனைவருக்கும்
ஒரே மாதிரியான உணர்வு !!!!!!!!!!!!!!!!!..........

அருமை ஷாகுல் காக்கா உங்களின் ஒவ்வரு க்ளிக்கும்.............

Shameed said...

கவிதைகளும் வர்ணனைகளும் அருமை.
நான் போட்டோ எடுக்கும் போது இப்படியெல்லாம் பின்னுட்டமும் கவிதைகளும் வரும் என்று எனக்கு தெரியாது தெரிந்து இருந்தால் இன்னும் கவனம் எடுத்து இன்னும் சிறப்பாக போட்டோக்கள் எடுத்து இருப்பேன். இன்ஷா அல்லாஹ் இனி எடுக்கும் போட்டோக்கள் கவிஞர்களுக்கும் வர்ணனையாளர்களுக்கும் நல்ல தீனியாக அமையும்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
பதினோராவது படம்:

//பார்த்து உட்காருங்கள்
சிட்டுக் குருவிகளே
பஞ்ச்சராகிடப் போகுது//


ஆகா அதுக்கும் வச்சிடியலோ பன்ச்

Shameed said...

கலாம் காதிர் சொன்னது…
”அதிரைப்பட்டினம் வரவேற்கிறது”
அதிகமதிகம் என்மனம் துள்ளுமிடம்
அயல்மண்ணிலிருந்து விடுமுறையில்
தாய்மண்ணில் நுழையும் வாயில்
ஒவ்வொரு முறையும் மனம்
ஓயாமல் துள்ளிக் குதிக்குமிடம்!
தூரத்தில் செல்லும் “பைக்கும்”
”ஜூமு”க்குள் லபக்கும்
அத்துப்படி; அதெப்படி?
வித்தைப்படித்த வித்தகரே//


மண் வாசனை அறிந்துள்ளேன்
மண்ணின் மைந்தரின் கவிதை
வாசனையை இப்போதுதான்
நுகர்கின்றேன் ஊர் என்று
வந்தால் உங்கள் கவிதையில்
வாசனை தூக்கலாகவே உள்ளது
இதை நான் இரு கவிஞர்களிடமும்
உணர்வு பூர்வமாக உணர்கின்றேன்

Shameed said...

harmys சொன்னது…
//நாங்கள் எங்கள் நண்பர்கள் மத்தியில் அடிக்கடி இந்த எல்லை
வரவேற்ப்பு பலகையை பற்றி விளையாட்டாக விவாதிபதுண்டு//

அதிரை வாசிகள் அனைவரிடமும் இந்த குணாதிசயம் இருக்குமோ!!!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

அனைத்து புகைப்படங்களும் மிக மிக அருமை.

புகைப்படத்துறையில் உங்கள் திறமை பளிச்சென்று தெரிகிறது.

MSM நெய்னா முஹம்மது சூட்டிய "விஞ்ஞானியாக்கா" பட்டத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளீர்கள்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.காமிரா கவிஞரின் வித்தை பேசும் படமாய் இங்கே மிளிர்கிறது.முதல் படம்
கட்சி கொடிபோல் காட்சி அளிக்கிறது!உச்சி வெயில் போல் அந்தி வானம் மிளிர்கிறது.கருப்பும்,சிவப்பும் கதகதப்பாய் காய்ந்தாலும் வண்ண புகைப்படமாய் மனதை குளிர்விக்கும் வித்தை.

crown said...

இரண்டாம் படம். மலைமுகட்டுக்கு பனி போர்வை போர்த்தும் அழகை காமிரா பார்வையில் அப்படியே கொத்தி இங்கே காட்சிக்கு வச்சிருக்கு.பனியின் வெள்ளையும் அழகு, காவிரா எடுத்த கலைஞனின் பணியும் அழகோ, அழகு.

crown said...

3ம்படம்: சகோ.சாகுல் படம் எடுக்க வேண்டும் என்று அடம் பிடித்து பூக்கள் தலைகீழாக தொங்கியதோ? அதனால் தான் இங்கே அழகாய் இடம் பிடித்ததோ?

crown said...

நாளாவது படம்:தென்றல் வந்து தூங்கும் தொட்டிலா இந்த குவளை மலர்கள்? பச்சை பார்க்க இச்சை தூண்டும் இயற்கை கற்பனை இறக்கை கட்டி பறக்க வைக்கும் புகைப்படம்.

crown said...

மேலும் எழுத கவிசகரவர்த்தி சபீர் காக்கா போல் நமக்கு மன்டையில் உதிப்பதில்லை!இதுதான் பெரிய தொல்லை.இனி வார்த்தை இல்லை .அனைத்து படமும் அருமை என்மை ஈர்க்கிறது.என் நேசப்போடி இந்த தேசப்பொடி, பொறித்து வைத்தால் மூக்கு பிடிக்க பிடிக்கலாம் ஒரு பிடி.இப்படி எல்லாத்தையும் பிடித்து அழகாய் தந்த காமிரா கவிஞர் விஞ்ஞானி சகோ. சாகுலுக்கு ஒரு ஸொட்டு!!!!!!!!

Shameed said...

சகோ crown பாக்கி போடோக்களுக்கும் உண்டா விமர்சனம்

crown said...

சகோ crown பாக்கி போடோக்களுக்கும் உண்டா விமர்சனம்
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் நான் விமர்ச்சனம் பன்னாத படங்களுக்கெல்லாம் விமோசனம். என்னை போல் அறியா சனமும் அறியும் வகையில் வகை,வகையாய் உங்கள் படம் வாகை சூடியிருக்கு.

KALAM SHAICK ABDUL KADER said...

வித்தகக் காமிரா கலைஞர்/கவிஞர்
“விஞ்ஞானி காக்கா” அவர்கட்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.

உடலோடும் உயிரோடும்
உணர்வோடும் கலந்து விட்ட
ஒரே மண்ணின் மைந்தர்களை
ஒரே உணர்வினால் தட்டியெழுப்புதல்
காமிராக் கவிதையால் மட்டுமே
கண்ணுக்குள் புகுந்து
“கல்பு”க்குள் ஊற்றாகும்

மனக்கேணியின் அவ்வூற்றை
உயிர்க் கயிற்றால்
உணர்வு வாளியைக் கட்டி
கண்களாம் குடங்களில் நிரப்பி
கண்ணீரால் அவ்வூற்றை/அவ்வூரைப் பரப்பி
மண்ணின் வாசனையில் குழைத்து
எண்ணத்தின் ஓட்டத்தை எழுதுகின்றோம்.

எனினும்,

காமிராவின் கவிதைகள் கருக்கள்
கலாமின் கவிதைகள் கிறுக்கல்

காண்க: http://www.kalaamkathir.blogspot.com/

Shameed said...

கலாம் காதிர் சொன்னது…
//காமிராவின் கவிதைகள் கருக்கள்
கலாமின் கவிதைகள் கிறுக்கல்//



அழகு வரிகளை கிறுக்கல்
என்று சொன்னால்
கிறுக்கலை என்னவென்று
சொல்வதாம்

Shameed said...

crown சொன்னது…
//அஸ்ஸலாமு அலைக்கும் நான் விமர்ச்சனம் பன்னாத படங்களுக்கெல்லாம் விமோசனம். என்னை போல் அறியா சனமும் அறியும் வகையில் வகை,வகையாய் உங்கள் படம் வாகை சூடியிருக்கு//

வலைக்கும் முஸ்ஸலாம்
அரியாசனமே (அரியணை)இப்படி சொன்னால் எப்படி

KALAM SHAICK ABDUL KADER said...

கோணலான அந்த வில்லை;
வானவில்லை
காணவில்லை என்று மனம்
கோணவில்லை என்றாலும்,
தோப்பின் அழகுடன்
தோரணமாம் வானவில் அழகும்
தோழமைக் கொண்டனவே
என்னையும் சபீரையும் போலவே...!!

KALAM SHAICK ABDUL KADER said...

அதெப்படி?நம்மவர்க்கு
தேசப்பொடி
நேசப்பொடியானது
வாசற்படியிலே
வரவேற்கும்
அடுப்படியிலிருந்து அதன்
வாசனைப்பொடியாலா?
பால்குடி மறந்ததும்
நாம்குடித்த ஆனம்
தேசப்பொடியினால்
கரைந்தது என்பதனால்
கரை தாண்டியும்
காமிராவில் சுட்ட மீனோ
காத தூரமானாலும்
நாக்கில் நீர் சொட்ட
வைத்தது ஏனோ?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கண்டதையும் படம்பிடித்து காண்போரின் கருத்துக்களை வென்றெடுக்கும் கணவானே

எந்த தேசமென தெரியாத அந்த தேசப்பொடிகளை மீனவன் பிடிக்க இவன் யார் எல்லை குறிக்க?

என்றோ நடந்த ஒரு படுகொலைக்காக என்றென்றும் பழிதீர்ப்பது என்ன தான் நியாயமோ?

அழகான படங்களும், அது சொல்லும் ஓராயிரம் செய்திகளும்.
இவ்வாக்கம் உருவாக்கிய (விஞ்ஞானி)ஹாக்காவுக்கு ஒரு சோக்கா கைத்தட்டல்.

கடைசியில் கருத்தெழுதி பின்னூட்ட வரிசையில் முதலிடம் பிடிக்க நினைத்ததால் வந்த சுணக்கம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

KALAM SHAICK ABDUL KADER said...

ஆனம் பற்றி
யானும் எழுதிய் பின்னர்
பூனம் பற்றி
பூமறை இலைகளுடன்
கவிவேந்தர் சபீர்
கவியரசரையும் விஞ்சி
அவிழ்த்து விட்ட வரிகள்:

//பூனம் புடவைகள்
வ்ந்தாலும் வந்தன
மறைத்தும் மறைக்காமலும்
கொள்ளை அழகு./

இளமையை மீட்டியச் சுருதிகள்
இவ்வரிகள் மூன்று நாட்கட்கு முன்னர்
இவ்விடம் கண்டிருந்தால்...
இந்நேரம்- இம்மூன்று நாட்களின் விடுப்பு
இந்திய மண்ணில் சுகிப்பு

சிங்கப்பூர்க் கடைகளில்
சிங்காரமாய்த் தொங்கும்
பூனம் புடவையின் விளக்கம்
பூவரிகளின் புலவர்- சபீர்க்கு மட்டும்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஃபோட்டோ கிராஃபர் ( கலை கவிஞர்) ஹமீது காக்காவின் கலக்கல் தெளிவாத்தான் ஈக்குது.

நல்லா சாப்பிட்டு விட்டு செரிமானம் ஆகாதது போல்.11.படங்களும் கண்களை மிரள செய்து விட்டு .

12.வது படம் கண்ணை வெருண்டோடோ செய்கிறது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஊரின் நுழைவு வாயில் மதகுக்கு வெள்ளையடித்து, இருபக்க‌ புளியமரங்களுக்கு பசுமையூட்டி, சாலையை துப்புறவு செய்து, வரவேற்பு பலகை ஓரமாய் நட்டு வைத்து, பட்டுக்கோட்டைக்கு வாகனத்தில் ஒருவர் பத்திரிக்கை எடுத்து செல்ல‌ யாருக்கு கல்யாணமாம்? சொல்லவேயில்லெ....

துப்புறவாய் நம்ம ஊர் எப்பொழுதும் இருக்கட்டும்.....


மு.செ.மு. நெய்னா முஹம்மது.

Shameed said...

Naina Mohamed சொன்னது…

//துப்புறவாய் நம்ம ஊர் எப்பொழுதும் இருக்கட்டும்//

துப்புர + வாய் ( வெற்றிலை போட்டு துப்புரவாயையா சொல்லுறிய)

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹமீது காக்கா சொன்னது;

// துப்பாக்கிக்கும் வேலையில்லை கேமராவில் பிலிம் ரோலுக்கும் வேலையில்லை!!//

அதுலா போயிட்டு போவுதுண்டு சொல்லி.அட்டபில் வாங்க நரி கொரவர்களை தேடினால் அவர்களும் ஊரிளில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மற்றத்துக்காக//

இன்றைக்கு ஒரு ஜோக்கு படித்தேன்...

"தலைவரு ஒரு போடு போட்டாரு ஜட்ஜ் ஐயாகிட்டே"

"அப்படி என்னதான் போட்டார்"

"எல்லா சாட்சிகிட்டேயும் விசாரிச்சீங்க என்னோட மனசாட்சியை விசாரிச்சீங்களான்னு !! "

-----

அந்த மனசாட்சியை உங்க கேமரா ஃபோட்டோ எடுக்குமா ?

Shameed said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//அந்த மனசாட்சியை உங்க கேமரா ஃபோட்டோ எடுக்குமா ? //

சாட்சியை ( உம்மாவின் தங்கை ) போட்டோ எடுக்கலாம் மட்சியை போட்டோ எடுக்கலாம் பட்சியை போட்டோ எடுக்கலாம் மன சாட்சியை போட்டோ எடுக்க முடியாதுங்கோ

Yasir said...

உள்ளத்தை கொள்ளை கொள்(ல்)லும் படங்கள்...அதற்க்கு மாமேதைகளின் கவிதைகளும்,விளக்கங்களும்....படம் எடுத்தவருக்கு ஒரு யெஸ்டி கார்டையை வாங்கி கழுத்தில் மாட்டிவிட வேண்டும்....அடிபொலி காக்கா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு